Saturday, October 29, 2011

தீபாவளி பலகாரம்! :)

தீபாவளி கழிஞ்சு ரெண்டு மூணு நாள் கழிச்சு நிதானமா எங்கூட்டுப் பலகாரமெல்லாம் ப்ளாகுக்கு வந்திருக்கு..அட்ஜஸ்ட் பண்ணிட்டு சாப்பிடவாங்க! :) முதல் முறையா மேத்தி லட்டு, ரோஸ் ஃப்ளேவர்ட் தேங்காய் பர்ஃபி அப்புறம் மைசூர்பாகு & அதிரசம்..

ஆரது..அதிரசத்தால மைசூர்ப்பாவ ஒடைக்கறதா இல்ல இதால அதை ஒடைக்கிறதான்னு கேக்கறது???கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இப்புடியெல்லாம் ஆராச்சும் கமென்ட் போட்டீங்க...???!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அப்பறம் ஆருக்கும் பலகாரம் கிடையாது,சொல்லிட்டேன்! ;)

காராபூந்தி - ஓமம் இல்லாத ஓமப்பொடி(!) ரெண்டும் செய்தேன்..அப்புடியே கொஞ்சம் "மானே,தேனே, பொன்மானே" (கடலை-கறிவேப்பிலை-மிளகாய்த்தூள் எக்ஸட்ரா!;)) மிக்ஸ் பண்ணி மிக்ஸராக்கிட்டேன். வட்டமா கொஞ்சம் முறுக்கு, நீளமா கொஞ்சம் முறுக்கு!

சிலபல:) நாட்களா என் லேப்டாப்பில் சிலபல:) அப்ளிகேஷன்ஸ் இன்ஸ்டால் பண்ணாம இருந்ததால் ப்ளாக் பக்கம் அதிகம் வரமுடியல! எல்லாரும் வந்து சந்தோஷமாப் பலகாரம் சாப்புடுங்கோஓஓஓஓ!
நன்றி,வணக்கம்!
:)))))))

21 comments:

  1. சாப்பிட்டாச்சூஊஊஊஊ/

    ReplyDelete
  2. பரவா இல்லை மகி.அங்கே இருந்து கொண்டே தீபாவளிக்கு இத்தை ஐட்டம் செய்து அசத்தி இருக்கீங்க.பகிர்வுக்கு நன்றிப்பா!

    ReplyDelete
  3. /அங்கே இருந்து கொண்டே தீபாவளிக்கு இத்தை ஐட்டம் செய்து /ஸாதிகாக்கா, இங்கே இருப்பதால் வேறு வழியில்லாம நாமே செய்யவேண்டியிருக்கு. ஊர்லன்னா கடையில பலவகையா வாங்கியிருபோம்ல?ஹிஹிஹி!

    இங்கே இன்டியன் ஸ்டோரில் கிடைக்கும் இனிப்புகள் எனக்கு பிடிக்கறதில்லை,புதுசா ட்ரை பண்ணிப்பார்க்க ஆர்வம்-வாய்ப்பு இருப்பதால் இதெல்லாம் நடக்குது.:)

    நன்றி ஸாதிகாக்கா! :)

    ReplyDelete
  4. Marupadiyum Diwali kondattama... aha.Super tasty dishes.

    ReplyDelete
  5. நாக்கில் எச்சி ஊருது

    ReplyDelete
  6. ம் அதிரசமும்
    அந்த மைசூர் பாக்கும்
    தேங்க பார்பியும்
    பார்சல் ப்ளீஸ்
    இப்படி எல்லாம் படம் போட்டு .....
    எல்லாம் சாப்டினும் போல இருக்கே
    எங்க போக அவ்வவ்

    ReplyDelete
  7. லட்டுக்கும்
    தேங்க பார்பிக்கு எல்லாம் பொட்டு வச்சு
    அழகா இருக்கு:) சாப்பிட எப்படி இருக்கோ?(baby athira please taste it..)


    ம் விரைவில் உங்க வீடு பக்கத்தில
    வீட்டை மாத்திடனும்

    ReplyDelete
  8. விரிவான கமெண்டுகள் நாளை வரும் .
    இப்ப ப்ளீஸ் அதிரசத்த அதிராவுக்கு ஜூம் செஞ்சு காட்டுங்க ,ட்டுங்க, டுங்க ங்க , க ,.....

    ReplyDelete
  9. ஹாய் மஹி...,எப்படி இருக்கீங்க...?பேசி நாளாச்சு.தீபாவளி எல்லாம் எப்படி கொண்டாடினீங்க... செமையா,சூப்பரான பலகாரத்தோடு வந்திருக்கீங்க.நீங்களும்,அண்ணனும் எங்களை வெறும் பார்க்கவச்சிட்டு சாப்பிடுவது நியாயமா...?இந்த அப்சராவுக்கு ஒரு பார்சல் அனுப்புறதில்லையா...
    பார்க்கும் போதே அசத்தலாக இருக்கு மஹி....
    நன்றி எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  10. அவ்வ்வ்வ்வ்வ்:))..... இவ்ளோ செய்தது மகியா? சாப்பிட்டது ஆரு?:)).

    அதென்னது உழுந்துவடைபோல இருக்கு, ஆனா இல்லை(வடை).

    மேத்தி லட்டு என்றால்.... திருப்பதி லட்டுத்தானே.... பார்க்க சூப்பராக இருக்கு....

    செய்முறையோடு படமும் பிளீஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  11. //siva wrote...
    லட்டுக்கும் தேங்க பார்பிக்கு எல்லாம் பொட்டு வச்சு அழகா இருக்கு:) சாப்பிட எப்படி இருக்கோ?(baby athira please taste it..)//

    நோ.... நோஒ.. எனக்கு இப்பத்தான் மேல் வாயில ஒரே ஒரு பால் பல்லு எட்டிப்பார்க்குது:))), அம்மா சொன்னவ.. இப்ப உப்படியான பல்லுடைகிற:))) பலகாரம் எதுவும் சாப்பிடப்படாதெண்டு:)))).

    ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க சிவா... மகி அக்கா பார்க்க முன்:))).

    ReplyDelete
  12. //angelin said...
    விரிவான கமெண்டுகள் நாளை வரும் .
    இப்ப ப்ளீஸ் அதிரசத்த அதிராவுக்கு ஜூம் செஞ்சு காட்டுங்க ,ட்டுங்க, டுங்க ங்க , க ,....///

    அதிரசமோ? .....ங்ங்ங்ங்ங்ஙேஙேஙே?:))))))...

    ஒருக்கால் யூம் பண்ணுறவையைக் கூப்பிடுங்கோ பார்ப்பம்:))).

    ReplyDelete
  13. பார்க்கவே அருமையாக இருக்கு,பின்ன ருசியை கேட்கணுமா?அதிரசம்,முறுக்கு எங்கூட்டுல எல்லாருக்கும் பிடிக்கும்,அப்படியே மிச்சம் மீதியிருந்தால் பார்சல்...

    ReplyDelete
  14. WOw mahi superb...recipies plz

    ReplyDelete
  15. மகி ,தெரியாம எங்க வீட்டுக்காரருக்கு இந்த ஸ்வீட் பலகாரத்தை காண்பிச்சுட்டேன்.ஒரே வார்த்தை "" படத்திலாவது பாத்துக்கறேன் "
    என்று சொன்னார் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் .
    இந்த கிறிஸ்மசுக்கு எட்டு பலகாரம் செய்யாட்டி .யாட்டி ,ட்டி பாருங்க இது அதிரா மேல் ஆணை .

    ReplyDelete
  16. Aaha, if only we were staying near by, I could have got my share ;) Lovely goodies! Hope you had a great Deepawali :)

    ReplyDelete
  17. இங்கே எதுவும் செய்ய முடியாமல் .வந்த அலுப்பு. நிறைய பட்சணங்கள் உன்னுடயது பார்த்தே நானும் பண்ணினமாதிரி த்ருப்தி ஏற்பட்டுவிட்டது. பட்சணங்களுக்கு குறைவில்லை இங்கும்..

    ReplyDelete
  18. athira said..//

    மேத்தி லட்டு என்றால்.... திருப்பதி லட்டுத்தானே.... பார்க்க சூப்பராக இருக்கு....//

    கர்ர்ர்ரர்ர்ர்ர் பூஸ் திருப்பதி லட்டு வேற மாதிரி இருக்கும் ,பெர்மின்காம்ல கோவில் இருக்கு ,கிடைச்சா பார்சல் அனுப்பறேன்

    ReplyDelete
  19. @க்றிஸ்டி,நன்றிங்க!
    ~~
    @என் ராஜபாட்டை ராஜா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    @சிவா,/தேங்க பார்பிக்கு எல்லாம் பொட்டு வச்சு
    அழகா இருக்கு:)//// எப்புடி,எப்புடி,எப்பூடி இப்புடி எல்லாம்??!!நல்லவேளை பவுடர்-fair & lovely எல்லாம் போட்டிருக்குன்னு சொல்லாம விட்டீங்களே? ;)

    //சாப்பிட எப்படி இருக்கோ?//சிரமம் பார்க்காம ப்ளைட்டைப் புடிச்சு ஒருநடை வந்தீங்கன்னா சாப்பிட்டும் பார்க்கலாம்! :)

    /(baby athira please taste it..)/ கர்ர்ர்ர்ர்ர்ர்,கர்ர்ர்ர்ர்னு கர்ச்சனை பண்ணியே பேபிஅதிராக்கு இருந்த ஒரே ஒரு பால்பல்லும் டான்ஸிங்காம்,நீங்கவேற!! :)))))))))

    நன்றி சிவா!
    ~~
    @ ஏஞ்சல் அக்கா,/அதிரசத்த அதிராவுக்கு ஜூம் செஞ்சு காட்டுங்க ,ட்டுங்க, டுங்க ங்க , க ,...../ ஹாஹாஹா! படத்துமேலே பேரெழுதியும் கூட பேபிஅதிராக்கு அதிரசம் எதுன்னு தெரில..இதுக்கும் மேலே என்ன பண்ணச்சொல்றீங்க?!
    ~~
    @அப்ஸரா,வெகுநாளுக்கப்புறம் வந்திருக்கீங்க,ஊர்ல செட்டில் ஆகியாச்சா? புதுவீட்டு அட்ரஸ் கிடைக்காததால பார்சல் அனுப்ப முடீலைங்க. அட்ரஸ் குடுங்க,அனுப்பிடறேன்! ;)
    நன்றி அப்ஸரா!
    ~~
    @அதிரா,/சாப்பிட்டது ஆரு?:))./நீங்கள்லாம் பக்கத்தில இருந்திருந்தா எல்லாரையும் டேஸ்ட் பண்ணவைச்சிருக்கலாம். இப்ப என்னவரின் ஆபீஸ் கொலீக்ஸ்தான் சாப்பிடறாங்க!:)

    //அதென்னது உழுந்துவடைபோல இருக்கு, ஆனா இல்லை(வடை).//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஸ்ட்ரிக்ட்ட்ட்ட்ட்ட்லி நோஓஓஓஓஓஓஓ கமென்ட்ஸ்!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    //மேத்தி லட்டு என்றால்.... திருப்பதி லட்டுத்தானே.... // இல்ல அதிரா,திருப்பதி லட்டு நீங்க சாப்பிட்டிருக்கீங்கதானே?அப்புறம் என்ன இது கேள்வி?!! :)
    BTW,அது மேத்தி இல்ல,மோத்தி!! மேத்தின்னா வெந்தயக்கீரை! எங்காத்துக்காரரும் இப்புடி சொல்லி எங்கிட்ட மாட்டிகிட்டார்.கி..கி..கி! வேணும்னா உங்களுக்கும் அவருக்கும் வெ.கீரை லட்டு செஞ்சு தரட்டுமா?!! ;);)

    /செய்முறையோடு படமும் பிளீஸ்ஸ்ஸ்./ போஸ்ட் பண்ணியாச்சு!:)

    //.அம்மா சொன்னவ.. இப்ப உப்படியான பல்லுடைகிற:))) பலகாரம் எதுவும் சாப்பிடப்படாதெண்டு:)))).ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க சிவா... மகி அக்கா பார்க்க முன்:)))./அவ்வ்வ்வ்வ்!!வ்வ்வ்வ்வ்வ்! க்க்க்க்காஆஆஆவா? ஆருக்கு?!!!

    /ஒருக்கால் யூம் பண்ணுறவையைக் கூப்பிடுங்கோ பார்ப்பம்:)))./உங்களுக்காக ஸ்பெஷல் யூமிங் கமரா :) ஓர்டர் பண்ணிருக்கன், வந்ததும் யூம் பண்ணிடுவோம்!
    நன்றி அதிரா!
    ~~
    @ஆசியாக்கா, அல் ஐனுக்கு பார்சல் ஆன் த வே! :)
    நன்றி ஆசியாக்கா!
    ~~
    @இனியா,லட்டு ரெசிப்பி போட்டாச்சு,மத்த ரெசிப்பிஸ் வந்துட்டே இருக்கு. :)
    நன்றிங்க!
    ~~
    @ஏஞ்சல் அக்கா,//இந்த கிறிஸ்மசுக்கு எட்டு பலகாரம் செய்யாட்டி .யாட்டி ,ட்டி பாருங்க இது அதிரா மேல் ஆணை// ஆனை:)யிடறதுக்கு நல்ல ஆளாப் புடிச்சீங்க போங்க! :))))))

    க்றிஸ்மஸுக்கு அச்சுமுறுக்கு செய்வீங்களா??:) நான் பேபியா இருக்கப்ப அக்காவின் ப்ரெண்ட் அக்கா வீட்லருந்து வர க்றிஸ்மஸ் பலகாரத்துலதான் முதல்முதலா அச்சுமுறுக்கு சாப்ட்டேன்! அப்ப இருந்து அச்சுமுறுக்கு ரொம்ப பிடிக்கும். செஞ்சு குடுங்க,சரியா?
    ~~
    @ராஜி,சீக்கிரமா யு.எஸ்.பக்கம் வந்துடுங்க! ;)
    நன்றி ராஜி!
    ~~
    @காமாட்சிம்மா,இந்தியா போயாச்சா? ரெஸ்ட் எடுத்துட்டு வட இந்திய பட்சண ரெசிப்பிகளோட வாங்க!:) நன்றிம்மா!
    ~~
    /கிடைச்சா பார்சல் அனுப்பறேன்/ அவங்களே வச்சு,வச்சு சாப்பிடறாங்களாம்,வெய்ட் பண்ணுங்க.உங்களுக்கும் பார்சல் அனுப்புவாங்க!;)

    ReplyDelete
  20. romba nalla iruku unga unavin rasanai.. ungal padivugalayum serthu..
    http://micreativecorner.blogspot.com
    http://vrcreativity.blogspot.com

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails