சாப்பாட்டுத்தட்டை வைச்சுட்டு "சந்திரரே,சூரியரே.."ன்னு டைட்டில்!! :) :) சிரிக்காதீங்க, தெம்பா சாப்ட்டுட்டு அவங்க ரெண்டு பேரையும்பார்க்கப் போலாம், சரியா? veggie bowl, chicken bowl ரெண்டுமே இருக்கு. க்ளோஸ் அப்-ல இருப்பது சைவம், சாப்பிடுங்க!
சில நாட்களுக்கு முன் வந்த சித்ரா பௌர்ணமியன்று பஸிஃபிக் கடலோரம் சூரிய அஸ்தமனத்தையும், சந்தோரதயத்தையும் பார்க்கப் போயிருந்தோம். பின்மதிய நேரம் கிளம்பி, பீச் போகும் வழியில் Chipotle மெக்ஸிகன் க்ரில்-ல மதிய உணவை முடித்தோம். இதுவும் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் செய்ன் என்றாலும் கொஞ்சம் ஹெல்த்தியான உணவாக சாப்பிடலாம். உணவை விடவும், அதை வைத்துக் கொடுத்த ட்ரே என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அந்த தட்டைப் பாருங்களேன், மெகா சைஸ்ல நம்மூர் அலுமினியத்தட்டு! :)
சரி.. சாப்பிட்டாச்சு, சாப்பாட்டோட தட்டையும் சேர்த்து போட்டோவும் எடுத்தாச்சு,கிளம்புவோமா?...
சிறிய மலைக்குன்றுகளுக்கிடையில் வளைந்து நெளிந்து செல்லும் சாலை வழியே பயணம் தொடர்ந்தது.. படத்தை ரைட் க்ளிக் செய்து பாருங்க, ரோடு தெரியும்! :) [ரைட் க்ளிக் செய்து open in a new tab-என்று போட்டால், போட்டோவை ஜூம் செஞ்சு பார்க்கலாம்! ]
இந்தமுறை கடலோரம் போகாமல் மலைகள் மேலே ஏறினோம். அங்கே ஒரு ஹைக்கிங் ட்ரெய்ல் இருக்கிறது. மலைமுகட்டிலிருந்து நேராக கடலுக்கு இறங்கும் 8மைல் ரவுன்ட் ட்ரிப் ஹைக் அது. "இறங்கையில் எதுவும் தெரியாது, ஜாலியா இறங்கிடலாம், திரும்போதுதான் பெண்டு நிமிர்ந்துரும்" - இது நான் சொல்லலை, அனுபவப்பட்ட ஒருவரின் கமென்ட்டு..அவர் யாருன்னு நீங்களே இந்நேரம் கண்டுபுடிச்சிருப்பீங்க! ;)
அதோ...அங்க அந்த ஆரஞ்ச் கலர் பலூன் தெரியுதா? அந்த பலூனுக்குக் கொஞ்சம் அந்தப்பக்கம் ஒரு ப்ரவுன் கலர் பில்டிங் தெரியுதா? அதானுங்க எங்க வீடு! ஹாஹா! :) ஹைக்-ல சும்மா கொஞ்ச தூரம் போலாம்னு இறங்கினோம், அப்ப எடுத்த படங்கள்தான் இவை!
குளிரடிக்க ஆரம்பிச்சுட்டதால் ஹைக்-ஐ தொடராமல் திரும்பிவிட்டோம். பார்க்கிங் லாட் அருகே இருக்கும் வியூ பாயின்ட்டில் இருந்து மஞ்சள்ப் பூக்களும், தொலைதூர வீடுகளும், பஸிஃபிக் கடலும், நீலவானமும்! ரொம்ப அழகா இருந்தது.
சன்ஸெட் வரையிலும் நேரத்தைப் போக்கணுமே என்று என்னவர் புத்தகம் படிக்க ஆரம்பிச்சார். நான் சுத்திச் சுத்தி அங்கிருந்த பூ, பூச்சி-பொட்டு எல்லாமும் படமெடுத்துவிட்டு வந்து அவரிடம் தொணதொணக்க ஆரம்பிச்சேன்! தொந்தரவு தாங்க முடியாமல் படிச்சிட்டிருந்ததை என் கையில் குடுத்துட்டு அவர் காமராவுடன் கிளம்பிட்டார். ;)
சிறிது நேரத்தில் சூரியனும் அந்திவானில் இறங்க ஆரம்பிக்க, கீழ்வானில் சந்திரன் மேலே ஏற ஆரம்பித்தான். சூரிய அஸ்தமனத்தின் பிறகு சற்று தள்ளியிருந்த உயரமான ஒரு இடத்துக்கு தட்டுத் தடுமாறி ஏறி வானத்தைப் பார்த்த எல்லாரையும் தன்னை மறந்து "வாவ்" என்று சொல்லவைத்தது சித்திரை மாதப் பௌர்ணமி..
நிலா உதயமாகும் நேரத்தில் பிரம்மிப்பூட்டும் அழகும் வண்ணமும் பிரம்மாண்டமுமாய் இருந்தது..சரியாக அந்நேரம் காமெராவில் பேட்டரி தீர்ந்துவிட்டது..இருளும் சூழ ஆரம்பித்தது.
பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எக்லிப்ஸைப் பார்க்கும் protective glasses வாங்கியிருந்தார்கள். கடைசி இரண்டு படங்கள் அந்தக் கண்ணாடி வழியே எடுத்தது. அதனால்தான் இப்படி அடர்ந்த வண்ணத்தில் இருக்கிறது. மற்றபடி வெயில் அடித்த மாதிரிதான்(!) இருந்தது.
எங்க வீட்டுக்குள் விழுந்த பிரதிபலிப்பு, மங்கலாய் அடித்த வெயில், கிரகணம் பார்க்க கூடியிருந்த மக்கள்.. என்று இரண்டு மணி நேரங்கள் இன்ட்ரஸ்டிங்காய் கழிந்தது! இதைப் படித்த சிலநிமிஷங்கள் உங்களுக்கும் இன்ட்ரஸ்டிங்காய் இருந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு, 'சந்திரரே, சூரியரே' நிறைவு பெறுகிறது! நன்றி!

~~
(20/05/2012) மாலை ஐந்து முப்பதிலிருந்து சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு சூரியகிரகணம் இருந்தது. அதை நேரடியாகப் பார்க்கக்கூடாது என்று எச்சரித்திருந்தார்கள். அதனால் கண்ணாடி வைத்து, ஒரு பேப்பரில் சிறிய துளை செய்து, சூரியகிரகணத்தின் பிரதிபலிப்பைப் பார்த்தோம். :)
பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எக்லிப்ஸைப் பார்க்கும் protective glasses வாங்கியிருந்தார்கள். கடைசி இரண்டு படங்கள் அந்தக் கண்ணாடி வழியே எடுத்தது. அதனால்தான் இப்படி அடர்ந்த வண்ணத்தில் இருக்கிறது. மற்றபடி வெயில் அடித்த மாதிரிதான்(!) இருந்தது.
எங்க வீட்டுக்குள் விழுந்த பிரதிபலிப்பு, மங்கலாய் அடித்த வெயில், கிரகணம் பார்க்க கூடியிருந்த மக்கள்.. என்று இரண்டு மணி நேரங்கள் இன்ட்ரஸ்டிங்காய் கழிந்தது! இதைப் படித்த சிலநிமிஷங்கள் உங்களுக்கும் இன்ட்ரஸ்டிங்காய் இருந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு, 'சந்திரரே, சூரியரே' நிறைவு பெறுகிறது! நன்றி!
super photos and well written.
ReplyDeleteரைட் க்ளிக் செய்யாமலேயே எனக்கு க்ளியரா தெரியுது மகி .
ReplyDeleteஇப்ப பாருங்க இந்த கமெண்டுக்கு பூசார் எதிர் கமென்ட் போடுவாங்க
//நான் கண்ணை மூடினாலும் எல்லாமே க்ளியரா தெரியுது என்று //
ஹா ஹா ஹா :))))
எப்பவுமே அவங்க எஸ் மேம் போடணும்னா ஒரு ஐடியா
இருக்கு கையில் காப்பி அல்லது டீ கோப்பையுடன் தொண தொணக்க
ஆரம்பிங்க .:))) எல்லாம் அனுபவந்தேன்
சூரிய கிரகணம் நல்லா பொன்னிறமா ரோஸ்ட் ஆன முந்திரி பருப்பு மாதிரியே இருக்கு .
சூரிய சந்திரர் படமும் காப்ஷனும் சூப்பர் :)))
என்னாச்சு மகிக்கு.. இப்ப போய் சந்திர சூரியனைக் கூப்பிடுறா.... .... வில் கம் லேட்டர்யா...:)))
ReplyDeleteசந்திரரே சூரியரே எக்லிப்ஸ் சூப்பர் மகி. மெனக்கெட்டு அழகா படம் எடுத்து இருக்கீங்க. அகைன் உங்கள பார்த்து வியக்கும் விஷயம் எப்புடி எல்லாத்தையும் interesting ஆ எழுதுறீங்க . ஜமாயுங்க.
ReplyDeleteநான் எங்க வீட்டுல தொண தொணத்திட்டு கிராஸ் குவேஷன் மல்டிபிள் சாய்ஸ் எல்லாம் வைப்பேன் :)) ஸோ வேறு வழியில்லாம கேக்குற மாதிரி பாவ்லா வாச்சும் பண்ணிட்டிருப்பாங்க;))
ஓகே அப்புறம் வரேன். ஒரு சச்சின் டெண்டுல்கர உருவாக்க போய் கிட்டு இருக்கேன் ஹீ ஹீ ( பையன் கிரிக்கெட் மாட்ச் ) முடிஞ்சா என் வீட்டு பக்கம் ஒரு எட்டு பாருங்க:))
பூஸ் சொன்னபடி ராத்திரியோட ராத்திரியா டைப் பண்ணி பப்ளிஷ் பண்ணாலும் டாஷ்போர்டுல மேல வர மாட்டேன்னு அடம்ம்ம்ம் புடிக்குது . யார பார்த்து பயப்புடுதுன்னு தெரியலையே :))
ReplyDeleteபடத்தை ரைட் க்ளிக் செய்து பாருங்க, ரோடு தெரியும்! :)////
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது லெவ்ட் கிளிக்:)))
En Samaiyal said...
ReplyDeleteபூஸ் சொன்னபடி ராத்திரியோட ராத்திரியா டைப் பண்ணி பப்ளிஷ் பண்ணாலும் டாஷ்போர்டுல மேல வர மாட்டேன்னு அடம்ம்ம்ம் புடிக்குது . யார பார்த்து பயப்புடுதுன்னு தெரியலையே :))/////
ஹா...ஹா..ஹா.... இரவென்பதால ஏதும் காத்துக் கருப்பு உலாவியிருக்குமோ?:))
அதோ...அங்க அந்த ஆரஞ்ச் கலர் பலூன் தெரியுதா? ///
ReplyDeleteஇல்ல...
////அந்த பலூனுக்குக் கொஞ்சம் அந்தப்பக்கம் ஒரு ப்ரவுன் கலர் பில்டிங் தெரியுதா?//
அட சத்தியமா எனகு எதுவும் தெரியேல்லை கர்ர்:))
படங்கள் எல்லாமே அழகு... அவ்ளோ தூரம் போயும் கிண்டில்ல கதை படிக்கிறாரெனில்.. இப்போதான் புரியுது மஞ்சள் பூவின் தொல்லை தாங்க முடியல்லியோ?:))))
ReplyDeleteஹையோ பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்:))
இதை நான் இப்போ சொல்லியே ஆகணும்:).
ReplyDeleteஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தப்பாமல் தலைப்பைப் போட்டுவிட்டு ஓடிட வேண்டியது, நாங்க எல்லாம் விசரர் பைத்தியகாரர் மாதிரி ஓடி ஓடிக் கமெண்ட்ஸ் போட்டுக் களைச்சாலும்.. ஆள் எஸ்கேப்ப்ப்:))...
பிறகு வந்து புதுத்தலைப்பு.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்ன நினைச்சிட்டு இருக்கிறா எங்களைப்பற்றி?:)).. இதை பப்பூஊஊ.. அஞ்சூஊஊ... கீரீஈஈஈஈஈ,.. றீச்ச்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இதில ஆர் கேட்காட்டிலும்.. நம்மட வான்ஸ்ஸ்ஸ்ஸ் கேட்பா பாருங்கோ.. அப்ப இருக்கு... நான் ரொம்பக் கோபமாப் போறன் எனச் சொல்லிடுங்கோ:))..
அதாரது அவதிப்படுறது சொல்ல:)) கர்ர்ர்ர்ர்ர்:)) நான் முருங்கையில ஏறின பிறகுதான் சொல்லோணும் சொல்லிட்டேன்:)) மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).
////ஓகே அப்புறம் வரேன். ஒரு சச்சின் டெண்டுல்கர உருவாக்க போய் கிட்டு இருக்கேன் ஹீ ஹீ ( பையன் கிரிக்கெட் மாட்ச் ////
ReplyDeleteஹா..ஹா..ஹா...
//angelin said...
ReplyDeleteரைட் க்ளிக் செய்யாமலேயே எனக்கு க்ளியரா தெரியுது மகி .///
உப்பூடியெல்லாம் சொல்லி குலாப் ஜாமூன் வாங்கிடலாம் என்ற நினைப்பு:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பலூன் தெரியுதா?:)))
நானும் உணவு வைத்துக் கொடுத்த தட்டை தான் இப்படி சந்திரரே சூரியரேன்னு புகழ்றீங்கன்னு நினைச்சேன்.ஆனால் உண்மையிலேயே பெயருக்கேற்ற அருமையான பகிர்வு.ஓசியில் உங்களோடு நிறைய சுற்றி பார்த்தாச்சு.
ReplyDeleteஅனு, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
ReplyDelete~~
ஏஞ்சல் அக்கா,/சூரிய கிரகணம் நல்லா பொன்னிறமா ரோஸ்ட் ஆன முந்திரி பருப்பு மாதிரியே இருக்கு.////என்ன மாதிரியான ஒரு உவமை!! அப்படியே புல்ல்ல்ல்ல்லா அரிச்சுப் போச்சுபோங்க! :)) கருப்புக் கண்ணாடி வழியே பார்த்ததால் அந்த கலரில் தெரிகிறார் சூரியன். மத்தபடி நைஸா, கண்ணாடியை எட்டிப் பார்த்தா,வெள்ளியை உருக்கி வார்த்தது போல பளீர்னு கண்ணில அடிக்கும் வெள்ளைதான்! :)
/கையில் காப்பி அல்லது டீ கோப்பையுடன் தொண தொணக்க
ஆரம்பிங்க .:))) /இது பூஸை வாயடைக்க வைக்கும் டெக்னிக்கா,அல்லது வீட்டில நீங்க யூஸ் பண்ணும் டெக்னிக்கா? எனக்கு டவுட்டாவே இருக்கு! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
/நான் எங்க வீட்டுல தொண தொணத்திட்டு கிராஸ் குவேஷன் மல்டிபிள் சாய்ஸ் எல்லாம் வைப்பேன் :))/ நானும் அதெல்லாம் வைப்பேன் கிரிஜா! எங்கூட்டுக்காரர் மல்டி டாஸ்கிங் பண்ணுவாரு! நாம பேசறதைக் கவனிக்காத மாதிரியே இருக்கும்."இப்ப நான் என்ன சொன்னேன்,சொல்லுங்க?"ன்னா, கரெக்ட்டா நான் சொன்னதில கடைசிவரியை கரெக்ட்டாச் சொல்லி எனக்கு பல்பு குடுப்பாரு. :))))
/ஒரு சச்சின் டெண்டுல்கர உருவாக்க போய் கிட்டு இருக்கேன் / ஆஹா, ஆல் த பெஸ்ட்! நீங்களும் கூட சேர்ந்து வெளையாடுங்களேன்! மொறைக்கப் படாது,அடிக்கிற வெயில உபயோகமா யூஸ் பண்ணிக்க ஒரு வழி சொன்னேன்.ஹிஹி!
/பூஸ் சொன்னபடி ராத்திரியோட ராத்திரியா டைப் பண்ணி பப்ளிஷ் பண்ணாலும் டாஷ்போர்டுல மேல வர மாட்டேன்னு அடம்ம்ம்ம் புடிக்குது ./ என்ன ப்ரச்சனைன்னு மெயில் பண்ணுங்கோ, ஐ வில் ஹேப்பி டு அஸிஸ்ட் யூ! :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிரிஜா!
~~
/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது லெவ்ட் கிளிக்:))) / இல்லே, நீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்-ஐ வாபஸ் வாங்கியே ஆகணும், லெவ்ட் க்ளிக் செய்தா ப்ளாகிலயே ஸ்லைட் ஷோ தான் வரும். ரைட் க்ளிக் செய்து open in a new tab-என்று போட்டால், போட்டோவை ஜூம் செஞ்சு பார்க்கலாம்!
/ஹா...ஹா..ஹா.... இரவென்பதால ஏதும் காத்துக் கருப்பு உலாவியிருக்குமோ?:)) / இருக்கலாம் அதிரா! கிரிஜா, இனிமே நீங்க ப்ளாகுக்கு டைப் பண்ணும்போது குளிச்சு முழுகி, மஞ்சக்கலர் பேன்ட் சட்டை (நீங்க சேலை உடுத்தமாட்டீங்கனு நானா முடிவு பண்ணிகிட்டேன்), நெத்தி நிறைய விபூதி, எட்டணா சைஸ் குங்குமப் பொட்டு, தலை நிறைய வேப்பிலை--- இந்த கெட்டப்-ல உட்கார்ந்து டைப் பண்ணுங்க,என்ன? அப்பதான் உங்க கெட்டப்பைப் பார்த்த பேய் பயந்துபோய் பதறியடிச்சு ஓடீரும்! :))))))
/அட சத்தியமா எனகு எதுவும் தெரியேல்லை கர்ர்:)) / அடடே, ரொம்ப அப்பாவி பூஸா இருக்கே..நம்ம சொன்னத எல்ல்ல்ல்ல்ல்லாமே நம்புதே?! இன்னும் என்னென்ன சொல்லலாம்?! ;)))
/அவ்ளோ தூரம் போயும் கிண்டில்ல கதை படிக்கிறாரெனில்.. இப்போதான் புரியுது மஞ்சள் பூவின் தொல்லை தாங்க முடியல்லியோ?:))))// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*100! ஆபீஸ் போயிருக்கார், சாயந்திரம் வந்ததும் கேட்டுச் சொல்றன் அதிரா!
/நான் ரொம்பக் கோபமாப் போறன் எனச் சொல்லிடுங்கோ:))../ வேணாம் அதிரா, கோவப்படாதீங்க, சொன்னாக் கேக்கணும்! அ.கொ.மு. அரை டஜன் ஸ்பெஷலா அவிச்சுத் தாரேன், கூல் டவுன்! இதோ இப்ப,இப்ப,இப்பவே எல்லாக் கமென்ட்ஸுக்கும் ரிப்ளை பண்ணிடறேன். :)
காலைலதான் பாத்தேன், முருங்கையில முழுக்க கம்பளிப் பூச்சியாப் புடிச்சிருந்தது. நீங்க பாட்டுக்கு கண்ணை மூடிட்டு முருங்கையிலே ஏறினா எப்படி? ஜம்ப் பண்ணிருங்க,பூச்சிக் கடிய விட எங்க கடி பரவாயில்லையா இருக்கும்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!
~~
ஆசியாக்கா, நீங்க நினைப்பதை மாத்தினாத்தானே பதிவு இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்? ;)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியாக்கா!
~~
படங்களோடு வர்ணனையும் அருமை.
ReplyDeleteதலைப்பைப்பார்த்ததும் நம்ம மகி சந்திரமணடலத்துக்குத்தான் டூர் போய் வந்து பதிவெழுதி இருக்கார் போலும் என்று நினைத்து வந்தால்......ஆனாலும் பட்ங்களும் பகிர்வும் அருமையாக இருந்தது மகி.
ReplyDeleteபடங்கள் எல்லாமே அழகு. சூரிய கிரகணம் நல்லா இருக்கு. அந்த தட்டு ( chipotle) நீங்க ஆட்டையை போடலை தானே
ReplyDelete. பூஸார், வாட் டு யூ மீன்??? நீங்க சொல்றது எனக்கு எப்ப விளங்கிச்சு? இப்ப விளங்க.
கிரி, வருங்கால டெண்டுல்கரின் அம்மாவே. உங்கள் ப்ளாக்கில் அந்த விருது பெற்ற போஸ்ட் போட்ட பிறகு என் ரீடரில் எதுவும் வரவில்லை.
பூஸாரை இங்கிலிபீஸூல திட்டிப் போட்டேன். அவர் வாறதுக்குள்ள நான் போய் டீச்சருக்கு பக்கத்திலை பதுங்க போறேன்.
'நிலவின் அழகில் வெட்கி முகிலில் மறையும் சூரியன்'... ஆஹா!
ReplyDeleteஅந்த மலைப்பாதை! அற்புதம்.
ReplyDeleteசாப்பாட்டுத் தட்டும் அழகாக சந்திரன் நாணும்படி...
ReplyDeleteபடங்களும் அதற்கு தகுந்த வர்ணனையும் நல்லா இருக்கு.
ReplyDeleteNice clicks and a wonderful post..
ReplyDelete//சிரிக்காதீங்க// ஹி ஹி ;))
ReplyDelete//மெகா சைஸ்ல நம்மூர் அலுமினியத்தட்டு!// இதுக்கெதுக்கு சிரிப்பு! மூத்தவர் வீட்டு விருந்துக்குப் போயிருந்தேன். நீள கைபிடியோட ஸ்டைலா எங்கூர்ல இருந்து வந்த காமாசோமா சிரட்டை அகப்பைலாம் டிஷ்ல உட்கார்ந்து இருந்தது. நான் ஷாக்காகிட்டேன். ஆனா, வித்தியாசமா இருந்தது வந்திருந்தவங்களுக்கு பிடிச்சு இருந்துதே!
//வியூ பாயின்ட்டில் இருந்து மஞ்சள்ப் பூக்களும்// அங்க கூடவா! ;)
சூப்பர், இது எதையும் பார்க்காத எனக்கு உபயோகமா இருந்துது மகி.
நட்சத்திர நாயகரே எங்க!! அடுத்த போஸ்ட்டா!!
வாங்கோ வான்ஸ்.. ;))
ReplyDeleteவணக்கமுங்க!மொத தடவையா வரே!சந்திரரே/சூரியரே நல்லாருந்திச்சு!அப்புறம்,அந்த நம்மூரு அலுமினியத் தட்டு,சுடலியா?ஹி!ஹி!ஹி!!!
ReplyDeleteசித்ராக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete~~
//சந்திரமணடலத்துக்குத்தான் டூர் போய் வந்து பதிவெழுதி// அடடே,ஸாதிகாக்கா, இந்த ஐடியா நல்லா இருக்கே! ஒரு டிக்கெட்டை(!) புக் பண்ணி அனுப்புங்க,உங்க புண்ணியத்தில சந்திரமண்டலத்துக்கும் ஒரு ட்ரிப் அடிச்சிடறேன்! :)))
நன்றி ஸாதிகாக்கா!
~~
//அந்த தட்டு ( chipotle) நீங்க ஆட்டையை போடலை தானே// ச்சே,ச்சே,அதெல்லாம் இல்ல வானதி! கேமரால சுட்டதோட சரி! ;)
//பூஸார், வாட் டு யூ மீன்??// தட்ஸ் குட்,அப்பூடியே மெயின்டெய்ன் பண்ணுங்கோ,தேங்க் யூ! :)
//பூஸாரை இங்கிலிபீஸூல திட்டிப் போட்டேன்.// ஆத்தாடி, கன்னாபின்னா-ன்னு திட்டிப் போட்டீங்க போல? பூஸார் ஆளையே காணோமே? நீங்க பூ.க.அ.நெ.தலைவியேதான்! நானும் அந்தப் பட்டத்தை வலி;)மொலி;)கிறேன்!
நன்றி வானதி!
~~
/சாப்பாட்டுத் தட்டும் அழகாக சந்திரன் நாணும்படி... / ஆஹா! சூப்பர் போங்க! எனக்கு அப்படி ஒரு thought வரவே இல்லை! கலக்கிட்டீங்க ஜனா! :)
படத்திலுள்ளது மாதிரி அழகான மலைப்பாதைகள் இங்கே நிறைய உண்டுங்க. முடிந்த வரை கேமராவில் சிறைப்படுத்தி வலைப்பூவிலும் பகிர்ந்துவிடுவேன். :)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
~~
லஷ்மிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
~~
ஹேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
//வித்தியாசமா இருந்தது வந்திருந்தவங்களுக்கு பிடிச்சு இருந்துதே! // எனக்கும் பிடிச்சுத்தான் இருக்கு இமா! முதல் முறை இங்கே பார்த்ததால் கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது. நீங்க சொல்லும் காமாசோமா-கரண்டிமேல எனக்கும் ஒரு கண்,எங்காவது அகப்பட்டா வாங்கிருவேன். :)
நட்சத்திர நாயகரே எங்க!! அடுத்த போஸ்ட்டா!! /// அவிங்கள்லாம் என் கேமராவுல வரமாட்டாங்களாம். SLR
தேவைப்படுது, அனுப்பறீங்களா? ;)
நீங்க பாட்டுக்கு //வாங்கோ வான்ஸ்.. ;)) // என்று கமென்ட் போட்டா?? எனக்கு தலையும் புரில காலும் புரில, பிறகு மேலே வானதி கமென்ட்டைப் பார்த்து, //
பூஸாரை இங்கிலிபீஸூல திட்டிப் போட்டேன். அவர் வாறதுக்குள்ள நான் போய் டீச்சருக்கு பக்கத்திலை பதுங்க போறேன்.// புரிந்துகிட்டேன். அப்பா சாமீ, டீச்சர் ரொம்ப டஃப்-ஆ பாடம் நடத்தறீங்களே! ;)
வருகைக்கும் கருத்துக்க்ம் நன்றிங்க!
~~
திரு.யோகா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அலுமினியத்தட்டை கேமரால சுட்டு உங்க எல்லாருக்கும் குடுத்துட்டேன்ல? அவ்ளோதான்! :)
~~