Thursday, August 15, 2013

முட்டைக்கோஸ் கூட்டு(அ)சாம்பார்

வழக்கம் போல டைட்டில்லயே குழப்பம் ஆரம்பம்! பின்னே என்னங்க அது? கூட்டு அல்லது சாம்பார்? ஒண்ணு கூட்டா இருக்கணும், அல்லது சாம்பாரா இருக்கணும், கரெக்ட்டா? ஆனா இந்த குழம்பு [ஆஹா...இப்ப குழம்பாகிருச்சே!! அவ்வ்வ்வ்] கொஞ்சம் கலவையா இருக்கும். கடலைப் பருப்பு-கோஸ் இருக்கு, அப்ப கூட்டுன்னு சொல்லிக்கலாம். ஆனா கூட்டு-தான்னு அடிச்சு[யாரை அடிச்சு??! ;)] சொல்ல முடியாது. ;) :)

கூட்டு போல கெட்டியாக இல்லாமல் சாம்பார் போல தண்ணியா இருக்கும், கூடவே சாம்பார் பொடி- தக்காளி -வெங்காயம் எல்லாமும் போட்டிருக்கேன், ஸோ இது கூட்டுன்னு சொல்ல முடியாது.
சரி, சாம்பார்னு சொல்லலாம்னா அதும் முடியாது. கடலைப்பருப்பு போட்டு யாராச்சும் சாம்பார் வைப்பாங்களா என்ன? ஹிஹி...அதனால உங்களுக்குப் பிடிச்ச பெயரில கூப்பிடுங்க[என்னை இல்லை, இந்த ரெசிப்பிய! :)] டக்குன்னு 20 நிமிஷத்தில செய்துடலாம். மசாலா எல்லாம் அதிகம் இல்லாம மைல்டா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு-1/4கப்
நறுக்கிய முட்டைக்கோஸ்-1/3கப்
வெங்காயம்-1
தக்காளி-1
இஞ்சி-சிறுதுண்டு
பச்சைமிளகாய்-2
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
சாம்பார்த்தூள்-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு
தாளிக்க
எண்ணெய்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-1
கறிவேப்பிலை-கொஞ்சம்

செய்முறை
கடலைப்பருப்பை தேவையான தண்ணீருடன் குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்துவைக்கவும். பருப்பு வெந்து ஒரு விசில் வருவதற்குள் கோஸ், வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், இஞ்சி இவற்றை நறுக்கி வைச்சுக்கலாம்.
ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து நறுக்கிய கோஸ், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், சாம்பார்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கப் தண்ணீரும் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்துச் சேர்க்கவும்.

எளிதில் செய்யக் கூடிய சுவையான முட்டைக்கோஸ் கூட்டு(அ)சாம்பார் தயார். சுடுசாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். அப்பளம் பொரித்தால் வேலை முடிந்தது! :)
ஆனா பாருங்க, எங்க வீட்டில "பொரிப்பது" எனக்கு கொஞ்சம் அலர்ஜி என்பதால் ஸ்பினாச் பொரியல், காலிஃப்ளவர் வறுவல், அவித்த முட்டை மற்றும் ரசம் இவற்றுடன் சாப்பிட்டோம். 

குறிப்பு: பருப்பையும் காய்களுடனே சேர்த்தும் வேகவைக்கலாம், ஆனால் கடலைப்பருப்பு ஒரு விசிலில் வெந்துவிடுமா என்ற சந்தேகத்தில் இப்படி செய்தேன். பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு சேர்ப்பதானால் எல்லாவற்றையும் குக்கரில் கொட்டி:) ஒரு விசில் விட்டு எடுத்து தாளிச்சு கொட்டிக்கலாம். :) 
வெறுமனே சாம்பார் பொடி மட்டும் சேர்த்தால் காரம் போதாதது போல (எனக்குத்) தோன்றுவதால் கொஞ்சம் மிளகாய்ப்பொடியும் சேர்ப்பேன். 
~~~
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
~~~

13 comments:

  1. கோஸ் சம்பாரிலேல்லாம் போட்டதில்லை . உங்கள் பதிவைப் பார்த்து இப்படி செய்து பார்த்தல் என்ன என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  2. //உங்களுக்குப் பிடிச்ச பெயரில கூப்பிடுங்க// m. முட்டைகோஸ், கடலைப்பருப்பு பாயாசம். ;))))))

    ReplyDelete
  3. ஹா!! கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாங்கன்னு நினைச்சேன். காணோமே.

    முட்டைக்கோஸ் கடலைப் பருப்பு பாயாசம்.... வேர் ஆர் யூ!!! ;))))))))

    ReplyDelete
  4. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இது சூப்பராத்தான் இருக்கு, ஆனா போனதடவை ... அடுத்ததடவை சொல்கிறேன் என்ற நெசிப்பி என்னாச்சு?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    பிளேட்டில் றைஸ் போடும்போது அல்லது போட்டபின்பு அதை கட்டியாக விடாமல் குழைத்து(அதாவது உதிர்த்து) விட்டே கறிகள் போடோணும் அப்போதான் சாப்பிடப்போபவருக்கு ஹப்பியாக இருக்கும்... சே..சே.. இதையெல்லாம் நான் சொல்ல வேண்டி இருக்கே முருகா...

    ஹையோ எனக்கு நேரமாச்சு.. குயின் அம்மம்மா அழைக்கிறா:).

    ReplyDelete
  6. அருமையான ரெசிப்பி .எங்கம்மா இப்படித்தான் செய்வாங்க மகி ..

    ஓகே ...முட்டை இருக்கு கோஸ் ??எங்கே ..கண்ணுக்கே தெரிலையே

    ReplyDelete
  7. mee the firstu.....

    only egg and kaliflower poriyal parcel.....

    ReplyDelete
  8. கடலைப்பருப்பு சேர்த்திருப்பதால் இது கூட்டு தான்...இதே போல் நானும் செய்வேன்..

    ReplyDelete
  9. எங்கே கருப்பரிசி பாயஸம்?? ஆடி கடைசி வெள்ளிக்கு பாயசம் வக்கலாம்னு ஒரு 3/4 கப் அளவிற்கு கருப்பரிசியுடன் காத்திருந்து அது இன்று சர்க்கரைப் பொங்கலாகிவிட்டது.

    இதே செய்முறையில் ஆனால் சாம்பார் தூள் & மிளகாய்த்தூள் இல்லாமல் எங்கம்மா கூட்டு செய்வாங்க. சூப்பரா இருக்கும்.

    கடைசி படம் பசியைத் தூண்டுது. ஆமாம், முட்டையில் காரம் போடமாட்டீங்களா?

    உங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !

    ReplyDelete
  10. super mahi.. azhaga click pannum magi ku happy உலக புகைப்பட தின vazhthukkal.

    ReplyDelete
  11. kooto, sambaro, taste supera irunda ok..

    ReplyDelete
  12. நல்லதொரு சிம்பிள்& ஸ்வீட் ரெசிப்பி மகி. முட்டைக்கோஸ் வாங்கினால் என்னசெய்வது என யோசிப்பேன்.அடுத்தமுறை இந்த ரெசிபிதான். ஆனால் முதல் பந்தியில் குழம்(பு)பி விட்டேன்.நன்றி மகி.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails