Friday, December 24, 2010

பாடல்கள் தொகுப்பு-2

எனக்குப் பிடித்த பாடல்களின் இன்னொரு தொகுப்பு...வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பெல்லாம் இல்லை. பாசம்,பொஸஸிவ்னெஸ்,சந்தோஷம்,துக்கம்,காதல் இப்படிப் பல்வேறு உணர்ச்சிகளின் கலவையான கதம்பமாய் இந்தத் தொகுப்பு.

இதில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரணத்துக்காய் பிடிக்கும்..சில பாடல்களில் இசை,சில பாடல்களில் கவிதைவரிகள்,சிலவற்றில் நடிகை,ஒரு சிலதில் பாடகி இப்படி..ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாய் அழகு!

இரு கோடுகள் மட்டும் வீடியோ லிங்க் கிடைக்காததால் ராகா.காமின் லிங்க் கொடுத்திருக்கேன்..அங்கே சென்று பாடலை செலக்ட் செய்து கேட்கலாம்.கேட்டுப் பாருங்க..

புன்னகை மன்னன்,பூவிழிக் கண்ணன்..-இரு கோடுகள்
ஜெயந்தி,சௌகார் ஜானகி இருவரின் நடிப்பும்,பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி இருவரின் குரலும் மிகவும் அருமையாக இருக்கும் இந்தப் பாடலில்.


காற்றுக்கென்ன வேலி,கடலுக்கென்ன மூடி?..-அவர்கள்
இந்தப் பாடல் கேட்கும் பொழுது நானே காற்றில் பறக்கிற மாதிரி,'விட்டு விடுதலையான சிட்டுக்குருவி'யைப் போல ஒரு விடுதலை உணர்ச்சி வரும்.


பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. -நீங்கள் கேட்டவை
என் அக்காவுக்கு 2 பையன்கள். இருவரும் கொஞ்சம் மாநிறம்..அதனால், 'பிள்ளை நிலா,இரண்டும் கருப்பு நிலா' என்று பாடி கிண்டல் செய்வோம்..நாட்கள் ஓடினதே தெரியவில்லை,இப்பொழுது பெரியநிலா 10த் எக்ஸாம் எழுதப் போகிறான்.:)


மண்ணில் வந்த நிலவே..-நிலவே மலரே


ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க..-முதல் மரியாதை


ஆடியிலே சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு ...-என் ஆசை மச்சான்
ஒரு கிராமத்துக்கே போய்விட்டு வந்த மாதிரி இருக்கும் இந்தப் பாடல்..ரேவதியின் நடனம் மிகவும் நல்லா இருக்கும்.


எழுதுகிறேன் ஒரு கடிதம்..-கல்கி
இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் என் கண்ணோரம் வரும் நீர்த்துளிகள் தவிர்க்க முடியாத நிகழ்வு! கீதாவின் முகபாவனைகள் பிரமாதமாய் இருக்கும்..அனுராதா ஸ்ரீராம்-சித்ராவின் குரல்களும் அருமையாக இருக்கும்.


சினேகிதனே,சினேகிதனே..-அலைபாயுதே


மனம் விரும்புதே உன்னை..-நேருக்கு நேர்


உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு?-அமர்க்களம்
இந்தப் பாடலில் வீட்டில் யாருக்கும் தெரியாமல்,ஷாலினியின் கண்ணுக்கு மட்டும் தெரியும் அஜீத், அந்தக் கற்பனை மிகவும் பிடித்தது. :)

******
கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
Wish you a Merry Xmas!

15 comments:

  1. Mahi it has a few of my favourites and am humming !! wishing u n family a very merry christmas !!

    ReplyDelete
  2. hi mahi, really lovely collection....thanks for sharing...

    ReplyDelete
  3. அருமையான பாடல் தொகுப்பு மகி.

    ReplyDelete
  4. present miss

    all songs very nice..

    ReplyDelete
  5. nice collection of songs
    Advance Happy New Year

    ReplyDelete
  6. Wish you and your family MERRY CHRISTMAS.

    ReplyDelete
  7. Wonderful songs. Wish you merry Christmas and a happy New Year!

    ReplyDelete
  8. Blogger dharshini said...

    நீண்ட நாட்களாக இண்டெர்னெட் பக்கம் வரமுடியவில்லை மஹி...
    பாடல்களில் சிலது தெரியவில்லை.. தெரிந்தது அனைத்தும் அற்புதமான கலெக்ஷன்ஸ்.. மஹி என்னுடைய மெயில் அட்ரஸிற்கு உங்கள் மெயில் அட்ரஸ் அனுப்பி வைக்கவும்.க்றிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மஹி.
    ////////////
    தர்ஷினி,மெய்ல் அனுப்பிட்டேன்,மெய்ல்பாக்ஸ் செக் பண்ணுங்க.உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. மஹி.. இப்போ கொஞ்சம் நாட்களுக்கு முந்தி தான் //காற்றுக்கென்ன வேலி,கடலுக்கென்ன மூடி?..// பாட்டு தேடிக் கண்டுபிடிச்சேன் :) எனக்கு அந்த பாட்டு நினைவில் இருந்தாலும், என் பதிவுல போட்ட தொகுப்புகாகத் தேடினப்போ, முதல் சில வார்த்தைகள் சட்டுன்னு நினைவில வரல.. அப்புறம் போன வாரம் நினைவு வந்தப்ப தேடிக் கண்டிபிடிச்சேன்.. பக்கத்துல ஜூனியர் பேசற சீனும் ஓப்பன் ஆச்சு :) சரியா அப்போ தான் உங்களோட டாய்ஸ் இடுகை.. :)

    இந்த இடுகையிலும் சில பாட்டுகள் பிடிக்கும்..

    //உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு// கொஞ்சம் கல்லூரி நினைவுகள கொண்டு வருது :)இப்போ கேக்கப் போறேன். லிங்க்கு நன்றி..

    ReplyDelete
  10. மிகவும் நல்ல பாட்டுக்களின் கலெக்‌ஷன்

    ReplyDelete
  11. சிறப்பான ரசனை. அழகான பாடல்கள் மகி :)

    ReplyDelete
  12. சூப்பர் தேர்வு மஹி...

    ReplyDelete
  13. அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  14. காற்றுக்கென்ன வேலி..-பாட்டு 'அவள் ஒரு தொடர்கதை"யில் என்று பலநாளா நினைத்துட்டு தேடித்தேடி அலுத்துப்போனேன் சந்தனா! திடீர்னு,அது அவர்கள் படம்னு நினைவு வந்தது.யூ-ட்யூபிலும் கண்டுபிடித்துட்டேன். எழுதுகிறேன் ஒரு கடிதமும் பலநாள் தேடலுக்குப்பின் திடீரென்று கிடைத்தது. :)

    ரசித்த பாடல்களுக்கு முடிவு கிடையாது..அப்பப்ப தொடர்ந்துகிட்டே இருக்கும்! பாடல்களை ரசித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails