Tuesday, February 22, 2011

பார்ட்டி

நண்பர்களையெல்லாம் பார்த்து பலநாட்களாகிட்டதால் இந்த வாரம் எங்க வீட்டில் ஒரு பார்ட்டி! இந்த ஊருக்கு வந்த புதிதில் 2 பேருடன் ஆரம்பித்த என்னவரின் ப்ராஜக்ட் இப்போது 20+ ஆட்களுடன் ஆரோக்கியமா இருக்கிறது. :) இந்தவாரம் லாங் வீகெண்டா இருந்ததால் ஞாயிறு மதியம் லன்ச்சுக்கு எல்லாருக்கும் இன்வைட் அனுப்பியாச்சு.

ஊரிலே வீட்டில் ஏதாவது விஷேஷம்னா சொந்தபந்தம் எல்லாரும் முதல்நாள் மாலையே வந்துருவாங்க. சமையலுக்கு சீனியர் குக் யாராவது இருப்பாங்க..நாம சும்மா, வெங்காயம் உரிப்பது-காய் அரிந்து கொடுப்பது-தேங்காய் துருவிக் கொடுப்பது- டீ-காபி போட்டு எல்லாருக்கும் கொடுப்பதுன்னு நைஸா நழுவிடலாம்! ;) ;) ஆனா இங்கே அப்படி இல்லையே!! எல்லா வேலையும் நாமேதான் செய்தாகவேண்டிய கட்டாயம். நான் அதிகபட்சம் சமைத்தது 12 பேருக்குதான்..இத்தனை பேருக்கு என்ன சமைக்கிறது-எப்படி சமைக்கிறதுன்னு கொஞ்சம் உதறலா இருந்தாலும்,சரி முயற்சித்துதான் பார்ப்போமேன்னு தில்லா களமிறங்கிட்டோம்.

மெனு-வை வெள்ளி மாலையே பைனலைஸ் செய்து, டிஸர்ட் வீட்டில் செய்யவேணாம்,கடையில் வாங்கிக்கலாம்னும் முடிவு செய்தாச்சு. அன்னிக்குன்னு பாத்து கிரிக்கெட் மேட்ச் வேற வந்து புண்ணியத்தை கட்டிகிச்சு, அதிகாலை 4 மணிவரைக்கும் என்னவர் டிவி முன்னால இருந்து நகரலை.(கர்ர்ர்ர்ர்!!!) சனிக்கிழமை காய்கறி-மளிகை எல்லாம் வாங்கிவரவே அரைநாள் முடிந்தது. வீடு வந்ததும் ஐயா சாப்பிட்டுவிட்டு நைஸா உள்ளே போய்த்தூங்கிட்டார்! :)

நான் மலாய்கோஃப்தா-விற்கு கோஃப்தாவை செய்துவைத்து..
ஊறவைத்த வடைப்பருப்பை அரைத்து வடையும் சுட்டு முடிக்கையில்...
என்னவர் மெதுவா எழுந்து வந்து 'டீ கிடைக்குமா?'ன்னாரு!! டீ குடித்ததும் பேட்டரி சார்ஜ் ஆகி, நான் வெங்காயம்-காய்கறிலாம் நறுக்கித்தரேன்னு சுறுசுறுப்பா சொன்னார்.
இதானே சான்ஸு?!!! நானும் மிஸ் பண்ணாம எல்லாத்தையும் எடுத்து குடுத்தேன். எவ்ளோ அழகா கட் பண்ணீருக்கார் பாருங்க! :) :)

அடுத்து சப்பாத்தி போட ஆரம்பித்தேன்..நண்பர்களில் 99% வடஇந்தியர்கள்..அதனால சப்பாத்தி கட்டாயம் செய்தாகணும். (முதல் ஐட்டமா காலியானதும் இதுதான்.)
மலாய் கோஃப்தா-கடலை கறி-தால்,கேஸரோல் இதெல்லாம் செய்யலாம்னு நினைத்திருந்தோம். கேஸரோலுக்கு பீன்ஸ் நறுக்கி வேகவைத்து, மலாய் கோஃப்தா க்ரேவிக்கு வதக்கி, ஊற வைத்திருந்த கொண்டைகடலை வேகவைத்து,துவரம் பருப்பு வேகவைத்து எல்லாவற்றையும் ஆறவைத்து, பத்திரமா மூடி எடுத்து ப்ரிட்ஜில் வைத்துட்டு தூங்கிட்டோம்.

ஞாயிறு காலை..முதல்ல வெறும் சாதம் ஒரு குக்கர் வைத்துட்டு,அடுத்து ஜீரா ரைஸ் வைத்தேன்..

சைட்-பை-சைட் பீன்ஸ் கேஸரோலுக்கும் எல்லாம் கலந்து அவன்-ல வைத்தாச்சு. இந்தமுறை சீரகம்-சில்லி ப்ளேக்ஸ் எல்லாம் போடல..ஆரஞ்ச் கலர் கேப்ஸிகம் ஒண்ணை பொடியாக நறுக்கி கலந்து பேக் செய்தேன்.
பருப்புக்கு தாளித்து கொதிக்கவிட்டு,கடலைகறியை செய்து, கோஃப்தா க்ரேவிக்கு வதக்கிவைத்திருந்ததை அரைத்து க்ரேவி வேலையை முடித்து மணியைப் பார்த்தா 11.20!

நேரம் நிறைய இருந்தது. இனிப்பு எதுவும் செய்யாம இருக்கோமேன்னு குறையா இருந்தது..எதுக்கு அதைமட்டும் விட்டு வைப்பானேன்,வடை சுட்டிருக்கோம்,மேட்ச்சிங்கா சேமியா பாயசம் வைப்போம்னு அதையும் செய்தாச்சு! :)

எல்லா உணவுவகைகளையும் அவன்-ல வைத்து சூடு செய்து ரெடியா வைத்தோம். நண்பர்கள் வந்து சேர கரெக்ட்டா லன்ச் டைம். டேபிள்ல எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணினோம். குட்டீஸ் உட்பட எல்லாருக்கும் சாப்பாடு பிடித்திருந்தது. குறிப்பா மலாய் கோஃப்தாவும் பீன்ஸ் கேஸரோலும் நிறைய பாராட்டுப் பெற்றன. :)

உங்க வசதிக்காக புல் மெனு, இதோ! :) :)

இடது வரிசை,மேலிருந்து கீழ்
1.பீன்ஸ் கேஸரோல்
2.மலாய் கோஃப்தா
3.சாலட் ப்ளேட்+ தயிர்

நடுவரிசை,மேலிருந்து கீழ்
1.ஜீரா ரைஸ்
2.கடலை கறி
3.தால்

வலதுவரிசை,மேலிருந்து கீழ்
1.ஒயிட் ரைஸ்
2.சப்பாத்தி(தீர்ந்துடுச்சுங்க,அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.:))
3.வடை
4.சேமியா பாயசம்
5.பக்லவா

சாப்பாட்டு மும்முரத்தில போட்டோ எடுக்க மறந்துட்டேன்..இந்தப்படம் எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் எடுத்தது.ஹிஹி!
மலாய் கோஃப்தா -ரெசிப்பிக்கு லிங்க் தமிழில் இங்கே, ஆங்கிலத்தில் இங்கே.
கேஸரோலுக்கு லிங்க் இங்கே.

50 பேர் -100 பேருக்கு சமைக்கும் ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கும்போது இவ்ளோ டீடெய்லா ஒரு போஸ்ட் தேவையான்னு நீங்க நினைக்கலாம்..இருந்தாலும் சின்னதா பார்ட்டி வைக்க நினைக்கும் ஆட்களுக்கு,சமையல்ல புதுசா நுழைந்திருக்கும் ஆட்களுக்கு உபயோகமா இருக்குமேன்னு தோணுச்சு. சமைக்க முடியுமான்னு இருந்த டவுட்டெல்லாம் காணாமப் போய், இப்போ இந்தமாதிரி குட்டி பார்ட்டீஸுக்கு குக்கிங் கான்ட்ராக்ட் எடுத்துடலாமான்னு யோசிச்சுட்டிருக்கேன். ஆர்டர் தர யாராவது தைரியசாலிகள் இருக்கீங்களா? :) ;)

37 comments:

  1. ஹே நாந்தான் பிர்ச்டு

    ReplyDelete
  2. அடேங்கப்பா!! அசத்திட்டீங்க.. அதுவும் மிகவும் குறைந்த காலத்தில்.. சனி அரை நாள் ஞாயிறு அரை நாள்.. அதுக்குள்ளே இவ்வளவு.. நானெல்லாம் ஒரு வேளை சோத்துக்கே மூணு மணி நேரம் மயக்கம் போடாத கொறையா வேர்த்து விருவிருக்கற ஆளு :)

    எங்க வீட்டுப்பக்கம் ஏதாவது நடந்தா சொல்றேன்.. காண்ட்ராக்ட் ல பயணச் செலவு எல்லாம் கொடுக்க முடியாது :))

    ReplyDelete
  3. மகிமா
    ரொம்ப பொறுமையா எவளோ பேருக்கு சமைத்து
    சாப்பாடு போட்டு இருக்கீங்க
    வாழ்க வளமுடன்
    உங்கள் பொறுமைக்கும்
    ருசியானா சப்பாத்திக்கும்
    கிரேட் சல்யுட்

    ReplyDelete
  4. குறிப்பா மலாய் கோஃப்தாவும் பீன்ஸ் கேஸரோலும் நிறைய பாராட்டுப் பெற்றன. ://
    இல்லை அதை செய்தவருக்கு மகிம்ம அனைத்து பாரட்டுக்களும் செல்லும்

    ReplyDelete
  5. மிச்சம் மீதி எதாவது இருந்த சொல்லுங்க...
    அடுத்த பார்ட்டிக்கு முன்னத்யே சொல்லிடுங்க
    டிக்கெட் சிலவு மட்டும் ஏற்றுக்கொள்ள படும்

    ReplyDelete
  6. அருமையான பார்ட்டி.படிக்கவும் படங்களை பார்க்கவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  7. ஆஹா எல்லாம் வெஜ் அயிட்டம்,இனிமே நாங்களும் உங்களைப் பார்த்தாவது வெஜ் பார்ட்டி கொடுப்போம்ல! அசத்தல்....
    வரட்டும் எல்லாருக்கும் ஒரு நாள் இருக்கு...

    ReplyDelete
  8. Great job in cooking all the food at home,superb! Great job Mahi!

    ReplyDelete
  9. வாவ் சூப்பர் பார்டி, ம்ம் பரவாயில்லை யே காலையில் இருந்து சமைக்க ஆரம்பிச்சிங்கலா.

    சமையல் செய்ய ஆரம்பித்த சமையம் தான் 10 வரஙக் நாலே உதரலா இருக்கும். அப்படி போக இப்ப கூலாகிவிட்டது,

    ReplyDelete
  10. அசத்தலான பார்டி என் பெரிய பையனுக்கு அந்த சப்பாத்தியும் கடல கறியும்,
    சின்னவனுக்கு பாயாசமும் இருந்தா போது ம்ம் ஒரு வெட்டு தான்

    மலாய் கொஃப்தாஅடுக்கி வைத்திருப்பது என்க்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    ReplyDelete
  11. //ஆர்டர் தர யாராவது தைரியசாலிகள் இருக்கீங்களா?//
    yup ;))))

    ReplyDelete
  12. iththana items panni asaththi irukkeenga.kalakkareenga ponga.

    ReplyDelete
  13. hai mahi asathitinga engaluku ellam eppo party thara poringa

    ReplyDelete
  14. மிகவும் அருமையாக இருக்கு மகி...நானும் அப்படி தான் இருந்தேன்...இப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டாகிவிட்டது..

    பாருங்க...இன்னும் கொஞ்ச நாளில் 50 பேருக்கு சமைக்க கூடிய அளவு வந்துவிடுவிங்க...கலக்கல் போஸ்ட்..

    டிஸ் அனைத்துமே அருமை..

    நல்லா எஞ்சாய் பன்னீங்க போல...சரி...உங்க போட்ட்ஸ் எல்லாம் அப்லோட் செய்யலாம் இல்ல...நாங்களும் உங்களை பார்ப்போம் இல்ல்...

    ReplyDelete
  15. நல்லா இருக்கு எல்லாமே.
    அதென்ன நியூஸ் பேப்பர் போல மேலிருந்து கீழ், இடமிருந்து வலம், வலமிருந்து இடம் போல போட்டு என்னை குழப்பி விட்டீங்க.
    எனக்கு 4, 5 பேருக்கு சமையல் செய்யவே தாவு தீர்ந்து விடும்.

    ReplyDelete
  16. Well done, Mahi. The most I have cooked for is 12 people, hehe...

    ReplyDelete
  17. ஆஹா...,மஹி அருமையான விருந்து போல...எல்லோரையும் உங்கள் சமையலால் அசத்திட்டீங்கன்னு சொல்லுங்க...
    சொல்றது என்ன பார்க்கும்போதே தெரியுதே... நல்ல உணவு வகைகளை தேர்ந்தெடுத்து செய்து இருக்கீங்க...
    சமைக்கிறதை விட அதை நீட்டா கொண்டு வந்து வைத்து பரிமாறுவது ரொம்ப பெரிய விஷயமாச்சே...அதையும் அழகாக செய்திருக்கீங்க...
    எனதுவெஜ் தோழிகளுக்கு அடுத்த முறை நான் செய்ய புதிய ரெஸிபிஸ் கிடைச்சாச்சு... ரொம்ப நன்றி மஹி...
    நிச்சயம் புதிதாய் வெளிநாட்டில் வந்து விழிபிதுங்கி நிற்க்கும் தோழிகளுக்கு உங்கள் பார்ட்டி ஸ்பெஷல் பதிவு உபயோகமாக இருக்கும்.
    மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  18. மெனு எல்லாம் அசத்தலா இருக்கு மகி..இன்னும் கொஞ்ச நாளில் 100பேருக்கு சமைக்க ஆரம்பிச்சுடுவீங்க..

    ReplyDelete
  19. ME ENCANTA TU BLOG,NO HAY TRADUCTOR,PERO ME IMAGINO LOS INGREDIENTES ,ME ENCANTA LA ESCRITURA Y QUIERO SER TU SEGUIDORA ,SOY CHILENA Y QUIERO APRENDER RECETAS Y TU ESCRITURA,ABRAZOS.

    ReplyDelete
  20. QUIERO DARTE LA SUERTE YA TIENES 100 SEGUIDORES,ABRAZOS Y FELICITACIONES.

    ReplyDelete
  21. மஹி! உங்க வெஜ் பேஸ்ரி ரோல் மற்றும் கோக்கனட் குக்கீஸ் ரொம்ப பிரபலப்படுத்திட்டேன்... மறக்காம லிங்க்கும் கொடுத்துருக்கேன் எல்லாருக்கும்... ரொம்ப அருமையா லிஸ்ட் போட்டு சமைச்சு.. கலக்கல்.. நான் எப்பவுமே கடைசி நிமிஷம் வரை எதாவது செய்வேன். இப்போ பழகிடுச்சு. உங்க லிஸ்ட் அடுத்த பார்டிக்கு :))

    ReplyDelete
  22. வாவ்... கலக்கிட்டீங்க மஹி... மெனு சூப்பர்.... உங்க கணவரோட உதவியும் பாராட்டப்படக்கூடியது... இப்டி சின்னதா உதவி செய்தால் நமக்கும் உற்சாகமாயிருக்கும்... தைரியமா கான்ட்ராக்ட் எடுங்க... நான் கியாரண்டி தர்றேன்...;))))..

    ReplyDelete
  23. இருந்தாலும் சின்னதா பார்ட்டி வைக்க நினைக்கும் ஆட்களுக்கு,சமையல்ல புதுசா நுழைந்திருக்கும் ஆட்களுக்கு உபயோகமா இருக்குமேன்னு தோணுச்சு. சமைக்க முடியுமான்னு

    நிஜம்தான் என்னைபோன்றவர்களுக்கு உதவியாகதான் இருக்கு.

    ReplyDelete
  24. awesome food!!all the items are so tempting..

    ReplyDelete
  25. @ ஜெயஸ்ரீ,தேங்க்ஸ்ங்க!

    @சிவா,கொஞ்சம் முன்னால வந்திருந்தா பர்ஸ்ட்டு..இப்ப 2ன்ட்!! :)

    @சந்தனா,முதல்முறையா செய்யும்போது அப்படிதான்..அப்பறம் பழகிடுமாமே! எங்களையெல்லாம் பார்ட்டிக்கு கூப்ட்டா எல்லாம் பழகிடும். ;)
    /காண்ட்ராக்ட் ல பயணச் செலவு எல்லாம் கொடுக்க முடியாது :))/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!

    @சிவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா!

    @சுகந்திக்கா,ப்ளானெல்லாம் நல்லபடியா முடிந்தது,கடவுள் புண்ணியத்துல :)

    @ஸாதிகாக்கா,தேங்க்ஸ் ஸாதிகாக்கா!

    @ஆசியாக்கா,/ஆஹா எல்லாம் வெஜ் அயிட்டம்/ நீங்க சொல்லறவரை இது எனக்கு ஸ்ட்ரைக் ஆகவே இல்ல! வந்தவர்கள்ல பெரும்பாலும் சைவம்.அதனால NV பத்தி நினைக்கவே இல்ல.
    /வரட்டும் எல்லாருக்கும் ஒரு நாள் இருக்கு.../:) :)

    @ராஜி,தேங்க்ஸ் ராஜி! கடையில ஆர்டர் பண்ணலாம்னு என்னவர் கணக்கு(மட்டும்) போட்டுப்பாத்தார்,நான் வேணாம்னுட்டேன்.:)

    ReplyDelete
  26. @ ஜலீலாக்கா,உங்க பசங்களுக்கு பிடித்த டிஷ் எல்லாம் இருக்கா மெனுல? வீட்டுக்கு வாங்க எல்லாரும்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலாக்கா!

    @காயத்ரி,தேங்க்ஸ்ங்க!

    @பாலா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    @இமா,உங்க தைரியத்தை பாராட்டியே ஆகணும்!:) நன்றி!

    @ப்ரியா,தேங்க்ஸ் ப்ரியா!

    @சாரு,அடுத்த ப்ளைட்டைப் பிடிச்சு வாங்க,உடனே பார்ட்டிதான்! ;)


    @கீதா,முதல்முறை என்பதால்தான் இப்படி ப்ளாக்ல போஸ்ட் பண்ணிருக்கேன்,இனி பழகிடும்னு நினைக்கிறேன். :) மெய்ல் ஐடி குடுங்க,போட்டோ அனுப்பறேன்.;) ;)

    @வானதி,/என்னை குழப்பி விட்டீங்க./ஹிஹி!குழம்பிட்டீங்களா? அதுதானே வேணும்?!! திருப்பி அங்கே சொல்லிருக்க ஆர்டர்லயே படிங்கோ,புரியும்.:)

    @மஹேஸ் அக்கா,தேங்க்ஸ்!

    @அப்ஸரா,அடுத்த பார்ட்டிக்கு சைவம் சமைத்து அசத்திடுங்க! தேங்க்ஸ் அப்ஸரா!

    @மேனகா,இப்படி வயித்துல புளியக் கரைக்காதீங்கப்பா! நானே ஏதோ தட்டுதடுமாறிட்டிருக்கேன். :) தேங்க்ஸ்!

    ReplyDelete
  27. Rosita,I can't understand your language.I assume that you are appreciating me! :)

    Thanks for stopping by and following me as 100th follower! Thanks again!

    ReplyDelete
  28. @இலா,பேஸ்ட்ரி வீல்ஸும்,கோக்கொனட் பிஸ்கட்டும் உங்க பேவரிட் ஆகிடுச்சா? :)
    ப்ரெண்ட்ஸ்கிட்டவும் லிங்க் குடுத்ததுக்கு தேங்க்ஸ்ங்க! ரொம்ப சந்தோஷம் உங்க கமெண்ட்டைப் பார்த்து! :) :)

    @பானு,அவரோட சப்போர்ட் இல்லாம இதெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாதுங்க! என்மேல நீங்க வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி! :)

    @மஹா,இந்தப்பதிவு உங்களுக்கு யூஸ்புல்லா இருப்பது மகிழ்ச்சி! தேங்க்ஸ்ங்க!

    @ஆர்த்தி,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  29. மகி...
    ஸ்பானிஷ்ல
    //ME ENCANTA TU BLOG,NO HAY TRADUCTOR,PERO ME IMAGINO LOS INGREDIENTES ,ME ENCANTA LA ESCRITURA Y QUIERO SER TU SEGUIDORA ,SOY CHILENA Y QUIERO APRENDER RECETAS Y TU ESCRITURA,ABRAZOS.//அப்பிடின்னா...
    //I LOVE YOUR BLOG, no interpreters, but I imagine INGREDIENTS, I LOVE THE WRITING AND WANT TO BE YOUR FOLLOWER, CHILE AND I AM LEARNING RECIPES AND YOUR WRITING, HUGS.// என்று அர்த்தமாம். கலக்குறீங்க. @}->--

    ReplyDelete
  30. //QUIERO DARTE LA SUERTE YA TIENES 100 SEGUIDORES,ABRAZOS Y FELICITACIONES.// அப்பிடின்னா... //LUCK AND I WANT TO GIVE YOU 100 FANS, HUGS AND CONGRATULATIONS.// என்று அர்த்தமாம்.

    ReplyDelete
  31. Summa kalaketeenga pola mahi, valththukkal....

    ReplyDelete
  32. மஹி நிறையவே செய்து அசத்தி இருக்கிராய். என்னவோ தெரியலே.என் கமென்ட் மட்டும் ஸரியாகப் போய் சேருவதில்லை. எனக்கு ஜெனிவாவை
    நினைவுபடுத்தியது. அழகாகப் பண்ணுவதுடன் நல்ல ப்ரஸென்டேஷனும்
    கூட. வாழ்த்துகள்

    ReplyDelete
  33. அடேங்கப்பா! எத்தனை பேருக்கு சமையல் பண்ணி இருக்கேள்! இனிமே 'கலா மாஸ்டர்' மாதிரி 'மஹி மாஸ்டர்!'னு பேரை மாத்திட வேண்டியது தான்..:)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails