Tuesday, March 22, 2016

ராகி சேமியா

ராகி சேவை, கோதுமை சேவை, தக்காளி சேவை, கம்பு சேவை என தமிழகத்தில் விதவிதமாக கிடைத்தாலும், இங்கே ராகி "சேமியா" கிடைத்தது இதுவே முதல் முறை.  மேகி நூடுல்ஸ் இருக்கும் பக்கம் இந்த "அணிலாரை"ப் பார்ததும் வீட்டுக்கு கூட்டிவந்துவிட்டேன். இப்படியான சேமியாவை நான் (மட்டுமே) செய்வது முதல்முறை. ஊரில் அம்மாவோ அக்காவோ செய்வார்கள், பக்கத்தில் நின்று பார்த்ததோடு சரி. கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், ஆனா அவ்வளவு கடினமில்லை..சூப்பரா இருந்தது. நீங்களும் செய்து பாருங்க. 

தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 2கப் 
வெங்காயம்- பாதி
பச்சைமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய் -1 
தக்காளி -1
கடுகு -1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1டீஸ்பூன்
உளுந்து பருப்பு -1டீஸ்பூன் 
எண்ணெய்
உப்பு 

செய்முறை
2 கப் சேமியாவுக்கு சுமார் 4 கப் தண்ணீர் (சூடாக்க தேவையில்லை, பச்சைத்தண்ணீரே போதும்) எடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். 

உப்பு கரைந்ததும் ராகி சேமியாவை தண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் வைக்கவும். 

*மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடித்துவைக்கவும். 

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஊறிய ராகி சேமியாவை வைத்து 5-6 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
 சேமியா வெந்ததும் எடுத்து ஆறவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, க.பருப்பு-உ.பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய், கிள்ளிய வர மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் **உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் ஆறிய ராகி சேமியாவை உதிர்த்துப் போட்டு கிளறவும்.
 சேமியா வெங்காயத்துடன் நன்கு கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
குறிப்பு
* தண்ணீரில் ஊறப்போடும் சேமியாவை 3 நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்கவேண்டாம்..அதிக நேரம் ஊறினால் கூழ் போல் ஆகிவிடும், கரெக்டா 3 மினிட்ஸ் மட்டும் வைங்க. (இது அந்த சேமியா பாக்கட்டிலயே போட்டிருக்காங்க..நான் பயமுறுத்தலை!! ஹிஹி...)
** சேமியாவை ஊறவைக்கும்போதே உப்பு கலந்த தண்ணில தானே ஊறவைக்கிறோம் என தவறாக நினைக்கவேண்டாம். எனக்கென்னவோ அந்த 3 நிமிட ஊறவைத்தலில் உப்பு சேமியாவில் பிடிக்கிற மாதிரி தெரியவில்லை. நீங்க பாத்து போட்டுகுங்க. :)

12 comments:

  1. வாவ்...ராகி சேமியா இப்போதான் பார்க்கிறேன்..நாம எப்பவும் போல செய்ய முடியாதா அக்கா ? ஊற வைச்சு வேக வைச்சு, கொஞ்சம் ஈசியா செய்யதா பிடிக்கும்.. இல்லேனா செய்து கொடுத்தா சாப்பிடுவேன்..😀😀

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஈஸியா இருந்தாதான் பிடிக்கும், இதுவும் ஈஸிதான் அபி! செய்ததும்தான் அது புரிந்தது. நீயும் சமைத்துப்பார்த்தா தெரிந்துடும்! ;) :)

      Delete
  2. ராகி சேமியா உப்புமா மிகுந்த சுவையாக இருக்கும். பிள்ளைகளுக்கு சேமியாவை அவித்தெடுத்து சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து தருவதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கீதா :) அம்மா அப்படிதான் செய்வாங்க செம டேஸ்ட்டி

      Delete
  3. போனா கண்ணுல படுறதை எல்லாம் வாங்கி வந்து, சமைச்ச், சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துருவோம் என்று பயம் வீட்ல. இப்போ இலங்கை இந்தியக் கடைகள் பக்கம் போறதை விட்டாச்சு. ;) அடுத்த விசிட்ல அணில் சேமியாவைக் கண்டுபிடிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //கண்ணுல படுறதை எல்லாம் வாங்கி வந்து, சமைச்ச், சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துருவோம் என்று பயம் வீட்ல. இப்போ இலங்கை இந்தியக் கடைகள் பக்கம் போறதை விட்டாச்சு. ;) /// அவ்வ்வ்வ்வ்வ்!! :)))))

      இது உடம்பைக் கெடுக்காது என்றே நினைக்கிறேன்..மறக்காம வாங்கி செய்து பாருங்க இமா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  4. அதெப்படி அணில் உங்க ஊருக்கு மட்டும் வரலாம் :) எங்க ஊருக்கும் விசா எடுத்து அனுப்பி வைங்க மஹி :)ஊர்ல இருந்தப்போ சாப்பிட வராத ஆசை இப்போ இந்த பிளேட்டை பார்த்ததும் வருதே யமி :)

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர்லயெல்லாம் ஏற்கனவே அணில் வந்திருக்கும், நீங்கதான் பார்த்திருப்பீங்க அக்கா!! கடைல செக் பண்ணுங்க! டேஸ்ட் சூப்பர்!! :)
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  5. ராகி நூடுல்ஸ் இருக்கு இங்கு. ம்..சேமியா தேடிப்பார்க்கனும். இப்படி வித்தியாசமா நீங்கதான் செய்றீங்க ம்கி.

    ReplyDelete
    Replies
    1. ராகில நூடுல்ஸா?? இப்பதான் கேள்விப்படறேன்..! இந்த சேகியாக்கள் கோவைல பல காலமா கிடைக்குது அம்முலு..இப்பதான் இங்கே பார்த்தேன், உடனே வாங்கிட்டேன். கிடைச்சா நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க! நன்றி!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails