Friday, May 28, 2010

நத்தையாரே,நத்தையாரே எங்கே போறீங்க?

எல்லாரும் பொழுது போகாமல் அழகா போட்டோஸ் போடுறாங்க..எனக்கும் பொழுது போகல..எங்க அபார்ட்மென்ட் முழுவதும் சுதந்திரமாய்த் திரியும் ஆட்கள் இந்த நத்தைகள் தான்..பாத் வே-யில் அங்கங்கே யார் காலிலாவது மிதிபட்டு சிதிலப் பட்டு கிடக்கும் நத்தை ஓடுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். இருக்கும் ஓரடி தடத்தை கடக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வதால், எதிர்பாராமல் யாரேனும் மிதித்து விடுகிறார்கள்..

இந்த நத்தையார் வெகு நாளாய் எங்க வீட்டுக்கு வெளியே இருந்த சுவற்றிலேயே தான் ஒட்டிக் கொண்டிருந்தார்..சுவரோடு ஒட்டிய ஓட்டில் ஒரு அசைவும் இருக்காது..திடீரென்று ஒன் ஃபைன் மார்னிங் என்னவர் ஆபீஸ் கிளம்பும்போது பார்க்கிறேன்..சுவரிலிருந்து இறங்கி வெகு வேகமாக, வீட்டெதிரில் இருக்கும் செடிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
சரி, நத்தையைக் கொஞ்சம் தொடர்வோம் என்று எடுத்த படங்கள் தான் இவை.
கிட்டத்தட்ட ஓரடி தூரம் கடந்துவிட்டார்..

ம்ம்..செடிக்குப் போவோமா இல்லை டைரக்ஷனை கொஞ்சம் மாற்றிகொள்வோமா? என்று யோசித்து திசை மாற ஆரம்பித்தார்..

வேணாம்..இது இன்னும் தூரம்..செடிக்கே போய்விடுவோம் என்று நினைத்தார் போல..ஒரிஜினல் பாதைக்கே திரும்பி நகர ஆரம்பித்துவிட்டார். நத்தைகள் நகரும்போது இது போன்ற தாரைகளை விட்டுச் செல்கின்றன..சிறிது நேரத்தில் இந்த தடங்கள் வெள்ளை வெளேரென்று மின்னும்..அந்த தடத்தை வைத்தே இவ்வழியில் தனது வீட்டை சுமந்துகொண்டு ஒருவர் சென்றிருக்கிறார் என்று கண்டுகொள்ளலாம்.

அப்பாடி, மண்ணை நெருங்கி விட்டார்..

பை,பை நத்தையாரே!


கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் கடந்து சென்ற பாதை.. ஒரு மூன்றடி இருக்கும்!!

அன்று போனவர் திரும்பி வரவே இல்லை..சின்ன நாற்றுகளை நத்தையார் சுவைத்து விடுவார்,அதற்கு மருந்து வாங்கிப் போடுங்கள் என்று எங்கள் இலவச அட்வைஸ்:) எக்ஸ்பர்ட் சொன்னார்..ஆனால் நான் அதை செய்யவே இல்லை! ;)

நத்தையின் கூடைப் பார்க்கையில் அழகாய் இருந்தது..ஆனால் நகர்ந்து செல்லும் நத்தையைக் கவனித்ததில், அதன் ட்ரான்ஸ்பரன்ட்-டான உருவம் மண்புழுவை ஞாபகப் படுத்துது..எனக்கும் மண்புழுவிற்கும் ஏழாம் பொருத்தம்! சமீபத்தில் ஒரு முறை மண்ணைக் கிளறும்போது, ஒரு மண்புழு! கையில் இருந்த கொத்தும் கரண்டிய மண்ணுல போட்டுட்டு,ஒரே ஓட்டமாய் வீட்டுக்குள் ஓடிவிட்டேன்..இத்தனைக்கும்,காலில் ஷூ..கைகளில் க்ளவுஸ்!!

சரி, என்னோடு சேர்ந்து நீங்களும் வெகு நேரம் வெட்டி பொழுது போக்கியாச்சு..இங்கே இந்த வாரம் லாங் வீக் எண்ட்..மூன்று நாள் லீவு! ஸோ, அடுத்த வாரம் சந்திப்போம். நத்தையையே பார்த்து போரடித்த கண்களுக்கு குளிர்ச்சியாய் இந்தப் பூக்களையும் பார்த்துட்டு போங்க! :)


பின் குறிப்பு: நத்தை பின்னே நானும் ரெண்டு மணி நேரம் நகர்ந்தேனோ என்று ஐயப்படாதீர்கள்..அப்பப்போ வெளியே சென்று எடுத்த போட்டோஸ் தான் இவை..மத்தபடி நாங்க வெட்டியா எல்லாம் இல்லையாக்கும்! :))))

17 comments:

  1. ஏதோ நத்தைய வச்சு ஒரு ரெசிபி சொல்லுவீங்கன்னு பாத்தா ஒரே மொக்கையா இருக்கு. ஸ்வீடன்ல நத்தை டிஷ்கள்தான் மிகவும் விரும்பப் படுபவையாம். நான் சாப்பிட்டதில்லை.

    ReplyDelete
  2. //மண்புழுவிற்கும் ஏழாம் பொருத்தம்!//

    இதுக்கே பயந்தா எப்படி ? படிக்கும் போது சயன்ஸ் குருப் எடுத்திருந்தா நீங்க அதை ஆபரேஷன் செய்ய வேண்டி வந்திருக்கும் .தவளை , மண்புழு , கரப்பான் பூச்சி , எலி.

    மஹி கிச்சனில் படங்களுமா!!!!

    :-))

    ReplyDelete
  3. @@@மசக்கவுண்டன்--//ஏதோ நத்தைய வச்சு ஒரு ரெசிபி சொல்லுவீங்கன்னு பாத்தா ஒரே மொக்கையா இருக்கு. ஸ்வீடன்ல நத்தை டிஷ்கள்தான் மிகவும் விரும்பப் படுபவையாம். நான் சாப்பிட்டதில்லை //

    தாத்தா அதை ஜெய்லானி டிவில போட்டுடுவோமா ?

    ReplyDelete
  4. lovely photos...enjoyed your write up too

    ReplyDelete
  5. Mahi, nejamavey nengha vettiya illaya? nambitten...hmm..nathai ellam evlo azagha photo eduthu oru chinna write up ellam poda mudium nu enakku eppo than theriuthu..flowers ellam superb..nathai pictures superb..

    ReplyDelete
  6. மகி, நல்ல பொறுமை உங்களுக்கு.

    ReplyDelete
  7. மஹி,படங்கள் அருமை.

    தம்பி ஜெ,சய்ன்ஸ் குரூப் தான் நானும்,கரப்பான் பூச்சி,தவளை,எலி ஒ.கே.இந்த மண்புழு டிசெக்ட் பண்ண எந்த ஸ்கூலில் சொல்லி தந்தாங்க.

    ReplyDelete
  8. @@@asiya omar--//தம்பி ஜெ,சய்ன்ஸ் குரூப் தான் நானும்,கரப்பான் பூச்சி, தவளை,எலி ஒ.கே.இந்த மண்புழு டிசெக்ட் பண்ண எந்த ஸ்கூலில் சொல்லி தந்தாங்க.//

    மண்புழு டிசெக்ட் பண்ணினா மார்க் எல்லாம் இல்லை அதன் உடற்கூறு தெரிந்து கொள்ள மட்டும் .ஃபைனலில் எனக்கு வந்தது எலி மூளை.( இப்ப எலி, கரப்பான் ,தவளைக்கும் தடை வருது -உபயம் மேனகா கந்தி )

    ReplyDelete
  9. கவுண்டரே,நத்தைய வைச்சு ரெசிப்பியா? grrrrrrrrrrrrrrr!
    நான் ரசித்து ரசித்து போட்டோ எடுத்திருக்கேன்..புடிச்சு சமைக்க சொல்லறீங்களே! பாவங்க..விட்டுடலாம்.
    ஸ்வீடன்ல நத்தை சாப்புடுவாங்களா? புதிய தகவல்!! நன்றி!
    ~~
    /படிக்கும் போது சயன்ஸ் குருப் எடுத்திருந்தா / இல்லையே..நாங்க மேத்ஸ்-பாலாஜி க்ரூப் தானே எடுத்தோம்! இன்செக்ட் கலெக்ஷன்,ஹெர்பாரியம் இவற்றோடமுடிந்துடுச்சு ஜெய் அண்ணா!
    /மஹி கிச்சனில் படங்களுமா!!!!/ நீங்க இன்னும் என் ப்ளாக்-ஐ முழுவதுமா பார்க்கலை/படிக்கலைன்னு நினைக்கிறேன்..டைம் இருக்கும் போது படித்துப் பாருங்க.
    /தாத்தா அதை ஜெய்லானி டிவில போட்டுடுவோமா ?/ ஆஹா...எனக்கும் கலெக்ஷன்(கமெண்ட்ஸ்)ல பாதி வந்துடனும்,இப்பவே சொல்லிட்டேன்! :)
    ~~
    /அழகு இடுகை மகி./ நன்றி இமா..உங்க ஊர் அளவுக்கு அழகான அன்னப் பறவைகள்,வாத்து இதெல்லாம் இங்க இல்லைங்க..ஏதோ கிடைத்ததை ரசித்துக்கொண்டு இருக்கேன். உங்கள் கருத்தைப் படித்து மிக்க மகிழ்ச்சி!
    ~~
    வேணி,வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி!
    ~~
    /Mahi, nejamavey nengha vettiya illaya? nambitten../ grrrrrrrr ! இதுக்குதானே எச்சரிக்கையா பின் குறிப்பு போட்டிருக்கேன்? :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நிது!
    ~~
    /மகி, நல்ல பொறுமை உங்களுக்கு./ கரெக்ட் வானதி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஆசியாக்கா, ஜெய்லானி அண்ணாவின் கட்டுரைகளைப் படித்த பின்னும் உங்களுக்கு இந்த மாதிரி சந்தேகம் வரலாமா? கருத்துக்கு நன்றி!
    ~~
    /ஃபைனலில் எனக்கு வந்தது எலி மூளை./ உங்க மூளைக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!! :)
    /இப்ப எலி, கரப்பான் ,தவளைக்கும் தடை வருது -உபயம் மேனகா காந்தி )/ அப்படியா? நல்ல தகவல்..நன்றி!
    ~~

    ReplyDelete
  10. ஜெய்லானி சொன்னது:
    //தாத்தா அதை ஜெய்லானி டிவில போட்டுடுவோமா ?//
    பண்ணுங்க, ராயல்டீல எனக்கும் மகிக்கும் பங்கு வந்துடணும்.

    மகி சொன்னது:
    //ஸ்வீடன்ல நத்தை சாப்புடுவாங்களா? புதிய தகவல்!! நன்றி!//
    நான் பாத்ததில்லே. நண்பர் ஒருத்தர் போய்ட்டுவந்தவர் சொன்னார். நானும் போயிருக்கேன், ஆனா எனக்கு ஒருத்தரும் நத்தைப்பொரியல கண்ணுல கூட காட்டுல, காட்டீருந்தா உட்ருப்பனா, ஒரு புடி படிச்சிர்ப்பன்ல.

    ReplyDelete
  11. இன்னா மஹி.. இப்படியா அந்த நத்தைய துரத்தறது?.. நீங்க ஓட்டுன ஓட்டுல இப்ப அது எங்க வீட்டுல வந்து நிற்கறது :))

    மண்புழுன்னா ஆகாதா? அப்ப அண்ணாத்தைகிட்ட சொல்லி.. பயிக்கு பயி (எதுக்கு சொல்றேன்னு புரியுதா??) வாங்கச் சொல்லிடனும்..... ஹாஹ்ஹாஹா :))))))))))))))

    ReplyDelete
  12. //நத்தையாரே,நத்தையாரே எங்கே போறீங்க?//

    சந்தனா என்ற நல்லவரைத் தேடிப் போறேங்க :)))))))))))))))

    ReplyDelete
  13. Magi, I am very happy to be in your blog. Intha nathai storya naan romba rasichen. Azhagana story, azhagana manasu :). Just came here to say that when you have time drop in my blog too :).

    ReplyDelete
  14. வெட்டியா இல்லயா? நம்பிட்டோம் நம்பிட்டோம்... நத்தை பயணம் நன்றே முடிவடைந்தது..... எனக்கும் இந்த மண்புழுனா கொஞ்சம் terror தான் ... morning வாக் (எப்பவாச்சும்) spring டைம்ல போனா வழி பூரா இருக்கும்...

    ReplyDelete
  15. /எனக்கு ஒருத்தரும் நத்தைப்பொரியல கண்ணுல கூட காட்டுல, காட்டீருந்தா உட்ருப்பனா, ஒரு புடி படிச்சிர்ப்பன்ல./ அடுத்த முறை ஸ்வீடன் போறப்போ மிஸ் பண்ணாம சாப்ட்டு வந்து சொல்லுங்க கவுண்டரே! :)
    ~~
    /பயிக்கு பயி (எதுக்கு சொல்றேன்னு புரியுதா??) வாங்கச் சொல்லிடனும்..... ஹாஹ்ஹாஹா :))))))))))))))/ எல்லாம் நேரம்...என் நேரம்! புரியுது,புரியுது! கர்ர்ர்...ர்ர்! அதுக்கெல்லாம் நாங்க சான்ஸ் குடுக்க மாட்டம்அம்மணி!
    நத்தையார் உங்க வீட்டுக்கு வந்துட்டாரா?ம்ம்..ரெண்டு மூணு நாள் வைச்சிருந்து,ஒழுங்கா கவனிச்சு பத்திரமா திருப்பி இங்கயே அனுப்பிவிடு! :)

    /சந்தனா என்ற நல்லவரைத் தேடிப் போறேங்க :)))))))))))))))/ எ.கொ.ச.இ? எ.கொ.ச.இ?எ.கொ.ச.இ?எ.கொ.ச.இ? ஐ யாம் ஸ்பீச்லெஸ்! :-| :-|
    ~~
    நல்வரவுங்க மஞ்சு! இதோ உங்க ப்ளாக் வந்துட்டே இருக்கேன். அழகான ஸ்டோரி,அழகான மனசுன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க..சந்தோஷமா இருந்தது,உங்க பின்னூட்டத்தைப் படித்து..மிக்க நன்றி!!
    ~~
    /வெட்டியா இல்லயா? நம்பிட்டோம் நம்பிட்டோம்...//அது!!! நம்பாம மட்டும் இருந்தீங்க, அப்புறம் நான் என்ன செய்வேன்...னு எனக்கே தெரியாது!:)
    நீங்க மார்னிங் வாக்-ஆ? நான் ஈவினிங் வாக் போவேன்..நிறைய அழகழகான முயல்களைப் பார்க்கலாம் இங்கே.
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க புவனா!
    ~~
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க யாதவன்.

    ReplyDelete
  16. mahima,,

    enta nathai ella pavam,

    oru nall therima evg time midithuviten..andiku eravu mulukka urakkam ellai..oru jeavani kondru vittom endru..athanala epo nadakum pothu romba parthu than nadkirathu..

    nathai photos and all very nice.

    nandri mahima.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails