Tuesday, January 17, 2012

2 இன் 1 பொங்கல்

அவசரமாச் சமைக்கவேண்டிய நேரங்கள் வந்தா ஒரே கல்லில 2 மாங்கா அடிக்கிற மாதிரி ஒரே பொங்கல்ல இனிப்பும் காரமும் பண்ணிக்கற மாதிரி (ரூம் போட்டு யோசிச்சு) இப்படி ஒரு quick and easy ஐடியாவைக் குடுக்கிறேன்..என்ஜாய்!!!!! :)

தேவையான பொருட்கள்

பச்சரிசி-1கப்
பாசிப்பருப்பு-6 டேபிள்ஸ்பூன்
(1/4கப் +1/8கப்)
நெய் -2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரைப் பொங்கலுக்கு
பொடித்த வெல்லம்-1/2கப்
ஏலக்காய்-2
முந்திரி திராட்சை-தேவைக்கு

வெண்பொங்கலுக்கு
பச்சைமிளகாய்-1
சிறு துண்டு இஞ்சி
கறிவேப்பிலை -கொஞ்சம்
பொடித்த சீரகம்,மிளகு -11/2டீஸ்பூன்
பெருங்காயம்-1/8டீஸ்பூன்
முந்திரி-தேவைக்கு
உப்பு

செய்முறை
அரிசி-பருப்பை களைந்து, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும். 4-5 சத்தங்கள் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு முந்திரி-திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யிலேயே பெருங்காயப்பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி -பச்சைமிளகாய், பொடித்த மிளகு-சீரகம், முந்திரி இவற்றை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

வெல்லத்துடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு குறைந்த சூட்டில் அடுப்பில் வைக்கவும்.
இந்த டைம் கேப்புக்குள்ள குக்கரில் ப்ரெஷர் இறங்கியிருக்கும், திறந்து கரண்டியால் பொங்கலை மசித்து வைத்துக்கொள்ளவும்.
வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் சற்றே கொதிக்கவிடவும். கொதிவந்ததும் மசித்த பொங்கலில் பாதியை வெல்லப்பாகுடன் சேர்த்து கிளறவும்.
பொங்கல் வெல்லத்துடன் நன்கு கலந்து கொதிவந்ததும் ஏலப்பொடி, வறுத்த முந்திரி-திராட்சை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
குக்கரில் மீதமிருக்கும் பொங்கலுடன் வெண்பொங்கலுக்குத் தாளித்தவற்றை சேர்த்து,தேவையான உப்பும் சேர்த்து கிளறவும்.
அவ்ளோதாங்க..சூடான சர்க்கரைப் பொங்கல் & வெண்பொங்கல் தயார்! பரிமாறும் கிண்ணங்களுக்கு பொங்கல்களை மாற்றி, இரண்டு பொங்கலிலும் தலா அரை டேபிள்ஸ்பூன் நெய்யை சேர்த்து கலக்கிப் பரிமாறுங்க.
பொங்கல் செய்யும்போது கிடைக்கும் கேப்பிலேயே கொஞ்சம் தேங்காச்சட்னியும் அரைச்சுட்டேன்.இந்த முழு சமையல் ப்ராஸஸிலும் அடுப்பை ஆஃப் பண்ணவே இல்லை. :)
குக்கரை அடுப்புலே வைக்கும்போதே வடைக்கு மாவையும் அரைச்சேன்..ரெண்டு பொங்கலையும் கிச்சன்ல இருந்து டைனிங் டேபிளுக்கு மாத்தறதுக்குள்ளே வடைக்கு எண்ணெய் காய்ஞ்சிருச்சு,வடையும் சுட்டு எடுத்தாச்சு.
பொங்கலோ பொங்கல்!!!
சாப்பிடலாம் வாங்கோ!
:):)
குடும்பத்தில் எல்லாரும் கூடி, புத்தாடை உடுத்தி, வாசலிலே வண்ணக் கோலமிட்டு, மூன்று கல்லால் அடுப்புக் கூட்டி, புதுப்பானையிலே புத்தரிசிப் பொங்கலிட்டு, காய்கறிகள், மஞ்சள், கரும்பு, பொங்கல் எல்லாம் சூரியனுக்குப் படைத்து "பொங்கலோ பொங்கல்!!"னு சந்தோஷமாகக் கூவி ப்ளாகிலே போட ஆசையாய்த்தான் இருக்கு! ஆனா அதற்கு வழியில்லாதப்ப இப்படி GE cooking range-ல, Hawkins pressure cooker-ல, பாஸ்மதி அரிசியைப் போட்டு 2 இன் ஒன் பொங்கல் வைச்சு கொண்டாடிக்க(!) வேண்டியதுதான்!! என்ன சொல்றீங்க?! :)

Hope Everyone Had a Happy Pongal!

34 comments:

 1. நானே முதல் கொமென்ட்;) போட்டுக்கிறேன்.

  ReplyDelete
 2. க்ர்ர்ர் அது எப்புடி!! எனக்கு மெ.வடை வேணும்ம்ம்ம்ம் ஹும்! ஹும்! ;((

  ;))))) பொங்கல் வாழ்த்துக்கள் மகி.
  //ரெண்டு பொங்கலையும் கிச்சன்ல இருந்து டைனிங் டேபிளுக்கு மாத்தறதுக்குள்ளே வடைக்கு எண்ணெய் காய்ஞ்சிருச்சு,வடையும் சுட்டு எடுத்தாச்சு.// இருந்தாலும் ரொம்ப ஸ்பீடு நீங்க. ;)

  சூப்பர், கலக்கி இருக்கீங்க. வடை அழகா அழைக்குது. பொங்கலோ பொங்கல். ;)

  ReplyDelete
 3. /இருந்தாலும் ரொம்ப ஸ்பீடு நீங்க. ;)/ இருந்தாலும் ரொம்ப காமெடி பண்ணறீங்க நீங்க! ;)

  நன்றி இமா..இப்போதைக்கு நீங்க மட்டும்தான் வடை சாப்பிட வந்திருக்கீங்க.சாப்புடுங்க. :)))

  ReplyDelete
 4. மஹி 2-இன் 1- பொங்கல் சாப்பிட நானும் வந்துட்டேன். சூப்பர் டேஸ்ட்.

  ReplyDelete
 5. Pongal meduvadai combination is one of my favourite. Enjoyed the feast Mahi. Thank you. I too follow the same method and make the salt as well as sweet pongal. :-)

  ReplyDelete
 6. Two in one pongal makes it really a fast food,isn't it....
  Even I do the same-effective time management!he he!!!!
  Nice recipes,Mahi.

  ReplyDelete
 7. இரண்டு பொங்கலையும் ஒரே நேரத்தில் செய்தால் இதுதான் சுலப வழி. எல்லோருக்கும் ஃபாஸ்ட்டான
  பொங்கல் ரெஸிபி. கூடவே சுடசுட வடை. ரொம்பவே ரஸிக்கும்படி இருக்கு.

  ReplyDelete
 8. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. பொயிங்கள் சூப்பர்.. பார்க்கவே ஆசை... ஊரில் இருந்தபோது, இரு அடுப்பில் ஒன்றில் சக்கரை, இன்னொன்றில் வெண்பொங்கல், அந்த அடுப்பிலேயே வடையும் சுட்டு, கத்தரி + உருளைக்கிழங்கு பொரித்து தண்ணிக்குழம்பும் வைத்து, ஒரு இஞ்சிச் சம்பலும்.... இது இல்லாமல் பொங்கல் இருக்காது...

  இதெல்லாம் மலையேறினமாதிரி தெரியுது... அதிலும் துன்பம் துயரம் வந்து, இருந்த கொஞ்ச நஞ்சப் பொங்கலையும் இப்போ காணாமல் பண்ணிவிட்டது.

  ReplyDelete
 9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உப்பூடி பாத்திரம் மாத்திப் பொங்கினால் சாமிக்கு படைக்கக்கூடாதாம்.. ஒரே பானையில பொயிங்கினால்தான் அவர் சாப்பிடுவார் தெரியுமோ:)).

  ReplyDelete
 10. அதுசரி பொயிங்கல் படையல் எல்லாம் சரிதான், ஆனா அந்தக் ”ஹக்கிங்” தேவையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ReplyDelete
 11. //பொங்கல் செய்யும்போது கிடைக்கும் கேப்பிலேயே கொஞ்சம் தேங்காச்சட்னியும் அரைச்சுட்டேன்.இந்த முழு சமையல் ப்ராஸஸிலும் அடுப்பை ஆஃப் பண்ணவே இல்லை. :)//

  பெரீஈஈஈஈய கின்னஸ் சாதனை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).. எங்கட ஜெய்யை விட்டாலே 2 இன் வன் என்ன 4 இன் வன்னே செய்திடுவார்.. அந்தக் ஹப் ல:)) உஸ்ஸ்ஸ்ஸ் இனியும் இங்கின நிக்கப்பூடா:))

  ReplyDelete
 12. ஜெய், வடையும் போச்சு, ஆயாவும் போச்சு... லைன் கிளியர்:) இனிப் பயப்பூடாமல் லாண்ட் பண்ணுங்க...:))

  சே..சே.. இதையும் நானே பார்த்துச் சொல்லவேண்டிக்கிடக்கே:))).

  ReplyDelete
 13. வடை சூப்பர் மஹி......
  அதுல மட்டும் ஒரு நாலு இந்த பக்கம் அனுப்புங்க...

  ReplyDelete
 14. மார்கழி மாதம் முழுக்க எங்க வீட்டுல டெய்லி காலைல டிபன் பொங்கல் தான். சாப்பிட்டு, சாப்பிட்டு போர் அடிச்சு போச்சு... அதனால பொங்கல் எல்லாம் வேண்டாம்... வடை மட்டும் போதும்...

  ReplyDelete
 15. I love your writings, because it filled with humour and charm. Hope you had a wonderful Pongal!

  ReplyDelete
 16. டூ இன் ஒன் பொங்கல் ஐடியா !!!!!கிரேட் மகி .
  எங்க வீட்டில நான் வெண்பொங்கல் கணவரும் மகளும் ஸ்வீட் பொங்கல்
  இந்த ஐடியா யூஸ் செய்றேன் இனிமே .
  நானும் சண்டே வடை சுட்டேனே .சூப்பரா வந்தது .
  அதிராவுக்கு கமென்ட் வடை கிடைக்கல ..ஹப்பா இப்பதான் நிம்மதி

  ReplyDelete
 17. Great Idea to save time n energy.Luvly step by step demo Dear.Luks Yum Yum. Happy Pongal Dear.

  ReplyDelete
 18. மகி, சூப்பரோ சூப்பர். எங்க வீட்டில் ஒரு பொங்கல் சாப்பிடுவதே பெரும்பாடு. நான் சர்க்கரைப் பொங்கள் + பருப்புக் குழம்பு ஒன்லி தான். முன்னாடி அஞ்சலி பொங்கள் விரும்பி சாப்பிடுவா இப்பெல்லாம் டூ மச் இனிப்பு வேண்டாம் என்று சொல்வா. மகனுக்கு இனிப்பே பிடிக்காது. நான் பொங்கல், பருப்பு, தயிர் சாப்பிடுவேன்.

  ReplyDelete
 19. 2 இன் 1 பொங்கல் ருசியாக இருக்கிறது

  ReplyDelete
 20. ஸ்வீட் பக்கத்துல ஒரு பச்சை ஒரு மஞ்சள் என்னதூஊஊ...?? ..!!! :-)))

  ReplyDelete
 21. ஆஹா... வெண்பொங்கல் + சட்னி சாம்பார் சூப்பர் காம்பினேஷன் :-)))

  ஊரில் இருக்கும் போது சர்க்கரை பொங்கல் வாரத்துக்கு 3 நாள் இருக்கும் ....!! :-))

  ReplyDelete
 22. //இப்படி GE cooking range-ல, Hawkins pressure cooker-ல, பாஸ்மதி அரிசியைப் போட்டு 2 இன் ஒன் பொங்கல் வைச்சு கொண்டாடிக்க(!) வேண்டியதுதான்!! என்ன சொல்றீங்க?! :)//

  மஹி சொன்னா நோ அப்ஜஷன் :-))

  ReplyDelete
 23. வெண்பொங்கலை மட்டும்தான் குக்கரில் செய்வேன்,இனிப்பு பொங்கலை குக்கரில் செய்தால் சரிவரல எனக்கு...2 பொங்கலும் ருசியா இருக்கு!!

  ReplyDelete
 24. ரெண்டு பொங்கலும் ருசியாயிருக்கு. பொங்கலுக்கு மட்டுமல்ல நவராத்திரி சமயத்துலயும் இப்படிச் செய்யலாம். இதைச் செய்யும்போது குக்கரில் ஸ்பேஸ் இருந்தா இன்னொரு கிண்ணத்துல கொஞ்சம் ப்ளெயின் அரிசி வெச்சுட்டா புளியோதரையும், தேங்காய் சாதமும் கூட நிமிஷத்துல ரெடி செஞ்சுடலாம்.

  ஆனாலும் கேப்பே விடாம நீங்க வடை சுட்ட ஸ்பீடு இருக்கே.. அபாரம் :-))

  ReplyDelete
 25. டூ இன் ஒன் பொங்கல் சூப்பர் மகி. வாம்மா மின்னல்!! உங்க சூப்பர் ஸ்பீட் சமையல சொன்னேங்க! எனக்கும் கிச்சென்ல ரொம்ப நேரம் இருக்கறது புடிக்காது. அதீஸ் கேட்ட மாதிரி ஒய் ஹகிங்? பட் ரொம்ப அழகா இருக்கு

  ReplyDelete
 26. //ஆர் கண்ணிலும் படாம உங்கட கண்ணில மட்டும் பட்டிருக்குது??!! அந்த ஹக்கிங்;) வைச்சு ஒரு பதிவு போட்டுரவா? ;)))//// என் கண்ணிலும் பட்டுது ஊஉ எவ்ளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டமா? நீங்க எழுதுங்கோ

  ReplyDelete
 27. /ஆனாலும் கேப்பே விடாம நீங்க வடை சுட்ட ஸ்பீடு இருக்கே.. அபாரம் :-))/ஆஆஆஆ! சின்னப்புள்ள,ஒரு ஆசைக்குச் சொல்லிட்டுப்போகுதுன்னு விடாம பின்னிப் பெடலெடுக்கிறீங்களே சீனியர்ஸ்??!! ;))))

  சாந்தி அக்கா,நீங்க சொன்ன கலந்த சாதம் ஐடியாவும் சூப்பர்.குக்கரில அடுக்கடுக்கா தனித்தனியே வைக்கும் பாத்திரங்கள் இருந்தா ஈஸியாச் செஞ்சுடலாம். எனக்கு அந்த வசதி இல்லை. மற்றவர்களுக்கு கண்டிப்பா யூஸ் ஆகும். பகிர்வுக்கு நன்றி! :)
  ~~
  கிரிசா,நான் பொதுவா சோம்பேறிங்க.அதிசயமா இப்படி வேலைகள் நடந்தா ப்ளாகிலயும் போடுறது! ஹிஹி!
  ஹகிங் பத்தி எழுதிட்டேன்,நீங்க வேஏஏஏற எதும் எதிர்பார்த்து ஏமாந்தா நான் பொறுப்பில்லே.;)
  நன்றிங்க!
  ~~
  மேனகா,நான் எல்லாப்பொங்கலும் குக்கரிலதான் செய்யறது.நீங்களும் செய்து பாருங்க.நன்றி!
  ~~
  காயத்ரி,நன்றிங்க!
  ~~
  ஜெய் அண்ணா,வாரத்துக்கு 3 நாள் சர்க்கரைப் பொங்கலா?? ஆஹா!!:P

  /ஸ்வீட் பக்கத்துல ஒரு பச்சை ஒரு மஞ்சள் என்னதூஊஊ...?? ..!!! :-))/அதூஊஊஊ சால்ட்& பெப்பர் டிஸ்பென்ஸர்ஸ்! :)

  /மஹி சொன்னா நோ அப்ஜஷன் :-))/அடடா,புல்லா அரிச்சிருச்சு போங்க எனக்கூ!! ;) தேங்க்ஸ் ஜெய் அண்ணா!
  ~~
  சினேகிதி,நன்றிங்க!
  ~~
  வானதி,என்னாச்சு?? நிறைய இடத்திலே பொங்'கல்' என்பதற்கு பதிலா பொங்கள் ஆக்கிட்டீங்க?? ஆரும் பாக்கலை போலருக்கே??! ;)))))

  ச.பொங்கல் தனியா பருப்பு குழம்பு+வெண்பொங்கல் தனியாத்தானே சாப்புடுவீங்க?? எனக்கு தயிர் அவ்வளவாப் பிடிக்காது. சாப்பிட்டாலும் வெறும் சாதத்துக்கு ஊற்றி சாப்பிடத்தான் இஷ்டம்! :)
  நன்றி வானதி!
  ~~
  குறிஞ்சி,நன்றிங்க!
  ~~
  க்றிஸ்டி,வெகு நாள் கழித்து உங்கள் கருத்தைப் பார்க்கிறேன். மகிழ்ச்சி+ நன்றி!
  ~~
  ஏஞ்சல் அக்கா,இப்படி செய்தா சீக்கிரம் வேலை முடிஞ்சிரும்,செய்து பாருங்க. நீங்களும் வடை செய்தீங்களா..சேம் பின்ச்!;)
  அதிராக்கு வடை வாணாமாம், ஃபுல்லா இருக்காங்க போல..பாருங்க அடுத்த கமென்டிலே ஏப்பம் விட்டிருக்காங்க! ;)
  நன்றி ஏஞ்சல் அக்கா!
  ~~
  ராதை,உங்க கருத்தைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. :) உங்க வீட்டுப் பொங்கலும் சந்தோஷமாகக் கழிந்த்திருக்கும்னு நினைக்கிறேன்,நன்றிங்க!
  ~~
  ப்ரியா,பொங்கல் சாப்பிட்டு போரடிக்குதா உங்களுக்கு?? நான் இந்த ஒருநாள் மட்டும்தான் சாப்பிட்டேன். :) வடைதானே,அனுப்பிட்டேன்.;)
  நன்றிப்பா!
  ~~

  ReplyDelete
 28. /இரு அடுப்பில் ஒன்றில் சக்கரை, இன்னொன்றில் வெண்பொங்கல், அந்த அடுப்பிலேயே வடையும் சுட்டு, கத்தரி + உருளைக்கிழங்கு பொரித்து தண்ணிக்குழம்பும் வைத்து, ஒரு இஞ்சிச் சம்பலும்..../ஆஹா,படிக்கும்போதே வாயூறுதே அதிரா!:P:P சூப்பர் மெனு!:)

  /உப்பூடி பாத்திரம் மாத்திப் பொங்கினால் சாமிக்கு படைக்கக்கூடாதாம்../தட்ஸ் ஓக்கே, ஆசாமிகள் சாப்பிடலாம்ல?? ;)

  /2 இன் வன் என்ன 4 இன் வன்னே செய்திடுவார்.. அந்தக் ஹப் ல:)) /நல்லாச் சொன்னீங்க போங்க! அவர்பாட்டுக்கு பினாயில்,டெட்டாயில்;), அரிசிய ப்ளீச்சிங்னு எதாச்சும் பண்ணிவைப்பாரு,யாரு அதை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தை உருவாக்கிக்கப் போறாங்க??ஹா..ஹா..ஹ்ஹா!
  ~~
  காமாட்சிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
  ~~
  உஷா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. நீங்களும் இப்படிதானா?? ;) நன்றிங்க!

  ReplyDelete
 29. வணக்கம் நண்பரே தங்களின் பதிவை வலைச்சரத்தில் பதித்துள்ளேன்
  நன்றி
  http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_04.html

  ReplyDelete
 30. தென்காசித் தமிழ்ப் பைங்கிளி, வலைச்சர அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றிங்க!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails