Monday, August 22, 2011

கோடைக்கொண்டாட்டம்-3

வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க ஒரு முக்கியமான ஹெல்த்தி எஸ்கேப் பழங்கள்தான்! பழங்களை ஜூஸாகவோ, ஸ்மூத்தி-மில்க் ஷேக் ஆகவோ குடிக்கறதை விட நறுக்கி அப்படியே சாப்பிடுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனா என்னவருக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் கூட ஆரஞ்ச் ஜூஸ் இல்லைன்னா சாப்பிடவே மாட்டார். அதனால் ஒரு "ஸிம்ப்ளி ஆரஞ்ச்-ஒரிஜினல்" ஜூஸ் பாட்டில் எங்க ஃப்ரிட்ஜில் இருந்துட்டே இருக்கும்.

நான் சீஸனுக்கேத்த பழங்களா வாங்கிருவேன். ஸம்மர் ஃப்ரூட்ஸ்லிலே முக்கியமானது கேன்டலூப்(canteloupe) (நம்ம ஊர்ல கிர்ணிப்பழம்னு சொல்லுவாங்களோ இதை?) இந்தப்பழம் சூப்பரா இருக்கும். பீக் ஸீஸன்லே $0.99கெல்லாம் சூப்பர் பழம் கிடைக்கும். ஹனி டியூ மெலன் என்று ஒரு பழமும் இருக்கு,அதுவும் வாங்குவோம்.

பழத்தை வாங்கிவந்த உடனே நறுக்காம 2-3 நாள் வைச்சிடணும், நல்லா பழுத்ததும் கேன்டலூப் நல்லா மணக்கும், அப்ப நறுக்கி, தோல் சீவி சின்னத்துண்டுகளா நறுக்கி டப்பாலே போட்டு ப்ரிட்ஜ்லே வைச்சுடலாம். வெயில் நேரத்திலே சில்லுன்னு சாப்பிட நல்லா இருக்கும். எனக்கு சிலநாள் இதுவே லன்சா ஆகிடும்! ;)

NB.படத்தில் இருக்கற பூ கார்விங் நான் செய்ததிலை மக்களே..அதுவும், இன்னும் சில படங்களும் கூகுள் இமேஜஸ்லே சுட்டது! ;)
~~~~
ஊரில் பப்பாளியெல்லாம் காசு குடுத்து வாங்கியதா சரித்திரமே இல்லை, இங்கே ஒரொரு பழம் குறைந்தது $4 இருக்கும்! அம்புட்டு காஸ்ட்லீ!! பப்பாளிப் பழ(த்தையு)ம் நறுக்குவது எப்படின்னு ஒரு தனிப் பதிவு போட நினைச்சேன், ஆனா பாருங்க, உங்க நல்ல நேரம்,மனசை மாத்திகிட்டேன். ஹிஹி! சரி வாங்க, பப்பாளி நறுக்குவோம்!
பப்பாளிப் பழத்தை அதோட தலைப்பக்கம் கொஞ்சம் வட்டமா நறுக்கி தூரப்போட்டுடுங்க. அப்புறம் பீலர் அல்லது கத்தி ரெண்டுல எது உங்களுக்கு வசதியா இருக்கோ அதால பழத்தின் தோலை சீவிருங்க. பழத்தை ரெண்டாப் பிளந்து ஒரு ஸ்பூன் வச்சு விதையெல்லாம் எடுத்துருங்க.
அப்புறமா நீளநீளத்துண்டுகளா நறுக்குங்க.

அப்பவே சாப்பிடறதா இருந்தா ஒரொரு துண்டையும் ஒரொரு ஆளுக்கு குடுத்திரலாம். வைச்சு சாப்பிடறதா இருந்தா இப்படி bite size துண்டுகளா நறுக்கி டப்பாலே போட்டு ப்ரிட்ஜ்லே வைச்சு வைச்சு சாப்பிடலாம்! :)

இந்தப்பழம் பார்க்கறதுக்கு சூப்பர் கலரா இருந்தது, ஆனா இனிப்பு இல்லை. :-| ஆனா எனக்கு பப்பாளின்னு பேப்பர்ல எழுதிகுடுத்தாக்கூட சாப்பிடுவேன், அதனால நோ ப்ராப்ளேம்! :)
~~~
சில பழங்கள் அவருக்கு புடிக்காது,நானே வாங்கிவந்து, நானே கட்பண்ணி, நானே சாப்பிட்டு முடிப்பேன். :) அந்த லிஸ்ட்லே இருப்பது இந்தப் படத்தில் இருக்கும் பழங்கள். ஆப்பிள், பியர்,ஸ்ட்ராபெரி,திராட்சை ,தர்பூசணி. இதெல்லாம் அவர் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார். எனக்கு தர்பூசணியைத் தவிர மற்ற பழங்களை நறுக்கக்கூட வேண்டாம், கழுவி அப்புடியே :) சாப்பிடுவேன்.
ஆப்பிள்ள Gala ஆப்பிள்தான் கொஞ்சம் நம்ம ஊர் ஆப்பிள் போல ருசி இருக்கும். அதனால் மத்த வெரைட்டி ஆப்பிள் வாங்க மாட்டேன். பியர் பழத்தில் bosc pear-தான் வாங்குவேன். ஸ்ட்ரா பெரி-திராட்சைல எந்த கட்டுப்பாடும் இல்ல! ;) தர்பூசணியை வழக்கம்போல கட் பண்ணி, சின்னத்துண்டுகளா நறுக்கி வைச்சிருவேன். அது புண்ணியம் செஞ்சிருந்தா எப்பவாவது ஒரு முறை என்னவரின் கருணைப்பார்வை அதுமேலே விழும்! ;)
~~~
இந்தப் படத்தில் ப்ளூ பெரி, ராஸ் பெரி, ப்ளாக் பெரி பழங்கள் இருக்கு. மூணு பழங்களுமே (என்னைப் பொறுத்தவரை) போட்டோஜெனிக் பழங்கள்! ;) பார்க்க அழகா இருக்கும், ஆனா ருசி ஆஹா-ஓஹோன்னு சொல்ல முடில! ப்ளூ பெரி ஓக்கே. மத்த ரெண்டு பழங்களும் புளிப்ப்ப்ப்ப்ப்ப்பூ!!

தெரியாம வாங்கிட்டு வந்துட்டேன், சாப்பிடவே முடில. வேற என்ன செய்யலாம்னு தேடினா..பான்கேக், கேக், மஃபின் ரெசிப்பிகள்தான் கண்ணில் பட்டுது. ஹெல்த்தியா சாப்பிடணும்னு பழம் வாங்கிட்டு வந்து கேக் பண்ணுவியான்னு என் மனசாட்சி கேட்டதால் அந்த ஆப்ஷனையும் விட்டுட்டேன். ;) நான் வாங்கிய நேரம் இதெல்லாம் புளிக்குதோ, இல்ல ருசியே இப்புடித்தானோ தெரில, எல்லாம் ஒரு அனுபவம்தான்! இனிமேல் வாங்கமாட்டம்ல?! ;)

கோடைக் காலம் கிட்டத்தட்ட முடிஞ்சு இலையுதிர்காலம் தொடங்கப்போகுது. மூணு பகுதியா நான் போட்ட மொக்கையை சகித்து, பொறுமையாப் படிச்சு கமென்ட் போட்டு என்னுடன் கோடையைக் கொண்டாடிய அன்புள்ளங்களுக்கு நன்றி! :)

25 comments:

 1. இன்னும் சில படங்களும் கூகுள் இமேஜஸ்லே சுட்டது! ;)//

  சுட்ட பழமா , சுடாத பழமா ??????

  ReplyDelete
 2. எனக்கு பப்பாளின்னு பேப்பர்ல எழுதிகுடுத்தாக்கூட சாப்பிடுவேன், அதனால நோ ப்ராப்ளேம்! :)//

  க்மான்ட்ல எழுதிக்கொடுத்தா சாப்பிடுவீங்களா .... பப்பாளி

  ReplyDelete
 3. பழங்களின் படங்களும் பதிவும் அருமை பாராட்டுக்கள்

  ReplyDelete
 4. கொளுத்தும் கோடைக்கேற்றாற் போல,
  இனிக்கும் பழங்களை நீங்கள் உண்டு மகிழ்ந்ததோடு, நாமும் அவற்றினை உண்டு நன்மையடைய வேண்டும் எனும் நோக்கில் பகிர்ந்திருக்கிறீங்க.
  நன்றி.

  ReplyDelete
 5. எனக்கும் பெர்ரி வகைகள்ல ஸ்ட்ராபெர்ரியை தவிர வேறு எதுவும் பிடிக்காது. எங்களுக்கு அடிக்கிற வெய்யிலுக்கு(105 லருந்து இறங்கவெயில்லை) இப்போ பழங்களும் ஜூஸும் தான் அதிகம் தேவைப்படுது. அதோட கம்மங்க்கூழும்.

  ReplyDelete
 6. பழங்கதை பேசி சிலாகிப்பார்கள்.இப்போ நீங்கள் பழக்கதை பேசி சிலாகிக்கின்றீர்கள்.வெரிகுட்.

  ReplyDelete
 7. I like eating fruit salad when some one else make for me, i am lazy to eat fruits hehe..

  ReplyDelete
 8. /க்மான்ட்ல எழுதிக்கொடுத்தா சாப்பிடுவீங்களா .... பப்பாளி/grrrrrrrrr! this is too much Maya! :)

  Thanks for the comments Rajesh,nirupan,suganthi akka,
  ஸாதிகா akka,& Raji!

  :) :)

  ReplyDelete
 9. பப்பாளி எப்பவுமே நல்லதும்
  பாங்க. ஆனா அதோட ஸ்மெல்
  சில பேருக்கு பிடிப்பதில்லே.

  ReplyDelete
 10. குளுமை குளுமை....

  ReplyDelete
 11. எனக்கும் பப்பாளி ரொம்ப பிடிக்கும்...எங்க வீட்டில் நான் மட்டும் பப்பாளி சாப்பிடுவேன்...வராவாரம் எந்த பழத்தினை வாங்குகிறேன் இல்லையே இந்த பப்பாளி லிஸ்டில் இருக்கும்...

  ReplyDelete
 12. பப்பாளி வயிற்றுக் கோளாறுக்கு நிவாரணமளிக்கும். எந்த 5 ஸ்டார் ஹோட்டலிலும் ப்ரேக்பாஸ்ட்டில் இது இடம் பெராமலிருப்பதில்லை. காயும் வங்காளத்தில் சமையலில் அடிக்கடி உபயோகப்படுகிறது. மருத்துவ குணமுள்ள வஸ்து என்பதை மறக்க முடியாது. வழக்கம் போல மஹியின் எழுத்து வன்மையில் படங்களும்,விதரணையும், ஜொலிஜொலிக்கிறது.

  ReplyDelete
 13. ஜுஸா குடிப்பதை விட பழங்களை மிக்ஸ் செய்து புரூட் ஸலாடா சாப்பிடதான் எனக்கும் பிடிக்கும் :-)

  ReplyDelete
 14. கார்விங் தெரியுமான்னு கேட்கலாமுன்னு வந்தேன் , சுட்டதுன்னு சொல்லி தப்பிச்சீங்களே.ஹா..ஹா.. :-))

  ReplyDelete
 15. ஜெய் அண்ணா,இங்கே பப்பாளி நிறைய இடங்கள்ல தள்ளுவண்டில வைச்சு வித்துட்டு இருக்காங்க, பாத்திட்டு இருக்கேன்,சாப்பிட நேரம் வரல்ல.சாப்ட்டு வந்து சொல்லறேன். :)


  கார்விங் செய்யும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லைங்க,அதான் இமேஜஸ்ல சுட்டுட்டேன். ;)

  Kamatchimma,geetha,laxmimma,chithra thanks a bunch for your comments.

  ReplyDelete
 16. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்களையெல்லாம் உதாரணம் காட்டமாட்டினம், கூகிள்ள சுடுகினமாம்..

  http://gokisha.blogspot.com/2010/05/blog-post_28.html

  ஜெய்... போயும் போயும் பப்பாளிக்கா இந்த சவுண்டூஊஊஊஊஊ:))

  ReplyDelete
 17. //ஜெய்... போயும் போயும் பப்பாளிக்கா இந்த சவுண்டூஊஊஊஊஊ:)) //

  மஹி பேப்பர்ல எழுதினாலும் சாப்பிடுவாங்களாம் , ஹி..ஹி.. இங்கே எத்தனை தடவை எழுதி இருக்கேன் கவனிக்கலையா ..!! ஹா..ஹா.. :-))

  ReplyDelete
 18. சின்ன வயசில வித விதமா( வீட்டில நிறைய மரம் இருந்தது டூ மச் இனிப்பா இருக்கும் , ) சாப்பிட்டு ஒரு நேரம் பேரை கேட்டாலே வெறுப்பா இருக்கு .

  ReplyDelete
 19. /கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்களையெல்லாம் உதாரணம் காட்டமாட்டினம், கூகிள்ள சுடுகினமாம்../ athira,unga post-la irukka fruits ellam naan saapdaliye,athaan google-a sutten! ;)


  /ஹி..ஹி.. இங்கே எத்தனை தடவை எழுதி இருக்கேன் கவனிக்கலையா ..!! ஹா..ஹா.. :-))/grrrrrr! I can't eat the laptop monitor Jai anna! Mudinja unga veetu pappali-a enakku parcel anuppa sollungalen?! ;) ;)

  Thanks for the comments Athira & Jai anna!

  ReplyDelete
 20. //ஜூஸாகவோ, ஸ்மூத்தி-மில்க் ஷேக் ஆகவோ குடிக்கறதை விட நறுக்கி அப்படியே சாப்பிடுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.// எனக்கும். மரக்கறி கூட முடிஞ்சா பச்சையாவே சாப்பிட்டுருவேன்.

  //I can't eat the laptop monitor Jai anna!// ;))

  மீன் சுப்பர். அட! அது கூட மஞ்சலா இருக்கே!

  ரொக்மெலன் மலர் சூப்பர்.

  பப்பாளி.. ஊர்ல ஸ்கூல் விட்டுப் போனா ஆளுக்கு ஒரு முழுப்பழம் சாப்பிடுவோம். அதுவும் உரிக்காத தேங்காய் சைஸ்ல இருக்கும். இங்க கிடைக்கிறதை சாப்பிட வேண்டியதுதான்.

  //தெரியாம வாங்கிட்டு வந்துட்டேன், சாப்பிடவே முடில.// ;) அடுத்த தடவை மேல கஸ்டர்ட் இல்லாட்டா கன்டென்ஸ்ட் மில்க் விட்டு சாப்பிட்டுப் பாருங்க. ;P

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails