Thursday, August 29, 2013

மேத்தி ரொட்டி & கத்தரிக்காய் மசாலா கறி

மேத்தி ரொட்டி- தேவையான பொருட்கள்
கோதுமை மாவு-11/2கப்
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக் கீரை-1/2கப்
தயிர் (அ) மோர்-1/4கப்
தண்ணீர்-சுமார் 1/2கப்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
மல்லித்தூள்-1டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்-1/4டீஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகம்+ஓமம் -1டீஸ்பூன் [1/2டீஸ்பூன் சீரகம், 1/2டீஸ்பூன் ஓமம் இவற்றை வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுத்து ஆறவிட்டு பொடிக்கவும்.]
ஆலிவ் ஆயில்-2டீஸ்பூன் + சப்பாத்தி செய்ய
உப்பு

செய்முறை
கீரை, பொடிவகைகள், உப்பு இவற்றை பாத்திரத்தில் கலந்துகொள்ளவும்.
அதனுடன் மோர் அல்லது தயிர் சேர்த்து கலக்கவும்.
கோதுமை மாவையும் சேர்க்கவும்.
சிறிது சிறிதாக நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துகு பிசைந்துகொள்ளவும்.
2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு மேலும் 5 நிமிடங்கள் பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
சப்பாத்தி மாவை சம அளவு உருண்டைகளாகப் பிரித்து, சப்பாத்திகளாகத் தேய்த்து சுட்டு எடுக்கவும்.
காரசாரமான இந்த வெந்தயக்கீரை சப்பாத்திக்கு ரைத்தா- ஊறுகாய் -வெண்ணெய்- தேன் இவை பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும். படத்தில் இருப்பது பீட்ரூட் ரைத்தா.
~~~
கத்தரிக்காய் மசாலா கறி
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்-3
வெங்காயம்-1
பூண்டு-2 பற்கள்
கடுகு-1/டீஸ்பூன்
உளுந்து-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-கொஞ்சம்
மஞ்சள் பொடி-1/4டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
கொறகொறப்பாக அரைக்க 
சோம்பு-1/2டீஸ்பூன்
கிராம்பு-1
கொத்துமல்லி-1டீஸ்பூன்
மிளகு-3
வரமிளகாய்-2
தேங்காய்-2டேபிள்ஸ்பூன்


செய்முறை
கத்தரியை கழுவி பெரிய துண்டங்களாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வெங்காயம், பூண்டை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நீர் சேர்க்காமல் கொறகொறப்பாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பூண்டு-வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய கத்தரித் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி, மஞ்சள்தூள்-உப்பும் சேர்த்து கலந்துவிடவும்.
கடாயை மூடி வைத்து 4-5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.
இதற்குள் கத்தரிக்காய் முக்கால்பாகம் வெந்திருக்கும். அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, இன்னும் 2-3 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும்.
மசாலாவின் பச்சை வாசம் போய், கத்தரியுடன் நன்கு கலந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான காரசாரமான கத்தரிக்காய் பொரியல் தயார். சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
~~~
வெந்தயக் கீரை-கத்தரிக்காய் இரண்டுமே நம்ம வீட்டு பால்கனித் தொட்டிகளில் விளைந்தது. அது பற்றிய விவரங்கள் அடுத்து வரும் பதிவுகளில்... நன்றி! 

9 comments:

  1. மிக கலர்புல்லாக இருக்கு இம்முறை உங்க ரெசிப்பி.வெந்தயக்கீரை இப்பத்தான் ஆரம்பம். ஒழுங்காக வருமிடத்து கண்டிப்பா செய்கிறேன். வெ.கீரை இல்லாமலும் செய்யலாமா? பீட்ரூட் ரைத்தா கண்கவருது. மிக தெளிவான படங்களுடன் அழகாக‌ இருக்கு பகிர்வு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  2. கலக்கலான கலரில் கத்தரிக்காய் மசாலா கறி சூப்பர்

    ReplyDelete
  3. Iv' already commented on ur English post on brinjals.

    Want 2 try hat pinky raitha. Lovely color.

    ReplyDelete
  4. சூப்பர் சப்பாத்தி.. வீட்டில் கசூரி மேத்தி இருக்கு. அதை வைத்து இந்த சப்பாத்தியை செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. Super. What's that in pink color? I just looked at the photos. I haven't read the post yet. Please pardon me if u have said something about the pink gravy in your post:). Getting ready to work.

    ReplyDelete
  6. Methi roti is my favorite. Perfectly done and love the beets raita. Beautiful colour! Brinjal must be delicious.

    ReplyDelete
  7. மேத்தி ரொட்டி பார்க்கவே நல்லா இருக்கு... ட்ரை பண்ணனும்...கஸ்தூரி மேத்தி வீட்டுல இருக்கு...அதை வச்சு ட்ரை பண்ணலாமா மகி ? ரொட்டி கசக்குமா ?

    கத்திரிக்காய் ரொம்ப நல்லா வந்து இருக்கு...இப்போ செடி ல பூச்சு இல்லாம இருக்கா ? நான் கூட சில விதை பாக்கெட் வாங்கி இருக்கேன்...தோட்டம் போட்டுட்டு போட்டோ அனுப்பறேன்...

    ReplyDelete
  8. வெந்தயக்கீரை சப்பாத்தி சூப்பரா இருக்கு.நான் கீரையை நறுக்காமல் கலந்துகொள்வேன்.'ரைத்தா- ஊறுகாய் -வெண்ணெய்- தேன்'____இவற்றை இதுவரை முயற்சித்த‌தில்லை.பீட்ரூட் ரைத்தா செய்ததேயில்லை.எல்லாமே புதுசா இருக்கு.

    கத்தரிக்காய் விளைச்சல் அதிகமாயிடுச்சு போல! கத்தரிக்காய் பொரியல் செய்முறையும் வித்தியாசமா இருக்கு.செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. அம்முலு, //வெ.கீரை இல்லாமலும் செய்யலாமா?// வெந்தயக்கீரை ப்ரெஷ்ஷா இல்லன்னா கசூரி மேத்தி (காய்ந்த கீரை) சேர்த்து செய்யுங்க. அதுவும் இல்லன்னா மிக்ஸட் வெஜிடபிள்ஸ் (கேரட்-உருளை துருவிப்போடுங்க, ப.பட்டாணி வேகவைத்து போடுங்க) சேர்த்து பிசைந்து செய்யுங்களேன். டிரை பண்ணிப் பார்த்து சொல்லுங்க. நன்றி!
    ~~
    ஸாதிகாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்! கத்தரிக்காய் ரெசிப்பி செய்து பாருங்க, சூப்பரா இருக்கும். :)
    ~~
    இமா, //Want 2 try hat pinky raitha. Lovely color.// பிங்கி ரைத்தா ரொம்ப சிம்பிள்! பீட்ரூட் துருவல், கொஞ்சம் இஞ்சி துருவல், பொடியா நறுக்கின வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சமிளகாய் 1, உப்பு, தயிர் இதையெல்லாம் மிக்ஸ் பண்ணினா, தட்ஸ் ஆல்! :) கலந்து ஃப்ரிட்ஜ்ல ஒரு மணி நேரம் வைச்சா கலர் நல்லா பிங்க் ஆகும். செய்து பார்த்து சொல்லுங்கோ! நன்றி!
    ~~
    ராதாராணி, செய்து பார்த்து சொல்லுங்க, நன்றி!
    ~~
    வானதி, பிங்க் கலர் திங்- பற்றி இமாவுக்கு சொல்லியிருக்கேன் பாருங்க. சிம்பிள் ரைத்தா. கலர் ரொம்ப அட்ராக்டிவ்-ஆ இருக்கில்ல? :) நன்றி கருத்துக்கு!
    ~~
    ராஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. ரைத்தா & கத்தரிக்கா ரெண்டுமே சூப்பர் டேஸ்ட்டா இருந்துச்சு. :)
    ~~
    ப்ரியா, கசூரி மேத்தி ஒண்ணு அல்லது ஒண்ணரை டேபிள்ஸ்பூன் மட்டும் சேர்த்து செய்ங்க. அதிகம் சேர்த்தா கசக்கும். அளாவா சேர்த்தா அருமையா இருக்கும். :)

    கத்தரில பூச்சி அப்பப்ப ரெகுலர் விசிட் பண்ணிட்டுதான் இருக்கு. இப்பக்கூட இலையெல்லாம் மொட்டையடிச்சு விட்டுட்டுத்தான் வந்தேன்! ;) சீக்கிரம் உங்க தோட்டத்தையும் காட்டுங்க, ஆல் த பெஸ்ட்! :)
    நன்றி ப்ரியா!
    ~~
    சித்ராக்கா, இந்த காம்பினேஷன்லாம் சூப்பரா இருக்குமே, இதுவரை டிரை பண்ணலையா நீங்க? சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க. பை த வே, நீங்க மேத்தி ரொட்டிக்கு என்ன சைட் டிஷ் செய்வீங்க அப்ப??! அதை சொன்னா நானும் டிரை பண்ணுவேன்! :)

    கத்தரி விளைச்சல் அதிகமெல்லாம் ஆகல, சுமாராத்தான் போகுது! அவ்வ்வ்வ்வ்....

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails