Friday, January 13, 2012

நன்றிகள்!

இன்றைக்கு இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு, ஜனவரி மாதம், 13-ஆம் நாள், வெள்ளிக்கிழமை. அதற்கு என்ன என்று கேட்பீங்க..இந்த வலைப்பூவின் முதல்ப்பூ:) பூத்தது ஒரு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி! :) ஆமாங்க, வெற்றிகரமா இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது "மஹி'ஸ் ஸ்பேஸ்"!

என் வலைப்பூவின் 3வது பிறந்தநாளுக்கு அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல்ல இருந்து உணவுவகைகள் ஆர்டர் பண்ணிரட்டேன்! எல்லாம் ரெடியா இருக்குது, பூந்து விளையாடுங்க... ;))))))))))))

செட்டிநாடு கோழி ரசம் (சிக்கன் சூப்)

சிக்கன் லாலிபாப்

ஃபிஷ் ஃப்ரை
இது என் கிச்சன்ல செய்த Bass Fish Fry

நாட்டுக்கோழி பிரியாணி
சிக்கன் க்ரேவி..from Mahi's Kitchen

இந்த வருஷப்பிறப்பன்று SanFransisco பக்கம் போயிருந்தோம், அவ்வளவு தூரம் போயிட்டு அங்கே இருந்த அஞ்சப்பர் செட்டிநாடு ரெஸ்டாரண்ட்டை மிஸ் பண்ணக்கூடாது என்று எல்லாரும்(!) விரும்பியதால், உங்களுக்கும் இன்று இந்த விருந்தைப் பரிமாற எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. :)))))))

இது சைவ சாப்பாடு...லெஃப்ட் டு ரைட் பாத்தீங்கன்னா, பாசிப்பருப்பு பாயசம், புளிக்குழம்பு, உருளைக்கிழங்கு கறி,பருப்பு, சாம்பார்,ரசம்,சௌ-சௌ பாசிப்பருப்பு கூட்டு, ஊறுகாய்,தயிர், சாப்பாடு, சப்பாத்தி மற்றும் அப்பளம்.

மெய்ன் கோர்ஸ் வெளியே ஆர்டர் பண்ணீட்டாலும் டிஸர்ட் ஹோம் மேட் தான்!! :) இது என் சமையலறையில் தயாரான போளி. ரெசிப்பியைக் காண விரும்பினால் இங்கே க்ளிக்குங்க. விருந்து முடிந்ததும் கடைசியாய் வரும் பீடாவை மேஏஏஏல முதல் படமாப் போட்டிருக்கிறேன், அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. :)
~~~
கடந்த இரண்டு வருடங்களாக என் சமையலை, புகைப்படத் தொகுப்புகளை, பயணக்கட்டுரைகளை, எல்லாவற்றுக்கும் மேலாக எனது மொக்கைப்பதிவுகளை சலிக்காமல் படித்து, உங்கள் கருத்துக்கள் என்னும் உரமிட்டு, உயிர்நீரூற்றி இந்த வலைப்பூவை வளர்த்துவரும் அன்புள்ளங்களுங்கு என் உளமார்ந்த ன்றி!
:)

33 comments:

  1. வாழ்த்துக்கள் மகி!!!!!

    ReplyDelete
  2. மகி நான் தான் 1st!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. ஆமாங்க ப்ரியா,நீங்கதான் பர்ஸ்ட்! மொறுமொறு கீரைவடை உங்களுக்கே! :)

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  4. மஹி வாழ்த்துகள். நான் சைவ சாப்பாடு பக்கம் மட்டும்தான் பார்த்தேன் ஓக்கேவா?

    ReplyDelete
  5. /சைவ சாப்பாடு பக்கம் மட்டும்தான் பார்த்தேன் ஓக்கேவா?/டபுள் ஓக்கே லஷ்மிம்மா,நானும் சைவம்தான்! :)

    வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete
  6. 2 வருடம் நிறைவோ.. வாழ்த்துக்கள் மகி.. வாழ்த்துக்கள்... இன்னும் எத்தனை வருடங்கள் காண முடியுமோ அத்தனையையும் காண வாழ்த்துக்கள்...

    //priya said...
    மகி நான் தான் 1st!!!!!!!!!!!!!!!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  7. நான் போயிட்டு வாறேன்.. எங்கே எனக் கேட்கிறீங்களோ? அஞ்சப்பரிடம் தேன்ன்ன்ன்ன்:))).

    ReplyDelete
  8. Happy anniversary to Mahi's Space. thanks for the nice veg feast Mahi. Best wishes :-)

    ReplyDelete
  9. நான் லேட்டாக கமென்ட் கொடுக்கிறேன். சைவசாப்பாடு வகைகள் கன ஜோர். உன்னுடைய ப்ளாகிற்கு நிறைய, நிறைய மனம்கொண்ட அளவிற்கு வாழ்த்துகள். எல்லோரும் வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள். வாழ்ந்துகொண்டே இருக்கட்டும்.பொங்கல் வாழ்த்துகளும்
    துரத்திக் கொண்டே வருகிறது. காமாட்சிமா

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் மகி .
    அந்த சைவ வெரைடிஸ் டிஷ் எடுத்துக்கறேன் .
    அஞ்சப்பர் அங்கேயும் வந்தாச்சா .எங்க ஏரியா வட இந்தியர்கள் பகுதி
    நோ சான்ஸ் ஃபோர் அஞ்சப்பர் .நீங்க என்ஜாய் பண்ணுங்க மகி
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. HAPPY ANNIVERSARY & HAPPY PONGAL MAHI...

    ReplyDelete
  12. Lovely post, Mahi! I thoroughly enjoyed reading it. It was like reading an article out of Kumudham. Keep rocking!

    ReplyDelete
  13. கருத்தும்,வாழ்த்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. உங்க வலைப்பூவுக்கு என் பையன விட கரக்டா நாலு வயசு கம்மி ;)

    வாழ்த்துக்கள் மஹி... மேலும் பல வருடங்களை வெற்றிகரமா கடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் மகி... எங்களுக்கு படம் காட்டிவிட்டு நீங்க சம கட்டு கட்டியிருக்கிங்க... அப்படிதானே..

    ReplyDelete
  16. mahi i am a big fan of u........

    pls dont call u mokka because ur blog is amazing.....

    ReplyDelete
  17. வாழ்த்துகக்ள் மகி விருந்து ரொம்பே பலமா இருந்துச்சு.

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அஞ்சப்பர் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் மகி...
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  20. //2 வருடம் நிறைவோ.. வாழ்த்துக்கள் மகி.. வாழ்த்துக்கள்... இன்னும் எத்தனை வருடங்கள் காண முடியுமோ அத்தனையையும் காண வாழ்த்துக்கள்..//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் :-))

    ReplyDelete
  21. //நான் போயிட்டு வாறேன்.. எங்கே எனக் கேட்கிறீங்களோ? அஞ்சப்பரிடம் தேன்ன்ன்ன்ன்:))).//

    வரும் போது அந்த அ .கோ மு பிரியாணி பார்ஸல் வித் லெக் பூஸ் அட ...லெக் பீஸ் ...:-))))

    ReplyDelete
  22. //ஆமாங்க ப்ரியா,நீங்கதான் பர்ஸ்ட்! மொறுமொறு கீரைவடை உங்களுக்கே! :)//

    முதல்ல அங்கே ஆயான்னு சொன்னதிலிருந்து லேட்டாவே வரேன் :-)))))))))))))))))))

    ReplyDelete
  23. குடும்பத்தில் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  24. ஹா..ஹா..ஹா... ஏன் சிரிக்கிறீங்களென ஆரும் கேட்டிடப்பூடா:))).. கனவிலயும் ஆயாஆஆஆஆஆஆஆஆ:))))

    ReplyDelete
  25. //ஹா..ஹா..ஹா... ஏன் சிரிக்கிறீங்களென ஆரும் கேட்டிடப்பூடா:))).. கனவிலயும் ஆயாஆஆஆஆஆஆஆஆ:))))//

    அதுவும் ஆக்ஸிஜன் குடுக்கிற அளவுக்கு ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  26. ஹா..ஹா..ஹா.. ஆருக்கு ஒட்ஷிஷன்? ஆயாவுக்கோ? அவ்வ்வ்வ்:)) எனக்குத் தெரியும், ஜெய்க்கு ரொம்பப் பெரிய மனசென்று, அதிலயும் ஒரு ரூபா வைத்தியருமாச்சே..:)) அதனால ஆயாவுக்கு எதையாவது கொடுத்துக்கிடுத்து எழுப்பிடுவார்:)) என்ற நம்பிக்கையிலதானே அடிக்கடி ஜெய்யிடம் ஆயாவை அனுப்புறேன்...:))

    ஹா..ஹா..ஹா... முடியல்ல சாமி...:))).

    ReplyDelete
  27. Happy Anniversary Mahi. இன்னும் பல வருடங்கள் உங்க விலை மதிப்பே :)) இல்லாத பதிவுகள போட்டு எங்க எல்லாரையும் மகிழ்விக்கணுமுன்னு பதிவுலக நண்பர்கள் சார்பா வாழ்த்துறேன் !! உங்கள வாழ்த்த வயதில்லை அதனால வணங்குறேன் ஹீ ஹீ

    போன வாரமே இந்த பதிவ பார்த்திட்டு கமெண்ட் அப்புறம் வந்து போடலாமுன்னு போனேன். அந்த சாபம் தானோ என்னவோ ஒரு வாரமா நல்லா ஒடம்பு சரி இல்லாம போயிடிச்சு இனிமே உங்க கிட்டே கொஞ்சம் சாக்கிரதையா தான் இருக்கோணும் போல இருக்கு :))

    ReplyDelete
  28. இந்த மாதிரி அஞ்சப்பர் சாப்பாட்ட காமிச்சா உங்க anniversary ய கொண்டாடணும்? என்னவோ போங்க. இங்கெல்லாம் அஞ்சப்பர் இல்லேங்க. நீங்க கொஞ்சம் recommend பண்ணி இங்கேயும் ஒரு ஹோட்டெல தொறக்க சொல்லுங்களேன்

    ReplyDelete
  29. /Anonymous said...

    mahi i am a big fan of u........

    pls dont call u mokka because ur blog is amazing...../ அனானி,நீங்க யாரோ எவரோ தெரியாது,ஆனா உங்க கமென்ட் பார்த்ததும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க. தாமதமாக நன்றி சொல்றேன், தவறா நினைக்கவேணாம்!:) உங்க பேரைச் சொன்னா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்! :):)
    ~~
    அதிரா & ஜெய் அண்ணா,கலகலப்பான கமென்டுகளுக்கு நன்றி! உடனே உங்க உரையாடலில் பங்குகொள்ளவோ பதில்சொல்லவோ முடியாமல் போனதுக்கு வருந்துகிறேன். ;)
    மீண்டும் நன்றிகள்!
    ~~
    கிரிஜா,/உங்கள வாழ்த்த வயதில்லை அதனால வணங்குறேன் ஹீ ஹீ/ஐ..இப்படில்லாம் சொன்னா நாங்க ஏமாந்துருவமா? 3 வயசிலயே காதுகுத்தியாச்சு எனக்கு. எங்கூட்டுக்காரர் வைரக்கம்மல் கூட வாங்கிப்போட்டுட்டாரு. நீங்க இன்னொருக்கா காதுகுத்த ட்ரை பண்ணாதீங்க. ;)
    அஞ்சப்பர் லண்டன்ல இருக்கலாம்,சிரமம் பார்க்காம ஒரு எட்டு போயிட்டு வந்துருங்களேன். ;)
    நன்றி கிரிசா!

    ReplyDelete
  30. மகி,
    இரண்டாண்டுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்தும் வைத்துவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. அறிமுகத்துக்கு நன்றிங்க சுரேஷ்! ரொம்ப சந்தோஷம்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails