Tuesday, August 20, 2013

ப்ளாக் & ஒயிட்...ப்யூட்டிஃபுல் சைட்! :)

கவுனி அரிசி & பூசணிக்காய் தயிர் பச்சடி 
இரண்டு குறிப்புகளுமே மிகவும் சிம்பிளான குறிப்புகள் என்பதால் ஒரே பதிவில் வெளியிடுகிறேன்.  கருப்பு-வெள்ளை கலர் காம்பினேஷனில், தேவையான பொருட்களும் குறைவாக, செய்முறையும் சின்னதாக, உடலுக்கும் ஆரோக்கியமான குறிப்புகள். செய்து பார்த்து சொல்லுங்க! :) 
~~~!!~~~
கவுனி அரிசி -தேவையான பொருட்கள்
வைல்ட் ப்ளாக் ரைஸ்/ Wild black rice -1/2கப்
சர்க்கரை-1/4கப் (சுவைக்கேற்ப)
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
கருப்பரிசியை 2-3 முறை களைந்து, 11/2 கப் தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரங்கள் ஊறவைக்கவும். [நேரமிருந்தால் 8 மணி நேரங்கள் கூட ஊறவைக்கலாம், உங்க வசதி!]
அரிசியை ஊறவைத்த தண்ணீருடன் குக்கரில் வைத்து 3-4 விசில்கள் வரும்வரை வேகவிடவும்.
ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மசித்துவிட்டு, சர்க்கரை தேங்காய்ப்பூ சேர்த்து கிளறவும்.
சுவையான கவுனி அரிசி தயார்! 
கருப்பரிசி உடலுக்கு மிகவும் நல்லது, ப்ரோட்டீன் அதிகம் உள்ளது என சொல்கிறார்கள். இப்படி சர்க்கரை சேர்த்து செய்கையில் சுவையாக உள்ளது. வெறும் சாதமாக வடித்து சாப்பிட (எங்களால்) முடியவில்லை! ;) முழுவதும் பாலீஷ் செய்யப்படாத அரிசி என்பதால் உமி நிறைய இருக்கிறது. விலையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது! ;)  செட்டி நாட்டுப் பக்கம் இந்த கவுனி அரிசி மிகவும் பிரபலமான இனிப்பு வகை எனத் தெரிந்தது. ஸ்ப்ரவுட்ஸ் ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் வாங்கி வந்தது இந்த வைல்ட் ப்ளாக் ரைஸ்தான்! 
~~~
பூசணிக்காய் தயிர் பச்சடி 
தேவையான பொருட்கள்
பூசணிக்காய்- சிறு கீற்று[துருவியதும் சுமார் அரைகப் வந்தது]
தயிர்-கால் கப்
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
இஞ்சி-சிறுதுண்டு
பச்சைமிளகாய்-1
உப்பு 
தாளிக்க
எண்ணெய்
கடுகு-1/4டீஸ்பூன்
உளுந்துப் பருப்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-கொஞ்சம் 
வரமிளகாய்-1
பெருங்காயத்தூள்-2 சிட்டிகை 
செய்முறை
பூசணிக்காயைத் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். 
அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி-பச்சைமிளகாய்-உப்பு-தயிர்-தேங்காய்த்துருவல் சேர்த்து கலக்கி வைக்கவும்.
தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் காயவைத்து தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து தயிருடன் சேர்க்கவும்.
சுவையான பூசணி-தயிர் பச்சடி தயார். பூசணியை பச்சையாக சேர்த்திருக்கிறோம் என்பதே தெரியாது. சுடுசாதத்துடன் கலந்து சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.
இந்த குறிப்பு போனவருஷம் ஊருக்கு போயிருந்த பொழுது அவள் விகடனில் பார்த்து முயற்சி செய்தேன். சூப்பராக இருந்தது. இங்கே வந்த பிறகு சுத்தமாக மறந்தே போயிருந்தேன். திடீரென நினைவு வரவே செய்தாச்சு. :) 

11 comments:

 1. both the recipes super.wild rice will try.

  ReplyDelete
 2. இரண்டையும் செய்து பார்த்திடுவோம்... நன்றி...

  ReplyDelete
 3. உங்கள் ப்ளாக் ரைஸ் பிளாக்கில் அழகாக இருக்கிறது. அதை விடவும் இந்த பூசனிக்காய் தயிர் பச்சடி சாப்பிடத் தூண்டுகிறது.

  ReplyDelete
 4. //வைல்ட் ப்ளாக் ரைஸ்/ Wild black rice -1/2கப்//

  இப்படியும் ஒன்றிருக்கா? மீ இன்றுதான் அறிகிறேன்..

  இரு குறிப்புக்களும் சூப்பர்ர்... அதுசரி சாப்பிட்டபின் எப்பூடி இருந்துது.. எனும் கமெண்ட்டும் வேணும்... அப்போதான் நம்புவோம்ம்...:)

  ReplyDelete
 5. Yum. I have seen this rice but never bought it. Looks very healthy.

  ReplyDelete
 6. You get this rice in Costco too Mahi.

  ReplyDelete
 7. nice combo. makes me drool... i think this is the rice used to make the famous halwaa isn't it Mahi?

  sappu kotta vaikaradhu pachadi :p

  ReplyDelete
 8. Both are excellent healthy recipes, i'll buy the rice soon and make that yummy sweet. I'm sure i'll get lot of compliments. Thayir pachadi looks so tasty, My MIL used to make a slightly different version (using buttermilk and radish for moru kuzambu)

  ReplyDelete
 9. கவுனி அரிசி செய்ய எளிமையா இருக்கு மகி. என்னிடம் இருந்த அரிசி (4 lbs) காலியாயிடுச்சு. இனி (எப்படியாவது தைரியத்தை வரவழைத்து) வாங்கினால்தான் செய்து பார்க்க முடியும்.

  பூசணி பச்சடி பார்க்கவே நல்லாருக்கு. மார்க்கெட்டில் இருந்து ஒருவாரம் விட்டு ஒருவாரம் ஒரு சிறு கீற்று நறுக்கித்தரச் சொல்லி வாங்கி வருவேன்.எனக்கு ரொம்ப பிடிக்கும்.சாம்பார்,மோர்க் குழம்பு,கூட்டு என செய்வேன்.அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

  ReplyDelete
 10. பூசணிக்காய் பச்சடி எனக்குப் புதிது. நிச்சயம் முயற்சிப்பேன்.

  ReplyDelete
 11. இந்த அரிசி இங்கும் கிடைக்கும் மகி.என்னவென்று தெரியாதபடியால் அப்பால் நகர்ந்துவிடுவேன்.பூசணி பச்சடி நன்றாக இருக்கு. இது எந்த பூசணி!!!! மகி.வெள்ளையாக இருக்கு அதுதான் கேட்டேன்.வெள்ளைபூசணி என்று நீற்றுப்பூசணியைத்தான் சொல்வோம்.ப்ளக்&வைட் நன்றாக இருக்கு.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails