Friday, December 17, 2010

ஸின் சிட்டி-நிறைவுப்பகுதி

ஸின் சிட்டி-பகுதி 1
ஸின் சிட்டி-பகுதி 2
லாஸ் வேகாஸ் கேஸினோக்களில் ப்ரேக்ஃபாஸ்ட்-லன்ச்-டின்னர்/ ஆல் டே பஃபேக்கள் மிகவும் பிரபலம்.இந்தப் பதிவில் நாம் பார்க்கபோவது ப்ளானட் ஹாலிவுட்& சர்க்கஸ் சர்க்கஸ் கேஸினோக்களின் பஃபேக்களைப் பற்றி.

வேகாஸின் டாப்10 பஃபேக்கள்-ல இருக்கு, என்னவரும் முன்பு ஒருமுறை இங்கே சாப்பிட்டிருக்கார், ரொம்ப சூப்பரா இருக்கும்னு ரிவ்யூவும் போட்டிருக்காங்க என்று பல்வேறு காரணங்களால் "ப்ளானட் ஹாலிவுட்"-இன் ஸ்பைஸ் மார்க்கெட் பஃபே-வை செலக்ட் பண்ணினோம். பார்க்கிங்லாட்ல காரைப் பார்க் பண்ணிட்டு,உள்ளே நுழைந்ததும்,கண்ணில் படுவது..
உலகம் முழுக்க இருக்கும் பெரும்பாலான மொழிகள்ல "வணக்கம்"னு எழுதி நம்மை வரவேற்கிறாங்க!! நானும் இன்னும் சில தமிழர்களும் இந்த வார்த்தைகளுக்குள் தேடிப் பிடிச்சு 2-3 இடத்தில இருந்த 'வணக்கத்தை' கண்டுபிடிச்சுட்டோம். சம்பந்தமே இல்லாத இடத்துல தமிழைப் பாத்ததும் ஒரு சிலிர்ப்பு,சந்தோஷம்!!
நாங்க நுழைந்த இடத்திலிருந்து ஒரு பெரிய வட்டம் சுற்றி நடந்துதான் பஃபேக்கு போகணும்.போகும் வழி "மிராக்கிள் மைல் ஷாப்ஸ்" என்ற ஷாப்பிங் மால். உள்ளே அவ்வளவு தத்ரூபமா ஒரு பெரிய டோம்(dome)-இன் கூரை முழுக்க வானத்தைப் போல(விசய் காந்த் படமில்ல,நிஜ வானம்!ஹிஹி) பெய்ன்ட் பண்ணி வச்சிருக்காங்க. நீலவானம்,மேகங்கள், நட்சத்திரங்கள்,அங்கங்கே பறக்கும் விமானங்கள்,சூரிய ஒளி வருவது போல லைட்டிங் இப்படி ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருந்தாங்க.
காலை 10மணிக்கு அங்கே போனோம்,கொஞ்சம் உள்ளே நடந்ததும்,சுற்றுப்புறம் ஏதோ இரவு 10 மணி போல ஆகியிருந்தது.எல்லா இடத்திலும் செயற்கை இருட்டு,அதற்கேற்ப அலங்கார விளக்குகள்,பல்வேறு கடைகள்,என்டர்டெய்ன்மெண்ட் தியேட்டர்கள் இப்படி ஒரு பெரிய வட்டத்தை சுற்றியடித்து ஒரு வழியா ஸ்பைஸ் மார்க்கெட்டை கண்டுபிடிச்சோம்.

அரை மணி நேரன் கியூல வெயிட் பண்ணி கவுன்ட்டர்ல 2 பேருக்கும் பே பண்ணிட்டு மறுபடி(யும்) வெயிட்டிங். 5 நிமிடங்களில் ஒரு அம்மணி வந்து எவ்வளவு பேர்? என்று கேட்டு,டேபிளைக் காட்டினார்.அமெரிக்கன்,ஆசியன்,இட்டாலியன்,மிடில்-ஈஸ்டர்ன்,மெக்ஸிகன், சாலட் &சூப் பார், டிஸர்ட் என்று படு பிரம்மாண்டமா இருந்ததுங்க பஃபே.

சரி இனி பூந்து விளையாட வேண்டியதுதான்னு எழுந்து போனா...அங்கேதான் எனக்கு ஆப்பு!!! :-| இருந்த அத்தனை உணவில் ஒன்று கூட எனக்குப் பிடிக்கல..பம்கின் சூப் மட்டும் கொஞ்சம் குடிக்கிறமாதிரி இருந்தது. டிஸர்ட்டாவது கொஞ்சம் சாப்புடற மாதிரி இருக்குமான்னு பார்த்தா...அங்கேயும் ஏமாற்றம்! இந்த போட்டோவைப் பாருங்களேன்,,அழகா இருக்குன்னு போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்தேன்.

இந்தப் பதிவு முழுக்க முழுக்க என் சொந்த அனுபவம்.மொத்தத்தில் இது ஒரு சொ(நொ)ந்த கதைங்கோ!!!!!!!! :) அதனால் என் பதிவைக் கொண்டு ப்ளானட் ஹாலிவுட்டின் "ஸ்பைஸ் மார்க்கெட் பஃபே" பற்றி எந்த முடிவுக்கும் வரவேண்டாம். உணவுகள் எல்லாமே என்னவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. வேகாஸின் டாப்10 பஃபேக்களில் முதலிடத்தில் இல்லன்னாலும், முதல் 10 இடங்களுக்குள்தான் அது இருக்கிறது.ஸோ,இட்ஸ் வொர்த் எ ரிஸ்க்! இதனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இதோ இங்கே க்ளிக்குங்க.

அடுத்த நாள் சர்க்கஸ்-சர்க்கஸ் கேஸினோல ப்ரேக்ஃபாஸ்ட் பஃபே போனோம். அங்கே எடுத்ததுதான் இந்தப் படம். கேரட் கேக்,க்யூட்டா இருக்கில்ல? ப்ளானட் ஹாலிவுட்-உடன் கம்பேர் பண்ணினா,இங்கே உணவுவகைகள் சாய்ஸ் குறைவு..சர்வீஸும் அந்த அளவுக்கு [கவனிங்க,கம்பேர் பண்ணினாதான்..இல்லைன்னா சர்க்கஸ் சர்க்கஸும் நல்லாத்தான் இருக்கும்.:) ]சரியில்லைன்னுதான் சொல்லணும்.

அங்கே போவதன் மெய்ன் ரீசன் என்னன்னா...என்னுடைய பேவரிட் கோக்கனட் மக்கரூன்!!! :) சூஊஊஊ....ப்பரா இருக்கும்,வேகாஸ் போனா மிஸ் பண்ணிடாதீங்க இதை.

மற்றபடி 2 கேஸினோக்கள்லயும் குழந்தைகளுக்கு நிறைய விளையாட்டுகள் இருந்தது. ப்ளானட் ஹாலிவுட்-ல 2 பேரை சேர்களில் உட்கார வைத்து சூட்கேஸ் மூடுவது போல லாக் பண்ணிடறாங்க.. உள்ளே ஒரு குட்டி டிவி இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் அந்த சூட்கேஸை(!!) 360டிகிரி கோணத்திலேயும் சுத்தறாங்க ஒரு 5 நிமிடம்..எனக்கு அதை வேடிக்கை பார்த்த்துலேயே போதும் போதும்னு ஆகிட்டது!! :) சர்க்கஸ்-சர்க்கஸில் குட்டீஸை கவரும் நிறைய விளையாட்டுகள் இருக்கு..அப்பப்ப சர்க்கஸ் நிகழ்ச்சியும் நடக்குது. குட்டீஸ் ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க இங்கே போனா! மிராக்கிள் மைல்ஸ் ஷாப்ஸையும் மிஸ் பண்ணாம பாருங்க.

இன்னும் பல கேஸினோக்கள் மீதியிருக்கிறது..அடுத்த முறை சென்றுவந்தபின்னர் தொடர்கிறேன். இந்த 3 பகுதிகளையும் ஆர்வமாய்ப் படித்துக் கருத்துக்கூறி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

-முற்றும்

14 comments:

 1. நல்ல நிறைய விசியங்கள்
  சொல்லி இருக்கீங்க
  உணவில் இருந்து....

  வகை வகைய நீங்க சாப்டு விட்டு ஒன்னுமே பிடிக்லைன்னு ஒரு சப் டைட்டில் வேற போட்டு இருக்கீங்க..

  நல்ல பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. விசய் காந்த் படமில்ல,நிஜ வானம்!ஹிஹி)---
  தலைவரை பத்தி பேசின அப்புறம் விருதகிற. படம் பாக்க வேண்டி வரும்

  ReplyDelete
 3. good one--- waiting for the continuation !

  ReplyDelete
 4. ஸ்வீட்டோடுடன் மீண்டும் விலாவாரியாக சுற்றிக்காட்டிய மகிக்கு நன்றி.

  ReplyDelete
 5. அந்த கேக் பார்க்கும்போதே சாப்பிடனும்னு தோணுதே.. ஸ்லர்ப்! ;)

  ReplyDelete
 6. தொடருங்கள் மகி,அருமையான பகிர்வு.

  ReplyDelete
 7. மிகவும் அருமை

  ReplyDelete
 8. ஹாய் மகி... தமிழ் வார்த்தைகளையும் தமிழர்களையும் வெளிநாட்டில் பார்க்கும்போது இனம்புரியாத சந்தோஷம் வர்றது உண்மைதாங்க... அய்யயோ பஃபேயை தொட்டு கூட பார்க்கலையா... சரி விடுங்க... நீங்க செய்யாத வெரைட்டியா... கூல்...

  ReplyDelete
 9. போகணும்னு ரெம்ப நாளா பிளான் இருக்கு... இன்னும் அதுக்கு ஒரு நல்ல முஹுர்த்தம் வரல... எங்க லீவ் கிடைச்சா அடுத்த இந்தியாவுக்கு டிக்கெட் போடத்தானே கை பரபரக்குது...

  உங்க பதிவு படிச்சப்புறம் பாக்க வேண்டிய இடம்னு தோணுது... இன்னைக்கே ரங்க்ஸ்கிட்ட நச்ச ஆரம்பிக்கறேன்... எல்லா திட்டும் மகிக்கேனு சொல்லிடறேன்... ஹா ஹா ஹா

  //அழகா இருக்குன்னு போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்தேன்.//
  அதுக்காச்சும் உபயோகமாசே மகி... எனக்கும் இதே பிரச்சன தான் .. எங்க போனாலும் நம்ம food வேணும்... கொடுமை தான் போங்க...

  ReplyDelete
 10. புவனா,கட்டாயம் ஒரு முறை லாஸ்வேகாஸ் வாங்க..நெக்ஸ்ட் டைம் ஒரு மாசம் யு.எஸ்.டூர் வாங்க.30நாளும் பத்தாது.
  //. எல்லா திட்டும் மகிக்கேனு சொல்லிடறேன்... ஹா ஹா ஹா//ஹூம்,என்ன ஒரு நல்ல எண்ணம்(cum)வில்லத்தனம்!!

  நீங்க மட்டும் என் பேரை அண்ணாகிட்ட சொல்லிப்பாருங்க,அடுத்த ப்ளைட்ல டிக்கட் புக் பண்ணிடுவாரு! ஹாஹாஹா!!

  ReplyDelete
 11. சிவா,ஸாதிகாக்கா,பாலாஜி,கண்ணன்,வானதி,ஆசியாக்கா,கீதா,பானு,புவனா அனைவரின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails