Friday, January 21, 2011

ரசம்

தென்னிந்திய உணவுகளில் மிக முக்கியமான ஒன்று ரசம்..சிறு குழந்தைமுதல் முதியவர் வரை எல்லாரும் சாப்பிடலாம்,எளிதில் ஜீரணமாகும், சளி-காய்ச்சல் வந்தவர்களுக்கு உடல்நலம் தேற உதவும்.குழம்பு வைக்க நேரமில்லாத/வசதியில்லாத சமயங்களில் கை கொடுக்கும். .சிலருக்கு உணவில், சாதமும் ரசமும் இருந்தா போதும்,வேற எதுவுமே வேண்டாம் என்பாங்க! ரசம் இல்லாமல் எந்த விருந்தும் கம்ப்ளீட் ஆகாது. இப்படி பல்வேறு சிறப்புகள் ரசத்துக்கு இருந்தாலும், சிறுவயது முதலே எனக்கென்னமோ ரசத்தில் அவ்வளவு விருப்பம் இருந்ததில்லை.குழம்பிலிருந்து நேரா தயிருக்கு தாவிடுவேன்..பலமுறை வம்பு பண்ணி ரசம் ஊத்தி சாப்பிடவைப்பாங்க..ரசம் சாப்பிடாம இருக்கறதுக்காக அம்மாகிட்ட பலநாள் திட்டு வாங்கியிருக்கேன்.

வெறும் ரசம் என்பது வெறும் தக்காளி-புளித்தண்ணீர் சேர்த்து செய்வது..பருப்பு ரசம்னா தக்காளி-புளியுடன் பருப்புவேகவைச்ச தண்ணீர் ஊற்றி செய்வது.பருப்புரசம் அதிசயமா எப்பவாவது சாப்பிடுவேன்,வெறும் ரசம்னா திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். இப்படியாக ரசத்தை ஒதுக்கிவைத்தே பலவருஷங்கள் ஓடிவிட்டன.

கல்யாணம் முடிந்ததும்தான் எனக்கு காத்திருந்தது ஆப்பு!!! என்னவருக்கு ரசம் இல்லைன்னா சாப்பாடே தேவையில்லைங்கற ரேஞ்சுல இருந்தார்..எனக்கோ ரசம் வைப்பது பற்றி A,B,C,D கூடத்தெரியாது. எங்க வீட்டிலே சாம்பார்ப்பொடி,ரசப்பொடின்னெல்லாம் கிடையாது,சீரகம்-மிளகு-பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைப்பாங்க. முதல் சில நாட்கள் போராட்டமாய் இருந்தது..கிச்சனே புதுசு, கபோர்ட் முழுக்க பல்வேறு பொடிகள்..அதுவும் எல்லாம் ஒரே மாதிரியா வேற இருக்குது! பல நாட்கள் சாம்பார் பொடியைப் போட்டே ரசம் வைத்திருப்பேன்னு நினைக்கிறேன்.

இந்த 2 வருஷத்திலே சித்திரமும் கைப்பழக்கம்னு சொல்வது போல, மெல்ல மெல்ல ரசம் வைத்துப் பழகிட்டேன்..நண்பர்கள் பலருக்கும் எங்க வீட்டு ரசம் மிகவும் பிடிக்கும்,என்னவரும் ஆஹா-ஓஹோன்னு பாராட்டுவார்..அவ்வளவு ஏன்,எனக்கே ரசம் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சுன்னா பாருங்களேன்! :) அப்பப்ப நினைத்துப் பார்த்துக்குவேன்,எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்!??!!
முன்குறிப்பு :
இது இந்த 2 வருஷங்கள்ல நானா டெவலப் பண்ணிகிட்ட முறை..தப்புகள்-தவறுகள் இருக்கலாம்..கிச்சன் கிங்ஸ்-க்வீன்ஸ் எல்லாம் அவற்றைக் கண்டுகொள்ளாமல் படிங்க என்று அன்புடன் கேட்டுக்கொல்கிறேன்.;)

வெறும் ரசம் வைக்கலாம் முதல்ல...ஒரு தக்காளி-கொஞ்சம் புளி-கொஞ்சம் தண்ணி (அளவெல்லாம் குத்துமதிப்பா போட்டுக்குங்க)
இவற்றை ஒரு மைக்ரோவேவ் ஸேஃப் பாத்திரத்தில் எடுத்து 5-6 நிமிஷம் மைக்ரோவேவில் வேகவைச்சு ஆற வையுங்க. (இதை மைக்ரோவேவ்லதான் வைக்கோணும்னு இல்ல,அடுப்பிலேயும் வைச்சு வேகவைக்கலாம்)
நல்லா ஆறினதும், அதை கரைச்சுக்குங்க..


பாத்திரத்தில் துளியூண்டு எண்ணெய் காயவைத்து (இந்த இடத்தில இன்னொரு விஷயம் நினைவு வருது..நெய்ல தாளிச்சா நல்லா மணமா இருக்கும்னு ஒரு ரமணி சந்திரன் கதைல படிச்சிருக்கேன்,நான் இதுவரை செய்ததில்ல,நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க.)

அவ்வ்வ்வ்வ்வ்! கத சொன்னதுல எண்ணெய் காஞ்சு புகையே வந்துடுச்சு பாருங்க..சமைக்கும்போது இப்படியெல்லாம் கத பேசாம கவனமா சமைக்கோணும்.ஓக்கை? கடுகு-சீரகம்-பெருங்காயம்-கறிவேப்பிலை தாளிச்சு,ஒரு சின்னப் பல்லு பூண்டைத் தட்டிப்போட்டு வதக்கி,கரைச்சு வச்ச தக்காளி-புளித்தண்ணியை ஊத்தி (புளிச்சக்கையை கையாலே அப்படியே வடிகட்டிடுங்க), மஞ்சப்பொடி-மிளகாப்பொடி-உப்பு போடுங்க.

அப்புறமா, ஊர்ல இருந்து கொண்டுவந்து ஃப்ரீஸர்ல ஒரு வருஷமா(!) வச்சிருக்கும் ரசப்பொடியோ, இல்ல உங்க கைவசம் இருக்கற ரசப்பொடியோ கொஞ்சம் போடுங்க. போட்டோவப் பாத்தா உங்களுக்கே தெரியும், எல்லாப்பொடி வகைகளும் ஒரு குத்து மதிப்பாதேன் போடறேன்னு..ஹிஹிஹி!

ரசத்த கொதிக்க விடக்கூடாது,அதனால அடுப்பை மிதமான சூட்டில வையுங்க. ரசம் நுரை கட்ட ஆரம்பிச்சதும் தணலை குறைத்து, கொஞ்சூண்டு சர்க்கரை போட்டு, கொத்துமல்லித்தழை போட்டு அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.

கம-கம-கம ரசம் ரெடி!

பருப்பு ரசம் வைக்கறதுக்கு, பருப்பு வேகவச்ச தண்ணியை வடிகட்டி(அதுக்கப்புறம் அந்த பருப்பிலே ருசி குறைஞ்சு போகும்,அதையும் பாத்துக்குங்க.) தக்காளி-புளி வேகவைச்சு கரைச்சு வைச்சது கூட இந்த பருப்புத்தண்ணியையும் சேத்துக்கோங்க,அம்புட்டுதான்!


பின்குறிப்பு:
பொதுவாவே எல்லா விஷயத்திலும் எனக்கு கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸுன்னு, +2 படிச்சப்ப எங்க தமிழ் வாத்தியார்கிட்ட சர்ட்டிபிகேட் வாங்கிருக்கேனுங்க,அது சமையல்ல கொஞ்சம் தூக்கலாவே தெரியும்.என்ன சமைச்சாலும், உப்பு சரியா இருக்கான்னு ருசி பாக்கவே மாட்டேன்.இதுவரை எல்லாமே கிட்டத்தட்ட கரெக்ட்டாவேதான் இருக்கும். சரி,இப்ப எதுக்கு இந்த சுயபுராணம்னு கேக்கறீங்களா? ஓக்கே,ஸ்டாப் பண்ணிட்டு பாயிண்டுக்கு வரேன்.

சமைக்கும் உணவு வகைகள்ல உப்பு கரெக்ட்டா போட்டம்னாதான் நல்ல மணம் வருமாம்,உப்பு கம்மியா இருந்தா சாம்பாராகட்டும்,ரசம்,புளிக்குழம்பு,பொரியல் எதுவா இருந்தாலும் வாசனை வராதுன்னு எப்பவோ ஒரு புத்தகத்திலே படித்திருக்கேன். அந்த டெக்னிக்கைக்தான் நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். உப்பு கம்மியா இருந்தா வாசனை வராது சரி, அதிகமா போனா என்னாகும்?-னு எடக்கு மடக்கா கேள்வி கேட்டுடாதீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்! :)

29 comments:

  1. ரசம் சூபப்ர்ப்...அருமையாக அழகாக எழுதி இருக்கின்றிங்க...

    எப்படி மகி ரசம் சாப்பிடாம இருந்திங்க...இங்கே எனக்கு ரசம் ரொம்ப பிடிக்கும்...அதே மாதிரி அக்‌ஷ்தா குட்டிக்கு ரசம் தான் favorite rice....

    எது எப்படியே இப்பொழுது ரசம் பிடித்துவிட்டது அல்லவா...அது போதும்...

    ReplyDelete
  2. ரசம் சூப்பர். எனக்கும் பெரிதாக பிடிப்பதில்லை. வீட்டில் அனைவருக்குமே பிடிக்கும்.


    கொஞ்சூண்டு ரசத்துக்கு... பெரீய விளக்கம் கொடுத்தது சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  3. மகி,உங்கள் ஸ்பெஷலிடியே வெறுமனே சமையல் குறிப்புப்போடாமல் ஏகத்துக்கு ஒரு பில்ட் அப் கொடுத்து சமையலையே சுவாரஸ்யமாக்குகின்றீர்கள்.எளிய முறையில் ரசம் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. me too rasam specialist..

    athu onnuthan vegama vaikamudium..

    any doubt i will explain.

    rasam supper..

    ReplyDelete
  5. Looks yummy & my meal dosnt over with out Rasam...

    ReplyDelete
  6. ரசமும் வைத்த விதமும் போட்ட மொக்கையும் ரசிக்கும் படி நவரசமாய் இருந்தது.

    ReplyDelete
  7. nice wirte up and rasam is my fav always.rasam vasanai is making me tempting me to taste

    ReplyDelete
  8. ரஸப்பொடியோ ஸாம்பார்ப் பொடியோ போட்டப்புறம் பொடிவாஸநைபோக கொஞ்சம் கொதிக்கவைப்பே இல்லையா ஆமாம் சொல்லுகிறேன் காமாட்சி

    ReplyDelete
  9. ரஸப்பொடியோ ஸாம்பார்ப் பொடியோ போட்டப்புறம் பொடிவாஸநைபோக கொஞ்சம் கொதிக்கவைப்பே இல்லையா ஆமாம் சொல்லுகிறேன் காமாட்சி

    ReplyDelete
  10. ரொம்ப நல்ல கதை சொல்லி இருக்கீங்க. சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் ரசம் என்னோட fav

    ReplyDelete
  11. ரசம் வைக்கறதைப் பத்தி அழகா எழுதிருக்கீங்க....ரசம் இருந்தாலே போதும் எனக்கு...இப்போவாவது ரசம் பிடித்ததில் சந்தோஷம்...

    ReplyDelete
  12. நல்ல கதை மகி!! ரசமும் நல்லா இருக்குது. ஒரு சந்தேகம், ரசத்துக்கு மிளகாப்பொடி போடுவாங்களா?

    ReplyDelete
  13. ரசத்தில் சர்க்கரையா... அடுத்த தடவை சர்க்கரை போட்டு செய்றேன்... பழியோ பாராட்டோ உங்களுக்கே ;))... திருமணத்திற்கு முன் ரசம் உங்களுக்கு பிடிக்காதுன்னு சொன்ன கதை அப்படியே என்னைப் பற்றி சொல்ற மாதிரியே இருந்துச்சு... அம்மா என்னிக்காவது ரசம் மட்டும் வச்சு சமாளிக்க நினச்சாலும் எனக்காக ஏதாவது குழம்பு வப்பாங்க... ஹ்ம்ம்ம்... இப்போ அப்படியே உல்டாவா நடக்குது... ரசத்தை அப்படியே குடிக்கறத அம்மா அப்படி ஆச்சரியமா பார்ப்பாங்க... ;).. என் பையனும் ரசம் விரும்பி சாப்பிடுவான்...

    ReplyDelete
  14. எனக்கு ரசம் பிடிக்கும். ஆனா பொடி பாவிப்பதில்லை. பூண்டு, மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகள் தட்டிப் போட்டு வைப்பேன்.

    ReplyDelete
  15. ரசம் அருமைடா.. சொல்லிய விதம் இன்னும் அருமை..

    ReplyDelete
  16. சின்ன வயசிலே இருந்து இப்போவரை எனக்கு மிகவும் பிடிச்சது ரசம்.
    ரசத்தை பற்றி உங்க அனுபவமும் குறிப்பும் அருமை!

    ReplyDelete
  17. எனக்கு ரசம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் மஹி... .நானும் சர்க்கரை சேர்த்து செய்து பார்க்கிறேன்..

    ReplyDelete
  18. /எப்படி மகி ரசம் சாப்பிடாம இருந்திங்க../அவ்வ்வ்வ்!அப்ப அப்படித்தான் இருந்தேன் கீதா! எப்படின்னெல்லாம் தெரிலைங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!:)
    ~~
    நன்றி அதிரா! எனக்கும் சப்போர்ட்டுக்கு ஒரு ஆளிருக்கு என்பது சந்தோஷம்! :)
    ~~
    ஸாதிகாக்கா,ரசத்துக்கும் எனக்கும் உள்ள பந்தம்(!!) இப்படில்லாம் எழுதவைத்துவிட்டது.நன்றி!
    ~~
    ஆஹா,சிவாவின் ரசத்தை ருசிக்கவே சிங்கப்பூர் போலாம் போலிருக்கே! சமையல் எப்படி இருக்கும் சிவா? நம்பி வரலாமா?;) நன்றி!
    ~~
    சரஸ்,நீங்களும் ரசம் ரசிகையா? நன்றிங்க!
    ~~
    ஹாஹ்ஹா!! நவரசமா ஆசியாக்கா? எனக்குத்தெரிந்தது இந்த 2 வகை மட்டுமே! :)
    ~~
    Thanks ManPreet for your constant support!
    ~~
    தேங்க்ஸ்ங்க ஜெயஸ்ரீ!வீட்டுக்கு வாங்க,ரசத்தை ருசிக்கலாம். மறக்காம தக்குடு தந்த வளையலோட வாங்க! ;)
    ~~
    மஹா,உங்களுக்கும் ரசம் பிடிக்குமா? நல்லதுங்க!:)
    ~~
    மேனகா,உங்களுக்கும் ரசம் பிடிக்குமா? ரொம்ப நல்லதுங்க! :) :)

    ReplyDelete
  19. //பொடிவாஸநைபோக கொஞ்சம் கொதிக்கவைப்பே இல்லையா//
    //ஒரு சந்தேகம், ரசத்துக்கு மிளகாப்பொடி போடுவாங்களா?//
    இந்தமாதிரி டெக்னிகல்(!!) கொஸ்டினெல்லாம் கேக்கறாங்களே!!இதுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாதுங்க! என் வசதிப்படி வைக்கறேன்,ஹிஹி! :) :)

    1.இதுவரை ரசத்தை கொதிக்கவிட்டதில்லை, பொடி பச்சைவாசமும் வந்ததில்லைங்க காமாட்சிம்மா!
    2.சுகந்திக்கா,ரசப்பொடி மட்டும் போட்டா காரம் பத்தாத மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்,அதனால கொஞ்சம் மொளகாப்பொடியும் போட்டுடுவேன்!

    ReplyDelete
  20. ப்ரியா,தேங்க்ஸ்ங்க!
    ~~
    பானு,நீங்களூம் என்னை மாதிரிதானா? அப்பாடா..தனியா இத்தனை கருத்துக்கணைகளை சமாளிக்கணுமேன்னு நினைச்சேன்,நீங்களும் அதிராவும் சப்போர்ட்டுக்கு இருக்கீங்க!நன்றி! :)

    /ரசத்தில் சர்க்கரையா... அடுத்த தடவை சர்க்கரை போட்டு செய்றேன்../ சர்க்கரைய அள்ளிக்கொட்டிடாதீங்கம்மிணி! சும்மா ஒரு கால்ஸ்பூன் டு அரைஸ்பூன் போடுங்க.:)
    ~~
    குறிஞ்சி,நன்றிங்க!
    ~~
    வானதி,நான் கொஞ்சம் சோம்பேறிங்க..எல்லாத்துக்கும் பொடிதான்! :) கொத்துமல்லி விதை போட்டு ரசமா? புதுசா இருக்கே!
    ~~
    தேனக்கா,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~
    ப்ரியா,யூ டூ??!! சரி,சரி..எல்லாருக்கும் பிடித்தரசம் எனக்கு பிடிக்காம இருந்தது..இப்ப நானும் உங்க எல்லார் கூடவும் சேர்ந்துட்டேன்.:)
    நன்றிங்க!
    ~~
    தர்ஷினி,கொஞ்சமா சர்க்கரை போட்டு செய்து பாருங்க..சூப்பரா இருக்கும்!நன்றி தர்ஷினி!

    ReplyDelete
  21. //கல்யாணம் முடிந்ததும்தான் எனக்கு காத்திருந்தது ஆப்பு!!! என்னவருக்கு ரசம் இல்லைன்னா சாப்பாடே தேவையில்லைங்கற ரேஞ்சுல இருந்தார்//
    இங்க அப்படியே நேர் எதிர்... எனக்கும் ரசம் இல்லாம சாப்டா மாதிரியே இருக்காது... அவருக்கு அது வேண்டவே வேண்டாம்... இதான் பத்து பொருத்தம் பாத்தாங்களாம்... (grrrrr).... ஆனா அவர் ரசத்துக்கு கொடுமையா ஒரு பேரு வெச்சாரு, அதோட எனக்கு ரசம் சாப்பிடற ஆசையே போய்டுச்சு...அதெல்லாம் இங்க சொல்ல மாட்டேன்... (:

    //நெய்ல தாளிச்சா நல்லா மணமா இருக்கும்னு ஒரு ரமணி சந்திரன் கதைல படிச்சிருக்கேன்//
    ஹா ஹா ஹா...எங்க இருந்தெல்லாம் புடிக்கறீங்க ரெசிபி... (நானும் படிச்சுருக்கேன் அந்த கதை... ஹா ஹா)

    //ஊர்ல இருந்து கொண்டுவந்து ஃப்ரீஸர்ல ஒரு வருஷமா(!) வச்சிருக்கும் ரசப்பொடியோ//
    சேம் ப்ளட்...

    //எல்லாப்பொடி வகைகளும் ஒரு குத்து மதிப்பாதேன் போடறேன்னு//
    ஒரு குத்துக்கு எவ்ளோ மதிப்புங்க அம்மணி... :)))

    //உப்பு சரியா இருக்கான்னு ருசி பாக்கவே மாட்டேன்//
    நான் கூட இப்படி தான்... ஆனா நீங்க சொன்ன confidence இல்ல காரணம்... ஒரு பயம் தான்.....tester எப்பவும் ரங்க்ஸ் தான்... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...

    //உப்பு கம்மியா இருந்தா வாசனை வராது//
    நானும் யாரோ சொன்ன இதை வெச்சு நெறைய பேருகிட்ட நான் சமையல் புலி இமேஜ் maintain பண்ணிட்டு இருக்கேன்...

    இன்னைக்கி உங்க பக்கத்துல ரெம்பவே கும்மிட்டேன்... மகி வந்து அடிக்கறதுக்குள்ள மீ எஸ்கேப்... Have a good weekend Mahi...

    ReplyDelete
  22. ரசம் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு மஹி... அதை விட தாளிக்கும் போது கதை சொன்னதையும்,ஒவ்வொன்றையும் எழுதிய விதத்தையும்தான் ரொம்ப ரசிச்சேன்...கலகலப்புடன் உங்கள் பக்கம் போகின்றது மஹி...
    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  23. rasam romba nalla irukku mahi, super

    ReplyDelete
  24. ////எல்லாப்பொடி வகைகளும் ஒரு குத்து மதிப்பாதேன் போடறேன்னு//
    ஒரு குத்துக்கு எவ்ளோ மதிப்புங்க அம்மணி... :)))// இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்,ஒரு குத்துக்கு எவ்ளோ மதிப்புன்னு! :)

    /நானும் யாரோ சொன்ன இதை வெச்சு நெறைய பேருகிட்ட நான் சமையல் புலி இமேஜ் maintain பண்ணிட்டு இருக்கேன்.../சேம் ப்ளட் புவனா,சேம் ப்ளட்! இப்ப எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருது! (எல்லாரும் இதைப் படிக்கிறாங்களே,இன்னும் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகாம இருக்குதுன்றீங்க?)

    வீகெண்ட்ல வந்து கும்மினதுக்கு ரொம்ப டாங்க்ஸ்! அடிக்கடி வந்து கும்முங்க.(அப்பதானே எப்பாவாவது ஒரு டைம் உங்களைப் பிடிச்சு அடிக்கலாம்,ஹிஹி)

    அப்ஸரா,வாங்க! கலகலப்பா இருந்தாத்தானே எல்லாருக்கும் ஒரு சந்தோஷமா இருக்கும்? அதுக்காக அப்பப்ப இப்படி மொக்கை போடறது! தேங்க்ஸ் அப்ஸரா!

    வேணி,தேங்க்ஸ் வேணி!

    ReplyDelete
  25. unga mokhai super...neenga vallu nu nenaikuren...enna madhiri,ana nan en blog la kamikka maten...emboridery super attempt....nanum oru book oda pattu class poyiruken...ana ennakum handwork class than pidikum...oru thadavai chain stitch solli thara (sedu sedu)teacher osi kettanga,na osiya neeta,athu avanga verala kuthiduchu,friends elaram serika,teacher enna moraika,apram,osiya thunila soruvunga nane eduthukuren nu rule pottanga....heehee

    ReplyDelete
  26. ப்ரியா,என்னை நேர்ல பாத்தா கண்டிப்பா உங்க கருத்தை மாத்திப்பீங்க.நான் ரொம்ப ரொம்ப சாது & சமர்த்துப்பொண்ணுங்க! :)

    உங்க ஸ்கூல் காமெடி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இப்பவாவது உண்மைய சொல்லுங்க,வேணும்னுதானே சிடுசிடு டீச்சர் விரலை ஊசில குத்தினீங்க? ஹாஹாஹா!!

    தேங்க்ஸ் ப்ரியா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails