வண்ணவண்ணப்பூக்களை கேமராவில் பார்த்தாலும் அழகு, எம்ப்ராய்டரியில் தைத்தாலும் அழகு! :) ஒவ்வொரு முறை கடைக்குப் போகும்போதும் வாங்கிவந்த பலவண்ண எம்ப்ராய்டரி நூல்களை தீர்க்க இந்த டிஸைன் ரொம்ப வசதியாய்ப் பட்டது.
ட்யூலிப்,பாப்பி மற்றும் அந்த குட்டிக்குட்டிப் பூக்களின் அழகு என்னை மயக்கிவிட்டது. :) விருப்பப்படி கையில் கிடைத்த வண்ணங்களில் பூக்களையும் இலைகளையும் தைக்க ஆரம்பித்தேன்.
டிஸைனை ட்ரேஸ் பண்ணிக்கொண்டிருக்கையில்..
கிட்டத்தட்ட டிஸைனின் அவுட்லைன் தயாராகிவிட்டது. மலர்களில் எல்லாம் பெரும்பாலும் சங்கிலித்தையலால் அவுட்லைன், இதழ்களில் ரன்னிங் ஸ்டிச்சால் கோடுகள் தைத்திருக்கிறேன்.
வெள்ளைப்பூவில் இதழ்களில் lattice work, நடுவில் ஸாடின் ஸ்டிச் , மீடியம் ஸைஸ் பூக்களுக்கு ஸ்ப்ளிட் ஸ்டிச் உபயோகப்படுத்தியிருக்கிறேன்.
மைக்கேல்ஸ்-ல் seed beads வாங்கிவந்திருந்தேன், வால்மார்ட்டிலும் கொஞ்சம் beads வாங்கிவந்தேன். சின்னப் பூக்களின் நடுவில் ஒரொரு seed beads-ம், மூன்று மீடியம் சைஸ் பூக்களில் ஒன்றின் மகரந்தத்துக்கு seed beads வைத்து தைத்துவிட்டு, இன்னொன்றில் ஆரஞ்ச் நிற beads வைத்து தைத்தேன், இன்னொன்றில் French knots போட்டேன்.
பூந்தொட்டிதான் கொஞ்சம் காமெடி ஆகிவிட்டது. புதுசுபுதுசா ஏதேதோ தையல்கள் ட்ரை செய்தேன், ஒன்றும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை, கடைசியில் அவுட்லைனுடன் விட்டுவிட்டேன். [இந்த பாயின்ட்டை நான் சொல்லலைன்னா நீங்க கவனிச்சிருக்கவே மாட்டீங்க! ;)... கரெக்ட்தானே? :) ]
இது பூக்கூடையின் க்ளோஸ் அப் வியூ! தையல்களில் பலவிதம் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது சங்கிலித்தையல்தான். தையலை நம் விருப்பப்படி வளைக்கலாம், நெளிக்கலாம், நீட்டலாம்,குறுக்கலாம்!! இந்த டிஸைனில் கிட்டத்தட்ட 70% சங்கிலித்தையல்தான் தைத்திருக்கிறேன். எப்படி இருக்கு பூக்கூடை? :)
இது இணையத்தில் கிடைத்த டிஸைன்..இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தையல்களின் வீடியோக்கள் எல்லாமே இங்கே இருக்கின்றன. நேரமும் விருப்பமும் இருந்தால் பாருங்க. நன்றி!
Arumai:-) You are really talented Mahi.
ReplyDeleteஹே நித்து,என்ன இந்நேரம் கம்ப்யூட்டர்லே இருக்கீங்க? :)
ReplyDeleteதேங்க்ஸ்ப்பா!
அழகுன்னு சொல்றதா இல்ல. அற்புதம்! அந்தக் குட்டிக் குட்டிப் பிங்க் பூக்கள் ஸ்வீட்.
ReplyDeleteபூக்கூடை எனக்குத்தான்...
no no
ReplyDeleteபூக்கூடை எனக்குத்தான்.
சரி.. சிவாவுக்காக விட்டுக் கொடுத்துருறேன். ;)
ReplyDeleteகொடுத்துருங்க மகி.
//எப்படி இருக்கு பூக்கூடை? :)//
ReplyDeleteமகி கலக்கிட்டீங்க... சூப்பர்..
//Blogger இமா said...
சரி.. சிவாவுக்காக விட்டுக் கொடுத்துருறேன். ;)
கொடுத்துருங்க மகி//
நோஓஓஓஓஒ நோஓஓஓப்.... அது எனக்குத்தான்.. சிவாவுக்கு அந்த ஊசியையும் நூலையும் குடுங்க தைத்தூஊஊஊஊஊஊஊ எடுக்கட்டும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).
கலக்குறிங்க...ரொம்ப அழகு...
ReplyDeleteஅழகு...அழகு...!
ReplyDeleteமகி.... உங்களோட வொர்க் அருமை. எனக்கும் அந்த குட்டி பூக்கள் தான் ரொம்ப புடிச்சு இருக்கு.
ReplyDeleteஎம்ப்ராய்டரி டிசைன் ரொம்ப அழகா இருக்கு...
ReplyDeleteவெள்ளைநிறப்பூ, குட்டி,குட்டிப் பூக்கள் எல்லாமே அழகுதான். பூக்கூடை அழகான எம்ராய்டரி. கலர்களின் தேர்வும் தரமாக இருக்கு.
ReplyDeleteஅடடா..என்ன நேர்த்தியாக செய்து காட்டி இருக்கீங்க!
ReplyDeletevery nice mahi...u are multi talented...what else are u good at?
ReplyDeletelovely pattern, great work!
ReplyDeleteமகி, என்னிடமும் இருக்கு ஒவ்வொரு வகைத் தையல்கள் பற்றிய புத்தகம்.
ReplyDeleteபூப் போடுவதற்கு என்ன தேவையோ, கண்ணில காண்பதெல்லாம் வாங்கிடுவேன், ஆனா செய்ய நேரம் + மனம் அமைவது குறைவு. நிறைய நூல்கள், பெயிண்ட்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன்.
இது எந்த நூலில் தைத்திருக்கிறீங்க? குரொஷா செய்யும் நூலோ? தடிப்பாக இருக்கு.
நான் இப்போ ஒரு பூ, குரொஷா பின்னும் நூலுனால் போடுகிறேன், சூப்பராக வருது(என் கண்ணுக்கு:)), முடியட்டும் படம் போட்டிடலாம், முடிஞ்சுது, ஆனா இன்னும் தலையணை உறையாகத் தைத்து முடிக்கவில்லை, அதுவும் முடியப்போடலாமே என வைத்திருக்கிறேன்.
நீங்களும், வான்ஸ்சும் குட்டிப் பற்றனாக தெரிவு செய்கிறீங்க(குட்டிப் பூக்கள்), எனக்கு என்னவோ பெரியதாக இருப்பவைதான் பிடிக்கும், ஒருதடவை குட்டிப் பூக்கள் முயற்சிக்கப்போறேன்.
ReplyDelete/குரொஷா செய்யும் நூலோ? தடிப்பாக இருக்கு./இல்லை அதிரா, இதைப் பாருங்க,இப்படி நூல்தான் நான் யூஸ் பண்ணுவது.
ReplyDeletehttp://www.dickblick.com/products/creativity-street-embroidery-floss-set/#photos
இது எம்ப்ராய்டரிக்கென்றே என்றே தனியா இருக்கும்.நூலில் மொத்தம் 6 இழை இருக்கும், தையலின் தடிமனுக்கேற்ப இழைகளை அதிகரித்து,குறைத்து எடுத்து தைக்கலாம்.
பெரும்பாலும் 2 இழை மட்டும் எடுத்து தைத்தாலே சரியாய் இருக்கும்.இந்த டிஸைனில் எல்லாமே 2 இழையில்தான் தைச்சிருக்கேன்.
பெரிய பூக்களை எம்ப்ராய்டரியில் தைக்க சிரமமாய் இருக்குமோ என்று எனக்கு டவுட்! இதுவரை தைத்த எல்லாமே இது போன்ற அளவு பேட்டர்ன்தான் தைச்சிருக்கேன். :)
ரொம்ப அழகா இருக்கு மகி .பொறுமையா செஞ்சிருகீங்க வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇவைதான் மகி நானும் நிறைய, கண்ணில வித்தியாசமாக என்ன கலரெல்லாம் தெரியுதோ எல்லாமே வாங்கிடுவேன். இதில் சைனிங்கான நூல்களும் இருக்கு.
ReplyDeleteஆனா எப்படி 2,3 ஆகக் கோர்த்து செய்றீங்க?, ஊசியில் எப்படிக் கோர்க்கிறீங்க? பெரிய கண் ஊசியில் சிலநேரம் 2 பட்டாகக் கோர்த்திருக்கிறேன், அதுக்குமேல் கோர்த்ததில்லை.
எம்ப்ராய்டரி ஊசியும் பல அளவுகளில் இருக்கு அதிரா,ஆனால் நான் அதெல்லாம் வாங்கலை. என்னிடம் இருக்கும் ஒரு சாதா(!) ஊசியில்தான் தைக்கிறேன். பெரும்பாலும் 2 இழை கோர்த்து ஒரு நுனியில் மட்டும் முடிச்சுப் போட்டுட்டு தைப்பேன்..சிலநேரம் 4 இழை தேவைப்பட்டால் 2 இழைகளையும் நுனியில் இணைத்து முடிச்சுப் போட்டு தைப்பேன்,அதைவிட குண்டுத்தையல் இதுவரைக்கும் தைக்கலை! :)
ReplyDeleteபெரிய கண் இருக்கும் ஊசி சிலநேரம் துணியைப் பாழாக்கிவிடும் என்று வானதி ஆரம்பத்திலையே எச்சரிக்கை குடுத்தாங்க. அதனால் அந்த ஊசியெல்லாம் வாங்கலை. :)
நேரமிருந்தா போஸ்ட்லே இணைத்திருக்கும் வீடியோக்களைப் பாருங்களேன்,உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.
மகி embroidery நல்லா இருக்கு. ஸ்கூல் படிக்கும் போது இந்த மாதிரி embroidery செஞ்சதோட சரி. ரொம்ப பொறுமையா அழகா தைத்து இருக்கீங்க. தலைகாணி coverukku போடலாம். இல்லே frame போட்டு கூட மாட்டலாம் .
ReplyDeleteமிக அருமை, Mahi :-)
ReplyDeleteமகி, சூப்பர் டிசைன். என்னுடைய தையல் வேலைகள் எல்லாமே அரையும் குறையுமா நிற்குது. மிகவும் காம்ளிகேட்டட் டிசைனா தெரியுது.
ReplyDeleteபூஸார், எனக்கு பெரிய பூக்கள் அவ்வளவா பிடிப்பதில்லை. நாங்க எப்பவும் சின்னனா தான் ஆசைப்படுவோம். சிறுக கட்டி பெருக வாழ் என்று எங்க பாட்டீஸ், தாத்தாஸ் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
தேங்க்ஸ் இமா & சிவா! பூக்கூடைய பிச்சுடாம ரெண்டுபேரில் யாராவது ஒருத்தர் எடுத்துக்குங்க!;)
ReplyDelete/சிவாவுக்கு அந்த ஊசியையும் நூலையும் குடுங்க தைத்தூஊஊஊஊஊஊஊ எடுக்கட்டும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))))./இது நல்ல ஐடியாவா இருக்கே! எல்லாருக்கும் ஊசி-நூல் அனுப்பிடறேன்,ப்ரெஷ்ஷா பூக்கூடை செய்து எடுத்துக்கோங்க,வசதி எப்புடி? ;) தேங்க்ஸ் அதிரா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா!
ப்ரியா & ப்ரியா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)
மேனகா,தேங்க்ஸ் மேனகா!
காமாட்சிம்மா,நன்றி! பூக்களின் நிறங்கள் உங்களுக்குப் பிடித்துதா..சந்தோஷம்! :)
ஸாதிகாக்கா,நன்றி!
சித்ரா,இதை தவிர மொக்கை போடும் ஆற்றல்(!) வளர்ந்துட்டே போகுதுங்க,நீஙக் படிக்க ரெடியா?! ;) தேங்க்ஸ் சித்ரா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஹேஸக்கா!
தேவதை அக்கா,தேங்க்ஸ்! ;)
/தலைகாணி coverukku போடலாம். இல்லே frame போட்டு கூட மாட்டலாம்./ கிரிஜா,இது ஃபெல்ட் க்ளாத்ல தைச்சிருக்கேன்,ஃப்ரேம்தான் பண்ணலாம். தலைகாணி உறை பக்கம் இன்னும் போகல. தேங்க்ஸ்ங்க!
தேங்க்ஸ் மீரா!
வானதி, இது காம்ப்ளிகேட்டட் டிஸைனா?! காமெடி பண்ணாதீங்க! :) நிறைய பூக்கள் இருப்பதால் அப்படித்தெரியுது,அவ்வளவுதான்.
/மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்/ :) அம்புட்டு பயமா? காலைல வருவாங்க,ரெடியா இருங்கோ! ;)
நன்றி!