தேவையான பொருட்கள்
பாகற்காய் - 2
வெங்காயம் - 1
பூண்டு - 5பற்கள்
கறிவேப்பிலை - கொஞ்சம்
கடுகு - 1/2டீஸ்பூன்
வரமிளகாய் -1
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
சக்தி வத்தக்குழம்பு பொடி - 1டேபிள்ஸ்பூன்
தக்காளி - 2
புளிக்கரைசல் - 1/4 கப்
தேங்காய்த் துருவல் - 1/4கப்
உப்பு
நல்லெண்ணெய்
சர்க்கரை - 1டீஸ்பூன்
செய்முறை
பாகற்காயை கழுவி, விதைகளை நீக்கிவிட்டு வட்டமாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி, பூண்டையும் நறுக்கிவைக்கவும்.
புளியை ஊறவைத்து திக்காக கரைத்து வைக்கவும்.
தேங்காயை கொஞ்சமாக தண்ணீர் விட்டு மைய அரைத்துவைக்கவும்.
1.பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு வரமிளகாய் தாளித்து நறுக்கிய பாகற்காயை சேர்த்து வதக்கவும்.
2. பாகற்காய் ஓரளவுக்கு வதங்கியதும் நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும்.
4. தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி குழைய வதங்கியதும் வத்தக்குழம்பு பொடி சேர்த்து வதக்கி,
6. புளிக்கரைசலை சேர்க்கவும்.7. தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
8. புளி பச்சைவாசம் போக கொதித்ததும் அரைத்த தேங்காய் விழுது, சர்க்கரை சேர்த்து, தேவையான தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
9. குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான பாகற்காய் புளிக்குழம்பு ரெடி.
சாதம், இட்லி-தோசை எல்லாவற்றுடனும் அருமையாக இருக்கும். குழம்பை செய்து ஒரு நாள் வைத்திருந்து சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகம்! ;) :)
புளி தண்ணீரில் நறுக்கிய பாகற்காயை ஊறவைத்து வடித்து அந்த காயை குழம்பு வைத்தால் கசப்பு தெரியாமல் இருக்கும்.. கோவை பாணியில் இனிப்பு சேர்ப்பதால் அந்த சுவையும் நல்லாவே இருக்கும்..:) குழம்பு சப்பு கொட்ட வைக்குது.
ReplyDelete:) அவ்வளவெல்லாம் என்னால (இந்த சோம்பேறியால என்று படிக்கவும்! ;)) செய்ய முடியாதுங்க. இப்படி செய்கையில் குழம்பு கசப்பு தெரியாது. More over, பாகற்காய் லேசா கசப்பு இருந்தாதானே நல்லா இருக்கும்?? ஐ லைக் இட் தட் வே!!
Deleteஒரு முறை இப்படி செய்து பாருங்க...சப்பு கொட்டி சாப்பிட்ட அனுபவத்தில சொல்றேன்!! :)))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!