Wednesday, February 16, 2011

க்ரீன் பீன்ஸ் கேஸரோல்

தேவையானபொருட்கள்
1" அளவுக்கு நறுக்கிய பீன்ஸ் துண்டுகள்-11/2கப்
பால்-1/2கப்
Campbell's கண்டெஸ்ட் க்ரீம் ஆஃப் மஷ்ரூம் சூப்-1/2கப்
ஃப்ரைட் ஆனியன்-1/4கப்
மிளகுத்தூள் -1டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ்-11/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
பொடித்த வால்நட்-1டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை
பீன்ஸை தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோவேவில் வேகவைத்து தண்ணீரில்லாமல் வடித்து எடுக்கவும்.

கேஸரோலில் பாலுடன் மஷ்ரூம் சூப் சேர்த்து கலக்கவும்.

பீன்ஸ்,மிளகுத்தூள்,சில்லி ஃப்ளேக்ஸ்,பாதியளவு ஃப்ரைட் ஆனியன்,சீரகம், உப்பு இவற்றையும் சேர்த்து,
நன்றாக கலந்து 350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 25 நிமிடங்கள் வைக்கவும்.
25 நிமிடங்களில் கலவை நன்றாக கொதித்து இருக்கும்.

அதனை ஸ்பூனால் கிளறிவிட்டு, மீதியுள்ள ப்ரைட் ஆனியனையும் வால்நட் துண்டுகளையும் தூவி..
மீண்டும் 5 நிமிடங்கள் பேக் செய்யவும்.

ரிச் & க்ரீமி க்ரீன் பீன்ஸ் கேஸரோல் ரெடி.

குறிப்பு
இது Campbell's Kitchen-ல பார்த்து,சில மாற்றங்களுடன் செய்தேன். (அவங்க சில்லி ப்ளேக்ஸ் -சீரகம்லாம் போட சொல்லிருக்க மாட்டாங்கன்னு உங்களுக்கே தெரியும். :) ) அடுத்த முறை பச்சைமிளகாய் போட்டு செய்ய நினைத்திருக்கேன். சூடாக சாப்பிட சூப்பரா இருந்தது.
நாங்க வெறும் சாதத்துக்கூட மிக்ஸ் பண்ணியும்(!!),தனியாவும் சாப்பிட்டோம்.

இதனை மெய்ன் டிஷ்-ஆகவும் சாப்பிடலாம். க்ரீன் பீன்ஸ் கேஸரோலுடன் வறுத்த/மசித்த உருளைக்கிழங்கு (roasted/mashed potato) அவன் ரோஸ்டட் சிக்கன் போன்ற நான்வெஜ் ஐட்டங்களுடனும் சாப்பிடலாம்னு சொல்லறாங்க. உங்க வசதிப்படி சாப்பிடுங்க. :)

21 comments:

  1. அருமையாக இருக்கு!
    வித்தியாசமாக இருக்கு!
    பார்க்கவே சமைக்கனும் போல் இருக்கு!
    சமைத்தால் கண்டிப்பாக சுவையாக இருக்கும்.!

    ReplyDelete
  2. avvvvvv.. இது ரொம்பவே புதுசா இருக்கே!! அப்படியே சாப்பிடனுமா இல்லை சாதத்துக்கா? அப்புறம் அவன்ல மூடி வச்சு வைக்கணுமா இல்லை அப்படியேவா?

    ReplyDelete
  3. Casserole luks super good and delightfull

    ReplyDelete
  4. puthusu puthusa seireenga Mahi....Keep rocking...

    ReplyDelete
  5. அருமையாக இருக்கு.

    ReplyDelete
  6. பீன்ஸ் கேசரோல் அருமை,ஈசியும் கூட.சூடாக சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்.சிக்கன் சேர்த்து செய்திருக்கேன்,நினைவு படுத்தியமைக்கு நன்றி.மகி.

    ReplyDelete
  7. nalla irukku kelvi padata dish ... parkum pothe supera irukku knoor soupy noodles mathiri kudikava illai sapidava..

    ReplyDelete
  8. புது ரெசிபி வித்தியாசமா நல்லாயிருக்கு மகி...

    ReplyDelete
  9. lovely dish.... beans is not my favourite but after seeing this, I think I will give it a try...
    Reva

    ReplyDelete
  10. I never thought we can make this at home,nice detailed post! Looks yummy!Great effort mahi!

    ReplyDelete
  11. சிக்கனுடன் சாப்பிட அருமையாக இருக்கும்...தவறாமல் thanksgiving அன்று மட்டும் செய்துவிடுவேன்...மற்றபடி இவருக்கு ரொம்ப விருப்பம் இல்லை...அதனால் அதிகம் செய்வது இல்லை...

    ReplyDelete
  12. ரெசிப்பி வித்தியாசமா இருக்கு மஹி..பீன்ஸ் பொரியல் பிடிக்காது..இப்டி செய்து பார்க்கிறேன்...;)

    ReplyDelete
  13. looks very nice, thanks for posting Mahi

    ReplyDelete
  14. mahi. super recipe. இது க்டையில் அப்ப்டியே கிடைக்கிறதா.
    கண்டெஸ்ட் க்ரீம் ஆஃப் மஷ்ரூம் சூப்-1/2கப்.
    அடுத்த முறை செய்து பார்க்கலாம் என்று நினத்திருக்கேன் மஹி. என் குழந்தைகளுக்கு பேக் செய்த ரெசிப்பி என்றால் ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  15. விஜி,க்ரீம்-ஆஃப்-மஷ்ரூம் சூப் எல்லா கடைகளிலும் சூப் செக்ஷன்லே இருக்குங்க. உங்களுக்காக போட்டோ அட்டாச் பண்ணியிருக்கேன் பாருங்க!
    ஃப்ரென்ச் ப்ரைட் ஆனியன்ஸும் canned vegetable செக்ஷன்லயே இருக்கும். செய்துபாருங்க விஜி,சூப்பரா இருக்கும்!

    ReplyDelete
  16. ஸாதிகா அக்கா,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    சந்தனா,நீ கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் ரெசிப்பிலயே சேர்த்துட்டேன்னு நினைக்கிறேன்.அவன்ல சமைக்கையில் மூடி வைக்கவேணாம்.கண்டிப்பா செய்துபார்த்து சொல்லணும்!:)

    சிவா,தேங்க்ஸ் பார் த அட்டனன்ஸ்!

    ப்ரியா,தேங்க்ஸ்ங்க!!

    குறிஞ்சி,இந்த கேஸரோல் மேல ஒரு கண்ணா இருந்துது,அதான் செய்து பார்த்துட்டேன்.;)

    ஆயிஷா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ஆசியா அக்கா,இந்த ரெசிப்பி சூப்பர்-டூப்பர் ஹிட் ஆகிடுச்சு இங்கே.:)
    நீங்களும் சீக்கிரம் செய்யுங்க.

    சாரு,இது கொஞ்சம் திக்காதான் இருக்கும்,சூப் மாதிரி குடிக்க முடியாது.எனக்கும் புது ரெசிப்பிதான்.:)

    தேங்க்ஸ் மேனகா!

    ரேவா,நிஜமாவா சொல்றீங்க? பீன்ஸ் புடிக்காதா உங்களுக்கு? அவ்வ்வ்வ்வ்!எங்க வீட்டில பீன்ஸ் பேவரிட் வெஜிடபிள்!! இப்படி செய்து பாருங்க,சூப்பரா இருக்கும்!

    ராஜி,ரொம்ப சிம்பிளா செய்துடலாம்,டேஸ்ட்டும் நல்லா இருக்கு.செஞ்சு பாருங்க.

    புவனா,நான் fat-free சூப், fat-free பால் ஊத்தி செய்தேன்.போட்டோவப் பாத்தே ஹெல்த்தி டிஷ்னு கண்டுபிடிச்சுட்டீங்களே,க்ரேட்டுங்க!;) :)

    கீதா,உங்க ப்ளாக்ல தேங்ஸ்கிவிங்-ஃபீஸ்ட்ல கேஸரோல் பாத்த ஞாபகம் இருக்கு. என்னவருக்கு இது ரொம்ப பிடிச்சுப்போச்சு,அடிக்கடி செய்யணுமாம்!! :)

    பானு,செய்துபாருங்க..அப்புறம் பீன்ஸ் பிடிக்கலைன்னு சொல்ல மாட்டீங்க!

    வேணி,தேங்க்ஸ் வேணி!

    ReplyDelete
  17. ரெசிப்பி எல்லவற்றின் அழகைப்பார்த்ததுமே பசிக்குதே..விளக்கமும் நல்லா இருந்தது.

    ReplyDelete
  18. லஷ்மிமா,வீட்டுக்கு வாங்க,சுடச்சுட சாப்பிடலாம். :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails