Saturday, October 19, 2013

ப்ரவுன் ரைஸ்-பச்சைப்பயறு தோசை / ப்ரவுன் ரைஸ் பெசரட்டு

தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு-1/2கப்
ப்ரவுன் ரைஸ்-1/2கப்
பச்சைமிளகாய்-3
இஞ்சி-சிறுதுண்டு
கொத்துமல்லித் தழை-கால் கட்டு
உப்பு

செய்முறை
அரிசி, பச்சைப்பயறை 2-3 முறை களைந்து நான்கு மணி நேரங்கள் ஊறவைக்கவும். 
ஊறியவற்றை தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
 அரைபட்டதும் பச்சைமிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
 பெசரட்டுக்கான மாவு தயார். இது புளிக்க வேண்டிய அவசியமில்லை, அரைத்த உடனே தோசையாக சுடலாம்.
 தோசைக்கல்லை காயவைத்து தோசைகளாக ஊற்றவும்.
 சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும்.
காரசாரமான ப்ரவுன் ரைஸ் பெசரட்டு தயார். விருப்பமான சட்னி, சாம்பார் அல்லது பொடியுடன் ருசிக்கலாம். புளிக்காத மாவில் செய்வதால் சூடாகச்  சாப்பிடவேண்டும், ஆறினால் காய்ந்து போனது போல இருக்கும்.
படத்தில் பெசரட்டுவுடன் இருப்பது வெங்காயச் சட்னி

17 comments:

  1. இதுதான் பெசரெட்டா? மிகவும் எளிமையான செய்முறையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி மகி.

    ReplyDelete
  2. wow... Pesarattu using brown rice. healthy idea mahi. surely will try.

    ReplyDelete
  3. உடன் வெங்காயச் சட்னி என்றால் சுவையாக இருக்கும்... செய்முறைக்கு நன்றி...

    ReplyDelete
  4. முழுநிலவு வரும் என‌ எதிர்பார்த்தால் பச்சைபயறு தோசை வந்திருக்கு. இதுவும் நல்லாதான் இருக்கு.சத்தான தோசை, செய்து பார்ப்போம்.

    ReplyDelete
  5. ஓ... பெசரெட்டு.. பெயரே இப்போதுதான் அறிகிறேன்.
    செய்து பார்க்க வேண்டும்...
    நன்றி மகி..;)

    ReplyDelete
  6. மஹி ஆந்திரா பெஸரெட்டு. நன்றாக இருக்கு. முழுபயரை
    அரைத்து வெங்காயம் போட்டு அடைமாதிறி கரகரன்னும் பண்ணலாம். மெல்லியதாய் உன்னுடயது ருசித்தேன். சூப்பர்.
    அன்புடன்

    ReplyDelete
  7. இது தான் பெசரெட்டு என்பதோ!
    இப்பத் தான் பெயரும் செய்முறையும் தெரிந்து கொண்டேன். இனி தான் அம்மாவுடன் சேர்ந்து முயற்சிக்கனும். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி.

    ReplyDelete
  8. நாளைக் காலையில் என் வீட்டில் பிரவுன் ரைஸ் பெசரட் தான் மகி. பார்க்க ரொம்பவே க்ரிஸ்ப்

    ReplyDelete
  9. பெசரட்டு குறிப்பு நன்றாக இருக்கு மகி. கேள்விப்பட்டிருக்கேன்.
    நன்றி.

    ReplyDelete
  10. சமையல் குறிப்பும் புகைப்படங்களும் அருமை!

    ReplyDelete
  11. Super pesarattu and with brown rice, even more healthier..

    ReplyDelete
  12. Pesarattu nalla irukku mahi......coconut chatni kooda superaa irukkum idhanudan.

    ReplyDelete
  13. ஆவ்வ்வ்வ்வ் சூப்பர் கலரில் ஒரு ஓசை:)

    ReplyDelete
  14. எல்லாருக்கும் தனித்தனியே நன்றி சொல்லி டைப் செய்த கருத்துப் பெட்டி இருந்த விண்டோ-வை கை தவறி க்ளோஸ் பண்ணிவிட்டேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... :-|

    அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  15. ஆசியாக்கா, நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails