Friday, December 10, 2010

பைனாப்பிள் சேமியா கேசரி,பல்பு & விருது

பிஸ்ஸா செய்வதற்காக வாங்கிய ஒரு கேன்ட் பைனாப்பிள் துண்டுகளில் மீதி, ப்ரிட்ஜில் வெகு நாட்களாக உட்கார்ந்துகொண்டு,'என்னை ஏதாவது செய்யேன்!'ன்னு கெஞ்சிட்டு இருந்துதுங்க. மேனகா ப்ளாகில் பைனாப்பிள் கேசரியைப் பார்த்ததுமே இதை ட்ரை பண்ணிப்பார்க்கணும்னு மனசுக்குள்ளே குறிச்சு வைச்சிருந்தேனா..ஒரு நாள்,பத்தரை-பனிரெண்டு ராகுகாலத்துல, செய்ய ஆரம்பிச்சேன்.:)

ஒரு ஸ்பூன் பட்டர்ல(கைவசம் நெய் இல்ல) முந்திரி,திராட்சை,பைனாப்பிள் துண்டுகளை வதக்கி எடுத்து வச்சுட்டு..
அதே கடாயில் 3/4 சேமியாவும், 11/2கப் கொதிநீரும்,2 துளிகள் மஞ்சள் ஃபுட் கலரும் ஊற்றி சேமியாவை வேகவைச்சேன்.(சேமியாவை வறுக்க வேணாமான்னு கேப்பீங்க..நாங்கள்லாம் மொத்தமா சேமியாவ வறுத்து ஸ்டோர் பண்ணி வச்சுக்கறது வழக்கம். அப்படி இல்லைன்னா, பொன்னிறமா சேமியாவை வறுத்துட்டு அப்புறம் வேகவைங்க.)
சேமியா வெந்ததும் 3/4 கப் சர்க்கரையை சேர்த்து கிளறுங்க. (சேமியா-சர்க்கரை ரெண்டும் ஒரே அளவுல போட்டது எங்களுக்கு இனிப்பு சரியா இருந்தது. சர்க்கரை அதிகம்/குறைவுன்னு நினைத்தா உங்க ருசிக்கேற்ப குறைக்கலாம் (அ) அதிகரிக்கலாம்)
சர்க்கரை கரைந்ததும், கேசரி இளகி அப்புறம் மெதுவா இறுக ஆரம்பிக்கும். அந்த ஸ்டேஜ்ல வறுத்து வைச்ச முந்திரி-திராட்சை-பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து,இன்னொரு ஸ்பூன் பட்டரும் சேர்த்து நல்லா கலக்கிவிடுங்க.
அவ்ளோதான்..பைனாப்பிள் சேமியா கேசரி தயார். செய்த உடனே ருசி பார்க்கும் வழக்கமும் கிடையாதா..கேசரி பாவம், என்னவர் ஆபீஸ்ல இருந்து வரவரைக்கும் தேமேன்னு வெயிட் பண்ணுச்சு.(நான் உண்மைதான் பேசுவேன் என்ற உங்க நம்பிக்கைகு நன்றி!;) )

இவரும் வழக்கம்போல டின்னர் டைமும்க்கு வீட்டுக்கு வந்தார்..வந்தவுடனே இரவு உணவும் முடிந்தது.சாப்பாடு,முளைகட்டிய சோயாபீன்ஸ் குழம்பு,வயலட் முட்டைகோஸ் பொரியல்-ரசம்..வாங்க,சாப்பிடலாம்! :)

எனக்கு கேசரி செய்ததே மறந்துபோச்சு!அவரே கிச்சன்ல துழாவி கண்டுபிடிச்சு, பவுல்-ல போட்டுட்டும் வந்து ருசிக்க ஆரம்பிச்சார்.அதுக்கப்புறம்தான் காமெடியே!!இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்.உஸ்...அப்பாடா!!!

"ஸ்வீட் சேமியா ரொம்ப நல்லா இருக்கு!"-ன்னு போட்டாரே ஒரு போடு!! எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்றதுன்னே தெரில..:-| :-| :-| அது ஸ்வீட் சேமியா இல்லைங்க,இன்னொரு முறை கெஸ் பண்ணி,அதிலே இருக்கும் இன்கிரிடியன்ட்ஸ்-ஐ பாத்து சொல்லுங்க-ன்னு சொன்னேன். எல்லாம் பார்த்துட்டு முந்திரி இருக்கறது தெரியுது,நட்ஸ் சேமியா(!!!??)-வான்னாரு!! எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சு!! முந்திரி-திராட்சையைத் தவிர வேற எதுமே தெரிலையா சேமியா கேசரில?ன்னு கேட்டேன். ஓஹோ..இது சேமியா கேசரியா? நான் ஸ்வீட் சேமியான்னு நினைச்சிட்டேன்.சாரி!ஹிஹிஹி-ன்னாரு..

இவர்கிட்ட பதில எதிர்பார்த்து மனசை உடைச்சுக்கறதுக்கு பதிலா நாமே சொல்லிடலாம்னு இது பைனாப்பிள் சேர்த்த சேமியா கேசரிங்க-ன்னு நானே சொல்லிட்டேன்.இதுக்குள்ள 2 பவுல் கேசரி காலியாயிடுச்சு..ஆஹா,பைனாப்பிள் சேர்த்ததாலே டேஸ்ட் இன்னும் நல்லாருக்கு,அதான் ரெண்டாவது முறையும் சாப்பிட்டேன்னு சமாளிச்சிட்டார்.

நீங்களே சொல்லுங்க..இதை,இதை,இதைப் பார்த்தா ஸ்வீட் சேமியா மாதிரிதான் இருக்குதா?பைனாப்பிள் சேமியா கேசரி மாதிரி இல்லையாஆஆஆஆஆஆஆ? என்ன கொடுமைங்க இது???
~~~~~
அடுத்து இன்னொரு காமெடி..ஒருநாள் கடையிலே வெங்காயம் எடுத்துட்டு இருந்தேன்.அப்ப பக்கத்துல வந்த ஒரு வெள்ளைக்கார தாத்தா,நான் ஓரொரு வெங்காயமா பொறுக்கி எடுப்பதை பார்த்திட்டு, எப்படி நல்ல வெங்காயம்னு கண்டுபிடிக்கறே?ன்னு கேட்டார். நானும் சின்ஸியரா "வெங்காயம் தோல் உரியாததா..நல்லா பளபளப்பா, அழுகிப் போகாம இருக்கறதா எடுக்கணும்"னு சொன்னேன்.(நான் சொன்னது கரெக்டுதானே?நீங்க எல்லாரும் எப்படி வாங்குவீங்க?)
அப்படியே அரட்டை அடிச்சிட்டு, ஒரொரு வெங்காயமா எங்கிட்ட காட்டி,இது நல்ல வெங்காயமா?ன்னு கேட்டு கேட்டு அப்ரூவலும் வாங்கிட்டார். ரெட் ஆனியன்,ஒயிட் ஆனியன்,யெல்லோ ஆனியன் இதுலே எது நல்லாருக்கும்னும் கேட்டுகிட்டார். கடேசியா அந்தப்பக்கம் நகரும்போது.."எப்படி பொறுக்கி எடுத்து செலக்ட் பண்ணி வாங்கினாலும், தொண்டைக்கு கீழே போயிட்டா எல்லாமே ஒண்ணுதானே?"-ன்னு ஒரு போடு போட்டுட்டு போயிட்டார். ஒரொரு முறையும் இது நல்லவெங்காயமான்னு எங்கிட்ட கேக்கும்போது இந்த உண்மை இவருக்கு தெரிலயா? என்ன ஒரு நேரம் பாருங்க!

சரியான புன்னகை மன்னின்னு என் முகத்துல எழுதி ஒட்டிருக்கு போல!! ( புன்னகை மன்னி=புன்னகை மன்னனுக்கு பெண்பாலுங்க.:) )நரி முகத்தில முழிச்சிருக்கோம் இன்னைக்குன்னு மனசைத் தேத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.
~~~~~~
இப்படி சரமாரியான சம்பவங்களால் புண்பட்ட மனதை குறிஞ்சி,இண்டியன் ஸ்பைஸ் மேஜிக் இருவரும் 'வெர்ஸட்டைல் ப்ளாக்கர்' என்ற அவார்டு கொடுத்து ஆற்றிவிட்டாங்க..:):):)
மிக்க நன்றி குறிஞ்சி&இண்டியன் ஸ்பைஸ் மேஜிக்!

இந்த விருதினை,என்னைக் கவர்ந்து, என் கேமராவில் புகுந்துகொண்ட ஒரு அழகுப்பூவுடன்...

அகிலா,குறிஞ்சி,காயத்ரி,இண்டியன் ஸ்பைஸ் மேஜிக் மற்றும் என் வலைப்பூவைப் பின்தொடரும், ஒவ்வொரு பதிவுக்கும் தவறாமல் பின்னூட்டங்களிட்டு ஊக்கப்படுத்தும்,பின்னூட்டமிட நேரமில்லாமல் படித்து ரசித்துவிட்டு மட்டும் செல்லும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் வழங்குகிறேன்!

நீங்கள் தரும் மேலான ஆதரவுக்கும்,ஊக்கத்துக்கும் நன்றி கூறும் முகமாக எல்லோரும் இந்த விருதினை வழங்குகிறேன்..மறுக்காமல் பெற்றுக்கொண்டு என்னை கௌரவியுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொண்டு(அரசியல் மேடை வாசம் வருதோ?? ஓகே,ஓகே டென்ஷன் ஆவாதீங்க,உடம்புக்கு நல்லதில்ல.. முடிச்சிடறேன். :) ) இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.நன்றி,வணக்கம்!

24 comments:

 1. பொறந்தாலும் மகி வீட்டு நாய்க்குட்டியாப் பொறக்கோனும் :)

  யம்மி.. செய்யறதும் எளிதாத் தான் இருக்கு.. பார்க்கலாம்..

  ReplyDelete
 2. ஹாஹ்ஹா.. தாத்தா கலக்கிட்டாரு.. அநேகமா ஒரு மாசத்துக்கான வெங்காயத்த வாங்கிட்டாருன்னு தான் நினைக்கறேன் :) நான் கொஞ்சம் அமுக்கிப் பார்த்து கெட்டியா இருக்கா அழுகலை தானே ன்னு மட்டும் பார்ப்பேன்..

  ReplyDelete
 3. வசித்தாலும்
  மகி மாமி பக்கத்துக்கு வீடுகிட்ட வசிக்கணும்..
  அப்போதான் அவங்க கிட்ட எது செய்தலும்
  முதல போய் சாப்பிட முடியும்...
  ஒரு செட் பார்சல் பண்ணிடுங்க...

  ReplyDelete
 4. அப்போ
  எனக்கு விருது இல்லையா????
  விருது கொடுத்த ...
  விருது வாங்கின மழலை அரசி மகி மாமிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. miga arumai and your awards are well deserved !

  ReplyDelete
 6. ரொம்ப அருமை மகி , பைனாப்பிள சேர்த்து செய்ததில்லை

  என் தங்கை தான் செய்வாள்


  சேமிய கேசரி காலை டிபனுக்கு என் மாமியர், தேங்காய் துருவல் தூவி செய்வார்கள்
  அவஙக் ஈதுக்கும் இதான் செய்வாரக்ள்
  நானும் இன்னும் மாததில் ஒரு நாள் சேமியா கேசரி, + காரத்துக்கு எனக்காக சுண்டல் , மற்றும் எல்லாருக்கும் பிடிக்கும்

  www.samaiyalattakaasam.blogspot.com

  இந்த ஜலீலா அக்காவ மற்ந்தே போயிட்டீங்க் போல

  ReplyDelete
 7. சேமியா கேசரியும்,விருதும் அருமை.விருதிற்கு வாழ்த்துக்கள்.படங்கள் சூப்பர்.

  ReplyDelete
 8. Nice post. Kesari looks wonderful and congrats on your award!

  ReplyDelete
 9. mahi romab porumai and nalla interestinga eluthareenga, kesari parthathume sappitanum pola ullathu, knojam parcel pannunga....

  ReplyDelete
 10. பைனாப்பிள் சேர்த்து செய்யும் கேசரி மிக அருமையான சுவையில் இருக்கும்.படத்தைப்பார்த்ததும் உடனே கேசரி கிளறி விடவேண்டும் போல் உள்ளது.

  //எப்படி பொறுக்கி எடுத்து செலக்ட் பண்ணி வாங்கினாலும், தொண்டைக்கு கீழே போயிட்டா எல்லாமே ஒண்ணுதானே?"-// நல்ல புத்திசாலி வெள்ளைக்கார தாத்தாதான்:-

  ReplyDelete
 11. மஹி அண்ணாத்தே வர வரைக்கும் ஸ்வீட்டை டேஸ்ட் பண்ண மாட்டீங்களா இதுல எதோ ஒரு உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதுனு பக்கதில ஒருத்தர் உக்காந்து கூவிகிட்டு இருக்காங்க( ஹி ஹி எங்க வீட்டு ரங்ஸ் தான்) நாங்களாம் அவுங்க வரதுகுள்ள பாதி காலி பண்ணிடுவோம் நான் மட்டும் இல்லை என் பசங்களையும் சேர்த்து தான். சூப்பரா இருக்கு சேமியா கேசரி ...

  ReplyDelete
 12. keasri seithu parthathuku mikka nandri mahi....ungaluku pidithathil santhosam...congrtas on ur award!!

  ReplyDelete
 13. hi mahi, kesariya book mark pannitu than commente ezhutharen... migavum arumaiyana kesari... neenga ezutharathu, padikka romba jollyavum, realitikagavum iruku.....

  thanks for sharing dear....

  Dish Name Starts with C: - Main Dishes & Cakes
  Dish Name Starts with C: - Snacks & Sweets
  Dish Name Starts with C: - SideDishes & Beverages

  Event: Dish Name Starts with D

  Regards,
  Akila.

  ReplyDelete
 14. நல்லா இருக்கு பைனாப்பிள் சேமியா ( !!!!! ). விருதுக்கு வாழ்த்துக்கள்.

  சந்தூ, இதுக்காக போய் நாயா பிறக்கணும்ன்னு ஏன் ஆசைப்படுறீங்க. செஞ்சு சாப்பிடுங்க!!!! ஓகேவா????

  ReplyDelete
 15. எங்க வீட்டில் அம்மா எப்பொழுதுமே பைனாப்பிள் கேசரி தான் செய்வாங்க....அப்படி பழம் இல்லாமல் இருந்தாலும் அட்லீஸ்ட் அந்த essence சேர்த்தாவது செய்வாங்க...இங்க இவருக்கு ஏனோ அப்படி செய்தால் பிடிப்பது இல்லை என்பதால் செய்வதே கிடையாது....இந்த வாரம் செய்துவிட வேண்டியது தான்...

  ReplyDelete
 16. beautiful kesari, looks yumm, congrats for the award, great

  ReplyDelete
 17. First time here Mahi!!Unga blog romba nalla irukku:)Las vegas pictures parthu njoy pannen..Its just 3 hrs drive from our place

  ReplyDelete
 18. Pine apple kesarinu kandu pidikama vitta manniklaam,ana semiya kesarine kandupidiklaya??
  ;)
  Ilicha vai nu solradha yevlo descent a sollirkeenga ;) Smiling face ;)

  ReplyDelete
 19. ஹாய் மஹி பைனாப்பிள் கேசரி சூப்பரா இருக்கு...ஆனால் எப்படி மஹி அண்ணன் வர வரைக்கும் டேஸ்ட்டு பாக்காம இருக்கீங்க...சேன்சே இல்லை போங்க க்ரேட்டு.பைனாப்பிள் இருக்கரதை பார்ர்க்காமயே 2 கப் காலியாயிடுச்சுன்னா அவ்வளோ டேஸ்ட்டா செய்து இருக்கீங்க.
  என்னதான் இருந்தாலும் அந்த வெள்ளைக்கார தாத்தாவிர்கு அவ்வளோ கிண்டல் கூடாது.
  விருதுகள் வாஙி குவித்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. Wow semiya kesari looks so yummy... I like it very much... thanks for the recipe... wonderful blog u have ... following you..

  ReplyDelete
 21. மிகவும் அருமை

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails