Pages

Tuesday, January 10, 2012

காற்றே என் வாசல் வந்தாய்..

கோடையிலும் வசந்தத்திலும் வருடும் தென்றலோடு அழகாய் ஒலிக்கும் இனிய சத்தம் நன்றாக இருக்கும் என்று ஒரு wind chime-ஐ எங்க வீட்டு patio-வில் மாட்டியிருந்தோம். போன வருஷம்(!) நவம்பரில் இருந்து அவ்வப்பொழுது காற்றின் மறுபக்கத்தைக் காணமுடிகிறது.
வின்ட் ஸ்டார்ம் என்று "ரெட் ஃப்ளாக் அலர்ட்" கொடுக்கிறாங்க. காற்று சுழற்றி சுழற்றி அடிக்கிறது..மழையும் வருவதில்லை,காற்று மட்டுமே! டிசம்பரில் மீண்டும் ஒரு நாள் காலை நேரம் காற்று அடிக்க ஆரம்பித்தது..அதை என் கேமராவில் சிறைப்பிடித்து வைத்திருந்தேன்.மீண்டும் திங்களிரவு காற்று..வாசல் முழுக்க காய்ந்த இலைகளை அள்ளிக்கொண்டுவந்து குவிக்கிறது..கூடவே இரவின் அமைதியில் வின்ட் சைம் காற்றில் எழுப்பும் ஒலி தூக்கத்தை நெருங்க விட மறுக்கிறது..அதனால் நள்ளிரவு 12 மணிக்கு எழுந்து வின்ட் சைம்-ஐக் கழற்றிவைத்துவிட்டோம். காற்றின் இந்த ஆட்டம் கடந்த கோடையில் சென்ற ஒரு ட்ரிப்பை நினைவு படுத்தியது.

மே மாதக் கடையில் அந்த வாரமும் வெதர் சரியில்லை என்று செய்திகள் வந்துகொண்டிருந்தது. ஆனாலும் அடாது மழை பெய்தாலும் விடாது போவோம் என்று கிளம்பினோம். போனஸா அதிகாலையில் மழை வேறு பன்னீர் தெளித்துக்கொண்டிருந்தது.அடிச்சுப் பிடிச்சு கிளம்பி, மழையோடவே ட்ரைவ் பண்ணி, வீட்டிலிருந்து 30நிமிஷப் பயணத்தில் இருக்கும் port-க்கு ஃபெரி கிளம்பறதுக்கு 10 நிமிஷம் முன்னால போய்ச்சேர்ந்தோம். அப்பவெ காத்திருந்தது ஆப்பூ!;)

வெதர் சரியில்லாத காரணத்தால் எங்க ரிடர்ன் ஃபெரி (இரவு 9.30) கேன்சல் ஆகிரும்னு சொன்னாங்க. ட்ரிப்பையே கேன்ஸல் பண்ணிரலாமா- இல்ல கன்டினியூ பண்ணலாமான்னு பேசி முடிவு பண்ணறதுக்குள்ளே 6 மணிவண்டி(!) கிளம்பிருச்சு. ஒருவழியா முடிவு பண்ணி, அங்கேயே 2 மணி நேரம் காத்திருந்து அடுத்ததா 8.15 வண்டிய(!!) புடிச்சோம்.

ஃபெரி கிளம்பினதும் உற்சாகமா மேல்தளத்துக்குப் போய் வேடிக்கை பார்த்தோம்..கார்னிவல் க்ரூஸ் என்ற ஒரு பெரீய்ய கப்பல், தூரத்தில் தெரியும் கட்டிடங்களின் அழகான காட்சி, முதல் முறை ஃபெர்ரில வந்தவங்களுக்கு மும்முரமா போட்டோஷூ ட்-னு ஒரு அரைமணி நேரம் போச்சு.

அதுக்கப்புறம் காற்றின் ஆட்டம் ஆரம்பிச்சது! அலைகள் கண்டபடி அடிக்குது, மேல் தளத்தில் நிற்கவே முடியாத அளவுக்கு ஃபெரி ஆடோ ஆடுன்னு ஆஆஆஆஆஆடுது!! தட்டுத்தடுமாறி கீழே வந்து சீட்ல உட்கார்ந்தேன்..அப்பவும் ஒண்ணும் பிரமாதமான முன்னேற்றம் இல்ல..கப்பல் ஊழியர்கள் எல்லாரும் உட்கார்ந்திருந்தவங்க முகத்தைப் பார்த்தே, யாரார் வாமிட் பண்ணப்போறான்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சு ப்ளாஸ்டிக் பேகை குடுத்துடறாங்க.

ஒரு மாதிரியா அட்ஜஸ்ட் பண்ணி காற்று தின்று கசக்கிப்போட்ட சக்கையாப் போயி கரையிறங்கினேன். மேலே படத்துல ஸ்டைலா நிக்குது பாருங்க, அதான் நாங்க போன கப்பல்..அதுக்கு மேலேயே 2 செங்கொடி(!) ஏத்திருக்காங்க பாருங்க Saint Catalina Island-ன் Avalon போர்ட்ல!

தீவுக்குள் நமது வாகனங்களுக்கு அனுமதியில்லை, சைக்கிள் மட்டும் அனுமதிக்கறாங்க. மத்தபடி முழுத் தீவையும் சுற்றிப்பார்க்க அங்கேயே இருக்கும் பஸ் சர்வீஸ், டாக்ஸி அல்லது கோல்ஃப் கார்ட்டைத்தான் உபயோகிக்கணும். சைக்கிள்களும் வாடகைக்குக் கிடைக்கிறது.

குட்டியூண்டா இருக்கும் இந்தத்தீவில் சுற்றிப் பார்ப்பதுக்கு நிறைய இடங்கள் இருப்பதாக(எனக்குத்) தெரியலை..ஒரு கேஸினோ பில்டிங் இருக்கிறது, கீழே இருக்கும் கொலாஜில் கடலோரத்தில் இருக்கு பாருங்க,அந்தக் கட்டிடம்தான். அன்று அது பூட்டியே இருந்தது. சிறிய கடைகள், உணவகங்கள் எல்லாமே நடந்து பார்க்கும் தொலைவிலேயே இருக்கின்றன.
பகலில் கொஞ்சம் வெயில் வந்ததும் ஒரு ப்ரைவேட் பீச்சில் டிக்கட் வாங்கிக்கொண்டு எல்லாரும் கடலில் விளையாடினாங்க. எனக்கு தண்ணியக்கண்டா தெனாலி-கமல் ரேஞ்சுக்கு பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! அதனாலே நான் கரையிலிருந்து படங்கள் எடுத்தேன். ஹிஹிஹி!

இங்கே Paragliding, Snorkeling, Kayaking போன்ற விளையாட்டுக்கள் ரொம்ப ஃபேமஸாம். ஆனால் அன்னிக்கு காற்று கன்னாபின்னான்னு அடிச்சதில் அலைகள் பல அடி உயரத்துக்கு வருவதால் எல்ல்ல்ல்ல்ல்ல்லா வாட்டர் ஸ்போர்ட்ஸும் க்ளோஸ்!! கயாக்கிங் போட்ஸ் எல்லாம் அடுக்கி வைச்சிருக்காங்க பாருங்க. :) எல்லாருக்கும் மண்டை காய்ஞ்சு போச்..அப்புடியே அங்க இங்க சுத்திட்டு கொண்டுபோன சாப்பாட்டை சாப்டுட்டு..
சாப்பாடுன்னதும்தான் ஞாபகம் வருது, 7 பேருக்கும் தனித்தனியா 7 பேக்கட் இட்லி-கெட்டி சட்னி, 7 பேக்கட்புளிசாதம்னு என்னவர் அழகா pack பண்ணினார்..தீவில் போய் இறங்கியதும் ஆளுக்கு 2 உணவுப் பொட்டலங்களைக் குடுத்துட்டோம். ;)

ஊர் திரும்ப கடைசி ஃபெரி 3.30க்குன்னு தெரிந்தது..குளிரவும் ஆரம்பித்தது. போர்ட்டுக்கு வந்து அனுமார் வால் போல நீண்டிருந்த க்யூவில் நாங்களும் இணைந்து 5 மணிக்கெல்லாம் லாங்பீச் வந்து சேர்ந்துவிட்டோம். அப்பவே வீட்டுக்குப் போனா நல்லா இருக்காதுன்னு பக்கத்தில் இருந்த ஒரு அழகான Cliff ஏரியாவுக்குப் போய் சூரியன் கடலன்னையின் மடியில் துயிலப்போனதை ரசித்துவிட்டு இருட்டியதும்தான் வீடுவந்து சேர்ந்தோம்.
அதென்னமோ,ட்ரிப் போனா இருட்டியதும் வீட்டுக்குப்போனாதான் நல்லா இருக்கும், வெளிச்சத்திலயே வீட்டுக்குப்போனா எனக்குப் புடிக்காது...நீங்க எப்புடி? :)

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ முடிக்கிறது எழுதற எனக்குத்தான் புதுசா, இல்ல படிக்கிற உங்களுக்குத்தான் புதுசா? :) காற்றின் நடனத்தில் ஆரம்பிச்சு பஸிஃபிக் கடலோரம் ஒரு cliff-ல முடிச்சிட்டேன். தங்கள் வருகைக்கும், கமென்ட் பாக்ஸில குடுக்கப்போகும் மதிப்பே இல்லாத (டென்ஷன் ஆவாதீங்க..."மதிப்பே இல்லாத = invaluable",விலைமதிக்கவே முடியாத அளவுக்கு மேலான கருத்துக்கள்!...ஹிஹீ) கருத்துக்களும் இப்பவே அட்வான்ஸா நன்றியச் சொல்லிகிட்டு பொட்டியக் கட்டிடறேன்,நன்றி வணக்கம்! =)

27 comments:

ஸாதிகா said...

மகி நானும்தான் பர்ஸ்டூஊஊஊஊஊஊ..:)

மகி said...

ஸேம் ஸ்வீட் ஸாதிகாக்கா!:)

கவிதையப் படிச்சுட்டு வந்துட்டேன்,தூங்கப்போறேன்.
Good day to you!

ஸாதிகா said...

அழகாக கதைத்துவத்துடன் அனுபவத்தை பகிர்ந்து இருக்கீங்கப்பா.வழக்கம் போல் ஸ்பெஷல் மகி இட்லிக்கு நல்லெண்ணெய் விட்டு எடுத்து கொண்டு போனீர்களோ?போட்டோவில் சிறைபிடித்த காட்சிகள் ப்ரமாதம்.

athira said...

ஆஆஆஆஆஆஆஆஆ இங்கேயும் வட போச்சே... ஸாதிகா அக்காவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... பின்பு வாறேன் மகி... படிக்க நோ ரைம்:).

Lakshmi said...

படங்களும் பதிவும் அழகு.னல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

Mira said...

Nice shots Mahi. The video shows error message :-( avlo periya kaathu inga parthe pala varshangal aachu! m..

Idliym, pulisadhamum kaamichu apadiye jollu vida vachuteengale! I also prefer to take ildis and puliyodharai for picnics. (The last picnic we went was 6 years back)

You have nicely narrated with the supporting picturesque photographs.
Wish you many more 'happy' trips :-)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான அனுபவ பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அதிசயம் ஆனால் உண்மை

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

athira said...

காற்றே என் வாசல் வந்தாய்...
தலைப்பு நல்லாத்தான் இருக்கு... ஏன் இப்போ அவர் வாறேல்லையோ?:)) ஹையோ நான் காத்தைக் கேட்டேன்:)).

அது காத்துக்கா மகி கட்டுவது, டோருக்காக அல்லவோ? ஆரும் உள்ளே நுழைந்தால் சத்தம்போடுவதற்காகத்தானே... நீங்க காத்துக்குக் கட்டினா, எப்பூடித்தான் நித்திரை கொள்ள முடியும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

athira said...

வீடியோ நல்லா வந்திருக்கு, நான் இன்னும் இப்பூடி முயற்சி செய்து பார்த்ததில்லை, பிறகு ஆரம்பிச்சேன் எண்டால், ஊரில இல்லாத பாட்டெல்லாம் பாடி வீடியோ எடுத்து.. புளொக்கில போட்டு... எல்லோரையும் வலையுலகை விட்டே ஓடும்படி செய்திடுவன்.. ஐ மீன்:) என் குரல் கேட்டு:)).

athira said...

ஃபெரி அழகாக இருக்கு, படங்கள் அழகு.. காத்தில கண்டமில்லாமல்:) நல்லபடி தப்பி வந்திட்டீங்கள்.

இங்கும் எங்கள் முன் ஆற்றில் ஃபெரி அரை மணிக்கொன்று போகும், நாமும் போனதுண்டு, கிட்டக் கிட்ட 2,3 குட்டிக் குட்டி ஐலண்ட் இருக்கு.

athira said...

//கமென்ட் பாக்ஸில குடுக்கப்போகும் மதிப்பே இல்லாத (டென்ஷன் ஆவாதீங்க..."மதிப்பே இல்லாத = invaluable"...ஹிஹீ) கருத்துக்களும் இப்பவே அட்வான்ஸா நன்றியச் சொல்லிகிட்டு பொட்டியக் கட்டிடறேன்,நன்றி வணக்கம்! =)//

அதுதானே பார்த்தேன் அது அது!!!.. பச்சைப்பூவை ஆரோ கடத்திப்போட்டினம் மகீஈஈஈஈஈஈஈஈஈஈஈ:((((.

Amina Khaleel said...

fabulous post... beautiful pictures...

Asiya Omar said...

பில்டப் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே சொன்னது அருமை.இது மாதிரி அனுபவங்களை இனியும் அழகாக பகிருங்க,என்னைப் போல் யாரவது invaluable comments போட ஆள் வருவாங்க.சும்மா சொல்லக் கூடாது.பட்ங்கள் அருமை.இனியாவது நான் என் பழைய மொபைலை விட்டுட்டு கேமராவை தூக்கணும்.நல்ல பகிர்வு.எனக்கு நாங்க ஒமானில் போன ட்ரிப் நினைவு வருது.

angelin said...

//அதென்னமோ,ட்ரிப் போனா இருட்டியதும் வீட்டுக்குப்போனாதான் நல்லா இருக்கும், வெளிச்சத்திலயே வீட்டுக்குப்போனா எனக்குப் புடிக்காது...நீங்க எப்புடி? :)//
எனக்கும் அப்படியேதான் மகி ..
வீட்ல வேலை நடக்குது அதனால்தான் கணினிப்பக்கம் வரல்ல
எல்லாரும் என்னை தேடியதற்கு நன்றி .

சித்ராசுந்தர் said...

மகி,
வீடியோ,ஃபோட்டோக்கள்,சாப்பாடு எல்லாம் சூப்பர்.அதிலும் சூரிய அஸ்தமனம்_ ரொம்ப சூப்பர்.

நான் Catalina island க்குப் போனதில்லை.ம‌ற்றபடி அங்குள்ள பீச்சுகளுக்கு (long,huntington,newport என‌) அடிக்கடி போனதுண்டு. சுற்றுலாவுக்கு ஏற்ற ஊர்.

Kamatchi said...

பாரு உங்க வீட்டு வாசலுக்கு வந்த காற்றிற்கு எவ்வளவு மதிப்பு. கதை,கட்டுரையா வலம்வரது. போட்டோவெல்லாம் ரொம்பவே அழகாயிருக்கு. ஸ்வாரஸ்யமா விஷயத்தோட கைவந்த கலையா எல்லாம் அமைந்துவிடுகிரது.

ஜெய்லானி said...

//athira said...

//கமென்ட் பாக்ஸில குடுக்கப்போகும் மதிப்பே இல்லாத (டென்ஷன் ஆவாதீங்க..."மதிப்பே இல்லாத = invaluable"...ஹிஹீ) கருத்துக்களும் இப்பவே அட்வான்ஸா நன்றியச் சொல்லிகிட்டு பொட்டியக் கட்டிடறேன்,நன்றி வணக்கம்! =)//

அதுதானே பார்த்தேன் அது அது!!!.. பச்சைப்பூவை ஆரோ கடத்திப்போட்டினம் மகீஈஈஈஈஈஈஈஈஈஈஈ:((((. //


கமெண்டை அங்கேயே போட்டிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ் :-))))

En Samaiyal said...

யு. எஸ் ல உங்க வீட்டு ஏரியா ரொம்ப அயகா இருக்கு மகி. எங்க அக்கா வீடு பாஸ்டன் ல இருக்கு. ஆனா அங்க வீடெல்லாம் கொஞ்சம் வேற மாதிரி இருக்கு.

//அதென்னமோ,ட்ரிப் போனா இருட்டியதும் வீட்டுக்குப்போனாதான் நல்லா இருக்கும், வெளிச்சத்திலயே வீட்டுக்குப்போனா எனக்குப் புடிக்காது...நீங்க எப்புடி? :)// நடு ராத்திரி மோகினி பிசாசு போல தான் வீட்டுக்கு வருவீங்க போல இருக்கு :)) காஞ்சனா பார்த்திட்டீங்களா?? ஊருல இருந்து வாங்கிட்டு வந்த டி வி டி இன்னும் பார்க்காம இருக்கேன் ஒரு பயந்தேன் ஹீ ஹீ

ஜெய்லானி said...

//காஞ்சனா பார்த்திட்டீங்களா?? ஊருல இருந்து வாங்கிட்டு வந்த டி வி டி இன்னும் பார்க்காம இருக்கேன் ஒரு பயந்தேன் ஹீ ஹீ //


காஞ்சனா போல ஒரு காமெடி படம் இன்னும் வரல...ஹா..ஹா... :-)))))))))))))))))))

En Samaiyal said...

//எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ முடிக்கிறது எழுதற எனக்குத்தான் புதுசா, இல்ல படிக்கிற உங்களுக்குத்தான் புதுசா// இல்லேதான் ஆனா ரெம்ப சுவாரஸ்யமா எழுதறீங்க ஸோ well done !//தங்கள் வருகைக்கும், கமென்ட் பாக்ஸில குடுக்கப்போகும் மதிப்பே இல்லாத (டென்ஷன் ஆவாதீங்க..."மதிப்பே இல்லாத = invaluable"...ஹிஹீ) கருத்துக்களும் இப்பவே அட்வான்ஸா நன்றியச் சொல்லிகிட்டு பொட்டியக் கட்டிடறேன்,நன்றி வணக்கம்! =)/// எங்கயாச்சும் ட்ரிப் போறீங்களோ??

En Samaiyal said...

//காஞ்சனா போல ஒரு காமெடி படம் இன்னும் வரல...ஹா..ஹா... :-)))))))))))))))))))// நெஜம்மா வா ஜெய் அப்போ பார்க்கலாம் ன்னு guarantee கொடுக்கறீங்களா?

ஜெய்லானி said...

//நெஜம்மா வா ஜெய் அப்போ பார்க்கலாம் ன்னு guarantee கொடுக்கறீங்களா? //

நான் படம் பார்த்ததே நைட் 2 மணிப்போலதான் ..சிரிச்சே வயறு வலி வந்திட்டுது ஹா..ஹா... :-))))))

ஜெய்லானி said...

போஸ்ட் போட்ட மஹியை கானோம் ..கப்பல் தாலாட்டியதில நல்ல தூக்கமா..?? ஹா..ஹா... :-))))

Jay said...

beautiful captures with lovely presentation mahi..;)
Tasty Appetite

Mahi said...

/இட்லிக்கு நல்லெண்ணெய் விட்டு எடுத்து கொண்டு போனீர்களோ/இல்லை ஸாதிகாக்கா,ட்ரிப்ஸுக்கு இட்லி-எதாவது காரசட்னி கொண்டுபோவதுதான் வழக்கம். நல்லெண்ணெய் இட்லி இதுவரை கொண்டுபோனதில்லே! நம்மள்லாம் டயட் பண்ணும் ஆட்கள்,மறந்துட்டீங்க?! ;) நன்றி அக்கா!
~~
அதிராவ்,உங்களுக்கு ஸ்பெஷலா பிரியாணில அ.கோ.மு. ஒளிச்சு வைச்சிருக்கேன்,அடுத்த பதிவில,எடுத்துக்குங்கோ!;)
~~
லஷ்மிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!
~~
மீரா,வீடியோ வொர்க் ஆகுதேங்க,மறுபடி ட்ரை பண்ணிப்பாருங்க.
ஊக்கம் தரும் கருத்திற்கும்,வாழ்த்துக்கும் நன்றி! நாங்க எக்கச்சக்கமா ஊர் சுத்திட்டோம்,ஆனா ப்ளாகில் பகிர ஆரம்பித்தது சமீபகாலமாகத்தான்.:)
நன்றிங்க!
~~
என் ராஜபாட்டை ராஜா, முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க!
~~
/ஏன் இப்போ அவர் வாறேல்லையோ?:))/என்ன அதிரா இப்பூடி கேட்டுப்போட்டீங்க?? "அவர்" இல்லாமல் நாம் ஒருவருமே இல்லையேஏஏஏஏஏஏ! ஹையோ,,நானும் காத்தைச் சொன்னேன்! ;)))))

/அது காத்துக்கா மகி கட்டுவது, டோருக்காக அல்லவோ? ஆரும் உள்ளே நுழைந்தால் சத்தம்போடுவதற்காகத்தானே.../அப்படியா சொல்றீங்க?? ம்ம்..எங்க வீட்டில அப்படி இல்லையே,ஊரிலும் வீட்டுக்கு முன் போர்ட்டிகோவில்தான் மாட்டுவோம்,கதவின் முன் மாட்டியதில்லை.

கதவுக்கு முன்னால காலிங்பெல் தானே இருக்கும்? இந்த சைமைத் தொங்கப்போட்டா இடைஞ்சலா இருக்காது?:):)

//ஊரில இல்லாத பாட்டெல்லாம் பாடி வீடியோ எடுத்து.. புளொக்கில போட்டு... எல்லோரையும் வலையுலகை விட்டே ஓடும்படி செய்திடுவன்.. ஐ மீன்:) என் குரல் கேட்டு:)).//ஆஆஆஆஆ...இந்த பாஸிபிளிட்டியை யோசிக்காமல் வீடியோவைப் போஸ்ட் பண்ணிட்டனே, கூகுளாண்டவரே வலையுலகைக் காப்பாத்தப்பா! ;))))

/காத்தில கண்டமில்லாமல்:) நல்லபடி தப்பி வந்திட்டீங்கள்./ஆமாம் போங்க. ஐலேண்ட் போய்ச் சேர்வதுக்குள் நாம்பட்ட பாடு எனக்கில்ல தெரியும்? ;) ஆனா வரும்போது காத்தும் கடலும் அமைதியா இருந்தது,வந்ததே தெரில!

/பச்சைப்பூவை ஆரோ கடத்திப்போட்டினம் மகீஈஈஈஈஈஈஈஈஈஈஈ:((((./அப்படியா சொல்றேள்? பச்சைப்பூ தானாப் போயி யுட்யூப்ல, அங்க இங்கன்னு தமிழ்ப்படங்கள்ல மூழ்கிப் போயிட்டதாக் கேள்வி!ஆரும் கடத்த வாய்ப்பில்லை! :)

Mahi said...

அமீனா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!:)
~~
/என்னைப் போல் யாரவது invaluable comments போட ஆள் வருவாங்க./ஆசியாக்கா,டெஞ்சன்:) ஆகிட்டீங்களோ?? சாரி! ஒரே வார்த்தை-பல அர்த்தம்,o.k.? கூல் டவுன்! ;)))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
~~
ஏஞ்சல் அக்கா,நமக்கு நிறைய சிமிலாரிட்டீஸ் இருக்குது போல! ;) உங்களைக் காணம்னு ரொம்பவே தேடிட்டோம்,இனிமே சொல்லிட்டு காணாமப் போங்க.
நன்றி!
~~
சித்ரா மேடம்,நீங்க "Bay area"ல இருக்கீங்கன்னு நினைச்சேனே,எங்க வீட்டுக்குப் பக்கத்திலேதான் இருக்கீங்க போல?! ;)
வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றிங்க!
~~
காமாட்சிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
~~
/கமெண்டை அங்கேயே போட்டிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ் :-))))/அதை இங்கயும் வந்து சொன்னதுக்கு நன்றி பச்சை ரோசா அண்ணா!:)
~~
/எங்க அக்கா வீடு பாஸ்டன் ல இருக்கு. ஆனா அங்க வீடெல்லாம் கொஞ்சம் வேற மாதிரி இருக்கு./கிரிசாக்கா,நாங்க இருக்கறது ட்ராபிகல் ஸ்டேட்டு,பாஸ்டன் குளிர்ப்பிரதேசம் இல்லையா? அதனாலதான் வேறமாதிரி தெரியுது உங்களுக்கு.:) வீட்டுக்குள்ள கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இருக்கும் எல்லா ஏரியாவும்.

/நடு ராத்திரி மோகினி பிசாசு போல தான் வீட்டுக்கு வருவீங்க போல இருக்கு/ ஹா..ஹா..எக்ஸாட்லி!

/ஊருல இருந்து வாங்கிட்டு வந்த டி வி டி இன்னும் பார்க்காம இருக்கேன் ஒரு பயந்தேன் ஹீ ஹீ/ஊர்ல ஒருநாள் பார்க்க ஆரம்பிச்சோம்,ஆனா முழுசா பார்க்கலை! பயம்லாம் இல்ல,அதென்னமோ அவ்வளவாப் புடிக்கலீங்க! இப்பத்த தமிழ்ப்படங்கள் நாங்க அவ்வளவாப் பார்க்கறதே இல்ல.:)

/ஆனா ரெம்ப சுவாரஸ்யமா எழுதறீங்க ஸோ well done ! /ஆஹா,மெய்யாலுமா சொல்லறீங்க??! ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.நன்றி!

/எங்கயாச்சும் ட்ரிப் போறீங்களோ??/ இல்லைங்க,இங்கதான் இருக்கேன்.அப்படியே எங்காவது போனாலும் இந்த வெல் கனெக்டட் வெப் உலகம் நம்மை விடாதுல்ல,வந்துருவம்!;)

ஜெய் அண்ணா,நீங்க கமென்ட் போட்ட நேரம் உடனே பதில் போட முடீல,தூங்கி எழுந்து ப்ரெஷாப் போட்டிருக்கேன், நன்றி! :)

ஜெயந்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

Post a Comment

Related Posts with Thumbnails