வெண்டைக்காய் சாப்பிட்டா ஞாபகசக்தி அதிகரிக்கும்னு சொல்லுவாங்க. சிலருக்கு தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு போன பிறவி நினைவெல்லாம் வந்துட்டதா கேள்வி!;) ;) உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் ஒரு சுவையான ரெசிப்பி இது. பொதுவா வெண்டைக்காயை வதக்கறதுதான் கொஞ்சம் நச்சுப் புடிச்ச வேலை. இந்த ரெசிப்பியில் அதுக்கு ஒரு ஈஸி டெக்னிக் சொல்லிருக்கேன், ட்ரை பண்ணிப் பாருங்க!
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்-10
வெங்காயம்(சிறியதாக)-1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை-1கொத்து
வரமிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு-1 டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
உப்பு
செய்முறை
வெண்டைக்காய்-வெங்காயம்-பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் நறுக்கிய வெண்டைக்காய்த் துண்டுகளை (ஒவ்வொன்றாக இருக்கும்படி) பரப்பி, 300F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 10 நிமிடங்கள் bake செய்யவும். ட்ரேயை வெளியே எடுத்து வெண்டைக்காய்த் துண்டுகளை திருப்பிவிட்டு மீண்டும் 6-7 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். காய் மொறுமொறுப்பாய் வெந்திருக்கும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பேக் செய்த வெண்டைக்காய்களை சேர்த்து,தேவையான உப்பும் சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி ஆறவிடவும்.
தயிருடன் கொஞ்சமாக(காயில் உப்பு சேர்த்திருக்கோம்,கவனமாப் போடுங்க) உப்பு சேர்த்து கடைந்துவைக்கவும். சாப்பிடும் முன்பு தயிருடன் வெண்டைக்காய்க் கலவையைக் கொட்டி கலந்து விடவும்.
சுவையான வெண்டைக்காய் தயிர்ப்பச்சடி ரெடி. வெண்டைக்காயை தயிருடன் கலந்தவுடன் பரிமாறினால் மிகவும் நன்றாக இருக்கும். இல்லையென்றால் தாளிதம் செய்த பருப்புகள்-வெண்டைக்காய் எல்லாம் தயிரில் ஊறிப்போய்விடும். அதனால் பரிமாறுமுன் கலந்து பரிமாறுங்க.
******
வெண்டைக்காய் சாப்பிட்டா ஞாபகசக்தி அதிகரிக்கும்னு சொல்லுவாங்க. சிலருக்கு தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு போன பிறவி நினைவெல்லாம் வந்துட்டதா கேள்வி!:) இப்ப எதுக்கு இத மறுபடி சொல்றேன்னு பாக்கறீங்களா?! நீங்க எல்லாரும் என்னைய மறக்காம இருக்கோணும்ங்கறதுக்காகத்தான்! :)
நாம்பாட்டுக்கு ஒரு மாசம் வெகேஷன்ல போயிட்டு, வழக்கமா அடிக்கிற கமென்ட் கும்மிக்கெல்லாம் வரமுடியாம ஜாலியா ஊர்சுத்திட்டு வர, நீங்க எல்லாரும் "யாரிது??"ன்னு கேட்டுரக்கூடாதில்ல?! அதுக்குத்தான் நினைவாற்றலை அதிகரிக்கும் ஒரு ரெசிப்பியா போஸ்ட் பண்ணிட்டுப் போறேன்.
விட்டது தொல்லைன்னு பெருமூச்சு விடற சத்தம் புயல் காத்து மாதிரி வருது, எதுக்கு இம்பூட்டு சந்தோஷம்?!! நேரம் கெடைக்கறப்பவெல்லாம் அங்கங்கே எட்டிப் பார்ப்பேன், ஜாக்கிரதை! செப்டம்பர் கடைசில மறுபடியும் வழக்கம்போல உங்க எல்லாரையும் தொந்தரவு பண்ண வந்துருவேன்! :)
நாம்பாட்டுக்கு ஒரு மாசம் வெகேஷன்ல போயிட்டு, வழக்கமா அடிக்கிற கமென்ட் கும்மிக்கெல்லாம் வரமுடியாம ஜாலியா ஊர்சுத்திட்டு வர, நீங்க எல்லாரும் "யாரிது??"ன்னு கேட்டுரக்கூடாதில்ல?! அதுக்குத்தான் நினைவாற்றலை அதிகரிக்கும் ஒரு ரெசிப்பியா போஸ்ட் பண்ணிட்டுப் போறேன்.
விட்டது தொல்லைன்னு பெருமூச்சு விடற சத்தம் புயல் காத்து மாதிரி வருது, எதுக்கு இம்பூட்டு சந்தோஷம்?!! நேரம் கெடைக்கறப்பவெல்லாம் அங்கங்கே எட்டிப் பார்ப்பேன், ஜாக்கிரதை! செப்டம்பர் கடைசில மறுபடியும் வழக்கம்போல உங்க எல்லாரையும் தொந்தரவு பண்ண வந்துருவேன்! :)
ஐ..இனி வெண்டைக்காய்பொரியல் மிஞ்சினால் அது வெண்டைக்காய் தயிர் பச்சடியா புது பிறப்பு எடுத்து விடும்.தேங்க்ஸ் மகி.
ReplyDeleteNice recipe, Mahi. Have a safe trip!
ReplyDeleteபோகதீங்கோ போகதீங்கோ :))) sorry :((((
ReplyDeleteஉங்கள் பயணம் இனிதே அமையட்டும்
ReplyDeleteகவனமுடன் பயணிக்கவும்
மகி, ஒரு மாசம் vacation போறீங்க இப்படி ஒரு தயிர் பச்சடி மட்டும் குடுத்தா எப்படி. திரும்பி வரும் வரை நான் எத மெல்லறது?! அப்பபோ அசத்தலா வந்துட்டுப் போங்க. அல்வா மட்டும் வேணாம். அது குடுக்கதான் நான் இருக்கேன்ல! Have a wonderful trip and great time. but i will be missing you :-(
ReplyDeleteyummy thayir pachadi :-)
ReplyDeleteமஹி எப்போ வரிங்க இந்தியா வந்தவுடன் மெயில் பண்ணுங்க.
ReplyDeleteஉங்க பயணம் நல்லபடியா நடக்க வாழ்த்துக்கள். வெண்டைக்காய் தயிர்
ReplyDeleteபச்சடி போலவே வண்டைக்கயில் வெல்லப்பச்சடியும் செய்யமுடியும் . அதுவும் டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
my mom makes this too, adding onion sounds nice.have a wonderful trip
ReplyDeleteLadiesfinger pachadi is very new to me and looks tasty too.Ur having a nice blog.
ReplyDeletehttp://sabdhaskitchen.blogspot.com/
Happy Journey Mahi...
ReplyDelete//சிலருக்கு தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு போன பிறவி நினைவெல்லாம் வந்துட்டதா கேள்வி!;)//
ReplyDeleteavvvvvvvvvvvvvvvvvvvvvv:))
அங்கின கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லும்போதே நான் கரெக்ட்டாக் கண்டு புடிச்சிட்டனே:))).
ReplyDeleteஇங்க வெண்டிக்காய் ஒக்டோபரிலதான் வருமாமே..... அதுக்குள் நான் மகியை மறந்திடப்போறேனே:)).
நான் மறக்காமல் இருக்கோணுமெண்டால் “என் பக்கத்தில” தினம் ஒரு பின்னூட்டம் போடுங்க மகி ஓக்கை:)))).
வித்தியாசமான ரெசிப்பி, நாங்க இப்பூடி பாவக்காய் பொரிச்சுப் போடுவோம், சிலநேரம் தயிரினுள் தக்காளிப் பழம் அண்ட் பாவற்காய் பொரியல் போடுவோம் அதுவும் சூப்பர், இது இதுவரை செய்ததில்லை... ட்ரை பண்றேன்.
ReplyDeleteஇப்போ சிவீட் 16 எண்டதால ஞாபக மறதி அடிக்கடி வாறேல்லை மகி:)), சோ ஹப்பியா போய் வாங்க. நாங்க மகியை மறந்தாலும் ஸ்ரவ் இட்லியை மறப்போமா?:))... அப்பூடியெல்லாம் சொல்ல மாட்டேன் ஏனெண்டால் நான்... ஓக்கை ஓக்கை வாணாம்:))).
ReplyDeleteHave a nice holiday... see u soon...
i too make this often,delicious version luks tempting.
ReplyDeleteMy all time favorite thayir pachadi, long time since I made this :) soon will make !!Looks very tempting!
ReplyDeleteஇனி வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்து சாப்பிடும்ப்போதெல்லாம் இந்த பதிவு எங்களுக்கு ஞாபகத்திற்கு வரும்...ச்சோ மறக்க வாய்ப்பில்லை... டோண்டொரி பி ஹேப்பி ஹேவ எ நைஸ் ஜர்னி..... வாழ்த்துக்கள்
ReplyDelete//சிலருக்கு தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு போன பிறவி நினைவெல்லாம் வந்துட்டதா கேள்வி!;)//
ReplyDeleteகரெக்டாஆஆஆ சொன்னீங்கோ..அது எனக்கு தான்.. போன சென்மத்துல ந்நானூ புருஷ்லியா இருந்தேன்....ஆ ஊ ஏ... யார்யா கல் எடுக்குறது...அவ்வ்வ்வ்
athira said...
ReplyDeleteஇப்போ சிவீட் 16 எண்டதால ஞாபக மறதி அடிக்கடி வாறேல்லை மகி:)), //
எனக்கு சிவீட் 16 ங்குறத எதுக்குங்க பப்ளிக்குல சொல்றீங்க... பதிவுலக மார்க்கண்டேயன் ஹி ஹி ஹி
//இப்ப எதுக்கு இத மறுபடி சொல்றேன்னு பாக்கறீங்களா?! நீங்க எல்லாரும் என்னைய மறக்காம இருக்கோணும்ங்கறதுக்காகத்தான்! :) //
ReplyDeleteநான் சொல்ல வந்த்தை மேலே அதிஸ் சொல்லிட்டதாலே நோ மோர் (இது வேறே ) கமெண்ட்ஸ் :-))
////சிலருக்கு தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு போன பிறவி நினைவெல்லாம் வந்துட்டதா கேள்வி!;)//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்..யாரிந்த துரதிஷடச்சாலி ஹா..ஹா......
//athira said...
ReplyDeleteஇப்போ சிவீட் 16 எண்டதால ஞாபக மறதி அடிக்கடி வாறேல்லை மகி:)), //
ஆ...அதுக்குள்ளே 10 வயசு கூடிப்போசாஆஆஆஆ....6 வயசு பேபின்னுல்ல சொல்லிகிட்டு இருந்திங்க...!!!!! :-))))))))))))))))))
அப்போ திரும்பி வரும் போது மஞ்சள் பூ போட்டோக்கள் தொடரும் ? :-)).
ReplyDeleteபயணங்கள் இனியமையாக அமைய வாழத்துக்கள் :-)
மகியை ஞாபகப்படுத்திக்கொள்ள வெண்டைக்காய் பச்சடியா. இந்தியா போனாலென்ன. இன்னும் புதுசு புதுசா யோசனைகள் வரும். பிறந்தகம், புக்ககம், என அடுக்கடுக்காய் பலதினுஸு சாப்பாடுகள். எழுதின கை சும்மா இருக்காது. துரு துரு என எழுதத் தோன்றும். ஸந்தோஷமாக இருவரும் எல்லோருடனும் சேர்ந்திருந்துவிட்டு வாருங்கள். பிரயாணம் இனிதே அமையட்டும்.யாவருக்கும் அன்பினைப்
ReplyDeleteபகிர்ந்தளிக்க விரும்பும் அன்புடன்
காமாட்சிம்மா.
பிடிச்சு இருக்கு மகி. //நச்சுப் புடிச்ச வேலை.// ம். //அதுக்கு ஒரு ஈஸி டெக்னிக்// சொல்லி இருக்கீங்க, தாங்ஸ்.
ReplyDeleteஅங்க ஒரு பப்பி. இங்க ஒரு டெட்டி. நீங்கதானே பண்ணீங்க. அதுக்கும் ரெசிபி போட்டு இருக்கலாம்.
//நாங்க இப்பூடி பாவக்காய் பொரிச்சுப் போடுவோம், சிலநேரம் தயிரினுள் தக்காளிப் பழம் அண்ட் பாவற்காய் பொரியல் போடுவோம் அதுவும் சூப்பர்,// நோட்டட் திஸ் டூ அதீஸ்.
ReplyDelete//நாங்க மகியை மறந்தாலும் ஸ்ரவ் இட்லியை மறப்போமா?// அதானே!! எப்புடி மறப்போம்?
ReplyDelete//போன சென்மத்துல ந்நானூ புருஷ்லியா இருந்தேன்....// ஹும்!! மீதியையும் சொல்லுங்க சார். ;)
ReplyDeleteமகி, சந்தோஷமாக விடுமுறை கொண்டாடிட்டு வாங்க. வந்து விடுமுறை அனுபவங்களை எங்களோட பகிர்ந்துக்கங்க.
ReplyDeleteஅது என்ன பக்கதுல எங்கூரு க்ளாக்! எல்லாருக்கும் இதான் தெரியுமா? இல்ல அவரவர் ஊர் நேரம் தெரியுமா?
ReplyDeleteThanks very much everybody for your valuable comments! :)
ReplyDelete/ அது என்ன பக்கதுல எங்கூரு க்ளாக்! எல்லாருக்கும் இதான் தெரியுமா? இல்ல அவரவர் ஊர் நேரம் தெரியுமா?/ this is too much Imma..seriou-a kekkareengala? if yes,will tell u the answer later. :)
Ovvoru commet-a bhathil solla time illa,kovichukkatheenga!;)
டீச்சரின் சந்தேகத்துக்கு ஓடோடி வந்து பதில் :-)
ReplyDelete;) நாம யாரு? இமால்ல! ;)))))))
ReplyDelete