
இயற்கை..எழுத்துக்களில் அடக்க முடியாத ஒரு பிரம்மாண்டம்! ஒரு நாள்,ஒரு நிமிடம் பார்த்த காட்சிகளை அடுத்த நாள்,இல்லையில்லை அடுத்த நொடி காணமுடிவதில்லை..பூ நிறம் மாறி வேறொரு ஆளாக நின்றிருக்கும்..அல்லது உடலெல்லாம் சிவப்பு நிற இலைகளுடன் நின்ற மரத்திற்கு காற்று இலவசமாய் மொட்டை அடித்திருக்கும்.
வானில் நொடிக்கொரு முறை புது வடிவமெடுக்கும் மேகங்களையும், தினமும் நிகழ்வதாய் இருந்தாலும் கண்ணில் படும் அந்திநேர மஞ்சள் வானத்தையும் பார்க்கும்போதெல்லாம் கடவுளின் மீது நம்பிக்கை வருகிறது!

கடந்த சனிக்கிழமை நிஜமாகவே ஒரு 'பொன் மாலைப் பொழுது'! சூரியன் மறைந்து இருள் சூழும் வரையில் வேறெந்த எண்ணமும் இல்லாமல் வானமகளை ரசித்தபடியே இருந்த ஒரு அழகான மாலைப்பொழுது அது!

நாங்கள் கண்டு ரசித்த காட்சிகள், நினைவுப் பதிவுகளாய்..இதோ
இங்கே!
~~~~~ இங்கே சிலநாட்கள் தொடர்மழையாய் இருந்தது..அதன் விளைவாக பூமிக்குள் தூங்கிக்கொண்டிருந்த பல மலர்ச்செடிகள் உற்சாகமாகத் துளிர்த்து, அழகழகாய்ப் பூத்திருக்கின்றன.சாலையோரம் இருக்கும் இந்தச் செடிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவைதான் என்று நினைக்கிறேன்,ஆனால்...இந்தப் படங்களைப் பாருங்கள்..இறைவன் படைப்பில் எத்தனை எத்தனை விதம்??!!
ஒரு செடியில், பூ முழுதும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்,இன்னொன்றில் மஞ்சளில் ப்ரவுன் நிறத்தீற்றல்களுடன் பூத்திருக்கும்..சில பூக்களில் மஞ்சள் நிறத்தை டாமினேட் செய்து ப்ரவுன் நிறம் ஆதிக்கம் செலுத்தும்.சில பூக்களில் ஒவ்வொரு இதழிலும் கவனமாக ஒரே இடத்தில் கருப்புப் புள்ளிகள் இருக்கும்...

கேமரா இல்லாமல் சென்ற ஒரு நாளில்,உயரமான ஓரிடத்தில் இதே பூக்கள் கிட்டத்தட்ட சிவப்பு நிறத்தில் இருந்தன.இந்த ஆராய்ச்சியின் முடிவாக வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து மலர்கள் நிறங்கள் மாறுகின்றன என்ற கணிப்புக்கு வந்திருக்கிறேன். :)

இந்தமுறை பூக்களிலெல்லாம் பெரும்பாலும் வண்டுகளின் ரீங்காரம். வண்டுகள் கேமராவில்தான் சிக்க மறுத்தன..இந்தப்பூவில் இருக்கிறது என்று ஃபோகஸ் செய்வேன்,க்ளிக் பண்ணும் நொடியில் வேறு பூவுக்குப் பறந்துவிடும்..பலமுறை போராடிப் பார்த்து விட்டுவிட்டேன்.வீடு சேர்ந்து போட்டோக்களை லேப்டாப்புக்கு மாற்றுகையில் என்னவர்தான் கவனித்தார்..இரண்டு படங்களில் வண்டுகள் மாட்டியிருந்தன.

எத்தனை முறை படமெடுத்தாலும், மலர்களை மட்டும் சலிக்காமல் கேமராவில் சிறைபிடித்துக்கொண்டே இருக்கிறேன்!
ஹை வடை எனக்கே..இருங்க படிச்சிட்டு வரேன் :-)
ReplyDelete//உடலெல்லாம் சிவப்பு நிற
ReplyDeleteஇலைகளுடன் நின்ற மரத்திற்கு
காற்று இலவசமாய் மொட்டை அடித்திருக்கும//
கவித...கவித...
//வானில் நொடிக்கொரு முறை புது வடிவமெடுக்கும் மேகங்களையும், தினமும் நிகழ்வதாய் இருந்தாலும் கண்ணில் படும் அந்திநேர மஞ்சள் வானத்தையும் பார்க்கும்போதெல்லாம் கடவுளின் மீது நம்பிக்கை வருகிறது!//
ReplyDeleteஇன்னைக்கு லீவா ? அழகா ரசிச்சி போட்டிருக்கீங்க
//கடந்த சனிக்கிழமை நிஜமாகவே ஒரு 'பொன் மாலைப் பொழுது'! சூரியன் மறைந்து இருள் சூழும் வரையில் வேறெந்த எண்ணமும் இல்லாமல் வானமகளை ரசித்தபடியே இருந்த ஒரு அழகான மாலைப்பொழுது அது!//
ReplyDeleteஅதானே பார்த்தேன் ..ஒரு வேளை கனவா இல்லை நினைவான்னு ஹா..ஹா..
//ஒரு செடியில், பூ முழுதும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்,இன்னொன்றில் மஞ்சளில் ப்ரவுன் நிறத்தீற்றல்களுடன் பூத்திருக்கும்..சில பூக்களில் மஞ்சள் நிறத்தை டாமினேட் செய்து ப்ரவுன் நிறம் ஆதிக்கம் செலுத்தும்.சில பூக்களில் ஒவ்வொரு இதழிலும் கவனமாக ஒரே இடத்தில் கருப்புப் புள்ளிகள் இருக்கும்...//
ReplyDeleteஅடங்கொக்கா மக்கா ...எனக்கு எல்லா படமுமே (எதை பார்தாலும் ) மஞ்சளாதான் தெரியுது.அவ்வ்வ்வ்வ்
//வீடு சேர்ந்து போட்டோக்களை லேப்டாப்புக்கு மாற்றுகையில் என்னவர்தான் கவனித்தார்..இரண்டு படங்களில் வண்டுகள் மாட்டியிருந்தன.//
ReplyDeleteமாம்ஸ் வாழ்க ..!!சமையல் மட்டும்தான்னு நினைச்சா இங்கேயுமா ஹி..ஹி..
Beautiful pictures, it shows how much you like nature and its wonderful creativity
ReplyDelete/இன்னைக்கு லீவா ? அழகா ரசிச்சி போட்டிருக்கீங்க/:) ஜெய் அண்ணா,எல்லாம் வீகெண்டில் எடுத்த போட்டோஸ்.நான் ரசித்த காட்சிகளை எல்லாரும் ரசிக்கவே இந்தப் பதிவு!
ReplyDelete/எனக்கு எல்லா படமுமே (எதை பார்தாலும் ) மஞ்சளாதான் தெரியுது.அவ்வ்வ்வ்வ்/அச்சச்சோ..சீக்கிரமா போயி டாக்டரைப் பாருங்கோ!ஜான்டிஸ் ஏதாவது வந்திருக்கப்போகுது! ;)
நன்றி ஜெய் அண்ணா!
//எத்தனை முறை படமெடுத்தாலும், மலர்களை மட்டும் சலிக்காமல் கேமராவில் சிறைபிடித்துக்கொண்டே இருக்கிறேன்.//
ReplyDeleteஅப்படியே மாம்ஸையும் ஒன்னு பிடிச்சி போடுங்களேன் :-)
மொத்தத்தில கவிதையுடன் படங்களும் அருமை ...!! :-)
ReplyDelete((இன்னைக்கி மட்டும் நல்ல விதமா கமெண்ட் போடுவதுன்னு முடிவு எடுத்திருக்கேன் அதனால என்னை உசுப்பி விட வேண்டாம் ))
//அச்சச்சோ..சீக்கிரமா போயி டாக்டரைப் பாருங்கோ!ஜான்டிஸ் ஏதாவது வந்திருக்கப்போகுது! ;) //
ReplyDeleteஅவரும் மஞ்சள் கலர் கண்ணாடிதான் போட்டிருக்கார் ஹி..ஹி...
:-) arumai...unkal ezhuthu nadai migavum azaghu:-)
ReplyDeleteபோட்டோ பார்த்து கொஞ்சமா மயக்கம் வர மாதிரி இருந்துதா.. எழுத்து, வர்ணிப்பு.. //இயற்கை..எழுத்துக்களில் அடக்க முடியாத ஒரு பிரம்மாண்டம்! ஒரு நாள்,ஒரு நிமிடம் பார்த்த காட்சிகளை அடுத்த நாள்,இல்லையில்லை அடுத்த நொடி காணமுடிவதில்லை..பூ நிறம் மாறி வேறொரு ஆளாக நின்றிருக்கும்..அல்லது உடலெல்லாம் சிவப்பு நிற இலைகளுடன் நின்ற மரத்திற்கு காற்று இலவசமாய் மொட்டை அடித்திருக்கும்.// பார்த்து அப்புடியே சரிஞ்சு விழுந்துட்டேன். யாராச்சும் சுட்டாறின தண்ணி தெளியுங்கோ.. ;))
ReplyDeleteசுப்பர்.
உங்க திறமையை முழுசாப் பயன்படுத்திக்க மாட்டேங்கறீங்க மகி. இன்னும் நிறைய எழுதுங்க. பாராட்டுக்கள்.
me the first.
ReplyDeleteஅந்தி மஞ்சள் வானம் அட்டகாசம்.
ReplyDeleteவெள்ளைப் பூவொன்று கொள்ளை கொள்ளுது மனதை :)
Amazing pictures..
ReplyDelete//அல்லது உடலெல்லாம் சிவப்பு நிற இலைகளுடன் நின்ற மரத்திற்கு காற்று இலவசமாய் மொட்டை அடித்திருக்கும்.///
ReplyDeleteஹா ஹா ஹா..
ரொம்ப க்யூட் பா...:-)
படங்கள் ஒவ்வொன்றும்.. ஒவ்வொரு வகையில் அழகு...
ரொம்ப அழகா பிக்க்ஷர் எடுக்கிறீங்க... வாழ்த்துக்கள்.
Superb.................!!!
ReplyDeleteKurinji
அட,மகி ! உங்கள் தமிழ் ஆசிரியர் யார்?மயக்கும் இயற்கையும்,அழகும் கண்டு வியந்து அதை விவரித்த விதம் கண்டு நிஜத்தில் மனதில் ஒரு தமிழ் துள்ளல் எழத்தான் செய்கிறது.அருமை,அருமை.
ReplyDeletekalakareenga mahi very nice photos.
ReplyDeletekavidhai um kuda serndhu kalakudhu...
An award is waiting for you. Please accept it..
ReplyDelete//இயற்கை..எழுத்துக்களில் அடக்க முடியாத ஒரு பிரம்மாண்டம்! ஒரு நாள்,ஒரு நிமிடம் பார்த்த காட்சிகளை அடுத்த நாள்,இல்லையில்லை அடுத்த நொடி காணமுடிவதில்லை..பூ நிறம் மாறி வேறொரு ஆளாக நின்றிருக்கும்..அல்லது உடலெல்லாம் சிவப்பு நிற இலைகளுடன் நின்ற மரத்திற்கு காற்று இலவசமாய் மொட்டை அடித்திருக்கும்.
ReplyDeleteவானில் நொடிக்கொரு முறை புது வடிவமெடுக்கும் மேகங்களையும், தினமும் நிகழ்வதாய் இருந்தாலும் கண்ணில் படும் அந்திநேர மஞ்சள் வானத்தையும் பார்க்கும்போதெல்லாம் கடவுளின் மீது நம்பிக்கை வருகிறது!///
அட அட... மகி...நீங்க எடுத்த படங்களோடு இந்த வார்த்தைகளையும் வாசிச்சு வாசிச்சு ரசிச்சேன்.... இயற்கையோடு அதிகம் ஒன்றிப் போயிட்டீங்களோ? பூக்களின் படங்கள் ரொம்ப அழகாக வந்திருக்கு... பார்க்க பார்க்க சலிக்கவேயில்லை... பொன்மாலை நேரங்களையும் வெகு அழகாக படமெடுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள் மகி...
Enrenrum16
அழகான படங்களுடன் ரசனையான பதிவு மஹி. ரசிச்சி படிச்சேன்.
ReplyDeleteமாறிக்கொண்டே இருக்கும் இயற்கையையும் மலர்களையும் நான் கூட சலிக்காமல் ரசிப்பதுண்டு, புகைப்படங்களும் எடுப்பதுண்டு. இயற்கையை ரசித்தாலே போதும் மனம் ரம்மியமாகிவிடுகிறது இல்லையா தோழி!
மகி அருமையான படங்கள்.பேசாமல் புகைப்பட கண்காட்சியில் வைக்கலாம்.
ReplyDeleteமகி, படங்கள் அருமை. மேலே இருக்கும் அந்திவானம் சூப்பரோ சூப்பர். மொத்தத்தில் அருமையான பதிவு.
ReplyDeleteமிக மிக அழகான அந்தி வானப் படங்கள்.. அருமை மஹி.. நேரிலே பார்த்துக் கொண்டே இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..
ReplyDeleteநீங்களும் எத்தனை நாளைக்குதான் ரவா கேசரியும் , ரச குல்லாவையும் மாத்தி மாத்தி செஞ்சிகிட்டு இருப்பிங்க பேசாம நடுவில இது மாதிரி கவிதயா (நல்லா கவனியுங்க ) போடுங்க ..!! :-)
ReplyDelete/எத்தனை நாளைக்குதான் ரவா கேசரியும் , ரச குல்லாவையும் மாத்தி மாத்தி செஞ்சிகிட்டு இருப்பிங்க/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதெப்படி கரெக்ட்டா நான் ரெசிப்பி போடாத கேசரியையும்,ரசகுல்லாவையும் சொல்றீங்க?
ReplyDelete/பேசாம நடுவில இது மாதிரி கவிதயா (நல்லா கவனியுங்க ) போடுங்க ..!! :-)/ என்னத்த கவனிக்கணும்? அதுவும் பேசாம கவனிக்கணுமா? அவ்வ்வ்வ்வ்!
அந்திவானத்தையும்,மலர்களையும் ரசித்து கருத்தும் பதித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteஎன் தமிழாசிரியர்கள் நிறையப் பேர் இருக்காங்க ஆசியாக்கா! அவர்களெல்லாரையும் நினைவுகூற ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துட்டீங்க,நன்றி! :)