Friday, February 4, 2011

ரசித்து ருசித்தவை- 4

கடலை எங்க வீட்டில் இருவருக்குமே பிடிக்கும்.அதுவும் வறுத்த கடலைன்னா ரொம்பவே பிடிக்கும்.இங்கே அமெரிக்கன் ஸ்டோர்ல கிடைக்கும் கடலைகள் ஏனோ அவ்வளவா பிடிக்கலை எங்களுக்கு..இண்டியன் ஸ்டோர்ல பச்சைக்கடலைதான் கிடைக்கும். இந்த கடலை வறுப்பது கொஞ்சம் நச்சுப்பிடிச்ச வேலை,ஒரு நிமிஷம் ஏமாந்தா கறுகிப்போயிரும்..பக்கத்துலயே நின்னு வறுக்கணும்.(இந்த இடத்தில நீங்க வேற(!) கடலை வறுக்கறதைப்பத்தி யோசிச்சீங்கன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல! ;) )

சுகந்திக்கா ஒருமுறை கடலை வறுக்க ஒரு ஈஸி டெக்னிக்கும், கடலை உருண்டைக்கு ஒரு ரெசிப்பியும் குடுத்திருந்தாங்க. அப்ப இருந்து செய்துபார்க்க நினைத்தேன். இதோ,நேத்து செய்தாச்சு..ரொம்ப ஈஸியா இருந்தது. தேங்க்ஸ் சுகந்திக்கா!
ஒரு பேக்கிங் ட்ரேல ஒரு கப் பச்சைக்கடலைய பரப்பி, 300F ப்ரீஹீட் செய்த கன்வென்ஷனல் அவன்ல 15 நிமிஷம் bake செய்தா போதும்.
ட்ரே-ய அவன்ல வச்சுட்டு டைம் செட் பண்ணிட்டா, 15நிமிஷங்கழிச்சு,அதே சத்தம்போட்டு நம்மளக் கூப்பிடும். எடுத்து வெளில ஆறவைச்சா சூப்பரா மொறு-மொறு கடலை ரெடி!

முதல்முறையா கடலை உருண்டை செய்யறதால கொஞ்சமா செய்துபார்க்கநினைத்து ஒரு கப் கடலைய எடுத்தேன். 2கப் கடலைக்கு 3/4கப் வெல்லம்னு சுகந்திக்கா சொல்லிருந்தாங்க,அதனால வெல்லம் கால்கப்புக்கு கொஞ்சம் அதிகமா, அரைகப்புக்கு கம்மியா (குழம்பிடாதீங்க, அது வேற ஒண்ணுமில்ல, 3/4கப்புல பாதி! நம்மள்லாம் யாரு,கணக்கில புலியாச்சே!! :) ) வெல்லம் எடுத்தாச்சு.
கடலைய மிக்ஸில 4-5 முறை pulse-ல பொடிச்சுட்டு,வெல்லத்தையும் சேத்து 2-3 முறை pulse பண்ணிஎடுத்தேன்..உருண்டை பிடிக்கும்போது கையில கொஞ்சமா நெய் தடவிக்க சொல்லிருந்தாங்க..ஆனா நான் என்ன சொதப்பினேன்னு தெரில,மாவு உருண்டையே சேரமாட்டேங்குது!! 2 டீஸ்பூன் நெய்ய ஊத்தி உருட்டினாலும் முடியல!
சரின்னு மறுபடியும் மிக்ஸில போட்டு 2-3 pulse போட்டேன்.. பறுபறுன்னு இருந்த கடலை கிட்டத்தட்ட மாவாகிடுச்சு. உருண்டையும் பிடிச்சாச்சு. ஒரொரு உருண்டையும் ஓரொரு சைஸ்ல இருக்குன்னு எனக்கே தெரியுது.ஆனா இதான் என்னால முடிஞ்சது. ஹிஹிஹி!

இந்த அளவுக்கு இவ்வளவு உருண்டைகள் வந்தது. வழக்கம்போல டேஸ்ட் பார்க்காம,பத்திரமா ஒரு பாக்ஸ்ல போட்டு மூடிவைச்சாச்சு.
சாயந்திரம் பசியோட வந்த என்னவர் & இன்னொரு ப்ரெண்டுக்கும் கடலை உருண்டை ரொம்ப பிடிச்சுப்போச்சு..அப்புறம் இன்னொரு ப்ரெண்ட் பேமிலி வந்தாங்க,அவங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. மீதி இருந்த 4 உருப்படி இன்னிக்கு என்னவரின் ஆபீஸ்க்கு போயிடுச்சு,ஆக மொத்தம் கடலைஉருண்டை காலி! :) ஈஸீ அன்ட் ஹெல்த்தி ரெசிப்பியைப் பகிர்ந்ததுக்கு சுகந்திக்காவுக்கு நன்றி!
~~
ஆசியாக்காவின் பீட்ரூட் -பாசிப்பருப்பு பொரியல்..பீட்ரூட் வாங்கும்போதெல்லாம் இந்தப்பொரியல் செய்வது வழக்கமாப்போச்சு.
பலமுறை செய்தாச்சு, முக்கால்வாசி டின்னர்க்கு செய்ததால் போட்டோ சரியாக வரல. அட்ஜஸ்ட் பண்ணி,லைட் போட்டு போட்டோவைப் பாத்துக்குங்க. தேங்க்ஸ் பார் அண்டர்ஸ்டேண்டிங்.;)

சுரைக்காய்-கடலைப்பருப்பு கூட்டு..இது சப்பாத்திக்கு சூப்பரா மேட்ச் ஆகும்.


நன்றி ஆசியாக்கா!
~~
இது காமாட்சி அம்மா அவர்களின் மேத்தி புலாவ்...

பச்சைப்பட்டாணியும் போடச்சொல்லியிருந்தாங்க..நான் பட்டாணி சேர்க்காமல்தான் செய்தேன்.புலாவ் டேஸ்டியா இருந்தது. ரெசிப்பியைப் பகிர்ந்ததுக்கு நன்றிம்மா!

பி.கு. முதல் படத்தில கடலை உருண்டை ப்ளேட்டுக்கு பக்கத்தில இருப்பது ஓக் மரத்தின், வறண்டுபோன காய்கள். அழகா இருக்குன்னு எடுத்துட்டு வந்தேன்..அதைவைச்சு கலைக்கண்ணோட ஒரு போட்டோ எடுப்பதா நினைத்து... ஹிஹிஹி!
ஹேப்பி வீகெண்ட் எவ்ரிபடி!

31 comments:

 1. சூப்பரா இருக்கு மகி எல்லாமே!!

  ReplyDelete
 2. loved the kadala recipe mahi ! the other dishes are also inviting !

  ReplyDelete
 3. வந்துட்டேன் அக்கா...
  எல்லாமே எனக்குதான்...

  ReplyDelete
 4. முதல் படத்தில கடலை உருண்டை ப்ளேட்டுக்கு பக்கத்தில இருப்பது ஓக் மரத்தின், வறண்டுபோன காய்கள். அழகா இருக்குன்னு எடுத்துட்டு வந்தேன்..அதைவைச்சு கலைக்கண்ணோட ஒரு போட்டோ எடுப்பதா நினைத்து... ஹிஹிஹி!///

  hm hm okk i will recomment
  best photo grapper award..:)

  ReplyDelete
 5. லவ்லி! இப்படி போட்டவ போட்டு வீட்டை விட்டு வெகு தூரத்தில் இருக்கிற என்னை உசுப்பேத்தி விட்டுட்டீங்களே மகி! :)

  ReplyDelete
 6. கடலை உருண்டை சூப்பர்.கணக்கு தான் உதைக்குது.நானே கணக்குல புலி,விடு தாயே,சுகந்திகிட்டேயே கணக்கு கேட்டுக்கறேன்.
  மகி மிக்க நன்றி.

  ReplyDelete
 7. எல்லா ஐயிட்டமும் சூப்பரு, நானும் பேசன் உருண்டை செய்ய கரகரப்பா பொடித்த பேசன் வாங்கி வைத்துள்ளேன், இன்னும் நேரம் தான் கிடைக்கல

  பீட்ருட் கடலை பருப்பு எஙக் வீட்டு பேவரிட், அருசுவையில் போன மாதம் தான் கொடுத்தேன்.

  ReplyDelete
 8. சூப்பர் கடலை உருண்டை. எங்க வீட்ல கடலைபொடிச்சு பண்ணினா பிடிக்காது கடலை வறுத்து தோல் புடைத்து அப்படியே வெல்லப்பாகு போட்டு செய்துதான் சாப்பிடுவாங்க

  ReplyDelete
 9. மஹி நீசெய்த கடலை உருண்டை மாலாடு மாதிரி சூப்பராயிருக்கு. மற்றவர்கள் எழுதுவதை செய்து பாராட்டுவதும் ஒரு தனிப்பட்ட குணம்.
  அதற்கும் வகை தெரிய வே ண்டும். இன்னொன்று நான் எழுத நினைப்பது சிலவற்றை நீ எழுதி விடுகிறாய். நான் எழுதும் சிலது ஏற்கெநவே படித்த மாதிரியும் தேன்றும். யாரும் கரண்டியும் கையுமாய் பிரப்பதில்லை என்றுஒரு வாக்கியமும் ஞாபகம் வருகிறது. நீ குறிப்பிட்டு எழுதிய குறிப்பாளினியாவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும். உனக்கு என்ன பட்டம் தரலாம்.. ரிஸர்ச் செய்கிறவர்களுக்கு டாக்டர் பட்டம்தானே கிடைக்கும். உனக்கு அதற்கு மேலே ஏதாவதைத்தான் தேடவேண்டும்.ஜமாய்க்கிறாய் பெண்ணே.ஜமாய்.

  ReplyDelete
 10. Kadala Urundai really a healthy choice...All recipes are really gud.

  ReplyDelete
 11. neenga ethu seithalum nandraga erukkum Mahi.

  ReplyDelete
 12. Lovely recipes,i liked the kadalai urundai the best :)

  ReplyDelete
 13. சூப்பர் ரெசிபிக்கள் மகி.

  ReplyDelete
 14. ஓ...கடலை இப்படித்தான் போடணுமா?!;) போட்டுடுவோம்...

  மற்ற பதார்த்தங்களும் நல்லாருக்கு... அப்புறம் உங்க ரசம் வித் சீனி செய்தேன்.. நல்லாருந்தது... இனி சர்க்கரையின்றி ரசமில்லை எங்க வீட்டில்...நன்றி.

  ReplyDelete
 15. ஆஹா... மஹி ஒரே நேரத்தில் பலவிதமாக கொடுத்து அசத்திட்டீங்க... அதிலும் கடலை உருண்டை மிக அருமை கைவசம் நாங்களும் கடலை வச்சியிருக்கோமுல்ல... நாளைக்கே செய்துட்டு உங்களை சந்திக்கிறேன்..
  நீங்கள் ரசித்து ருசித்ததை எங்களோடும் சேர்ந்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மஹி...
  வாழ்த்துக்களும் பல...

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 16. kadalai urundai super+all recipes are very nice.

  ReplyDelete
 17. every thing looks delicious & mouth watering....

  ReplyDelete
 18. As always super recipes, thanks for sharing Mahi

  ReplyDelete
 19. வறுத்த கடலை - செம ஐடியா மகி! செய்து பார்க்கணும்..

  ReplyDelete
 20. Super recipes, Mahi. Thanks for sharing.

  ReplyDelete
 21. //உருண்டை பிடிக்கும்போது கையில கொஞ்சமா நெய் தடவிக்க சொல்லிருந்தாங்க..ஆனா நான் என்ன சொதப்பினேன்னு தெரில,மாவு உருண்டையே சேரமாட்டேங்குது!! 2 டீஸ்பூன் நெய்ய ஊத்தி உருட்டினாலும் முடியல!//

  அடடா ரொம்ப கஷ்டப்பட்ட மாதிரி தெரியுதே...அதுல கொஞ்சம் ஃபெவிகால் சேர்க்க வேண்டியதுதானே...அப்புரம் பாருங்க அது எப்படி மேக்னெட் மாதிரி ஒட்டுதுன்னு தெரியும் ஹா..ஹா..

  ReplyDelete
 22. //உனக்கு என்ன பட்டம் தரலாம்.. ரிஸர்ச் செய்கிறவர்களுக்கு டாக்டர் பட்டம்தானே கிடைக்கும். உனக்கு அதற்கு மேலே ஏதாவதைத்தான் தேடவேண்டும்.ஜமாய்க்கிறாய் பெண்ணே.ஜமாய்.//

  ஏனுங்க மேடம்...இப்படி கோட்டை விட்டுட்டீங்களே அவங்க அதை கடைசி வரை சாப்பிட்டதா சொல்லவே இல்லை..இதிலேயே தெரியல....செஞ்ச முறை ஹய்யோ..ஹய்யோ...!! :-))

  ReplyDelete
 23. //தல் படத்தில கடலை உருண்டை ப்ளேட்டுக்கு பக்கத்தில இருப்பது ஓக் மரத்தின், வறண்டுபோன காய்கள். அழகா இருக்குன்னு எடுத்துட்டு வந்தேன்..அதைவைச்சு கலைக்கண்ணோட ஒரு போட்டோ எடுப்பதா நினைத்து... ஹிஹிஹி!//

  சரி....சரி......புரியுது........!! கண்ணு போட்டுடுவோமுன்னு திருஷ்டிக்காக வச்சது புரியுது ஹி..ஹி... :-)))

  ReplyDelete
 24. //எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

  வறுத்த கடலை - செம ஐடியா மகி! செய்து பார்க்கணும்..//


  என்னாதூஊஊஊ நீங்களும் பாக்கனுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்
  சந்தூஸ் நீங்களாவது சாப்பிட்டுட்டு சொல்லுங்க :-))))))))))))

  ReplyDelete
 25. //ஏனுங்க மேடம்...இப்படி கோட்டை விட்டுட்டீங்களே அவங்க அதை கடைசி வரை சாப்பிட்டதா சொல்லவே இல்லை..இதிலேயே தெரியல....செஞ்ச முறை ஹய்யோ..ஹய்யோ...!! :-))// லேட்டா வந்தாலும் எப்படி பாயின்ட்டைப் புடிக்கறார் பாருங்க! :) ;)
  ஜெய் அண்ணா எனக்கு ஒரே ஒரு சின்ன கடலை உருண்டைமட்டும் கிடைத்தது.நானும் சாப்பிட்டுட்டுதான் போஸ்ட்டே பண்ணினேன். டோன்ட் வொரி,தைரியமா சாப்பிடுங்க!

  ஓக்மரக் காய்கள் திருஷ்டிக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சரி,அதுவும் நல்லாதான் இருக்கு. :)

  மஹேஸ் அக்கா,எல்லா ஐட்டமும் செய்து பாருங்க.நன்றி!

  சந்தனா,வெகுநாள் கழித்து கடலை வறுக்க வந்ததுக்கு நன்றி!

  வேணி,காயத்ரி,சரஸ்,விஜி ரொம்ப தேங்க்ஸ்ங்க!

  அப்ஸரா,கடலை உருண்டை செய்துட்டீங்களா? எப்படி இருந்தது? :)

  பானு தேங்க்ஸ் பானு! ரசம் உங்கவீட்டில எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சா?ரொம்ப சந்தோஷங்க!

  ஸாதிகாக்கா,ராஜி,குறிஞ்சி,ப்ரேமா,உங்க எல்லாருக்கும் கடலை உருண்டைதான் ரொம்பப் பிடிச்சிருச்சு போல..செய்து பாருங்க! :) நன்றி!

  காமாட்சி அம்மா,மிக்க நன்றி! பெரிய வார்த்தைகள் சொல்லிப்பாராட்டறீங்க.கொஞ்சம் கூச்சமா இருக்கு. :) நன்றி!

  லஷ்மி அம்மா,எங்க ஊரிலும் நீங்க சொன்னமாதிரி கடலைஉருண்டை,கடலை பர்ஃபிதான் இருக்கும். இந்த ரெசிப்பி ஈஸி&புதுசா இருந்ததால செய்தேன். அதுவும் இல்லாம முழு கடலை போட்டு செய்யும்போது,சுடச்சுட உருண்டை செய்யணுமோன்னு டவுட்டு. கை வெந்துடும்ல?!அதான்,இப்படி! ;)

  ReplyDelete
 26. ஜலீலாக்கா,உங்க ரெசிப்பியும் பார்த்தேன்.நல்லா இருந்தது. லட்டு செய்யப்போறீங்களா?:P :P அவ்வ்வ்வ்வ்..பக்கத்துல இருந்தா வீட்டுக்கு வந்துடுவேன்.துபாய்ல இருக்கீங்களே!! :)

  ஆசியாக்கா,என்னது இப்படி சொல்லிட்டீங்க? :) சரி,சரி..எப்படியோ நீங்களும் கடலை வறுத்தா சந்தோஷம்!!

  பாலாஜி,எங்க வீட்டுக்கு வாங்க,விருந்து குடுத்துடறேன். :)

  சிவா ரெகமண்ட் பண்ணினதே பெஸ்ட் போட்டோகிராபர் அவார்ட் வாங்கின மாதிரி இருக்கு. தேங்க்ஸ் சிவா! :)

  ப்ரியா,சுகந்திக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 27. மகி, நான் செய்து, சாப்பிட்டாச்சு.
  இந்த வெல்லம் தான் ஒரே டார்க் கலரில்தான் கிடைச்சுது. அதை உடைக்க நான் பட்ட பாடு. நிலத்தில் வைச்சு, சப்பாத்திக் கட்டையால் நொங் நொங்கென்று அடிச்சும் அசையவேயில்லை. இதுக்கு மேலே டீட்டெயில் சொன்னா கேள்வியின் நாயகன் வந்துடுவார். நான் போறேன்.

  ReplyDelete
 28. பொதுவாக எண்ணெய்ப் பசை அடங்கிய வித்துக்களை வருத்து பொடிசெய்து அதனுடன் வெல்லத்தையும் சேர்த்துப் பொடி செய்து அழுத்தம் கொடுத்தால் உருண்டை பிடிக்கும் பதம் தானாகவே வந்துவிடும். மிக்ஸி பழக்கத்திற்கு வருவதற்கு முன்னால் பருப்பு வகைகளை ஏந்திரத்தில் அரைத்து பொடி செய்தும், எண்ணெய்ப்பசை அடங்கிய வித்துக்களை உரலில் இடித்துப் பொடி செய்வதும் வழக்கம்.உதாரணமாக சிமிலி உருண்டை பிடிக்க சுத்தம் செய்த எள்ளை வருத்து உரலில் இடித்து பொடியுடன் வெல்லம் சேர்த்து திரும்பவும் இடித்து, பிடித்தால் உருண்டைகள் உருட்ட வரும். எண்ணெய்ப் பதத்துடன் வெல்லப்பசையும், சேர்ந்து உருளுகிறது. இதனுடன் வருத்த வேர்க்கடலையும், ஏலக்காயும் சேர்த்துப் பிடிப்பதும் வழக்கம். அதனால் வகைதெரிந்தால் போதும்.
  பருப்பு வகைகளில் எண்ணெய்ப் பசை
  இல்லாததால் நெய் சேர்த்துப் பிடிக்கிறோம். என்னுடைய விளக்கம்
  ஸரியா.

  ReplyDelete
 29. இத்தனை பேர் சேர்ந்து கடலை வறுத்து இருக்கீங்க. நான்தான் மிஸ் பண்ணிட்டேனா!
  திருஷ்டி காய்கள் அழகா இருக்கு. கருப்பு கரண்டீஸும் அழகா இருக்கு. ம். நான் கடலை உருண்டை செய்து சாப்பிட்டு விட்டுத் திரும்ப வருகிறேன்.

  ReplyDelete
 30. சிம்லி உருண்டைக்கு உனக்கு அனுப்பும் பின்னூட்டத்திலேயே
  ரிஸிபி எழுதியிருக்கிறேன். பார்க்க ஞாபகம் வந்தது. பதிவும் பண்ணிவிட்டுப் போகிறேன்.அன்புடன்

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails