Wednesday, October 23, 2013

ரசித்த பாடல்கள்..

ரசித்த பாடல்களைப் பகிர்ந்து சிலநாட்களாகி விட்டதால் இந்தப் பதிவில் நான் ரசித்த சில பாடல்கள்! மோஸ்ட்லி எல்லாப் பாடல்களும் காதலர்கள் பாடுபவை..ஸோலோ ஸாங்க்ஸ்!
~~~
ஹரிஹரனின் இனிய குரலில், வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் வரிகளுடன் ஆஹா படத்தில் இருந்து "முதன் முதலில் பார்த்தேன், காதல் வந்ததே.."

நொடிக்கொருதரம் உனை நினைக்க வைத்தாய்..
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்! ..
உனைக்கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்..
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்!..
~~~
வைரமுத்து-வின் வைரவரிகள், வித்யாசாகரின் இசை..ஶ்ரீநிவாஸின் குரலில் "தல" அஜீத்தின் அழகான(!) தோற்றத்துடன் ஒரு மெலடி..உயிரோடு உயிராக-படத்தில் இருந்து..

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்..
விண்மீனெல்லாம் நிலவாய்ப் போனது எந்தன் வானத்தில்..
முப்பது நாளும் முஹூர்த்தமானது எந்தன் மாதத்தில்..
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்!
~~
பழநிபாரதியின் வரிகள், கார்த்திக் ராஜாவின் இசை, ஹரிஹரனின் குரலில், உல்லாசம்-படத்தில் இருந்து..."வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?.." கூடவே அழகான விக்ரம் :) என்று சொல்லவும் வேண்டுமா! ;)

அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன்..
போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்!
சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்
விழிகள் முழுதும் நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம்..முதலா..முடிவா?
~~
மீண்டும் வைரமுத்துவின் வரிகள், ஹரிஹரனின் குரல், S.A.ராஜ்குமாரின் இசையில், துள்ளாத மனமும் துள்ளும்-படத்திலிருந்து... "இருபது கோடி நிலவுகள் கூடி.." பலமுறை முயற்சித்தும் பாடலை டைரக்ட்டாக இங்கே இணைக்க முடியவில்லை. சிரமம் பார்க்காம வீடியோவை க்ளிக் செய்து யுடியூபிற்குச் சென்று பாட்டைக் கேளுங்க!

குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு?.. - உன் 
கால்விரல் நகமாய் இருப்பது சிறப்பு! 
:))))
வெட்கப்படாமச் சொல்லுங்க, இந்த வரிகளைப் படிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சந்தோஷம் வருவது நிஜம்தானே!! :)))
~~
இறுதிப் பாடல் ஒரு சோகப் பாடல்...சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்! :) இதுவும் ஏதோ சன் நெட்வொர்க் காப்பிரைட் என்கிறது. அதனால் யுடியூபிற்குச் செல்லவும்!  படம்- தீனா, ஹரிஹரனின் குரல், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை...கொழுக் மொழுக் அஜீத்! :))) 


சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்!
..
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை..
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தானலைவான் வீதியிலே!! :))))
~~~
பாடல்கள் செவிக்குணவு...ஸ்வீட் பஃப்ஸ் வயிற்றுக்குணவு!
என்ஸாய்! 
:)

17 comments:

  1. அட... அனைத்தும் ரசிக்க வைக்கும் பாடல்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எல்லாப் பாடலுமே எனக்கும் பிடித்தவை....:) கூடவே வயிற்றுக்கும் உணவா..... பிரமாதம்.

    ReplyDelete
  3. அத்தனையும் இனிக்கும் ரசிக்கும் பாடல்கள்!

    செவிக்கும் வயிற்றுக்கும் வஞ்சகமில்லா தீனிப் பகிர்வு---:)

    அருமை மகி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஆ..கா மகி அனைத்துமே சூப்ப்ப்பர்ப் பாடல்கள். எனக்கு எல்லாப்பாடல்களுமே பிடிக்கும்.கேட்டுக்கொண்டே இருக்கலாம். "பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்.." கொஞ்சம் அதிகமா பிடித்தது.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. எப்படிங்க...எனக்குப் பிடித்தப் பாடல்களைப் பட்டியல் இட்டுள்ளீர்கள்? அருமையான காதல் பாடல்கள்.
    //வெட்கப்படாமச் சொல்லுங்க, இந்த வரிகளைப் படிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சந்தோஷம் வருவது நிஜம்தானே!! :)))// அட ஆமாங்க :)

    ReplyDelete
  6. ஆவ்வ்வ்வ்வ்வ் ஓல் சோலோ சோங்ஸ் ஆ சோஓஓஓஓ சுவீட்... பப்ஸ் உள்ளே ஏதும் இருக்கா?:)

    ReplyDelete
  7. அட அத்தனையுமே முத்துக்கள்! குறிப்பாக... வீசும் காற்றுக்கு... and சொல்லாமல் தொட்டுச் செல்லும்...

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி
    அனைத்தும் எனக்கும் பிடித்த பாடல்கள்.. பாடல் தேர்வுகள் அருமை. பாடல் தான் சுவை என்றால் ஸ்வீட் பப்ஸ் கூடுதல் சுவை.. பகிர்வுக்கு நன்றீங்க.

    ReplyDelete
  9. Always!!!! Thala ...ROCKS :)))))))எனக்கு எல்லாமே பிடித்த பாடல்கள் :)) ஸ்வீட் PUFFS க்கும் தாங்க்ஸ் ..

    ReplyDelete
  10. நல்லநல்ல பாடல்களாகத்தான் தெரிவு செஞ்சிருக்கீங்க.கூடவே பப்ஸுமா, கலக்குங்க!

    ReplyDelete
  11. I uploaded all except last one in my iPhone today!what a coincidence...

    ReplyDelete
  12. பாடல்கள் செவிக்குண்டு,பப்ஸ்கள் வயிறுக்குண்டு, மகிக்கு பெரிய பெரிய மனசுண்டு, என்ஸாய்ட்.!

    ReplyDelete
  13. Excellent song collections mahi. My favorite tooooo. Thanks for sharing.

    ReplyDelete
  14. ரொம்ப நாளா வரத்துக்கு டைம்மே இல்லைன்னு வந்தா... ம்ம்ம் கலக்குறீங்க.. எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்க்ஸ் மஹி.அதுவும் பூவுக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்.
    ஸ்வீட் பப்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருந்தது தேங்க்ஸ் மஹி(ஐடியா ரொம்ப நல்லா இருந்தது, கூடவே கொஞ்சம் காஃபி கொடுத்திருந்தீங்கன்னா கேக்கவா வெனும் சொர்க்கம்‍தான்)

    ReplyDelete
  15. தனபாலன் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஆதி, உங்களுக்கும் பிடித்த பாடல்களா? சந்தோஷம்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    இளமதி, என்னவர்தான் ஒவ்வொரு பதிவிலும் "தீனி" போட்டோ போட்டுவைக்கிறாயே என கிண்டல் செய்திறார். அவ்வ்வ்வ்வ்! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    அம்முலு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்! அந்தப்படம் வந்த புதிதில் "பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது" நல்ல பிரபலமான பாடல்..எனக்கும் மிகவும் பிடிக்கும். :)
    நன்றீங்க!
    ~~
    கிரேஸ், நீங்க ஒரு ஆள்தான் உண்மையச் சொல்லியிருக்கீங்க, கை கொடுங்க! :) எனக்கு ஒரு கம்பெனி இருக்கு என மகிழ்ச்சியா இருக்கு! நன்றிங்க!
    ~~
    அதிரா, //பப்ஸ் உள்ளே ஏதும் இருக்கா?:)// :) ஆமாம், அது சிதம்பர ரகசியம்! கட்டாயம் தெரிஞ்சுக்கணும்னாச் சொல்லுங்க, தனிப்பதிவாப் போடறேன். இப்படியெல்லாம் கேட்டாச் சொல்லமாட்டேன்! ;)
    நன்றி அதிரா!
    ~~
    ஜனா சார், பாடல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி!
    ~~
    ஹேமா, பாடல்களை ரசித்து கருத்தும் தந்ததுக்கு நன்றி!
    ~~
    பாண்டியன், ரசித்துப் பாட்டுக்களைக் கேட்டு, பஃப்ஸையும் ருசிபார்த்து கருத்துச் சொல்லிருக்கீங்க, ரொம்ப நன்றி!
    ~~
    ஏஞ்சல் அக்கா, விட்டா லண்டன்ல "தல"ரசிகையர் மன்றம் ஆரம்பிச்சு ரசிகர் மன்றத் தலைவி ஆகிருவீங்க போலிருக்கே! :)))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
    ~~
    சித்ராக்கா, அவ்வப்போது நான் ரசிக்கும் பாடல்களை பகிர்கிறேன். இவற்றில் பெரும்பாலும் நான் ரசித்த கவிதைகள்தான் இருக்கும். :)
    நன்றி அக்கா, கருத்துக்கு!
    ~~
    ரம்யா, என்ன ஒரு கோ-இன்சிடென்ஸ் பாருங்க..ஏன் கடைசிப் பாட்டு மட்டும் அப்லோட் பண்ணிக்காம விட்டீங்க? :) தீனா-படத்தில் பாடல்கள் எல்லாமே நல்லாதான் இருக்கும், கேட்டுப் பாருங்க. நன்றி!
    ~~
    ஆசியாக்கா, கவிதையாகக் கருத்துச் சொல்லிட்டீங்க, தேங்க் யூ! :)
    ~~
    சுபா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    தர்ஷினி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! காஃபிதானே, அடுத்த பதிவில கட்டாயம் கொடுத்திடறேன். அடிக்கடி வந்துட்டே இருங்கோ! :0 :) நன்றி!
    ~~
    வெற்றிவேலம், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails