Tuesday, May 5, 2015

Shrikhand/ஶ்ரீகண்ட்

தேவையான பொருட்கள்
கெட்டித் தயிர்/Greek Yogurt-1கப்
பொடித்த சர்க்கரை/Powdered Sugar -1/4கப்
ஏலக்காய்-1
ஆரஞ்ச் கலர் - சில துளிகள் (விரும்பினால் மட்டும்)

செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.
கெட்டித்தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து விஸ்க்-ஆல் கலக்கவும்.
நன்றாக கலந்து க்ரீம் போல பதம் வந்ததும் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து கலக்கவும்.
ஏலக்காய்ப் பொடி மற்றும் கலர்(விருப்பப்பட்டால்) சேர்க்கவும்.
கலந்து விடவும்.,
இதனை 5-6 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும்.
சுவையான ஶ்ரீகண்ட் சுவைக்கத் தயார்..
சிம்பிளாக சீக்கிரமாகச் செய்துவிடலாம். 
குறிப்பு
சாதாரண தயிரை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி வைத்து நீரை முழுவதும் வடித்துவிட்டு கிடைக்கும் கெட்டித் தயிரே ஶ்ரீகண்ட் செய்ய பயன்படுவது.  (தயிரை வடிகட்டி, அதனை 4-5 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜினுள் வைத்தால் தண்ணீர் முற்றிலும் வடிந்துவிடும்)
க்ரீக் யோகர்ட் இப்படி வடிக்கட்டப்பட்டது என்றாலும் அதிலும் தண்ணீர் இருக்கிறது, அதனால் அதனையும் ஒரு மணி நேரமாவது துணியில் வடிகட்டி பயன்படுத்துவது நலம்.

13 comments:

  1. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மார்கெட்டில் க்ரீக் யோகர்ட் இருப்பதைக்கண்டதும், அங்கு இந்த ரெசிப்பிபார்த்ததை ஞாபகப்படுத்தியது மகி. செய்துபார்க்கும் ஆவலை படங்கள் ஏற்படுத்துது.

    ReplyDelete
  3. ஶ்ரீகண்ட் _ கேள்விப்பட்ட பேரா இருக்கு. ஆனால் அது இதுதான் என்பது இப்போதான் தெரியுது. செய்து சுவைக்க ஆள் வேண்டுமே !

    ReplyDelete
  4. You do not use colouring. You need to use Kunkumappoo.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றிங்க அனானி! :) அது ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்..போஸ்ட் போட்டப்போ எழுத டைம் இல்லாததால் எழுதலை !
      குங்குமப்பூ சேர்த்த ஶ்ரீகண்ட்-தான் நான் முதன்முதலா சாப்பிட்டது, எப்பவும் வாங்கும் கடைல அது கிடைக்காததால் நானே செய்ய ஆரம்பிச்சேன், என்ன காமெடி ஆச்சுன்னா...வீட்டில இருந்த குங்குமப்பூவைத் தேடி எடுக்கமுடில..காணாமப் போச்!! அதுக்காக ஶ்ரீகண்ட் சாப்பிடாம இருக்க முடியுமா? ;) :) அதான் ப்ளெய்னா செய்தேன்..மனசைத் தேத்திக்க வேண்டி கொஞ்சூண்டு ஆரஞ்ச் கலர் சேர்த்தேன், அம்புட்டுத்தான்! :)))

      Delete
    2. அடப்பாவிங்களா. இப்படித்தேன் ரங்குகளை ஏமாத்தறீங்களா?

      Delete
  5. //அடப்பாவிங்களா. இப்படித்தேன் ரங்குகளை ஏமாத்தறீங்களா?// நீங்க வேற..எங்க ரங்கு-வுக்கு இனிப்பெல்லாம் புடிக்காது. இது என்னை ஏமாத்ததான்! :)

    ReplyDelete
  6. மகி, உங்களோட பிளாஹ் எனக்கு ரொம்ப புடிக்கும். ஜீனோ சௌக்யமா :) லயாக்குட்டி நல்லாருக்காங்களா :) இந்த டிஷ் இப்ப பண்ணப்போறேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விசயம், கேப்பிட்டல் S ஐயும் சுமால் r ஐயும் கேப்பிட்டல் I யும் அமுக்கினா ஸ்ரீ னு வ்ந்துடும். தவறா நினைச்சுடாதீங்க. அழகனா பதிவு :)

    ReplyDelete
    Replies
    1. ஜீனோ பரம சௌக்யம்..லயாக்குட்டியும் நல்லாருக்காங்க. ஶ்ரீகண்ட் பண்ணிட்டீங்களா? அது இருக்கட்டும், எதுக்கு ஶ்ரீ - எப்படி டைப் பண்ணனும்னு டெமோ குடுத்திருக்கீங்க? புரிலையே! தொடர்ந்து கருத்துக்கள் தருவதற்கு நன்றிங்க அனானி!!

      Delete
    2. //எதுக்கு ஶ்ரீ - எப்படி டைப் பண்ணனும்னு டெமோ குடுத்திருக்கீங்க? புரிலையே! தொடர்ந்து கருத்துக்கள் தருவதற்கு நன்றிங்க அனானி!! //

      நீங்க ஶ்ரீ என்று டைப்படித்திருக்கவும், ஒருவேளை எப்படினு தெரியாம போட்டுட்டீங்களோனு நினைச்சு டெமோ கொடுத்திட்டேன். அப்ப தெரிஞ்சுக்கிட்டே எழுதிட்டீங்களா? எப்பவுமே நான் சைலண்ட் ரீடருதான்.. இதையப் பார்த்தவுடனே உணர்ச்சிவசப்பட்டு, ஆர்வக்கோளாறுல ஓடோடி வந்து கருத்து சமர்ப்பித்துவிட்டேன் :))) ஏனா நான் ஸ்ரீ ய எழுத கத்துக்கவே ரொம்ப நாளாச்சு. ஸ்ரீ கண்ட் ரொம்ப நல்லாருந்தது. என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. ரொம்ப நன்றி மகி :)

      Delete
  7. அனானி, உங்க மௌனத்தை உடைத்து கருத்துக்கள் தருவதற்கு ரொம்ப நன்றிங்க. உங்க குட்டீஸுக்குப் புடிச்சதா ஶ்ரீகண்ட்? சந்தோஷம், லயாவுக்கும் ரொம்ப பிடிக்கும்! :)

    ReplyDelete

  8. அடுத்த டின்னருக்கு டெசர்ட் ஐடியா ரெடி. குறிச்சு வைச்சுக்கறேன்.

    ஊர்ல சீனியும் தயிரும் அடிக்கடி சாப்பிடுற விஷயமா இருந்துது. இங்க வந்த பின்னால ஃபாட் ஃப்ரீ, சுகர் ஃப்ரீ என்று போய்ட்டிருக்கு. இதைச் செய்து கொடுத்தால் மருமகள் ரெசிபி கேட்பாங்க என்கிறது நிச்சயம். :--)

    ReplyDelete
  9. supernga.. ennala office lerndu tamil la type adika mudila.. so thanglish. Sema sema. I use the same greek yogurt brand too.. Tamil la blog parthadum sema kushi..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails