Tuesday, December 7, 2010

ஸின் சிட்டி-பகுதி 2

இந்தப் பதிவில் பாரிஸ் மற்றும் பெல்லாஜியோ இரண்டு கேஸினோக்களை சுற்றிப் பார்க்கலாம் வாங்க!
பாரிஸ் கேஸினோவில் பாரிஸின் முக்கிய அட்ராக்ஷனான ஈஃபில் டவரின் மாதிரியை உருவாக்கியிருக்காங்க. பகலில் பார்க்கும்போது வெறும் மெட்டல் உருவமாக நிற்கும் ஈஃபில் டவர், மாலையில் விளக்குகள் போடப்பட்டதும், ஸ்ட்ரிப்-பின் சிக்னேச்சர் அட்ராக்ஷனாக ஆகிவிடுகிறது என்றால் அது மிகையல்ல. இரவு நேரத்தில்,தங்கநிறத்தில் ஜொலிக்கும் விளக்குகளுடன் கம்பீரமாக நிற்கும் ஈஃபில் டவர் ரொம்ப அழகா இருக்கும்.
ஈஃபில் டவரின் கீழே தான் கேஸினோ-வின் நுழைவாயில்..உள்ளே செல்கையில் நிமிர்ந்து பார்த்தால் டவரின் பிரம்மாண்டம் மிரட்டுகிறது.
ஈஃபில் டவரின் நான்கு தூண்களில் பின்னிரண்டு தூண்கள் கேஸினோவின் உட்புறம் இருக்கும்படி கட்டப்பட்டிருக்கு.படத்தில் இடது புறம் இருப்பது (கட்டடத்தின் உள்ளே இருக்கும்) ஈஃபில் டவரின் ஒரு தூண்...
கேஸினோவின் உள்ளே வழக்கம் போல ஸ்லாட் மெஷின்கள்,டேபிள் கேம் இப்படி கூட்டம் அலைமோதுகிறது.ஈஃபில் டவர் ரைடுக்கு டிக்கெட் வாங்கிட்டோம். 20நிமிஷம் வெய்ட்டிங் டைம்.. பொதுவாக வீகெண்ட் மற்றும் விடுமுறை நாட்கள்ல கூட்டம் அலைமோதும்..4மணி நேரமெல்லாம் வெயிட்டிங் டைம் இருக்குமாம். இப்படி வெயிட் பண்ண விருப்பமில்லைன்னா,எக்ஸ்ப்ரெஸ் பாஸ் என்று கொஞ்சம் அதிக கட்டணத்தில் ஸ்பெஷல் டிக்கட்ஸும் இருக்கு.) நமக்கென்ன அவசரம்?? நார்மல் டிக்கட்லயே போய்ப்பார்க்கலாம்!
டிக்கட் வாங்கியாச்சு,வாங்க,மேலே போலாம்! :)
கியூல மொத்தமே 10-20 பேர்தான் இருந்திருப்போம். 2 லிஃப்ட்கள் இருக்கு.எக்ஸ்ப்ரெஸ் பாஸ் வாங்கியவர்களுக்கு ஒன்று,நார்மல் கட்டணத்துக்கு ஒன்று என. லிப்ட்டில் ஏறியதும் சில நொடிகளில் 50-55 மாடிகள் உயரத்துக்கு கொண்டுபோய்விட்டுவிடுகிறது. வெளியே வந்தால் முழுக்க கம்பி வேலி போடப்பட்டு, ஈஃபில் டவரின் உச்சியில் இருக்கிறோம். அங்ககே தொலைநோக்கிகள் வைத்திருக்காங்க. ஒளிவெள்ளத்தில் மிதக்கும் லாஸ் வேகாஸ் நம் கண்ணைப் பறிக்கிறது.
கீழே இருக்கும் படத்தில், பாரிஸின் எதிரில் இருக்கும் பெல்லாஜியோ கேஸினோ. பெல்லாஜியோவில் முன்புறம் ஒரு பெரீய்ய வாட்டர் ஃபவுண்டெய்ன் இருக்கிறது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை, 15நிமிட இடைவெளியில் அந்த ஃபவுண்டெய்னில் நடக்கும் வாட்டர் ஷோக்கள் மிகவும் பிரபலம். ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் நடக்கும் இந்த ஷோ-வில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடல் போடுவாங்க,அந்த இசைக்கு ஏற்ப தண்ணீரின் நடனமும், ஃபவுண்டெய்ன் உள்ளே இருக்கும் விளக்குகள் திரும்புவதும் மிகவும் அழகாக இருக்கும்.

கீழே இருந்து பார்க்கும்பொழுது ஒரு வியூ,இதுவே எதிரில் இருக்கும் ஈஃபில் டவரின் மேலே இருந்து பார்க்கையில் இன்னும் அற்புதமான ஒரு வியூ!! நாங்கள் டவரின் மேலே செல்கையில் ஒரு ஷோ நடந்து முடிந்திருந்தது. கால்மணி நேரம் காத்திருந்து, அடுத்த ஷோ முழுக்க வீடியோ எடுத்துவிட்டு,மீண்டும் காத்திருந்து இன்னொரு ஷோவும் பார்த்துவிட்டு வந்தோம்.முதல் ஷோவை வீடியோ எடுத்தவர் அடுத்த ஷோவ அட்லீஸ்ட் என்ஜாய் பண்ண வேணாமா? :)

வீடியோ இதோ..நீங்களும் பாருங்க..



பெல்லாஜியோவினுள் இந்த முறை நாங்க போகல..ஏன்னா,இதற்கு முன்பு போன இரண்டுதடவைகளும், திருப்பதி போனதும் பெருமாள் தரிசனம் பண்ணறமாதிரி,வேகாஸ் போனதும் முதல் வேலையா பெல்லாஜியோ-சீஸர் பேலஸ் இந்த இரண்டு கேஸீனோவும் போவோம்,மற்ற இடங்கள்ல கான்சன்ட்ரேட் பண்ண மாட்டோம்! :)

அதுக்கு காரணம் இல்லாமலில்லை,இந்த இரண்டு கேஸினோக்களும்தான் லாஸ் வேகாஸில் மிகவும் பிரம்மாண்டமான,பெரீய்ய, 5 நட்சத்திர அந்தஸ்துள்ள கேஸினோக்கள். அழகழகான தீம்ஸ் போட்டு டெகரேஷன்ஸ் பண்ணி வைத்திருப்பாங்க..உள்ளே போயிட்டு வெளியே வரும்போது நடந்துநடந்துநடந்து...வலில கால்கள் கெஞ்சும்!! அந்தளவுக்கு பெரிய கேஸினோக்கள். அதனால இந்த முறை அதை மட்டும் விட்டுட்டு மற்ற இடங்களை பார்த்தோம். கடந்த முறை பெல்லாஜியோவில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு...
இதோ இங்கே & இங்கே.

பகுதி-1ஐக் காண..

-தொடரும்.

24 comments:

  1. wow !beautiful ,பிரம்மாண்டம் .
    பவுண்டெயின் சூப்பர்.

    ReplyDelete
  2. உள்ளேன் டீச்சர்...!! :-))

    ReplyDelete
  3. //படத்தில் இடது புறம் இருப்பது ஈஃபில் டவரின் ஒரு தூண்...//

    ஓஓஓஓஓஓஓ...இதுக்கு பேர்தான் ஈஃபில் டவரா....!!

    டிக்கெட்ல வெதர் கண்டிஷன்னு போட்டிருக்கே...!! மழை பெய்ஞ்சா உள்ளே விட மாட்டாங்களா..? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. கேசினோ வில போய்ட்டு விளையாடாம வந்து இருப்பீங்களா என்ன ? எவ்வளவு தோத்தது எத்தனை ஜெய்த்தது செல்லவே இல்ல .:-))

    ReplyDelete
  5. ஜெய் அண்ணா,கேஸினோவை சுத்திப் பார்ப்பது,போட்டோ எடுப்பது மட்டுமே என்னோட ஏரியா.கேம்ப்ளிங் உங்க மாம்ஸு ஏரியா.அவரைத்தான் கேக்கோணும்! ஹிஹி!

    ReplyDelete
  6. மொத்த ஐஞ்சி வீடியோவையும் ஒன்னா பாத்துட்டேன் ..(( யூ டியூப் பயபுள்ள ரெண்டு கமெண்டுக்குமேலே அப்ரூவல் கேக்குது இதென்ன அநியாயமா இருக்கு :-(

    ReplyDelete
  7. //கேம்ப்ளிங் உங்க மாம்ஸு ஏரியா.அவரைத்தான் கேக்கோணும்! ஹிஹி!//

    நம்பிட்டேன்..நம்பிட்டேன் :-))

    ReplyDelete
  8. மிகவும் அருமை மகி...நாங்க சென்ற பொழுது climate சரி இல்லாததால் அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை...

    அடுத்த வருடம் தான் திரும்பவும் போகலாம் என்று இருக்கின்றோம்...திரும்பவும் ஆசையினை காட்டுகின்றிங்களே...

    ReplyDelete
  9. வீடியோ , போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு மஹி ,கண்கொள்ளா காட்சி.

    ReplyDelete
  10. Superb clicks and very detailed writing,bookmarked for my future visit to Paris :):)Would let u know and please give me tips as to how to go and where :):)

    ReplyDelete
  11. அழகு..அற்புதம்..கண்கள் விரியும் அளவு புகைப்படங்கள்..தாங்க்ஸ் மகி.

    ReplyDelete
  12. ஹாய் மஹி..இப்போல்லாம் நீங்க எடுக்கிற புகைப்படங்களில் ஒரு professionalism தெரியுது...வாழ்த்துக்கள்...வள வளன்னு பேசுறதுக்கு உங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்...நல்லா விளக்கமா சொல்லியிருக்கீங்க... ப்ளாக்ல எழுதணுன்றதுக்காகவே அடிக்கடி ட்ரிப் அடிக்கிறீங்களோ?

    பை தி வே... ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன்...வந்து பார்த்து ஒரு (நல்ல) கமெண்ட் cum suggestion,if any,சொல்லுங்களேன்.
    enrenrum16.blogspot.com

    ReplyDelete
  13. mee the first mami..
    late but present..

    ReplyDelete
  14. ஜாலி ட்ரிப் வித் சூப்பர் போட்டோஸ்
    எஸ் மகி குட்டி க்கு பேர் வெச்சாச்சு
    ஸ்ரீ வர்தன். உங்களுக்கு எந்த பட்சி சொல்லுச்சுன்னு
    சொல்லுங்க ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

    ReplyDelete
  15. வாவ்...எங்களையும் எங்கயோ கூட்டிட்டு போயிட்டீங்க மகி...சூப்பர் போட்டோஸ்...சூப்பர் விளக்கம்...

    I want to visit once...வர்றப்ப சொல்றேன்...but ஊர் விட்டு எல்லாம் ஓடிராதீங்க அம்மணி

    ReplyDelete
  16. ♥♥ Olá, amiga!
    ♥ Passei para uma visitinha... amei!!! ♥♥
    Seu blog está muito bonito. ♥
    ♥ Beijinhos.
    Brasil♥♥

    ReplyDelete
  17. மகி.. நல்லா செய்திருக்காங்க.. கலர்புல்லா இருக்கு..

    ஏற்கனவே கேட்டது தான்.. ஒரு நாளைக்கு இவங்க எவ்வளவு மின்சாரம் செலவு பண்ணுவாங்கன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க :)))

    ReplyDelete
  18. இந்த பதிவவையும் ,ம் பாடல் களையும் அப்பரமா வந்து பார்க்கிறேன்

    ReplyDelete
  19. சூப்பர் :)

    ReplyDelete
  20. ஆசியா அக்கா,கீதா,சாரு,குறிஞ்சி,ப்ரியா,
    ஸாதிகாக்கா,வேணி,சிவா அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி!!

    சிட்சாட்,தாராளமா சொல்லுங்க,என்னால முடிந்தளவுக்கு விவரங்கள் சொல்லறேன்.:)

    என்றென்றும் 16,மேலே தூக்கற மாதிரி தூக்கி, 'தொப்'-னு கீழே போட்டுட்டீங்களே!நான் என்னமோ தெளிவா சொல்லறதா நினைச்சு எழுதிட்டேன்.;)

    போட்டோஸ் நல்லாருக்குன்னு சொன்னதுக்கு டாங்க்ஸ்! :)

    /ப்ளாக்ல எழுதணுன்றதுக்காகவே அடிக்கடி ட்ரிப் அடிக்கிறீங்களோ?/நோ வே!இதுவரை நாங்க சுத்தின இடமெல்லாம் எழுதறதுன்னா தினம் ஒரு பதிவு போட்டாகூடப் பத்தாதுங்க.இப்பதான் நம்ம ரசித்ததைப் பற்றி எழுதலாமேன்னு ஒரு ஞானோதயம் வந்திருக்கு.

    சௌம்யா,குட்டிப்பையன் பெயர் நல்லா இருக்குங்க!/உங்களுக்கு எந்த பட்சி சொல்லுச்சுன்னு சொல்லுங்க/ :):) சொல்லமாட்டேனே!சஸ்பென்ஸ்!!!

    ReplyDelete
  21. /I want to visit once...வர்றப்ப சொல்றேன்...but ஊர் விட்டு எல்லாம் ஓடிராதீங்க அம்மணி/ஹாஹ்ஹா!! புவனா,நாடோடிங்களைப் பாத்து இப்பூடி சொன்னா எப்பூடி? இங்கேயே இருப்போம்னு சொல்ல முடியாது,ஆனா அதனால என்ன? நீங்க எப்பவரீங்கன்னு சொல்லுங்க,நாங்களும் வந்துடறோம்.:)

    சந்தனா,சீக்கிரம் கேட்டு சொல்லறேன்!!:)

    ஜலீலாக்கா,நன்றி,மீண்டும் வருக!:)

    நன்றீங்க பாலாஜி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails