பார்ட்டி-கெட் டு கெதர் வைத்து கொஞ்ச நாட்களாகிவிட்டதால் நண்பர் ஒருவரின் அபார்ட்மென்ட் க்ளப் ஹவுஸில் இந்த வாரம் ஒரு "chaat" பார்ட்டி அரேஞ்ச் செய்திருந்தோம். என்னவரின் ப்ராஜெக்ட்டில் எங்களையும்,இன்னொருவரையும் தவிர எல்லாருமே வட இந்தியர்கள். எல்லாரும் சாட் ஐட்டங்களில் தூள் கிளப்பிருந்தாங்க.
பார்ட்டியை முடிவு செய்து எனக்கு வந்த மெய்லிலேயே மெனு கார்டில் என் பேருக்கு நேரா இருந்த ஐட்டம்...கான்ட்வி! :) :) :) பார்ட்டி டிஸ்கஷன்ம்போது என்னவர் நான் செய்த கான்ட்வியின் புகழைப் பாடி(!), ப்ளாகில் இருக்கும் கான்ட்வியையும் காட்டியிருக்கார். [சந்தேகம் கேட்ட பார்ட்டிங்க(இது வேற பார்ட்டி;)) எல்லாரும்...."நோட் திஸ் பாயின்ட்!"]. அப்புறம் என்ன..எங்க வீட்டிலிருந்து கான்ட்வி-ன்னு முடிவு பண்ணிட்டாங்க. :)
5 மணிக்குப் பார்ட்டின்னு டைம் ஃபிக்ஸ் பண்ணிருந்தாலும், அடிச்ச வெயில்ல ஆடிப்பாடி(!) எல்லாரும் போய்ச் சேரவே 7 மணி ஆகிடுச்சு. ஈவினிங் ஸ்னாக் பார்ட்டியாக இருந்திருக்க வேண்டியது டின்னர் பார்ட்டியா ஆகிட்டது. லஸ்ஸி-நீர்மோருடன் முதலில் சாப்பிட்ட ஐட்டம் புனே ஸ்பெஷல்.."கட் வடா". பவுல்ல ரெண்டு கரண்டி க்ரேவிய ஊத்தி ரெண்டு வடைய வைச்சு, பச்சைவெங்காயம் தூவி கொஞ்சம் லெமன் ஜூஸ் புழிஞ்சு... ஸ்ஸ்ஸ்ஆஆஆ! சூப்பரா இருந்தது போங்க! :P :P
கட் வடா-ல இருந்த க்ரேவி ரசம் மாதிரி ரொம்ப தண்ணியா இருந்தது. ஆனா சூப்பர் டேஸ்ட்டு. வடா வேற ஒண்ணுமில்ல, நம்ம ஊரு உருளைக்கிழங்கு போண்டா!! அடுத்தது பனீர் கபாப்..அது காலியான வேகமே தெரியாம ட்ரே எம்ட்டி!! :)
அத்தோட சாப்பாட்டுக்கடைய டெம்ப்ரவரியா மூடிட்டு கொஞ்சம் கேம்ஸ் விளையாடினோம். மொத்த ஆட்களும் ரெண்டு டீமாப் பிரிச்சு, ஒவ்வொரு டீமுக்கும் ஒரு ரெப்ரஸென்டேட்டிவ் செலக்ட் பண்ணிக்கணும். விளையாட்டை நடத்துறவங்க சீட்டு குலுக்கி போடுவாங்க, ஒவ்வொரு முறையும் ஒரொரு டீமின் ரெப்ரஸென்டேட்டிவ் சீட்டை எடுக்கணும். அந்த சீட்டில் ஹால்ல இருக்க பொருட்களில் ஏதாவதொன்றின் பெயர் இருக்கும். உதாரணத்துக்கு "ப்ளாக் லேடீஸ் ஹேண்ட் பேக், மூவி டிக்கட், தங்க வளையல், பச்சைக்கலர் பலூன், ப்ளூ பால்பாய்ன்ட் பென் இப்படி. ரெண்டு டீமும் "பெக், பாரோ ஆர் ஸ்டீல்" எதுவேணாலும் செய்து அந்தப் பொருளை எடுத்து டீமின் ரெப்ரஸென்டேட்டிவ் அதைக் கொண்டு போய் கேமை நடத்துபவர் கிட்ட கொடுக்கணும். இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது கேம்.
இங்கே இன்னொரு ஸீக்ரட் சொல்லறேன் உங்களுக்கு. டீம்ஸ் பிரிக்கறதுக்கு எல்லாரையும் லைனா 1 -2-1-2-1-2ன்னு சொல்லச்சொல்லுவாங்க. 1 சொன்னவங்க எல்லாம் ஒரு டீம், 2 சொன்னவங்க எல்லாம் அடுத்த டீம். நானும் என்னவரும் நம்பர் சொல்லும்போது கரெக்ட்டா எங்களுக்கு நடுவில் ஒரு ஆள் மட்டும் இருக்கறமாதிரி பார்த்துக்குவோம். எதுக்குன்னு கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்குப் பரிசு கடேசிப் படத்தில் இருக்கு! ;) ;)
அடுத்த கேம் இன்னும் கொஞ்சம் காமெடியா இருக்கும். ரெண்டு டீம் ஆட்களும் ரெண்டு வரிசைல கைகளைக் கோர்த்து லைனா நின்னுக்கணும். லைனோட எண்ட் பாயின்ட்டுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு டேபிள்ல ஒரு ப்ளாஸ்டிக் கப்பை வைச்சிரணும். லைனோட அடுத்த முனைல கேம் நடத்துபவர் நிற்பார். ஒவ்வொரு டீமிலும் அவர் பக்கத்தில் இருக்கும் ஒரு ஆள் மட்டும் கண்ணைத் திறந்துட்டு, மற்றவங்க எல்லாரும் கண்ணை மூடிக்கணும்.
கேம் நடத்துபவர் ஒரு காயினை டாஸ் பண்ணுவார், தலை விழுந்தா வரிசையின் முதலில் கண்ணைத் திறந்து பார்த்துட்டு இருப்பவர் அடுத்த ஆளின் கைவிரலை அழுத்தணும், அப்படியே அந்த ஸிக்னல் அடுத்தடுத்த ஆட்களுக்கு பாஸ் பண்ணனும். கடைசி ஆளுக்கு ஸிக்னல் கிடைத்ததும் அவர் ஓடிப்போய்(அஃப்கோர்ஸ் கண்ணைத்திறந்துட்டுதான்!:) ) டேபிள்ல இருக்க கப்பை எடுக்கணும். எந்த டீம் முதல்ல கப்பை எடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஒரு பாயின்ட்! ஸப்போஸ் காயினை டாஸ் பண்ணும்போது பூ விழுந்தா ஸிக்னல் தரக்கூடாது. அவசரப்பட்டு ஸிக்னல் குடுத்து கப்பை எடுத்துட்டா அந்த டீமுக்கு நெகடிவ் பாயின்ட்! இதிலே எங்க டீம்தான் வின் பண்ணிச்சு! :)
சரி,ரொம்ப விளையாடிட்டோம்னு அடுத்த ரவுண்டு சாப்டப் போனோம். Ragada patty-ன்னு ஒரு டிஷ். உருளைக்கிழங்கு கட்லட் மாதிரி செய்திருந்தாங்க. அது மேலே பட்டாணி க்ரேவி ஊத்தி, ஸ்வீட்-க்ரீன் சட்னி, ஆனியன் ஸ்ப்ரிங்கிள் பண்ணி, லெமன் ஜூஸ் சேர்த்து சாப்பிடணும். அப்புறம் சமோஸா, டோக்ளா,பானி பூரி,கான்ட்வி, Chole-chaat இப்படி நிறைய இருந்தது. உங்க எல்லாருக்காகவும் ஒரு(!) பானிபூரி, டைட் க்ளோஸப்புல....என்சொய்!!! ;) ;)
மேலே சொல்லி இருக்க உணவுவகைகளை எல்லாம் சாப்பிட்டு முடிக்கைலயே லேட்டாகிடுச்சு. Bhel pooriக்கும் ரஸமலாய்க்கும் டைம் இல்ல, பூரிய கான்ஸல் பண்ணிட்டு, ரஸமலாயை pack பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம். பார்ட்டி டைம் ஃபிக்ஸ் பண்ணும்போது தெரில, ஆனா கரெக்ட்டா சுதந்திர தினத்தன்னிக்கு ஒரு கெட் டு கெதர் நடந்தது ஒரு ஸ்வீட் கோ-இன்ஸிடென்ஸ்! :):) எல்லாருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
சரி, நம்பர் சொல்லும்போது எங்களுக்கு இடைல எதுக்கு கரெக்ட்டா ஒரு ஆளை நிக்கவச்சிக்கிறோம்னு கண்டு புடிச்சிட்டீங்களா? நீங்கல்லாம் கற்பூரம்ல? கட்டாயம் கண்டுபுடிச்சிருப்பீங்க, ரஸமலாய் எடுத்துக்குங்க! ;)
படிக்கறவங்களை ரொம்ப போர் அடிக்கலைன்ற நம்பிக்கையோட(?!) இந்தப் போஸ்ட்டை இத்தோட முடிச்சிக்கறேன்,நன்றி வணக்கம்!
meeeeeeeeee the firstuuuuu
ReplyDeleteநம்ம ஊரு இட்லி தோசை கூட கிடைக்கம இருக்கும் எனக்கு
ReplyDeleteஎப்படி விதம் விதமா நீங்க மட்டும் நல்ல......
இது நியமா?
ம் சரி சரி நீங்களாவது சாப்பிடுங்கள்.
நல்ல விளக்கமும்
படங்களும் அருமை
ம்
கடைசியில் உள்ளது தேங்காய் சட்னி போல உள்ளதே
ReplyDeleteஅதுதான் ஸ்வீட்டா
ம் அந்த பானிபூரி எப்படி ஹயோ பாக்கும்போதே
ReplyDeleteசாப்பிடனும் தோணுதே ....
அவ்வவ்
அதிரமா வரதுக்குள்ள எல்லாத்தயும் சாப்ட்டுட்டு எஸ்கேப் ஆகிடனும்
ReplyDeleteபாக்கும்போதே சாப்பிடனும் போலக்குதே... நான் என்ன செய்வேன்... நான் என்ன செய்வேன்... யாராவது இதெல்லாம் பார்சல் பண்ணி தாங்கோ....
ReplyDeleteபுகை புகையா வருது. ஹும்!
ReplyDeleteநானும் அந்த பார்ட்டில உங்க பின்னாடி தானே நின்னுகிட்டு இருந்தேன் பாத்தீங்களா? (அப்படி உணர வைத்த
ReplyDeleteபதிவு ஹா ஹா)
உணவு வகைகளை எல்லாம் போட்டு வாயூறச்செய்த மகி அப்படியே உணவுவகைகளை டேஸ்ட் பண்ணியவர்களையும் போட்டு இருக்கலாமே? :-)
ReplyDeleteஉஸ் அப்பாடா... ஓய்ஞ்சிட்டாங்களா? .. பார்ட்டியைவிட விட பார்ட்டிக்குப் போய் வந்தவங்களோட எபெக்ட்டூஊஊஊஊ ஆஆஆஆஆ காதடைக்குது:))).
ReplyDeleteமகி..மகி... இன்னும் சாப்பிடா மயக்கம் போகவில்லையோ எழும்புங்கோவன்... நாங்களெல்லாம் வந்திருக்கிறோம்..:).
//பூரிய கான்ஸல் பண்ணிட்டு, ரஸமலாயை pack பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம்//
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... உலகத்தின் மேல்பக்கம் போனாலும் திருந்தீனமோ பாருங்கோவன்:)).
//
Blogger siva said...
அதிரமா வரதுக்குள்ள எல்லாத்தயும் சாப்ட்டுட்டு எஸ்கேப் ஆகிடனும்///
http://2.bp.blogspot.com/_aO8JqSNtauA/S-OvvcZXTdI/AAAAAAAAObU/QHwQcim9WtE/s1600/cat+rapid+fire.jpg
sweet coincidence mahi. Happy to know that you all had a great day :-) Thanks for the virtual feast. Now you have made me drooling.... that's bad.... now looking for some real feast!!!.... :-) ha.ha..
ReplyDelete//படிக்கறவங்களை ரொம்ப போர் அடிக்கலைன்ற நம்பிக்கையோட(?!) இந்தப் போஸ்ட்டை இத்தோட முடிச்சிக்கறேன்,நன்றி வணக்கம்! //
ReplyDeleteநீங்க சாப்பிட்டா எங்களுக்கு எப்படி போர் அடிக்கும் ..? இதை எல்லாம் கண்ணுக்கு காட்டிடாதான் வயத்த வலிக்கும் ...!! அவ்வ்வ்வ்
//அதிரமா வரதுக்குள்ள எல்லாத்தயும் சாப்ட்டுட்டு எஸ்கேப் ஆகிடனும்//
ReplyDeleteஇதுல அ கோ மு + பிரியாணிதான் இல்லையே ஹா..ஹா..
// //பூரிய கான்ஸல் பண்ணிட்டு, ரஸமலாயை pack பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம்//
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... உலகத்தின் மேல்பக்கம் போனாலும் திருந்தீனமோ பாருங்கோவன்:)).//
ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டடடடடடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :-))
//[சந்தேகம் கேட்ட பார்ட்டிங்க(இது வேற பார்ட்டி;)) எல்லாரும்...."நோட் திஸ் பாயின்ட்!"]. அப்புறம் என்ன..எங்க வீட்டிலிருந்து கான்ட்வி-ன்னு முடிவு பண்ணிட்டாங்க. :) //
ReplyDeleteபழைய சாப்பாட்டில செஞ்ட ஸ்டஃப் இட்லியை விட்டுட்டீங்களே :-))))))))))))))))))ஹா..ஹா..
This comment has been removed by the author.
ReplyDelete//ஜெய்லானி said...
ReplyDeleteThis post has been removed by the author. ///
haa...haa....haa..... உஸ்ஸ்ஸ் அதிரா இப்பூடித்தான்.. நீங்க கொயம்பிடாதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்...
அ.கோ..முட்டையா ங்ங்ங்ங்ங்ங்க குடுக்கிறாங்க? ப்ப்ப்ப்ப்ப்ரீஈஈஈயாவோஒ?:))))
//haa...haa....haa..... உஸ்ஸ்ஸ் அதிரா இப்பூடித்தான்.. நீங்க கொயம்பிடாதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்... //
ReplyDeleteஸேம் கமெண்ட் ரெண்டுதடவை ப்பளீஸ் ஆகிடுச்சி அதான் ஒன்னை டெலிட் பண்ணிட்டேன் பயந்திடாதீங்க...!! :-)))))
ஹா....ஹா....ஹா.... ரோசாப்பூவோட பூஸை எங்கின கண்டாலும் என்ன ஆகிடப் போகுதோ என உதறுது எல்லோருக்கும்:)))... நாமதான் கெ.கி ஆச்சே:)) 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணு:)).
ReplyDeleteஅப்போ சும்மாதான் சிரிச்சூ வச்சேன்.... , இப்போ உண்மையாச் சிரிப்பூஊஊஊஊ வருது....:)))
ரொம்ப நல்லா போச்சுனு சொல்லுங்க..
ReplyDeleteஅனைத்து சாட் வகைகளும் சூபப்ர்ப்..இங்கேயும் கொஞ்சம் அனுப்பிவிடுங்க...
nothing can beat the joy of having potluck and having fun with friends and eating different types of food.
ReplyDeleteசாரி மீ லேட் ஊஉ
ReplyDelete//அடிச்ச வெயில்ல ஆடிப்பாடி(!) எல்லாரும் போய்ச் சேரவே 7 மணி ஆகிடுச்சு// யாரு ஆடினா யாரு பாடினா ன்னு சொல்லாம விட்டுட்டீங்களே ??
//என்னவர் நான் செய்த கான்ட்வியின் புகழைப் பாடி(!), ப்ளாகில் இருக்கும் கான்ட்வியையும் காட்டியிருக்கார்// பாவம் யார் மிரட்டலுக்கு பயந்து அவர் இந்த மாதிரி புகழ் பாடினாரோ ?? ஆல் கெ.கி ஸ் இந்த கருத்தை ஆமொதிப்பீங்கன்னு நெனைக்கிறேன் :))
//அடுத்தது பனீர் கபாப்..அது காலியான வேகமே தெரியாம ட்ரே எம்ட்டி!! :)// இந்த மாதிரி காண்ட்வி யும் எம்ப்டி ஆச்சான்னு ஜோள்ளாமலே ச்சே சொல்லாமலே நீங்க கேம்ஸ் க்கு போய்ட்டேங்க ?? சந்தேகம் தொடரும்ம்ம் ....
ReplyDelete//எதுக்குன்னு கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்குப் பரிசு கடேசிப் படத்தில் இருக்கு! ;) ;) // பூ ...இத நானே கண்டு பிடிக்கும் போது மத்த கர்ப்பூரம் எல்லாம் கண்டு பிடிக்கறது என்ன கஷ்டமா என்ன ... இதுக்கு போய் ரச மலாய் எல்லாம் எதுக்கு ::))
//சரி,ரொம்ப விளையாடிட்டோம்னு அடுத்த ரவுண்டு சாப்டப் போனோம்// ரொம்ப விளையாடிட்டோம்.?? இதுதாங்க எனக்கு பிரியவே மாட்டேங்குது ?? வேற யாருக்காச்சும் பிரியுது ??
ReplyDelete//ஒரு(!) பானிபூரி, டைட் க்ளோஸப்புல....என்சொய்!!! ;) ;)// டாங்க்ஸ் எங்க எல்லாருடைய வயித்தெரிச்சலையும் கொட்டி கிட்டீங்க நல்லா இருங்க :))
//கடைசியில் உள்ளது தேங்காய் சட்னி போல உள்ளதே
ReplyDeleteஅதுதான் ஸ்வீட்டா// ஹையோ சிவா இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே ?? நல்ல வேளை ரச மலாயில ரசம் எங்கேன்னு கேக்காம விட்டீங்களே?
ரச மலாய் என் favourite ஸ்வீட்
//நம்ம ஊரு இட்லி தோசை கூட கிடைக்கம இருக்கும் எனக்கு // மகி அக்காகிட்ட stuffed இட்லியும, அப்பாவி கிட்டே நோர்மல் இட்லியும் செஞ்சு பார்சல் பண்ண சொல்லுங்கோ.. நான் வேணுமுன்னா கோல மாவு கொழம்பு தொட்டுக்க அனுப்புறேன்
புகையா வருது. ஹும்// யாராச்சும் fire brigade க்கு சொல்லிட்டீங்களா ?? புகை ஏன் snow ன்னால இருக்குமோ :))
ReplyDelete//உலகத்தின் மேல்பக்கம் போனாலும் திருந்தீனமோ பாருங்கோவன்:)).// உலகத்தின் எந்த பக்கம் போனாலும் சாப்பாடு வேஸ்ட் ஆக்க கூடாது ...எங்க வீட்டுக்கு வரும் friends க்கு நானே பாக் பண்ணி கொடுத்துடுவேன் .. கத்தி முனையில ஹீ ஹீ
மகி, படங்கள் , சப்பாடுகள், ஸ்நாக்ஸ் எல்லாமே சூப்பர்.
ReplyDeleteநீங்க ரண்டு பேரும் ஏன் ஒரே குரூப்பில் இருந்தீங்க என்பது இன்னும் விளங்கவில்லை????!!!
நேற்றே இந்த போஸ்ட் படிச்சுட்டேன். கமன்ட் போட மூட் வரவில்லை. எங்கள் பக்கம் நேற்று தண்ணீர் பை உடைஞ்சு இன்னும் தண்ணீர் வரவில்லை. எனக்கு ஒரே கடுப்பா வருது. இப்பதைக்கு வரும் போல இல்லை. உனக்கு நல்லா வேணும் என்று மனதினுள் யாரும் திட்டாதீங்கப்பா பிறகு எங்க ஜெய் போல கனவிலை வந்து கண்ணை நோண்டிப் போடுவன். சாக்கிரதை!!!
//சரி, நம்பர் சொல்லும்போது எங்களுக்கு இடைல எதுக்கு கரெக்ட்டா ஒரு ஆளை நிக்கவச்சிக்கிறோம்னு கண்டு புடிச்சிட்டீங்களா?//
ReplyDeleteஹையோ... இது பெரிய தங்கமலை ரகசியம் ம்ஹூம்.... பக்கத்தில பக்கத்துல இருந்துஊஊஊ முட்டுப்பட்டுட்டாஆஆஆ:))....
முட்டுப்பட்டா? முட்டுப்பட்டா? கமான் கமான்ன்ன்ன்:):)... அப்பூடீன்னு நீங்க அவ்திப்படுவது கேட்குது... போய் வேலையைப் பார்ப்பேளாம்ம்ம்ம்ம்:)))).
கீரிஜா:) வுக்கு வந்த டவுட்டெல்லாம் எனக்கும் வந்திட்டுதூஊஊஊஊ:))).
கடவுளே... வன் ...ரூ.... ஃபோர்:))... டோண்ட் டிசுரேப்பு மீஈஈஈஈ:)) நான் யோகால பிசியாயிருக்கிறேன்.... என்னைத் தேடிட வாணாம்... ரசமலாய் தாறேன் வங்கோ எண்டாலும் வரமாட்டேன்:)))).
ஹையோ... என்ன வான்ஸ்ஸ்ஸ்? அப்போ எப்படி சமாளிக்கிறீங்க?.
ReplyDeleteஅதிஸூ, மிக்க நன்றி. இந்த வீட்டுக்கு வந்து 6 வருடங்களில் இப்ப தான் முதல் முறையாக தண்ணீர் இல்லாமல் போனது. முன்பு வாளியில் தண்ணீர் எடுத்து வைப்பதுண்டு. அந்தப் பழக்கம் கொஞ்ச நாட்களில் மருவி காணாமல் போய் நேற்று கஷ்டப்பட்டோம். கடையில் தண்ணீர் வாங்கினார் என் வூட்டுக்காரர். இருந்தாலும் பைப்பை திறந்து கழுவும் சுகமே தனி தான்.
ReplyDeleteNice write up Mahi. Mouth watering snacks.
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டுன்னு சொல்லிச்சொல்லியே மொதஆளா வந்துட்டீங்க சிவா! :)
ReplyDelete/கடைசியில் உள்ளது தேங்காய் சட்னி போல உள்ளதே அதுதான் ஸ்வீட்டா/என்னாதூஊஊஊ? தேங்காச்சட்னியா?! இந்தக் கொடுமையக் கேக்க ஆளில்லையா? ரஸமலாய் சாப்பிட்டதே இல்லையா சிவா?!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
/நான் என்ன செய்வேன்... நான் என்ன செய்வேன்... யாராவது இதெல்லாம் பார்சல் பண்ணி தாங்கோ..../டென்ஷன் ஆவாதீங்க ராஜேஷ்,பார்ஸல்தானே? கட்டாயம் அனுப்பிடறேன்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
இமா,ஸ்னோலவால புகை வருமாம், கிரிசாக்கா சொல்லிருக்காக, அவிகளே பயர் ப்ரிகேடுக்கும் சொல்லிட்டாகளாம்,புகையெல்லாம் இந்நேரம் அடங்கிருக்கணுமே? ;)
நன்றி இமா!
~~
/நானும் அந்த பார்ட்டில உங்க பின்னாடி தானே நின்னுகிட்டு இருந்தேன் பாத்தீங்களா?/ஒரு நிமிஷம் குழம்பிப்போயிட்டேன் லஷ்மிம்மா! நல்லாவே காமெடி பண்றீங்க! நன்றிம்மா!
~~
/அப்படியே உணவுவகைகளை டேஸ்ட் பண்ணியவர்களையும் போட்டு இருக்கலாமே? :-)/ அனுமதி இல்லை ஸாதிகாக்கா! ;) இருந்திருந்தா கண்டிப்பா போஸ்ட் பண்ணிருப்பேன்ல?!
நன்றி!
~~
/இன்னும் சாப்பிடா மயக்கம் போகவில்லையோ எழும்புங்கோவன்../ஹா ஹா அதிரமா,அது சாப்பிடா மயக்கம் இல்ல, சாப்பிட்ட மயக்கம்! பார்ட்டிக்கப்புறம் 2 நாள் நல்ல தூக்கம்! நான் தூங்கும்போது வந்து எழுப்பிருக்கீங்க, பச்சைக்கல்லு மோதிரம் போட்டுட்டு எழுப்பிருந்தா முழிச்சிருப்பேன்,ஹிஹிஹி!
rapid fire போட்டோ சூப்பர்! :)
~~
மீரா,நீங்களும் ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிடுங்க! ;)
தேங்க்ஸ் மீரா!
/பழைய சாப்பாட்டில செஞ்ட ஸ்டஃப் இட்லியை விட்டுட்டீங்களே :-))))))))))))))))))ஹா..ஹா../ ரெம்ப சிரிக்காதீங்க ஜெய் அண்ணா,பல்லு சுளுக்கிடப்போகுது! கர்ர்ர்ர்! இட்லில்லாம் உங்கள மாதிரி ஸ்பெஷல் கெஸ்ட்ஸ்டுக்கு மட்டும்தான்! ஹிஹி!
ReplyDelete/நீங்க சாப்பிட்டா எங்களுக்கு எப்படி போர் அடிக்கும் ..? இதை எல்லாம் கண்ணுக்கு காட்டிடாதான் வயத்த வலிக்கும் ...!! அவ்வ்வ்வ்/ :) இப்பூடியெல்லாம் சாபம் விடக்குடாது!
நன்றி ஜெய் அண்ணா!
~~
///ஜெய்லானி said...
This post has been removed by the author. ///
haa...haa....haa..... உஸ்ஸ்ஸ் அதிரா இப்பூடித்தான்.. நீங்க கொயம்பிடாதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்...
/ உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! இப்பல்லாம் டெலிட் ஆன கமென்ட்டை வேரோட பிடுங்கக் கூட விடமாட்றாங்களே!! ஹ்ம்ம்..பாவம் ஜெய் அண்ணா! என்ன விளக்கினாலும் நாங்க சிரிப்பமே! ஹா ஹா ஹா!
~~
/அப்போ சும்மாதான் சிரிச்சூ வச்சேன்.... , இப்போ உண்மையாச் சிரிப்பூஊஊஊஊ வருது....:)))/ எனக்கும்,எனக்கும்! அப்புடியேதான் சிரிப்பூ வருது அதிரா! :D
~~
இந்தக் கொடுமையக் கேக்க ஆளில்லையா? ரஸமலாய் சாப்பிட்டதே இல்லையா சிவா?!
ReplyDelete//
NO...I NEVER EAT BEFORE.
கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. ஆமாம்,பார்ட்டி நல்லா இருந்தது! :)
ReplyDeleteஜெயஸ்ரீ,தேங்க்ஸ்ங்க!
/பூ ...இத நானே கண்டு பிடிக்கும் போது மத்த கர்ப்பூரம் எல்லாம் கண்டு பிடிக்கறது என்ன கஷ்டமா என்ன ... இதுக்கு போய் ரச மலாய் எல்லாம் எதுக்கு ::))// தெரிலன்னா ஸ்ட்ரெய்ட்டா தெரிலன்னு சொல்லிடோணும், இப்புடி நைஸாப் பேசி நழுவக்குடாது கிரிசாக்கா! ஆக மொத்தம் என்னன்னு நீங்க கண்டுபிடிக்கலைன்னு தெரிந்துபோச்சு! ;) ;)
சரம் சரமா கருத்துச் சொன்னதுக்கு நன்றிங்க கிரிஜா! :)
/நீங்க ரண்டு பேரும் ஏன் ஒரே குரூப்பில் இருந்தீங்க என்பது/ கிரிஜாகிட்ட "இதான் கற்பூரம்!"னு சொல்லப்போனேன், /இன்னும் விளங்கவில்லை????/னு சொல்லி ஸ்டாப் பண்ணிட்டீங்களே வானதி? ;) ஒரே க்ரூப்ல இருந்தா வெற்றியும் தோல்வியும் ரண்டு பேருக்கும்தானே. டீம் மாறினா வம்புதான? அதேன்! ;) :)
தண்ணி பைப் சரியாகி தண்ணி வந்தாச்சா? ஒருவேளை நீங்க எழுத்துப் பிழை கண்டுபுடிக்கீற கோபத்தில பூஸார் தன் சகாக்களை அனுப்பி தண்ணிக் குழாயை கடிச்சி உடச்சிட்டாரோ?!
/ஹையோ... என்ன வான்ஸ்ஸ்ஸ்? அப்போ எப்படி சமாளிக்கிறீங்க?./இதப் பாத்தா டவுட்டு தாஸ்தி:)யாகுது! எதுக்கும் ஜாக்கிரதையாவே இருங்கோ! ;)
எனக்கு கரன்ட் கட் அனுபவம் இருக்கு.தண்ணி...ம்ம்ம்ம்! டச்வுட்!!டச்வுட்! :)
நன்றி வானதி!
மஹேஸ் அக்கா நன்றிங்க!
சிவாத்தம்பி,சீக்கிரமா ஒரு ப்ளேட் இட்லியும் கெட்டிச்சட்னியும்(ரஸமலாய்தான், உங்க பாஷைல!!) சேர்த்து சாப்பிடுங்க. :)
கருத்து தெரிவித்த அன்புள்ளங்களுக்கு நன்றி! இனிமேலும் இதுபோலவே வந்து கமென்ட் கும்முங்கோ என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
உன் பார்ட்டி, உன்னுடைய ஆதரவாளர்கள் கமென்ட் பார்ட்டியென அமக்களமாக நடந்த எல்லா பார்ட்டிகளும் ரொம்பவே ரஸிக்கும்படி இருந்தது. காண்ட்வி ரொம்பவே ப்ரபலமாகிவிட்டது. உன் ஆதரவாளர்களும் அப்படியே. மிகவும் மகிழ்ச்சி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி காமாட்சிம்மா!
ReplyDeleteநீங்களும் உங்கள் ஹஸும் ஒரே டீமில் இருப்பீங்க அதானே சங்கதி..
ReplyDeleteசாட் ஐட்டம்ஸ் எல்லாம் சூப்பர்,.