Saturday, December 4, 2010
எனக்குப் பிடித்த பாடல்கள்..
ஆசியா அக்கா அழைத்த தொடர் பதிவுக்காக எனக்குப் பிடித்த பத்துப் பாடல்களைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தப் பாடல் நெஞ்சமெல்லாம் நீயே படத்திலிருந்து..படம் பார்த்ததில்லை,ஆனால் அடிக்கடி யூட்யூப்-ல இருந்து பாட்டை கேட்பேன்.வாணி ஜெயராமின் குரலில்,இதோ..நீங்களும் கேட்டுப் பாருங்க!
அடுத்த பாடல் அக்னிநட்சத்திரம் படத்தில்இருந்து எஸ்.ஜானகி-யின் குரலில்.
இந்தப் பாடல் என் அக்காவிற்கு மிகவும் பிடித்த பாடல். அஃகோர்ஸ்,எனக்கும் பிடிக்கும்,கேளுங்க,உங்களுக்கும் பிடிக்கும்.
"நான் வானவில்லை வேண்டினால் ஓர் விலை கொடுத்து வாங்குவேன்,
வெண் மேகக் கூட்டம் யாவையும் என் மெத்தையாக்கித் தூங்குவேன்!"...ஹ்ம்ம்..நினைக்கவே சுகமா இருக்குல்ல?:)
http://www.youtube.com/watch?v=h4-KtACquDM
மெல்லத் திறந்தது கதவு-இந்தப் படத்தில் இருந்து சித்ராவின் குரலில் அடுத்த பாடல்..இது எங்க ஊரில எடுத்த படம்..அதனால கொஞ்சம் ஸ்பெஷல் பாட்டு.:) இளையராஜாவின் இசையும்,சித்ராவின் குரலும்,ராதாவின் அழகுமா அமர்க்களமா இருக்கும்.
மே மாதம் படத்திலிருந்து மார்கழிப் பூவே!
பி.சி.ஸ்ரீராமின் கேமராவும்,ரஹ்மானின் இசையும், கதாநாயகியின் டான்ஸும் அருமையாக இருக்கும். நாங்க ட்ரிப் போகும்போது தவறாமல் கேட்கும் பாடல் இது.
அனுராதா ஸ்ரீராமின் அசத்தலான குரலில் அடுத்த பாட்டு.தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் சக்கைப்போடு போட்ட பாடல்..மாளவிகாவின் டான்ஸும்,தேவா-வின் இசையுமா ஒரு சூப்பர் குத்துப்பாட்டு!:)
ஸ்வர்ணலாதாவின் குரல்-புல்லாங்குழலின் இசை இவையிரண்டும் அழகாகக் கலந்து வரும் ஒரு பாடல்,அலைபாயுதே-விலிருந்து.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலிருந்து,கண்ணாமூச்சி ஏனடா...சித்ராவின் குரலும்,ஐஸ்வர்யா ராயின் நடனமும்,அழகு அஜீத்தும்(!!), மம்மூட்டியும்...எதை சொல்ல,எதை விட? நீங்களே பாருங்க.
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில்,மின்னலே-விலிருந்து வசீகரா..வீடியோ அவ்வளவா பிடிக்கலை எனக்கு,ஆனா தாமரையின் வரிகளும்,ஜெயஸ்ரீ அவர்களின் வசீகரமான குரலும் மிகவும் பிடிக்கும்.
http://www.youtube.com/watch?v=1NhKaWr3Mx4&feature=fvst
'நானும் ஒரு பெண்' படத்திலிருந்து 'கண்ணா,கருமை நிறக் கண்ணா'.. உருக்கமான ஒரு பாடல்..புறக்கணிப்பும்,அவமானமும் அடையும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அழகாகப் படம்பிடித்திருப்பார்கள்..
http://www.youtube.com/watch?v=bopSea-7uqg
இதுவரை சொன்ன பாடல்கள் எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள்தான்,ஆனால், இந்தப்பாடல் என்னை மிகவும் பாதித்த,கவர்ந்த,மிகவும் பிடித்த...என்ன சொல்வதுன்னு தெரில,வார்த்தைகள் கிடைக்க மாட்டேன்னுது!
கண்ணதாசனின் வரிகள்,சித்தி படத்திலிருந்து, பி.சுசீலாவின் குரலில் தாலாட்டாய் வரும் அற்புதமான பாடல்.
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே!
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே!
லிங்க் தேடினேன்,கிடைக்கலை..ஒலி வடிவம் கிடைத்தது..இந்த லிங்கில் போய் கேட்டுப்பாருங்க.மனதைத் தொடும் ஒரு பாடல்...கேட்டுப் பாருங்க.
http://www.raaga.com/player4/?id=231938&mode=100&rand=0.10857778466527834
இந்த பத்துப் பாடல்கள் இப்போது நினைவு வந்தவை..இன்னும் பல பாடல்கள் இருக்கு..அப்பப்ப சொல்லறேன்.:)
இந்தத் தொடர் பதிவைத் தொடர சந்தனாவை அழைக்கிறேன்.சந்தனா மட்டும்தான்னு இல்ல,விருப்பம் இருக்கும் அனைவரும் தொடருங்கள். படிக்கும் அனைவருக்கும் நல்ல பாடல்களை ரீப்ரெஷ் பண்ண ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.ஆங்கிலத்தில் எழுதும் பதிவர்களும் தொடரலாம். தொடர்வீங்களா?? :)
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பாடல் தொகுப்பு,எனக்கு பிடித்த பாடல்களும் இருக்கு....
ReplyDeleteகலக்கல். இந்த பேஜை 'புக் மார்க்' பண்ணி இருக்கேன். தாங்க்ஸ். ;))
ReplyDeleteநல்ல தொகுப்பு மகி!
ReplyDeletearumaiyana songs...ellame enakkum piditatu....
ReplyDeleteநல்ல பாடல்கள், மகி.
ReplyDeleteமிக அருமையான பாடல்கள்.அழைப்பை ஏற்று உடன் பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி.
ReplyDeletenall collection n rasanai athilum kalamithu ... padal super choice Mahi!
ReplyDeleteSuperb collections Mahi,nice taste :)
ReplyDeleteசூப்பர் சாங் செலக்ஷன்ஸ் மகி .
ReplyDeleteஉங்களுக்கு எப்படி மகி தெரியும் ?(புது வரவு பற்றி )
என்னக்கு ரொம்ப surprise !!!!!
வாவ்..நல்ல பாட்டுகள்.
ReplyDeleteஇவைகள் எனக்கும் பிடிக்கும் mahi .
அருமையான பாடல் தொகுப்பு.எனக்கு பிடித்ததும் கூட.
ReplyDeleteHi Mahi most of songs enakkum piditha paadalgalaaga irukku.....namma taste ore maadhiri irukku...
ReplyDeleteஎது செல்லாது
ReplyDeleteநீங்க மறுபடியும் போஸ்ட் போடுங்க
நாந்தான் firstuu...
mee the first...
எல்லாம் எப்பொதும்
நானும் ரசிக்கின்ற பாடல் வரிகள் ...MAY MATHAM NICE ONE..
கடைசி ரெண்டும் எப்போது வந்த படம் ?
நல்ல ரசனையான பாடல்கள் :)
ReplyDeletenice selection, great
ReplyDeletevery nice selection of songs, love the kannamuchi enada song from kandukonden kandukonden
ReplyDeleteஎல்லா பாட்டும் எனக்கு மிகவும் பிடித்த என் பொண்ணுங்களுக்கு பிடித்த பாட்டு கூட இருக்கு கருப்பு தான் எனக்கு பிடித்த கலரும் , மெல்ல திறந்தது கதவு பாட்டும் விரும்பி கேப்பாங்க , அந்த மார்கழி பூவே பாட்டு நாங்க காலேஜ்ல படிக்கும் போது பயங்கர famous rewind akittu irukku
ReplyDeleteThanks a lot for your lovely comment. I liked the songs very much. Nice post.
ReplyDeleteமஹி, நல்லா வந்திருக்கு தொகுப்பு.. மார்கழிப் பூவே ரொம்பப் பிடிக்கும்.. பூங்காவனம் ல ஜானகியம்மா குரல் இப்போ கேட்டுகிட்டு இருக்கேன்.. எனக்கும் பிடிக்கும்..
ReplyDelete// S.Menaga said...
ReplyDeleteஅருமையான பாடல் தொகுப்பு,எனக்கு பிடித்த பாடல்களும் இருக்கு..../
அப்போ நீங்க ஏன் முன்னாடியே போடல ஹி..ஹி...:-))
// இமா said...
ReplyDeleteகலக்கல். இந்த பேஜை 'புக் மார்க்' பண்ணி இருக்கேன். தாங்க்ஸ். ;))//
இருங்க நான் எழுதும் போது உங்களை கூப்பிடுரேன் ((அப்பவும் இதெயே போட்டுடாதீங்க ஹா..ஹா.. ))
// Sowmya said...
ReplyDeleteசூப்பர் சாங் செலக்ஷன்ஸ் மகி .
உங்களுக்கு எப்படி மகி தெரியும் ?(புது வரவு பற்றி )
என்னக்கு ரொம்ப surprise !!!!!//
இந்த பாட்டையெல்லாம் மஹிதான் எழுதினாங்க :-)))))))))))
// Babli said...
ReplyDeleteThanks a lot for your lovely comment. I liked the songs very much. Nice post.//
என்னாது லவ்லி கமெண்டா ..!! எல்லாரும் ஜால்ரா அடிச்சிட்டு போய் இருக்காங்க ..!!அவ்வ்வ்வ்வ் :-)
ம்....எல்லாருமே எனக்கு பிடிச்ச பாட்டா போட்டுகிட்டே இருக்காங்க (( நான் போடும் போது காலியா பேப்பரை வைக்க வேண்டியதுதான் ))
ReplyDeleteஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகத்தில சேர்த்திருக்கீங்க சூப்பர் :-)
இமா,அடுத்த தொகுப்பு 90%ரெடி!நீங்க புக்மார்க் பண்ண ரெடியா?:)
ReplyDeleteசுகந்திக்கா,கீதா,வானதி,ஆசியாக்கா,மேனகா,நன்றி!
குறிஞ்சி,உங்களையும் தொடரச்சொல்லலாமான்னு யோசிச்சுதான்,கடைசியில் பதிவை மாற்றினேன்,தொடர்ந்ததுக்கு நன்றிங்க.:)
சௌம்யா,உங்க வீட்டுப்புதுவரவைப்பத்தி ஒரு பட்சி சொல்லுச்சுப்பா!;) பேர் வைச்சாச்சா?
ராஜி,கீதா,ஸாதிகாக்கா,கொயினி நன்றிங்க!
சிவா தம்பி,/கடைசி ரெண்டும் எப்போது வந்த படம் ?/நம்மள்லாம் பிறப்பதுக்கு முந்தி வந்த படங்கள் அவை இரண்டும்.:)
பாலாஜி,வேணி,ஜெயஸ்ரீ,ஊர்மி வருகைக்கும்,ஒத்த ரசனைகளுக்கும் மகிழ்ச்சி,நன்றி!
சாரு,ரீவைண்ட் ரொம்ப பண்ணி,"பளிங்கினால் ஒரு மாளிகை"க்கே போயிட்டீங்களே!! :)
நன்றி சந்தனா!
ஜெய் அண்ணா,வாங்க!சௌம்யா கமெண்ட்ல வந்தது வேஏஏஏஏஏஏஏற புதுவரவு.:)
மேனகா உங்களுக்கு ஆட்டோ அனுப்பிருவாங்க,ஜாக்கிரதை!;) எல்லாரும்,அந்நேரம் நினைவுக்கு வரும் பாடல்களைத்தானே போடறோம்? அதெல்லாம் இருக்கட்டும்,நீங்க எப்ப எழுதப்போறீங்க?
நன்றி ஜெய் அண்ணா!