வெங்காய வடகம்
கோடைக்கொண்டாட்டத்தில் கருவடாம்,தக்காளி வடாமுக்கு அடுத்தபடியாக வெங்காய வடாம்! இரண்டு முறைகளில் செய்தேன்,இரண்டுமே சூப்பராக இருக்கிறது. முதல் முறை(1ஸ்ட் டைம் இல்லைங்க,ஹிஹி) நம்ம ஸாதிகா அக்கா ரெசிப்பி..அதிராக்கா கொடுத்திருந்த போட்டோ டுட்டோரியலும் யூஸ்ஃபுல்லா இருந்தது. இரண்டாவது முறை ஜவ்வரிசியில் செய்தேன்..தக்காளி வடாம் செய்முறை போலவேதான். இந்தமுறை எச்சரிக்கையா இந்த முறை எலிமிச்சம்பழம், ச்சீ,ச்சீ எலுமிச்சம்பழமெல்லாம் போடாம செய்தேன்..சூப்பரா வந்தது.நான் போட்ட வடாமை காக்காய் கிட்ட இருந்து காப்பாத்தினேனோ இல்லையோ, வீட்டில் ஒருவரிடமிர்ந்து கஷ்டப்பட்டு காப்பாத்தினேன்!! [உடனே கற்பனைக் குதிரைய நாப்பது மைல் வேகத்தில் பறக்கவிடாதீங்க!! கர்ர்ர்ர்...] நடந்தது என்னன்னா, ஒரு வீகெண்டில் வடாம் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது..வெயிலின் கொடுமையப் பொறுக்க முடியாத என்னவர் [வீட்டுக்குள்ளயே இருக்கலாம்ல? ஹாயா patio-ல உட்கார்ந்து (அனல்)காத்து வாங்கறாராம்!] செடிக்கு தண்ணீர் ஊற்றும் hose-l மிஸ்ட் ஆப்ஷனில் நாஸிலை செட் பண்ணி ஒரு பூந்தொட்டி மேலே நிக்கவைச்சுட்டார்.காய்ந்து கொண்டிருந்த வடாமும் சேர்ந்து நனைஞ்சு கூலாகிட்டது!!
ஒரு அப்பாவி கஷ்டப்பட்டு வடகம் போட்டு வைச்சா எப்படி எப்படியெல்லாம் ஆபத்து வருது பாருங்க?!! நானும் சாயந்திரம் வரை கவனிக்கலை..அப்புறமா வெளியே வந்து பார்த்தா...அவ்வ்வ்வ்வ்வ்! மறுக்கா எல்லாத்தையும் எடுத்து வேற ப்ளேட்ல வச்சு காயவைச்சு எடுத்தேன். சரி, ரெசிப்பியப் பாக்கப் போவோமா? சீட் பெல்ட்டெல்லாம் தேவையில்ல, ஸ்மூத் ride தான், தைரியமாப் படியுங்க! :)
வெங்காய வடகம்-செய்முறை 1
தேவையான பொருட்கள்
சாதம்-1கப்
சின்ன வெங்காயம்-200கிராம்
வரமிளகாய்-10 (காரத்துக்கேற்ப)
மிளகு,சீரகம்,சோம்பு -தலா 1 டீஸ்பூன்
உப்பு
செய்முறை
சாதத்தை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
மிளகாய்-சோம்பு-சீரகம்-மிளகு இவற்றை பொடித்துக்கொள்ளவும்.
சின்னவெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும்.
அரைத்த சாதம், நறுக்கிய வெங்காயம், பொடித்த பொடி,தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
வடாம் இடும் தட்டில் ப்ளாஸ்டிக் ஷீட்டை விரித்து,தண்ணீரால் துடைத்துவிட்டு சிறிய வடகங்களாக கிள்ளி வைக்கவும். (உங்க ஆசைதீரக் கிள்ளுங்க,வடகத்துக்கு வலிக்காதாம்! ஹிஹி)
வெயிலில் ஒரு நாள் காயவிட்டு, மறுநாள் வடகங்களைத் திருப்பி விட்டு நன்றாக காயவிட்டு எடுத்துவைக்கவும்.
குறிப்பு
- நான் சுடு சோற்றில் வடாம் போடலை. தண்ணீர் ஊற்றிவைத்த பழைய சாதத்தில் நீரை சுத்தமாகப் பிழிந்துவிட்டு அரைத்திருக்கிறேன்.
- இன்னொரு விஷயத்தையும் நானே சொல்லிடறேன், இல்லன்னாக் கண்டிப்பா ஆராச்சும் வந்து ஏன் வெங்காயத்தை தோலோட போட்டிருக்கீங்கம்பீங்க!! வெங்காயத்தை 100% உரிக்கலை,கொஞ்சம் சருகோட போட்டா ருசி நல்லா இருக்கும்,போட்டுப் பாருங்க!:)
- இங்கே க்ளிக் பண்ணினா ஸாதிகாக்கா ரெசிப்பியைப் பார்த்து பூஸார் போட்டிருக்கும் வடகத்தைப் பார்க்கலாம். ;) இங்கே க்ளிக் பண்ணினா ஸாதிகாக்காவின் செய்முறை இருக்கிறது. இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
~~
வெங்காயவடகம்- செய்முறை 2ஜவ்வரிசி-1/2கப்
தண்ணீர்-4கப்
சின்ன வெங்காயம்-250கிராம்
பச்சைமிளகாய்- 6 (காரத்துக்கேற்ப)
food colour -4 துளிகள் (விரும்பினால்)
உப்பு
செய்முறை
ஜவ்வரிசியைக் களைந்து 8 மணி நேரங்கள் ஊறவிடவும்.
வெங்காயத்தை உரித்து, பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துவைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். கொதி வந்ததும் ஊறிய ஜவ்வரிசியின் நீரை வடித்துவிட்டு சேர்க்கவும்.
ஜவ்வரிசி வேகும்வரை அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.(10 -12 நிமிடங்கள்) வெந்ததும் வெங்காயமிளகாய் அரைத்ததை சேர்த்து கலக்கவும்.
வடாம் கலவையை அடுப்பிலிருந்து இறக்கி அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
நான்கு துளிகள் மஞ்சள் நிற food colour-ஐச் சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும்.
கலவை கொஞ்சம் சூடு ஆறியதும், தண்ணீரால் துடைத்த ப்ளாஸ்டிக் ஷீட்டுகளில் சிறுவட்டங்களாக ஊற்றி காயவிடவும்.
ஜவ்வரிசி வடாம் ஒரு நாள் காய்ந்ததும் ப்ளாஸ்டிக் ஷீட்டில் இருந்து ஈஸியாக உரிக்க வரும். உரித்து திருப்பிவிட்டு நன்றாக காயவிடவும். படத்தில் தட்டில் இருப்பது செய்முறை-1ல் சொல்லியிருக்கும் வடாம்.
காய்ந்த வடகங்களை காற்றுப்புகாத டப்பாக்களில் எடுத்துவைக்கவும்.
வெங்காய வடகத்தை எண்ணெய் மிதமான சூட்டில் காயவைத்து கவனமாகப் பொரிக்கவேண்டும். சாதத்தில் செய்த வடாம் சீக்கிரம் சிவந்துவிடும், ஜவ்வரிசி வடாமில் எண்னெய் தெறிக்கும் அபாயம் உண்டு. [இதெல்லாம் எனக்கு நடந்துதான்னு உங்களுக்கு டவுட்டு வந்திருக்கும், ஆனா அப்படில்லாம் நடக்கலையே! :) இருந்தாலும் முன்னோர்கள் (ஸா... அக்கா, அ... அக்கா, கா... அம்மா) எல்லாரும் சொல்லிருந்தாங்க,அதனால் நானும் சொல்லி வைக்கிறேன்!
அவ்வளோதாங்க நான் வடாம் போட்ட கதை..சொல்ல மறந்துட்டேனே, வெங்காய வடகம் எலுமிச்சை சாதத்துடன் சாப்பிட்டோம். வழக்கம் போல என்னவர் வெங்காய பகோடா மாதிரி இருக்குதுன்னு ஒரு குபீர்(!) கருத்து சொன்னார். :) அதனால் அடுத்தநாள் டீயுடன் சாப்பிடலாம்னு ட்ரை பண்ணினேன் சூப்பரா இருக்குது!! :P :P
வடிவாக் கொண்டாடுங்கோ வாறன்...
ReplyDeleteபோஸ்ட்டுக்கு டைட்டில் மட்டும் டைப் பண்ணிட்டு, கை தவறி என்டர்-பட்டனைத் தட்டிருக்கேன்,அவ்வ்வ்வ்வ்! போஸ்ட் பப்ளிஷ் ஆகிடுச்சு!!
ReplyDelete/athira said... வடிவாக் கொண்டாடுங்கோ வாறன்.../அப்படீன்னு சொல்லிட்டுப் போன அதிராவை இன்னும் காணோமே? கொண்டாட்டம்னதும் பியூட்டி பார்லர் போயி வடிவா மேக்-அப் பண்ணிட்டு ஷ்டைலா வருவாங்களோ?! ;)
loved ur post as usual.... very nice vadam recipe..
ReplyDeleteவந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)), பதிவே இல்லாமல் எப்பூடியாம் பின்னூட்டம் போடுறது அவ்வ்வ்வ்வ்வ்:)).
ReplyDelete//இங்கே க்ளிக் பண்ணினா பூஸார் போட்டிருக்கும் வடகத்தைப் பார்க்கலாம். ;) இங்கே க்ளிக் பண்ணினா ஸாதிகாக்காவின் செய்முறை இருக்கிறது.//
ஹையோ....ஹையோ... ஸாதிகா அக்காவின் குறிப்பைப் பார்த்துத்தான் நான் படத்தோடு செய்தேன்....
அதிராக்கும் வடகம் செய்யத் தெரியும் என போட்டமைக்கு மியாவ் மியாவ் மகி...
எனக்கு வாழைப்பு , வேப்பம்பூ வடகம்தான் ரொம்பப் புய்க்கும்:)).
ReplyDeleteஒரு டவுட்:... வடாம் என்றும் சொல்றீங்க, வடகம் எனவும் சொல்றீங்க எது சரி?, நம் நாட்டில் “வடகம்” ...என்றுதான் சொல்வோம்.... ஆரையும் போக விடமாட்டோம் கம் ..கம்... என்றுதான் சொல்வோம்:))))).
/வடாம் என்றும் சொல்றீங்க, வடகம் எனவும் சொல்றீங்க எது சரி?/ அதிரா, பிராமணர்கள் வடாம்னு சொல்லுவாங்க. காமாட்சிம்மா ப்ளாக்ல ரெஃபர் பண்ணினதின் தாக்கம்தான் அங்கங்க எட்டிப்பார்க்கும் வடாம்!!மத்தபடி எங்க வீட்டுப்பக்கமும் வடகம்னுதான் சொல்லுவோம்.
ReplyDelete/ஹையோ....ஹையோ... ஸாதிகா அக்காவின் குறிப்பைப் பார்த்துத்தான் நான் படத்தோடு செய்தேன்..../ஹைய்யய்யோ..எனக்கும் டமில் படிக்கத்தெரியுமே! ;) ;)
ரெசிப்பில முதல்வரிலயே இந்தவிஷயம் தெளிவா இருக்குதே! :) ரெண்டு பேரையும் போடோணும்னு 2 லிங்காப் போட்டிருக்கேன் அதிரா!
வாயப்பூ,வேப்பம்பூ வடகமெல்லாம் நான் சாப்பிட்டதே இல்ல. நீங்க அதையெல்லாம் சாப்பிட்டிருக்கீங்க,குடுத்துவைச்சவுங்கதான்! :)
/ஆரையும் போக விடமாட்டோம் கம் ..கம்... என்றுதான் சொல்வோம்:)))))./அடடே,என்ன ஒரு டைமிங்கான விருந்தோம்பல்?! இதோ,பெட்டியக் கட்ட ஆரம்பிச்சிட்டேன்,வா.பூ- வே.பூ வடகம் ரெடியா வையுங்க! :)
ReplyDeleteபின்குறிப்பில நீங்க சொன்னமாதிரியே "ஸாதிகாக்கா குறிப்பைப் பார்த்து பூஸார் செய்த" ன்னு மாத்திட்டேன்,இப்ப ஓக்கேவா?
~~
சித்ரா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ஐ..என் ரெஸிப்பி..
ReplyDeleteநானே மறந்து போன வடகம்.இப்ப பிளாக்கில் போட்டுக்காட்டி ஆசையை கிளப்பிட்டீங்க.ஆனால் இப்ப இங்கே இருக்க்ற கிளைமேட்டுக்கு வடாம் போட முடியாதே?அதனால் ஒரு போத்தல் வடாம் பார்சல் ப்ளீஸ்
ReplyDeleteகலர் ஃபுல் ஜவ்வரிஸி வடாம் சூப்பர்.
ReplyDeleteWow perfect vadam,loved it...
ReplyDelete//இன்னொரு விஷயத்தையும் நானே சொல்லிடறேன், இல்லன்னாக் கண்டிப்பா ஆராச்சும் வந்து ஏன் வெங்காயத்தை தோலோட போட்டிருக்கீங்கம்பீங்க!! //
ReplyDeleteநா அதெல்லாம் கேட்க மாட்டேன் ..ஏன் தெரியுமா...!! நீங்க வரமிளகாயையும் தோலோடதான் போட்டிருக்கீங்க ஹி..ஹி... :-))
//சின்ன வெங்காயம்-250கிராம் //
ReplyDeleteபெரிய வெங்காயம் படத்துல ஒரு கிலோ இருக்கே..
//பச்சைமிளகாய்-5(காரத்துக்கேற்ப)//
இதுலையும் 6 மிளகாய் இருக்கே
//[இதெல்லாம் எனக்கு நடந்துதான்னு உங்களுக்கு டவுட்டு வந்திருக்கும், ஆனா அப்படில்லாம் நடக்கலையே! :) இருந்தாலும் முன்னோர்கள் (ஸா... அக்கா, அ... அக்கா, கா... அம்மா) எல்லாரும் சொல்லிருந்தாங்க,அதனால் நானும் சொல்லி வைக்கிறேன்!//
ReplyDeleteஒரு வேளை மாம்ஸை விட்டு பொறிக்க வச்சீங்களோ அதான் சரியா தெரியல ஹி..ஹி... :-)))
//வழக்கம் போல என்னவர் வெங்காய பகோடா மாதிரி இருக்குதுன்னு ஒரு குபீர்(!) கருத்து சொன்னார். :) அதனால் அடுத்தநாள் டீயுடன் சாப்பிடலாம்னு ட்ரை பண்ணினேன் சூப்பரா இருக்குது!! :P :P //
ReplyDeleteநல்ல வேளை டிஃபன் மாதிரி இருக்குன்னு சொல்லாம விட்டார்.. இல்லாட்டி அதையே டிஃபன் பார்ஸல் போட்டு இருப்பீங்க அவ்வ்வ்வ் :-))
You take effort to make vadams yourself!! Great :) love eating vadams with dinner menu..if we have rice..
ReplyDeletegreat effort , i love onion vadam very much.
ReplyDeleteமகி, இப்படி வடகமா போட்டு, என்ன காக்காவா மாறி ஒங்க வீடு மொட்ட மாடிய ஒரு வட்டம் போட்டு, வடாம் தின்னும் ஆசய தூண்டறீங்களே! I am drooling!
ReplyDeleteகொஞ்சம் லேட்
ReplyDeleteஇருந்தாலும் வடை
எனக்குதான் ..:)
எல்லா
வடகமும் பார்சல் பொரித்து பார்சல்
நன்கு பார்சல் பண்ணி அனுப்பவும்
20....
ReplyDelete//போஸ்ட்டுக்கு டைட்டில் மட்டும் டைப் பண்ணிட்டு, கை தவறி என்டர்-பட்டனைத் தட்டிருக்கேன்,அவ்வ்வ்வ்வ்! போஸ்ட் பப்ளிஷ் ஆகிடுச்சு!!// அதானே பார்த்தேன் நேத்திக்கு நைட் வெறும் டைட்டில் மட்டும் இருக்கே ன்னு டவுட்டு கேக்கலாமுன்னு டைப் பண்ண போனேன் போன வியாழன் கும்ம்மி பிளாஷ் பாக் சுழன்று சுழன்று வந்திச்சு. ஐயோ யம்மா ன்னு போய் குறட்டை விட்டு தூ...ங்கிட்டேன் :)) இப்போ லஞ்ச் டைம் இல டைப் பிக்கிட்டு இருக்கேன்.
ReplyDelete//அதிராக்கும் வடகம் செய்யத் தெரியும் என போட்டமைக்கு மியாவ் மியாவ் மகி... // இப்போ பூசெல்லாம் வடாம் போட ஆரம்பிச்சிட்டாங்க? கலி முத்திடுச்சு :))
ReplyDelete//ஆரையும் போக விடமாட்டோம் கம் ..கம்... என்றுதான் சொல்வோம்:)))))./அடடே,என்ன ஒரு டைமிங்கான விருந்தோம்பல்?! இதோ,பெட்டியக் கட்ட ஆரம்பிச்சிட்டேன்,வா.பூ- வே.பூ வடகம் ரெடியா வையுங்க! :)
ReplyDeleteஅப்புடியே எங்கூட்டு பக்கமும் வா...ங்க ப்ரௌனி செஞ்சு தரேன்!!
//athira said... வடிவாக் கொண்டாடுங்கோ வாறன்.../அப்படீன்னு சொல்லிட்டுப் போன அதிராவை இன்னும் காணோமே? கொண்டாட்டம்னதும் பியூட்டி பார்லர் போயி வடிவா மேக்-அப் பண்ணிட்டு ஷ்டைலா வருவாங்களோ?! ;) // இப்போ பூசுக்கேல்லாம் பியுட்டி பார்லர் தொறந்தாச்சா ??
ReplyDelete//நல்ல வேளை டிஃபன் மாதிரி இருக்குன்னு சொல்லாம விட்டார்.. இல்லாட்டி அதையே டிஃபன் பார்ஸல் போட்டு இருப்பீங்க அவ்வ்வ்வ் :-))// ஆமா ஜெய் அண்ணா இது stuffed இட்லி அப்புறம் ப்ரெட் ரோல் ஆனா கத ஆகி இருக்கும் ஹீ ஹீ...
ReplyDeleteஓகே 25 நான் போயி வேலைய கொஞ்சம் பார்க்கிறேன்
//En Samaiyal said...
ReplyDelete//அதிராக்கும் வடகம் செய்யத் தெரியும் என போட்டமைக்கு மியாவ் மியாவ் மகி... // இப்போ பூசெல்லாம் வடாம் போட ஆரம்பிச்சிட்டாங்க? கலி முத்திடுச்சு :)//
karrrrrrrrrrrrrrrrrrr:))))))))))))))). தேம்ஸ்ல தள்ளிடுவேன் எல்லோரையும் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்தை:))))).
மகி, நேற்று பார்க்கும் போது வேறு ஏதோ பதிவு ( தையல் வேலை ) இருந்திச்சு. கமன்ட் அப்பாலிக்கா போடலாம் என்று நினைச்சேன். ஆனால் இப்ப வடகம் பற்றிய பதிவு. நேக்கு தலை சுத்துது.
ReplyDeleteஎனிவே வடகம் சூப்பர். பூஸார் வடகம் போட்டாரா? எங்கை தேம்ஸிலா???
எனக்கும் வடகம் போட ஆசையா இருக்கு. வேகாத வெய்யிலில் வடகத்திற்கு காவல் இருக்க ஆட்கள் தேவை. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை.
கமன்ட் அப்பாலிக்கா போடலாம் என்று நினைச்சேன். ஆனால் இப்ப வடகம் பற்றிய பதிவு. நேக்கு தலை சுத்துது.// நாளைக்கு வாங்களேன் ரிவேர்சுல சுத்தும் ஏன்னா அதுக்குள்ளே வேற பதிவு போட்டு இருப்பாங்க.
ReplyDelete//எனிவே வடகம் சூப்பர். பூஸார் வடகம் போட்டாரா? எங்கை தேம்ஸிலா??? // எல்லா வடாமும் தேம்சுலையே வித்துட்டாங்களாம். பார்த்து வான்ஸ் பூஸ் ஏதோ கடுப்புல இருக்காங்க போல இருக்கு. இப்போதான் தேம்சுல தள்ளி விடுறேன்னு மிரட்டல் எல்லாம் விட்டு இருக்காங்க எனக்கு:)
எனக்கும் வடகம் போட ஆசையா இருக்கு. வேகாத வெய்யிலில் வடகத்திற்கு காவல் இருக்க ஆட்கள் தேவை.// நெறைய பேரு வருவாங்க கேக்கல உங்களுக்கு me the firstu all vadams parcel please ன்னு ஒருத்தர் வேகமா ஓடி வர்றது? சி...
://தேம்ஸ்ல தள்ளிடுவேன் எல்லோரையும் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்தை:))))).// மகி உங்கள தான் பூஸ் இப்படி மெரட்டுறாங்க. நல்ல காமெடியா ஒரு பதிவு சீக்கிரம் போடலேன்னா அப்புறம் நானும் அவங்களுக்கு ஹெல்ப் க்கு போக வேண்டியதுதான் :))
ReplyDeleteமீ 30
ReplyDelete//ஒரு வேளை மாம்ஸை விட்டு பொறிக்க வச்சீங்களோ அதான் சரியா தெரியல ஹி..ஹி... :-)))// இது தெரியாதா உங்களுக்கு எல்லா சமையலுமே மாம்ஸ் தான் அம்முனி ஒன்லி ட்ய்பிங் அண்ட் போஸ்டிங்... ஹீ மீ கோஇங் நொவ் கமிங் லேட்டர் ஓகே
நெறைய பேரு வருவாங்க கேக்கல உங்களுக்கு me the firstu all vadams parcel please ன்னு ஒருத்தர் வேகமா ஓடி வர்றது? சி...
ReplyDelete///சிவ சிவா.... அவர் எப்பவும் பதிவு படிக்காம கமன்ட் போடுற ஆளு.
///சிவ சிவா.... அவர் எப்பவும் பதிவு படிக்காம கமன்ட் போடுற ஆளு.
ReplyDelete//thank you for your complement
:)
நன்றாக இருக்கம்மா வடாம்கள். அவல், நெல்லுப்பொறி முதலானவைகளிலும்,வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து வடாம் செய்யலாம். இங்கும் செய்தேன். உனக்குஈ மெயிலில் குறிப்புஅனுப்பக்கூட நினைத்தேன். வயஸானவோ, எனக்குதான் டைம் பாஸ் என்று நினைத்து விட்டு விட்டேன். வடகம், வடாம் எல்லாம் ஒன்றுதான். கா அம்மா பாஷை. ஸரியாகச் சொன்னாய். பேச்சு, எழுத்தெல்லாம் காட்டிக் கொடுப்பதைப் பார்த்தாயா.
ReplyDeleteரவையைக் கூட ஒரு பங்கிற்கு 6 பங்கு கொதிக்கும் ஜலத்தில்க் கிளறி
மாமூலாக எது வேண்டுமோ அதைச் சேர்த்து ஜெவ்வரிசி வடாம் பாணியில்
வடாம் தயாரிக்கலாம். இது எல்லாருக்கும் இலவச குறிப்பு.
பாராட்டுகள் பெண்ணே.
சப்பாட்டு வடகம் பொங்கலுக்கு அடுத்த நாள் மீதியான பொங்கல் சாதத்துல எங்க வீட்ல செய்வாங்க.
ReplyDeleteசூப்பர் வடகம் மகி!! பார்சல் ப்ளீஸ், இன்னும் சமைக்கற மூடுக்கே வரலை நான். அப்புறமா செய்து பார்க்கிறேன்
கலக்குறிங்க..விதவிதமாக வாடம் போட்டு ஆசையினை காட்டுகின்றிங்க..
ReplyDeleteநிறைய காரம் சேர்த்து கொள்விங்களா மகி...