Friday, August 26, 2011

பிட்டர் மெலன் புளிக்குழம்பு

ஒருமுறை காய்கறி வாங்கும்போது பிட்டர்மெலன் என்ற பெயரில், பாகற்காயைப் போல இல்லாமல் கொஞ்சம் வித்யாசமான வடிவத்தில் ஒரு காய் கண்ணில் பட்டது. என் கண்ணில் மட்டும் பட்டிருந்தால் பார்த்துவிட்டு அமைதியா வந்திருப்பேன், என்னவர் கண்ணில் பட்டதால் வாங்கியே ஆகணும்னு அடம்பிடிச்சு வாங்கித் தந்துவிட்டார்! :)

பிட்டர்மெலன் என்பது வேறு எதுவுமில்லை, பாகற்காய் குடும்பத்தின் உறுப்பினரேதான், ஆனால் வடிவம் மட்டும் வேறு. அதனால் ருசி எல்லாம் பாகற்காயைப் போலவேதான் இருந்தது.

வாங்கிவந்து ரெண்டுநாளிலேயே கட் பண்ணிட்டேன்,அதுக்குள்ள விதை பழுக்க ஆரம்பித்திருந்தது, அதனால் அதையெல்லாம் எடுத்துட்டு காயை மட்டும் வில்லைகளாக நறுக்கி, கொஞ்சம் எண்ணெயில் வதக்கி எடுத்துவைச்சேன்.

புளிக்குழம்புக்கு வழக்கம்போல [அது என்ன வழக்கம்?னு புருவத்தை தூக்காம, பொறுமையாப் படிங்கோ..பின்னாலயே அதுக்கு செய்முறையும் தொடருது. :)] வறுத்து அரைச்சு, தாளிச்சு கொதிக்கவிட்டு வதக்கிய காயையையும் போட்டு வேகவிட்டா குழம்பு ரெடி! :)

வறுத்து அரைக்க
சின்ன வெங்காயம்-7
வரமிளகாய்-6
தக்காளி(மீடியம் ஸைஸ்)-2
தனியா-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
க.பருப்பு-1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1/4கப்

இதையெல்லாம் கொஞ்சம் எண்ணெயில் வதக்கி,ஆறவைச்சு கொஞ்சமாத் தண்ணி ஊத்தி அரைச்சு வைச்சுக்குங்க. கெட்டியான புளிக்கரைசல் கால் கப்பும் ரெடியா வச்சுக்குங்க.

தாளிக்க
கடுகு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
சின்ன வெங்காயம்-7 (அ) பெரிய வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
எண்ணெய்
மஞ்சள்த்தூள்-1/8டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு

எண்ணெய் காயவைத்து கடுகு தாளிச்சு, வெங்காயம்-மிளகாய்-கறிவேப்பிலை வதக்கி, அரைத்த மசாலா, புளிக்கரைசல், மஞ்சள்தூள் சேர்த்து தேவையான தண்ணீரும் ஊத்தி கொதிக்க விடுங்க. குழம்பு நல்லாக் கொதிச்சதும், வதக்கிய பிட்டர் மெலனை சேர்த்து வேகவையுங்க. காய் வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிருங்க.

சுவையான பிட்டர்மெலன்(!) புளிக்குழம்பு ரெடி! சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும். தோசையுடன் சாப்பிடவும் நல்லா இருக்கும்.

15 comments:

  1. aiiii mee da firstuuuuuuuuuuuuu:))

    வட எனக்கே எனக்கா.... மிளகாய்,வெங்காயம் கூடப் போடுங்க மகி...நான் வடைக்குச் சொன்னேன்:))

    ReplyDelete
  2. //பிட்டர் மெலன் //

    நானும் அமெரிக்காவில பாகற்காயைப் புதுப் பெயரில அழைக்கினமோ எனக் கொயம்பிட்டேன் அவ்வ்வ்வ்வ்:).

    புளிக்கொயம்பு சூப்பர்ர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  3. athira said...
    aiiii mee da firstuuuuuuuuuuuuu:))

    வட எனக்கே எனக்கா.... மிளகாய்,வெங்காயம் கூடப் போடுங்க மகி...நான் வடைக்குச் சொன்னேன்:))


    mee da firstuuuuuuuuuu :))

    யாரும்ம்மா அது என்னைய தள்ளிட்டு முன்னால போய் கமென்ட் போடறது அவ்வ்வ்வ்வ் வட போச்சே...வட போனா என்ன பீட்டர் மாமன் புளிகொழம்பு இருக்குல்ல அத ஊத்தி சோத்த பெசஞ்சி அடிக்க வேண்டியதான்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  4. // சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும். தோசையுடன் சாப்பிடவும் நல்லா இருக்கும். //

    நீங்க சாப்பிட்டுப் பார்த்தீங்களா?

    ReplyDelete
  5. ஆமா இதுக்கு தமிழ்ப்பெயர் என்னங்க?

    ReplyDelete
  6. இதுவும் பாகற்காயின் வகையில் ஒன்றே. மேலே முள்ப் போன்ற பகுதி வழவழப்பாக இருக்கும். நீண்ட கோடுகள் போட்டாற்போல தோற்றம்.
    பெங்களூரில் இருக்கும் போது வாங்கி சமைத்திருக்கிறேன்.
    அடவாங்கிப்போம்மா.இதுவும்பாவக்காதான். நல்லாருக்கும் என்ற ரெகமடேஷனுடன், விற்பவர் கொடுக்க ,பிட்லை முதலான பாகற்காய் தயாரிப்புகள் யாவும் செய்ய முடிந்தது. உன்நுடைய குழம்பும் ருசியாக இருக்கு.
    பழு பாகற்காயென்று ஒரு வகை கேள்விப் பட்டிருக்கிறாயா.

    ReplyDelete
  7. அதிரா,மிளகாய் வெங்காயம் எல்லாம் குழம்புக்கு போட்டதால் தீர்ந்து போச்! ப்ளெய்ன் மிளகு வடை தான் இருக்கு,பரவால்லையா? ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!


    ராஜேஷ், உங்களுக்கு வடை வேணாம்னு சொல்லி தப்பிச்சிட்டீங்க,பூஷ்:) பாவம்,தனியே வடை சாப்பிட சிரமப்படறார்,கொஞ்சம் கம்பெனி குடுங்கோ! ;)

    நன்றி ராஜேஷ்!



    /நீங்க சாப்பிட்டுப் பார்த்தீங்களா?/சமைத்து, சாப்பிட்டும் பார்த்து எனக்கு திருப்தியா வந்த ரெசிப்பி மட்டும்தானுங்க ப்ளாக்ல போஸ்ட் பண்ணறது! :) நன்றி கவுண்டர் அய்யா!


    /ஆமா இதுக்கு தமிழ்ப்பெயர் என்னங்க?/லஷ்மிம்மா,பாவக்காயின் அக்கா-னு பேர் வைச்சிடலாமா இந்தக் காய்க்கு?;):) நன்றிம்மா!


    தேங்க்ஸ் ஆச்சி! ;)


    காமட்சிம்மா,பிட்டார் மெலன் பத்தி ஒரு குட்டி லெக்சரே குடுத்திட்டீங்க! நன்றிம்மா! நான் ஊரில் இந்தக் காயைப் பார்த்ததில்ல,இதுதான் முதல் முறை வாங்கினேன். நன்றிமா!

    ReplyDelete
  8. மகி, லக்ஷ்மி அம்மா, நீர்சத்து கொஞ்சம் அதிகமான பாகற்காய் மாதிரி தெரியுது.... தமிழ்ல இது பேரு பாகற்- பூசணியோ? கொஞ்சம் ஓவரா இருந்தா... ரைட் விடுங்க...!

    ReplyDelete
  9. மகி,
    Bitter Melon போஸ்ட் போட்ட நேரம்... Bitterஆ ஒரு நியூஸ்... ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியம்... சின்னதா ஒரு பழி வாங்கல் பதிவு... இனிமே கேப்பீங்க என்னை கேள்வி... ?.....:))) http://appavithangamani.blogspot.com/2011/08/blog-post_28.html

    BTW, Bitter Melon recipe super...:)

    ReplyDelete
  10. உது பாவக்காய் மாதிரியில்லை, பாவக்காயேதான்.. சைனீஸ் கடைகளில் இப்பாவல்தானே கிடைக்குது... எனக்கு இப்பத்தான் கிட்னியில பல்ப் பத்திச்சுது:)))

    ReplyDelete
  11. ahaa! makes me drool. lovely recipe and thanks for sharing the picture of bitter melon. :-)

    ReplyDelete
  12. பிட்டர்மிலன் என்றதும்
    பாகற்காய், லெமனோன்னு நினைத்தேன்.
    பார்க்கவே அருமையாக் இருக்கு

    ReplyDelete
  13. இந்த காயை பாத்திருக்கேன். ஆனா வாங்கினதில்லை. சூப்பரா இருக்கு குழம்பு(பாக்கறதுக்கு):))

    ReplyDelete
  14. //வடிவம் மட்டும் வேறு. அதனால் ருசி எல்லாம் பாகற்காயைப் போலவேதான் இருந்தது.// இப்படி இங்கேயும் கிடைக்கிறது. எனக்கு என்னவோ இது கசப்பு குறைவு போல தெரியும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails