டாய் ஸ்டோரி -2
எங்கள் இனிய தமிழ்மக்களே, நாங்கள்லாம் நல்லா இருக்கிறோம்..நீங்களும் நலம்தானே? என்ன,சிரிக்கறீங்க? பொறுப்பா நலம் விசாரிக்கணும்ல? உங்களைப் பார்த்து ஒரு வருஷமே ஆகிப்போச்சு,எல்லாரும் எங்களை மறந்து போகலையே?
போனவருஷம் வந்தப்ப மகி அக்காவைப் பத்தி(மட்டுமே) சொல்லியே ஒரு பதிவு ஆகிடுச்சு..நீளம் அதிகமானதால நாங்க பேசினதை எல்லாம் கட் பண்ணிட்டாங்க!(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)அதுக்காக வழக்கம்போல அமைதியா உட்கார்ந்துட்டு இருக்கமுடியுமா?நீங்களே சொல்லுங்க? :) சரி,நம்ம ப்ரெண்ட்ஸ்-ஐ எல்லாரும் பார்த்து கொஞ்சநேரம் பேசிட்டு இருக்கலாம்னு வந்திருக்கம்.
முதல்ல எங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லிக்கறோம்..அக்காவைப் பத்தி நாங்க சொன்னதையே கேட்டுட்டீங்க,இதை கேக்கமாட்டீங்களா என்ன?ஹிஹிஹீ!
Ted:ஹாய்,ஹாய்,ஹாய்!! மை நேம் இஸ் Ted! வீட்டுல நாந்தான் செல்லப் புள்ள! Teddy-ங்கறத செல்லமா சுருக்கி Ted-ன்னு ஷார்ட் & ஸ்வீட்டா என் பேரு! நல்லார்க்கா? :)
அப்பு:நான் ஆனைக்குட்டியா இருக்கறதால இது என் டீபால்ட் நேமாம்.என் பெரிய காதுக்குப் பக்கத்துல இந்த குட்டி ஸ்பீக்கர் மேட்ச்சாவே இல்ல பா! டிவி-க்கு சைட்ல என்னை உட்கார வைச்சுட்டாங்க..நோ வீடியோ..ஆல்டைம் ஆடியோ ஒன்லி ஐயாம் ஹியரிங்! :-|
க்ரிஸ்லி:வீட்டுலயே நாந்தான் பெரிய மனுஷன்,ச்சே,ச்சே பெரிய கரடி! யெல்லோஸ்டோன்ல இருக்க கரடி நினைவா எனக்கு இந்தப் பேரு.வீட்டுக்கு வர குட்டீஸுக்கெல்லாம் நாந்தான் மெய்ன் அட்ராக்ஷன்!
மோக்லி:இது மகி அக்கா வளர்த்த நன்றியுள்ள நாய்க்குட்டி பேராம்.(அதோட இறுதிக்காலம் ரெம்ப சோகமா இருக்கும்.) அந்தப் பேரை எனக்கு வச்சுட்டாங்கோ..பத்தாததுக்கு எங்களை வீட்டுக்குள்ள ஒரு மூலைல ஸ்பீக்கர்(woofer) மேல உட்கார வச்சிருக்காங்க. சத்தம் தாங்க முடீல! இப்ப தெரியுதா என் கண்ணுல இருக்க சோகத்துக்குக் காரணம்?!!
அப்புச்சி:என்னையப் பாத்தா அருணுக்கு க்ராண்ட்பா ஞாபகம் வந்துச்சா,அதனால நான் "அப்புச்சி" ஆகிட்டேன். கேப்லாம் போட்டு இமேஜ மெய்ன்டெய்ன் பண்ணிட்டு இருக்கேன்,நான் ஓல்ட்மேன்னு நினைச்சுராதீங்க!
குட்டி:நான் குள்ளமணி மாதிரி குட்டியா இருக்கேன்னு இப்படி கொடுமையா பேரு வச்சிட்டாங்க.கர்ர்ர்ர்ர்ர்ர்!
அப்புச்சி:இட்ஸ் ஓக்கேடா பேராண்டி! நீ குட்டியா இருந்தாலும் க்யூட்டா இருக்கே! ;)
ட்வீட்டி: ஹாய் லேடீஸ் அன்ட் ஜென்டில் மேன்! ஐ யாம் ட்வீட்டி! வீட்டுல இருக்க டாய்ஸ் அல்லாத்துலயும் நான்தான் ரெம்ப ப்ரெட்ட்டியா இருப்பேன்.நீங்க என்ன சொல்றீங்க? நான்பாட்டுக்கு அமைதியா ஒரு ஓரத்துல உட்கார்ந்திருந்தேன்..புத்தாண்டு ஸ்பெஷலா என்னையும் குட்டியையும் மேலே தூக்கி, ஒரு ஷெல்ஃபுக்குள்ள உக்காரவைச்சிட்டாங்க பா! கீழே விழுந்துடுவமோன்னு பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு!
குட்டி:ஸ்ஸூ!சும்மா இரு ட்வீட்! எலிவேட்டட் வியூல படம் பாத்து என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்,இப்ப நீ பயமுறுத்தாதே.
ட்வீட்டி: மொத மொதலா எங்களைப் பத்தி சொன்னதால இனிப்பா ஒரு எண்டிங்! எல்லாருக்கும் ஒரு ப்ளேட் முழுக்க முழுக்க முழுக்க கேசரி! சந்தோஷமா சாப்பிடுங்க. :) :) :)
மீண்டும் சந்திப்போம்,நன்றி வணக்கம்!
இப்பதான் டாய்செல்லாம் பேச ஆரம்பிச்சிருக்கு, இனிமேல படிப்படியா மாட்டியிருக்கும் காலண்டர், ஷோகேசினுள் இருக்கும் ஷோ பீஸ், டி. வி, ரேடியோ ஒன்னொன்னா பேச ஆர்ம்பிக்கப்போகுதே.
ReplyDeleteasathareenga mahi....
ReplyDeleteKurinji kathambam
குறிஞ்சி குடில்
very sweet ! loved your sense of expression !!
ReplyDeleteவாவ்! மகி உங்க வீட்டு டாய்ஸ் எல்லாம் ரொம்ப வாலுங்க போல,நல்ல என்ஜாய் பண்ணினேன்,எல்லாம் அழகு.
ReplyDeleteநலம் விசாரிச்சீங்களாமே மஹி அக்கா(நீங்கதான் சொல்லித் தந்தீங்க), அப்புவைப் பிடிச்சுப்போச்சு:).
ReplyDeleteகொஞ்ச நாளாக மனதில கேசரி சாப்பிடோணும் என ஆவலாக இருக்கு, இப்போ இன்னும் அதிகமாகிட்டுது.
லவ்லி! ஒவ்வொரு டாய்சும் ஏராளமான கதைகள் வச்சிருக்குமே அதையும் அப்பப்போ சொல்லுங்க மகி :)
ReplyDeleteவித்தியாசமான பகிர்வு மகி.உங்கள் வீட்டு டாய்ஸ் க்யூட்.ஸ்வீட் டேஸ்ட்.
ReplyDeleteக்யூட் & ச்சோ ஸ்வீட்....
ReplyDeleteToys are so pretty and beautifully drafted post..
ReplyDeleteMahi, Cute toys with lovely dialogues...
ReplyDeleteவாவ்...டெட்டீஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்குதுங்க.... நிஜமாவே ட்வீட்டி ரொம்ப க்யுட்டீயா இருக்கு. எல்லாத்தையும் நல்லா மொத்து மொத்துன்னு மொத்தணும் போல இருக்கு.
ReplyDeleteமஹி இந்த டாய்ஸ் கூட்டம் என் பேத்தியிடம் இருக்கு. அதெல்லாம் இந்த மாதிரி கதை எல்லாம் சொல்லலை. அதுகளிடம் இவர்களைப்பற்றி சொல்லுகிறேன். அதுகளெல்லாம் ஒரே ப்ரெஞ்சில் பேசறது. ஸ்கைப்பில் பேசி தமிழ் கத்துகச் சொல்லணும். புத்தியுள்ள அருமையான உன் டாய்ஸுக்கு அன்புகள்
ReplyDeletevery cute, Mahi.
ReplyDeleteIvlo soft toys a? wow,I love them ,but I fail to manage them clean,make it so dirty and then end up in throwing away :P
ReplyDeletecute toys, beautiful
ReplyDeleteஉங்க வீட்டு டாய்ஸ்யெல்லாம் ரொம்ப க்யூட்டா இருக்கு மஹி..
ReplyDeleteஒரு ப்ளேட் எல்லாருக்கும் எப்படி மஹி பத்தும்? பாருங்க நான் கடைசியா வரதுக்குள்ள எல்லாம் தீர்ந்துப்போச்சு!
மகி...கட்டாயம் வாங்கி பாருங்க...முட்டைகோஸ் மாதிரியே தான் இருக்கும்...எனக்கு என்னவோ இந்த காயே மிகவும் சூப்பராக இருப்பது மாதிரி தான் தெரியும் முட்டைகோஸினை கம்பேர் செய்யும்பொழுது...
ReplyDeletevery cute teddys .. love it..
ReplyDeletePlease visit my blog..
Lyrics Mantra
Ghost Matter
Download Free Music
Music Bol
ஆஹா ! அருமையான விளையாட்டு பொம்மைகள் ! குழந்தை பருவம் நினைவுக்கு வந்து சற்று மனதை நெகிழ வைக்கிறது !
ReplyDeleteநல்ல பதிவு., வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி
ஹாய் மகி...,நான் உங்கள் பக்கத்தின் புது வரவாக்கும்...என்னமா யோசிக்கிறீங்கப்பா..... ரொம்ப நல்லாயிருக்கு.... பொருமையா இதை ஃபோட்டோ எடுத்து டயலாக் எழுதி வெளியிட்ட உங்கள் திறமைக்கு டாய் ஸ்டோரி அனிமேஷன் மூவி எடுத்தவன் எல்லாம் ஒண்ணுமில்லைன்னு நிருபிச்சிட்டீங்க... ரசிச்சு படிச்சு சிரிச்சேன்.இன்னும் உங்கள் பக்கத்தை உலாவி வந்து ஆங்காங்கே பதிவிடுவேன்.
ReplyDelete