Saturday, January 7, 2012

வெள்ளரிக்காய் தோசை/ thellevu

தேவையான பொருட்கள்
பச்சரிசி-11/2கப்
உளுந்து -1/4கப்
வெள்ளரிக்காய்-1
வெந்தயம்-1டீஸ்பூன்
சர்க்கரை-1டீஸ்பூன்
உப்பு

செய்முறை
அரிசி-உளுந்தை கழுவி வெந்தயத்துடன் சேர்த்து 4-5 மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
அரிசியை அரைக்கும் நேரம் வெள்ளரிக்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கி அரிசி-உளுந்து-வெந்தயத்துடன் சேர்த்து (தேவைப்பட்டால் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு) நைஸாக அரைத்து எடுக்கவும்.
அரைத்தமாவை 7-8 மணி நேரங்கள் புளிக்க விடவும்.

தோசை செய்யும்போது தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை, மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் இவற்றை சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லை காயவைக்கவும். ஒவ்வொரு தோசை ஊற்றும் முன்பும் கொஞ்சம் எண்ணெய் தடவி,ஒரு கரண்டி மாவை ஊற்றி மெல்ல்ல்ல்ல்லிய தோசையாகத் தேய்த்துவிடவும்.

லேசாக இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும். திருப்பியும் போட வேண்டியதில்லை, அப்படியே மடித்து எடுத்துவிடலாம்.[provided, your griddle is well seasoned and in a good condition!! தோசைக்கல்லுக்கு ஆயில் மசாஜ் எல்லாம் செஞ்சு, வெங்காயம் தேய்ச்சு, உருளைக்கிழங்கு தேய்ச்சு ஐஸ் வைச்சு(!!) ரெடியா வைச்சிருக்க வேண்டியது உங்க வேலை!;)]

இந்த ரெசிப்பியைப் பார்த்த வலைப்பூவில் ஒரு வீடியோவும் இருக்கு..அவங்க தோசை மாவை க்ரெடிட் கார்டு (பயப்புடாதீங்க..புதுக்கார்டில்ல, வேஸ்ட்டான கார்டுதான்!] வைச்சு தேய்ச்சுவிடுவாங்க..அதற்கு லிங்க் இங்கே. நானும் அப்புடி செய்யலாமான்னு பார்த்தேன்..அன்னைக்குன்னு பார்த்து கைவசம் பழைய கார்டு எதுவும் இல்லை..என்னவரின் பர்ஸை நோண்டலாம்னு பாத்தா..அவர் படு பிஸியா ஆஃபீஸ் வொர்க்ல மூழ்கியிருந்தார். பழைய கார்டு எதுவும் இருக்கான்னு கேட்டது அவர் காதிலயே விழல..சரின்னு கரண்டிலயே தோசையை பேப்பர் மாதிரி ஊத்திட்டேன்.

இந்த தோசைக்கல்லு புதுசா வாங்கிருக்கேனாக்கும்..டார்கெட்-ல டார்ட்டியா மேக்கர்னு பேர் போட்டு வைச்சிருந்தாங்க..ரெண்டு ஹேண்டிலோட லைட் வெயிட்டா இருக்குது..வாங்கியாந்து நம்மூரு டார்ட்டியா(சப்பாத்தி) தோசைன்னு சுட்டுட்டு இருக்கேன்..சூப்பரா வருது(டச் வுட்! ;))

தோசை ரெடி..மேலே கண்ட 3 படங்களையும் தனித்தனியே எடுத்த பின்பு என் மூளையில் ஒரு பல்பு எரிஞ்சு கீழ்க்கண்ட படத்தை எடுத்தேன்..3 இன் 1!!! ;))))))

தோசை ரெடியாயிருச்சு..சாப்பிடும் ஆள்தான் ரெடியில்லை! மும்முரமா வேலையிலயே மூழ்கியிருந்தார். நமக்கெல்லாம்[எனக்கெல்லாம்னு படிச்சாலும் சரிதேன்! ;)] யாராச்சும் இப்புடி சுடச்சுட தோசை சுட்டுத் தரமாட்டாங்களான்னு ஏக்கமா இருக்கும்..ஆனா பாருங்க.."கிடைப்பதின் அருமை கிடைக்கும்போது தெரியாது,அது கிடைக்காத போதுதான் தெரியும்!" னு சொல்லுவாங்கள்ல..அந்த மாதிரி தோசைய சுட்டு வச்சிட்டு சாப்பிட வாங்க,வாங்க,வாங்கன்னு வாய்வலிக்கக் கூப்ட்டும் ஒருத்தர் வரவே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

தோசையசுட்டு முடிச்சுட்டு ரெண்டு பேரும் தோசை & தேங்காய்ச் சட்னி சாப்பிட்டோம்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு. ஆனா சாப்பிட்டேன்ங்கறதுதான் நிஜம்...கொஞ்சம் காரசாரமான/புளிப்பான சட்னி, குழம்புடன் சாப்பிட்டிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

இது எல்லாம் நடந்து முடிஞ்சப்பறம் ஒருவர் எழுந்து சாப்பிட வந்தார். ஒரு வாய் தோசை & சட்னி சாப்பிட்டதும், "ப்ரிட்ஜ்ல இருக்க அந்த வத்தக்குழம்ப எடு!"னாரு..அப்பதான் மணத்தக்காளி வ.குழம்பு ப்ரிட்ஜிலே இருக்குங்கறதே எனக்கு ஞாபகம் வந்தது. சூப்பரா இருக்கு தோசையும் குழம்பும்னு ஒரு புடி புடிச்சாரு... ம்ம்..என்ன பண்ணறது..அல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணுங்கோஓஓஓ!!! ;)

குறிப்பு
வெள்ளரிக்காய் கிடைக்கலைன்னா zuccini கூட யூஸ் பண்ணி செய்யலாம், அதுவும்கிடைக்கலைன்னா உளுந்து அளவை கொஞ்சம் அதிகரிச்சு மாவை அரைச்சு செய்யலாமாம். ட்ரை பண்ணிப் பாருங்க. :)

36 comments:

  1. Happy New year mahi... Interesting recipe....Yummmmmmmmmy dosa...side dish enna mahi dosaku? edavadu interesting a irunda anda recipe yum podunga...

    ReplyDelete
  2. வெள்ளரிக்கா தோசையை விட சொன்னவிதம் சூப்பர் டேஸ்டா இருந்துச்சு. படங்கள் வேறு பசியைக்கிளப்பி விடுதே?

    ReplyDelete
  3. தோசை மெல்ல்ல்லிசாய் சூப்பராய் இருக்கு.பகிர்வு வழக்கம் போல் டச்சிங்காய்..

    ReplyDelete
  4. //."கிடைப்பதின் அருமை கிடைக்கும்போது தெரியாது,அது கிடைக்காத போதுதான் தெரியும்!" னு சொல்லுவாங்கள்ல//

    யார் அது புதுசா ..??? மஹி சித்தரா...!! ஹா..ஹா...:-)))

    ReplyDelete
  5. எனக்கும் இதேப்போல மெல்லிய தோசைதான் பிடிக்கும் ..இதேப்போல மெல்லிசா போடுவதே ஒரு கலை :-))

    தோசை ஊற்றியதும் இதுக்கு மேலே துருவிய பூண்டு , தக்காளி சாஸ் , துருவிய கத்திரிகாய் இப்பிடி தனித்தனியா செய்துப்பாருங்க . அப்புறம் உங்க ஆள் அசந்திடுவார் :-))))

    ReplyDelete
  6. ஊருக்கு போனாதும் டிரை செய்து பார்த்துட வேண்டியதுதான் :-) ((சீசனுக்கு வெள்ளரி கிடைக்கனுமே ))

    ReplyDelete
  7. என்னாது வெள்ளரிக்காய்த் தோசையோ அவ்வ்வ்வ்வ்:)))... கியூகம்பர்தானே வெள்ளரிக்காய்? படம் பார்த்து தெரிந்துகொண்டேன்...

    என்ன அழகா மெல்லிசா வந்திருக்கு... தனிய சாப்பிட்ட நேரம்... என்னை ஒரு சொல்லுக் கூப்பிட்டிருக்கலாமெல்லோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    ReplyDelete
  8. இங்கிருக்கும் ஒரு ஆந்திரா நண்பர்கள் வீட்டுக்குப் போனால் அவவும் இப்படித்தான் மெல்லிய ரிசூப்போல சுடுவா... ஆனா எனக்கு கொஞ்சம் மொத்தமாக இருப்பதுதான் பிடிக்கும், என் கணவருக்கு ரிசூப்போலதான் பிடிக்கும்....அவ்வ்வ்வ்வ்வ்வ்:).

    ReplyDelete
  9. ///தோசை ஊற்றியதும் இதுக்கு மேலே துருவிய பூண்டு , தக்காளி சாஸ் , துருவிய கத்திரிகாய் இப்பிடி தனித்தனியா செய்துப்பாருங்க . அப்புறம் உங்க ஆள் அசந்திடுவார் :-))))//

    அங்கின குட்டி எலி தோசைக்கு வெந்தயம் சேர்ப்பது சொன்னமாதிரி, இங்கின ஜெய் தோசைக்கு... குறிப்புச் சொல்றார் அவ்வ்வ்வ்வ்வ்:).. மகி நோட் திஸ் பொயிண்ட்:))).. படிச்சதும் கிழிச்சிடுங்க...

    ReplyDelete
  10. //
    அங்கின குட்டி எலி தோசைக்கு வெந்தயம் சேர்ப்பது சொன்னமாதிரி, இங்கின ஜெய் தோசைக்கு... குறிப்புச் சொல்றார் அவ்வ்வ்வ்வ்வ்:).. மகி நோட் திஸ் பொயிண்ட்:))).. படிச்சதும் கிழிச்சிடுங்க... //


    பூஸுக்கு ஞாபக சக்தி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அதிகம் :-))


    நான்ன்ன்ன்ன்ன் அவன்ன்ன்ன்ன் இல்லைஐஐஐஐஐஐஐஈஈஈஈஈஈஈஈஈ :-))

    ReplyDelete
  11. ஹா..ஹா..ஹா... ஹா..ஹா....ஹா..... மகி ஓடிவாங்க... இதுக்கு ஏதாவது பயமொலி சொல்லுங்கோ:)))..

    //நான்ன்ன்ன்ன்ன் அவன்ன்ன்ன்ன் இல்லைஐஐஐஐஐஐஐஈஈஈஈஈஈஈஈஈ :-))/////

    நான் அப்படிச் சொன்னேனா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... நுழலும் தன் வாயால் கெடுமாமே:))) நான் ஒண்ணுமே சொல்லல்லே..

    சுண்டெலியைக் கண்டு பிடிச்சால்தான், இனி எனக்கு நித்திரையே வரும்...:)))

    ReplyDelete
  12. ஐ வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா ரிலீஸ் ஆயிடிச்சு ஆனா நான் போன வாரமே பண்ணி சாப்பிட்டோமே! எங்க வீட்டுல தோசை ரொம்ப ரொம்ப புடிக்கும். அதுவும் இப்புடி பேப்பர் ரோஸ்ட் போல வருதுன்னா கேக்கவே வேணாம். நல்லெண்ணெய் யூஸ் பண்ணி வார்த்தேன். என் பையனுக்கு கொஞ்சம் நெய். அப்பவே உங்க பதிவுக்கு நன்றி சொல்லணுமுன்னு நெனைச்சேன் அப்புறம் மறந்திடிச்சு. ரெம்ப டாங்க்ஸ் அம்முணி இப்புடி நெறைய்ய பதிவு போடுங்க

    ReplyDelete
  13. // நுழலும் தன் வாயால் கெடுமாமே:))) // ரெம்ப ரெம்ப கரீக்ட்டு பூஸ் நானே இத சொல்லணுமுன்னு நெனைச்சேன் மை father நாட் இன் தி bushes ன்னு ஜெய் ஐயோ ஐயோ :))

    ReplyDelete
  14. //சுண்டெலியைக் கண்டு பிடிச்சால்தான், இனி எனக்கு நித்திரையே வரும்...:)))// சுண்டெலி தான் மா வில் ஆரம்பித்து யா வில் முடியும் பெயரை கொண்டவர் அப்புடின்னு உங்க பக்கத்துல நிரூபன் சொல்லி இருந்தாரே?? அப்போ சுண்டெலி இன்னும் அகப்படலையா ?? வாட் இஸ் திஸ் அதீஸ் சீக்கிரம் புடியுங்க

    ReplyDelete
  15. அட..இங்க இத்தனை விஷியம்:) நடந்துருச்சா?? :)))) அதிரா,நான் அப்பவேஏஏஏஏஏஏஏ கேட்டேனல்லோ? நம்மள்லாம் FBI-ல ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுத்தவங்கள்ல?? ;) கரீக்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா கண்டுபுடிச்சிருவோம்!

    என்ன ஏதுன்னு விவரம் தெரிஞ்சுட்டுது,இனி சு.எலி அது பாட்டுக்குத் திரியட்டும்,ஃப்ரீஈஈஈஈஈஈயா விட்டுடுவோம்.:))))))

    நீங்க பாபிகியூ;) மெஷினை மூட்டை கட்டி அட்டிக்-ல போடுங்கோ..வேஏஏஏஏஏஏற ஜந்து ஏதும் வந்தா ஒரே அமுக்கா அமுக்கித்தாரேன் உங்களுக்கு. :)

    ReplyDelete
  16. /அப்போ சுண்டெலி இன்னும் அகப்படலையா ?? வாட் இஸ் திஸ் அதீஸ் சீக்கிரம் புடியுங்க/க்ரிஷா:)க்கா,நாங்க எலிய பொறி வச்சுப் புடிக்க ப்ளான் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தோம்,அதுக்குள்ளே நுணலே தன் வாயால் கெட்டுப் போச்சுது! நீங்க சொல்லும் ஆளில்ல இது வேறேஏஏஏஏஏஏஏஏ!! உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஆருன்னு நான் என் வாயால் சொல்ல மாட்டேன். ;)

    சரி,நீங்க பாட்டு பாடிகிட்டே தோசையச் சுட்டீங்களா? அதான் அங்ஙன எல்லாம் புயல்மழையோ??! ;))))
    செய்து பார்த்து மறக்காமல் சொன்னதுக்கு நன்றி கிரிஜா! ரொம்ப சந்தோஷம்! :D

    அதிரா,க்யூ"கம்பரே"தான் வெள்ளரிக்காய்.நீங்க என்ன சொல்லுவீங்க அதை?? வெள்ளரிப்பிஞ்சு,வெள்ளரிக்காய் இதான் நாங்க சொல்லும் பேர். வாங்கி செய்துபாருங்கோ..கம்ப;)ராமாயணம் போலவே சூப்பரா வரும் க்யூ"கம்பர்":) தோசை! ஹிஹிஹி!

    /இதுக்கு ஏதாவது பயமொலி சொல்லுங்கோ:)))../பயமொயி எல்லாம் எதுக்கு அதிரா..அதான் எல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் வெட்டவெளிச்சம் ஆகிருச்சே! ;) ஆனா நீங்க கேட்டுட்டீங்க,சொல்லாமப் போகமனசு வரல.
    உலை வாயை மூடலாம்,ஊர் வாயை மூட முடியுமா..நெருப்பில்லாமப் புகையாதல்லோ? [எப்புடி நம்ம பயமொலி எலியண்ணே?]

    /மகி நோட் திஸ் பொயிண்ட்:))).. படிச்சதும் கிழிச்சிடுங்க.../ ஹாஹ்..ஹாஆ! பாயின்ட் நோட்டட்,,படிச்சிட்டு கிழிச்சும் போட்டேன் அதிரா! ;) சு.எலி.அண்ணே, be கெயர்ஃபுல் வித் அஸ்!!! ;)]

    /தனிய சாப்பிட்ட நேரம்... என்னை ஒரு சொல்லுக் கூப்பிட்டிருக்கலாமெல்லோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)./ம்க்கும்,கூப்புட்ட உடனே ஓடியாந்துருவீங்க..எல்லாரும் ஆளுக்கொரு மூலைல உட்கார்ந்துட்டு இருக்கோம்,இனி ஒரு பத்துநாள் அட்வான்ஸாச் சொல்லிவுடறேன்,வந்து சேருங்க,ஓக்கேவா? :)

    ஜெய் அண்ணா,வாங்க! தோசை மாஸ்டரா இருப்பீங்க போலருக்கே?? :) சூப்பர் டிப்ஸெல்லாம் தரீங்க.இதுவரை இப்படியெல்லாம் செய்ததில்ல,இனிமேல் ட்ரை பண்ணி பார்க்கீறேன்.
    கரெக்ட்டா கோடைக்காலத்தில ஊருக்குப்போங்க,வெள்ளரி கிடைச்சுரும். :)

    /யார் அது புதுசா ..??? மஹி சித்தரா...!! ஹா..ஹா...:-)))/ ஆஹா,சித்தராவது,புத்தராவது?! பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க.நான் இன்னும் சுடச்சுட தோசைக்கு அலைபாயும் அற்ப மானிடப் பதர்! ஹீஹீ! ;)

    எங்க வீட்டில தோசைன்னா ப்ரச்சனையே இல்லை..தினமும் சுட்டுத்தந்தாலும் மூச்சுக்காட்டாம சாப்புடுவார்!;) இனி ஒரு தோசையும் ப்ளாக்ல ரிலீஸ் ஆக ரெடியா இருக்குது.சீக்கிரம் பப்ளிஷ் பண்ணிடறேன்.

    வருகைக்கும் கருத்து கதகளிக்கும் ஸ்பெஷல் நன்றி ஜெய் அண்ணா,அதிரா & க்ரிஷாக்கா!
    :)))))))

    ReplyDelete
  17. ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அழகா கமென்ட் போடறீங்க போங்க.ரொம்ப சந்தோஷமா இருக்கு. :)

    லஷ்மிம்மா,ரொம்ப நன்றிமா!சட்டுன்னு தோசை செய்து சாப்பிட்டுருங்க!:)

    வித்யா,நன்றி,உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த தோசைக்கு நல்ல காரமா, புளிப்பா இருக்க மாதிரி காரசட்னி,தக்காளி சட்னி,வெங்காய சட்னி,வத்தக்குழம்பு, மஷ்ரூம் குழம்பு இப்படி எல்லாம் மேட்ச் ஆகும். இந்த ரெசிப்பிஸ் எல்லாமே ஆல்ரெடி போட்டிருக்கேன்.
    1.இது சட்னி வகைகள் http://mahikitchen.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF
    2.இது வத்தக்குழம்பு
    http://mahikitchen.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF
    3.இது மஷ்ரூம் குழம்பு
    http://mahikitchen.blogspot.com/2010/05/blog-post_05.html

    நேரமிருக்கும்போது நிதானமா என் வலைப்பூவை பிரிச்சு மேஞ்சுருங்க வித்யா!:) நன்றி!

    ReplyDelete
  18. Dosas have come out so thin. Nice work, Mahi!

    ReplyDelete
  19. மகி,

    முட்டை,மசாலா,ஆனியன் தோசை சாப்டாச்சு.வெள்ளரிக்காய் தோசை_ இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தோசை பார்க்கவே க்ரிஸ்பியா நல்லாயிருக்கு.

    ReplyDelete
  20. நுழலும்//

    நுணலும் தன்வாயால் கெடும்),//


    SPELLING MISTAKE ATHIRAAAAAAAAAAAAAA

    ReplyDelete
  21. வெள்ளரி தோசை அரைச்சு வெச்சிட்டேன் மகி /சுட்டுட்டு சொல்றேன்
    நாளை வந்து கமேன்டறேன் .அக்கா சண்டேஸ் பிசி

    ReplyDelete
  22. i read tamizh veryyy slowly! And it took me 10 minutes to read this. But th dosas are superb! I love them thin & crispy

    ReplyDelete
  23. //angelin said...
    நுழலும்//

    நுணலும் தன்வாயால் கெடும்),//


    SPELLING MISTAKE ATHIRAAAAAAAAAAAAAA//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    மகீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ... குட்டி எலியை மட்டும்தான் பிடிச்சாச்சு:))... சுண்டெலி, புதுசா எலிக்குட்டி இரண்டும்... மாட்டாமலோ போகும்:))... எலிப்பொறிக்கு ஏற்பாடு செய்திட்டேன்:))

    ReplyDelete
  24. மஹி வெள்ளரியில் இப்படி ஒரு மொரு மொரு தோசையா.. பார்க்கும் பொழுதே எதுவும் தொட்டுக்கொள்ளாமல் அப்படியே சாப்பிடனும் போல இருக்கு

    ReplyDelete
  25. Luv dosa anyday!! :-)

    http://gharkhana.blogspot.com/

    ReplyDelete
  26. ஆர்கண்டித் துணிமாதிரி,பளபளப்பா ட்ரேஸ் பேப்பர் மாதிரி மெல்லிசா தோசை கொண்டா,கொண்டாவென்று
    கேட்க வைக்கும் போலயிருக்கு. நடைஅழகான தோசையும் போல. இதேமாதிரி பூசணிக்காய் தோசை செய்திருக்கிறேன்.வெள்ளரி தோசை இன்னும் வாஸனையாக இருக்கும் இல்லையா?
    டிஷ்யூ பேப்பரில் எண்ணெய் தொட்டு
    தோசைக்கல் துடைத்தால் ரொம்ப ஸவுகரியமாக இருக்கு.
    விதவித தோசை. எழுத்து நடை.
    அழகுப் படங்கள்.ரொம்பவே ரஸித்தேன். அன்புடன்

    ReplyDelete
  27. வெள்ளரிக்காயில் தோசை அசத்துங்கோ மகி.

    ReplyDelete
  28. Dosai rusiyai ungal varigalil manathu rasithen. Good Post Mahi.

    //provided, your griddle is well seasoned and in a good condition!! தோசைக்கல்லுக்கு ஆயில் மசாஜ் எல்லாம் செஞ்சு, வெங்காயம் தேய்ச்சு, உருளைக்கிழங்கு தேய்ச்சு ஐஸ் வைச்சு(!!) ரெடியா வைச்சிருக்க வேண்டியது உங்க வேலை!;)]//

    Like it. :-)

    ReplyDelete
  29. இப்படி தோசை ஊத்தினா
    30 தோசை சாப்பிடனும்
    athuvum pathumanu therila...

    ம் அப்படியே அனைத்தும் பார்சல் கெட்டி சட்னி உள்பட ..

    ReplyDelete
  30. மகி, தோசை சூப்பரோ சூப்பர். எனக்கு தோசை கொஞ்சம் மொத்தமா இருந்தா தான் பிடிக்கும். என் வீட்டிலும் என் கணவர் சில வேளைகளில் கூப்பிட்டால் காதில் விழாதது போல இருப்பார். சரி, அப்படியே இருங்கோ கான்டீன் குளோஸ் என்று சொன்னாஒரே ஓட்டமா ஓடி வருவார். அவருக்கு தோசை சுடத் தெரியாது. அதோடு சோம்பல் வேறு.
    என் அப்பா எப்போதும் சொல்வார், நமக்காக சாப்பாடு காத்திருக்க கூடாது. நாங்கள் தான் சாப்பாட்டுக்காக காத்திருக்க வேணும் என்று. எனக்கு சின்ன வயதில் இருந்தே தட்டில் போட்ட உடனே சாப்பிட்டு முடிச்சிடோணும்.

    ReplyDelete
  31. //என் அப்பா எப்போதும் சொல்வார், நமக்காக சாப்பாடு காத்திருக்க கூடாது. நாங்கள் தான் சாப்பாட்டுக்காக காத்திருக்க வேணும் என்று. எனக்கு சின்ன வயதில் இருந்தே தட்டில் போட்ட உடனே சாப்பிட்டு முடிச்சிடோணும்//

    மிகச் சரியே


    என்கிரான் மா என்னிடம் அதிக மா சொல்லி இருக்காங்க

    நமகக்காக சாப்ப்ாடு காத்திருக்க கூட்ாது.
    ந்ாம சாப்ப்ாட்ுக்காககாத்டது இருக்கலாம் என்று....


    இத ந்ான் தினம் என்ப் பைய்ன் கிட்ட் சொல்றேன்வ்ானதி;


    தோசை ஜூப்பராக இருக்ூமகி
    , எந்த மாவாக இருந்தாலும் நல்லமொருகலாக வரும்

    ஆனால் வெள்ளரி பய்ன் ப்டுதட்திய்திலை

    ReplyDelete
  32. வானதி & ஜலீலாக்கா /நமக்காக சாப்பாடு காத்திருக்க கூடாது. நாங்கள் தான் சாப்பாட்டுக்காக காத்திருக்க வேணும் என்று./ உண்மைதான்,ஆனால் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டுதானே!
    "செவிக்குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்"-னும் பெரியவங்க சொல்லிருக்காங்கள்ல? :)

    அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா, எங்காத்துக்காரர் சாப்பாட்டை கண்டுக்காம சாப்பிடவரலைன்னு நினைச்சுராதீங்க,அவருக்கு சாப்பிடக்கூட நேரமில்லாத அளவுக்கு வேலைன்னு சொல்லவந்தேன், ஆனா காமெடியா எழுதப்போயி நீங்க வேறமாதிரி புரிஞ்சுகிட்டீங்களோன்னு தோணுது! :):)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  33. காயத்ரி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    சித்ரா மேடம், தோசை செய்து சாப்பிட்டுப் பாருங்க.நன்றி!

    ஏஞ்சல் அக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தோசை சுட்டு சாப்டீங்களா..உங்களைக் காணம்னு எல்லாரும் தேடிட்டு இருக்கோம்,சீக்கிரம் வாங்க. :)

    Kavi,thanks for stopping by n reading the ENTIRE post and your lovely comment! :)

    அதிரா,எலி பொறியில மாட்டிருச்சா,இல்லையா?

    சிநேகிதி,செய்து சாப்பிட்டுப் பாருங்க.நன்றி!:)

    Mama's World,thanks for the comment!

    காமாட்சிம்மா,நீங்க சொல்லச்சொல்லத்தான் மறந்துபோன ஆர்கண்டித்துணியெல்லாம் நினைவுவருது. வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றிம்மா!

    ஸாதிகாக்கா,நன்றி!:)

    மீரா, என் எழுத்துகளை நீங்க பாராட்டும் ஒவ்வொருமுறையும் ஒரு கப் ஹார்லிக்ஸ் குடிச்சமாதிரி உற்சாகமா இருக்கு! நன்றிங்க!:)))

    சிவசங்கர், 30தோசை பார்ஸல்ல சாப்பிட முடியாது,வீட்டுக்கு வந்து கிச்சன்லயே சேர் போட்டு உட்காருங்க,அடுப்பிலிருந்து தோசைய எடுத்து டைரக்ட்டா உங்க தட்டில் போடறேன்,ஆசை தீர சாப்பிடலாம்! :) நன்றி தம்பி!

    ReplyDelete
  34. வெள்ளரிக்காயில் தோசையா.. புதுசா இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  35. குறிஞ்சி,அமைதிச் சாரல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. இது வடக்கு கர்நாடகாவில் பிரபலமான ரெசிப்பியாம். வலையுலகில் உலவுகையில் என் கண்ணில் பட்டு முயன்று பார்த்தேன்.நீங்களும் செய்து பாருங்க. நன்றி! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails