Friday, May 11, 2012

மீல்மேக்கர் & பட்டாணி கறி / சோயா கீமா

ஆசியா அக்காவின் வலைப்பூவில் இந்த சோயா கீமா-வைப் பார்த்ததுமே செய்து பார்க்கவேண்டும் என்று கை துறுதுறுக்க, ஒரு ஞாயிற்றுகிழமை லன்ச்சுக்கு செய்துவிட்டேன். அவசரமாய் சமைத்ததில் சில மாறுதல்கள், கூட்டல்கள் நடந்தது, ஆனாலும் சுவை குறையவில்லை! ;)

தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்) -12
ஃப்ரோஸன் பட்டாணி-1/4கப்
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
தக்காளி-2
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2டீஸ்பூன்
மல்லித்தூள் -1/2டீஸ்பூன்
சக்தி கறிமசாலா பொடி -1டீஸ்பூன்
***தேங்காய் விழுது கொஞ்சம் (விரும்பினால்)
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மல்லி-புதினா இலை சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை
1.சோயா உருண்டைகளை கொதிநீரில் 3 நிமிடங்கள் போட்டு கொதிக்கவிட்டு, குளிர்ந்த நீரில் அலசி பிழியவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துவைக்கவும்.

2.சிறிய ப்ரெஷ்ஷர் குக்கரில் எண்ணெய் காயவிட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு பச்சைவாசம் அடங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பிறகு தூள்வகைகளை சேர்த்து கிளறவும்.
3. தேங்காய் விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கி,
4. உதிர்த்த சோயா மற்றும் பட்டாணியையும் சேர்க்கவும்.
5. கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேகவிடவும்.

6. இரண்டு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
7. நறுக்கிய மல்லி-புதினா சேர்த்து தண்ணீர் வற்றும்வரை கிளறி இறக்கவும்.
[பொரியல் தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் ட்ரையாக இருக்கவேண்டும், ஒருவேளை தெரியாம, தண்ணி அதிகமா வைச்சுட்டீங்கன்னா தண்ணீர் வற்றும்வரை குக்கரை அடுப்பில் வைத்து கிளறி இறக்குங்க! ;)]
8. சுவையான மட்டர்- சோயா கீமா ரெடி!

பருப்பு-ரசம்-சோயா பொரியல்-வடகம்- சாப்பாடு இவற்றுடன் ஒரு ஞாயிறு மதிய உணவு!
ஆசியாக்கா, சுவையான ரெசிப்பிக்கு நன்றி!

26 comments:

  1. sorry.... dont mistake me.... this one looks dry curry or gravy?? coz im having soy balls..... planing to do it for today night.

    ReplyDelete
  2. This is a dry curry! My final outcome is dry version only, no confusions!
    Advance thanks for trying out! :)

    ReplyDelete
  3. Looks nice.A soya is a good source of protiens for vegetarians...

    ReplyDelete
  4. 12 சோயா உருண்டை போட்டு அரை கப் தண்ணீ! !நைஸாக அரைத்த மாதிரி இருக்கு,சோயா கிரானுல் உதிரியாக இருந்தால் புட்டு மாதிரி வரும்,தண்ணீர் பிழிந்து விட்டு மிக்ஸியில் 2 சுற்று சுற்றினால் சூப்பர் உதிரி.குக்கரில் வைத்தாலும்.மகி இப்படி கதற கதற விளக்கத்தை தந்து என் ரெசிப்பியை காப்பாற்றியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. உஷா மேடம், ஆமாங்க இது ப்ரோட்டீன் ரிச் ரெசிப்பிதான்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    12 சோயா உருண்டை போட்டு அரை கப் தண்ணீ!// ஆஹா,இங்கதான் தப்பு பண்ணிருக்கேனா அப்ப? ம்ம்..சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஆசியாக்கா! அடுத்த தபா;) சரியா கவனிச்சு தண்ணி சேர்க்கிறேன்.

    //தண்ணீர் பிழிந்து விட்டு மிக்ஸியில் 2 சுற்று சுற்றினால் சூப்பர் உதிரி.// அதானே நானும் செய்தேன்! முதல்ல உதிரியாதான் இருந்தது,பிறகு அந்த தண்ணீ;) சதி பண்ணிருச்சு ஆசியாக்கா!

    /இப்படி கதற கதற விளக்கத்தை தந்து என் ரெசிப்பியை காப்பாற்றியமைக்கு மிக்க நன்றி./ :( சாரி, உங்க ரெசிப்பி நல்ல ரெசிப்பிதான்,நான்தான் சொதப்பிட்டேன்,இருந்தாலும் எல்லாமே சரியா(க்)கி சுவை சூப்பரா இருந்தது. அதான் காமெடியா இருக்குமேன்னு சொதப்பல்ஸையும் ப்ளாக்ல போட்டேன்,இப்ப எடுத்துட்டேன், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஆசியாக்கா! ;):)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  6. ஆஹா...மகி... எப்பூடிச் செய்தாலும் சோயாவும் தக்காளியும் சேரும்போது ஒரு தனி சுவையைக் கொடுக்கும்....

    பார்க்க சூப்பரா இருக்கு...

    ReplyDelete
  7. அதிரா,கரெக்ட்டாச் சொன்னீங்க! :) நல்ல சுவையாக இருந்தது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!

    ReplyDelete
  8. சோயா உருண்டையை உதிரி ஆக்காமல் இதுல உருளை கிழங்கு போட்டு செய்தால் வெஜ் மட்டன் குழம்புப் போலவே இருக்கும் :-)

    ReplyDelete
  9. //பொரியல் தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் ட்ரையாக இருக்கவேண்டும், ஒருவேளை தெரியாம, தண்ணி அதிகமா வைச்சுட்டீங்கன்னா தண்ணீர் வற்றும்வரை குக்கரை அடுப்பில் வைத்து கிளறி இறக்குங்க! ;)]
    8. சுவையான மட்டர்- சோயா கீமா ரெடி!//

    சப்பாத்திக்கு டேஸ்டியாக இருக்கும் :-)

    ReplyDelete
  10. //இரண்டு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.//

    விசில் குக்கர்தான் குடுக்கனுமா..??? டவுட்டு # 65890

    ReplyDelete
  11. ஒரு வித்தியாசமான சைட் டிஷ்ஷை அறிமுகப்படுத்தியற்கு மிக்க நன்றி மகி.

    ReplyDelete
  12. சப்பாத்திக்கேத்த சூப்பர்ர் சைட் டிஷ்!!

    ReplyDelete
  13. சோயா & பட்டாணி கீமா கறி சூப்பர் மகி. இங்கே ஒரு தடவ மீல் மேக்கர் pieces ஆக ஒரு கடையில் பார்த்த ஞாபகம். அங்கேயும் அந்த மாதிரி இருக்கா ன்னு பாருங்க. இருந்திச்சுன்னா மிக்ஸ்யில் போட்டு உதிர்க்க வேண்டியதில்லை. சண்டே லஞ்ச பார்த்தாலே சாப்புட வரணும் போல இருக்கு. எங்க வீட்டுல இப்புடி ஒன்லி வெஜ் சமைச்சா ரெண்டு பேரும் மொகத்த தூக்கி :)) வெச்சிக்குவாங்க.

    ReplyDelete
  14. இதே மசாலாவ bread உக்கு நடுவுல வெச்சு டோஸ்ட் பண்ணி சாப்புடலாம். ஹி ஹீ நீங்க கேக்கவே இல்லேத்தான் ஆனாலும் எனக்கு தெரிஞ்ச மேட்டர் எ சொல்லலாமுன்னு :)) ஒய் ஆர் யு மொறைக்கிங் ங் ங் ங் ?????

    ReplyDelete
  15. சாரி கமெண்ட் ரெண்டு தடவ பப்ளிஷ் ஆயிடிச்சு நான் எல்லாம் ஐடியா கொடுத்ததுல கம்ப்யூட்டர் டென்சன் ஆயிடிச்சு போல இருக்கு :))

    ReplyDelete
  16. //விசில் குக்கர்தான் குடுக்கனுமா..??? டவுட்டு //

    நீங்க கூட விசில் குடுங்க மகி எல்லாம் வேண்டாமுன்னு சொல்ல மாட்டாங்க :))

    ReplyDelete
  17. மீல்மேக்கர்&பட்டாணி கறி நல்லாருக்கு.மீல்மேக்கரை முழுசா போட்டாலே நான்தான் சாப்பிடனும்.இதில் அரைத்து செய்தால் அவ்வளவுதான். சான்ஸே இல்லை.எனக்காக வேண்டுமானால் கொஞ்சமாக செய்துகொள்ளலாம்.பகிர்வுக்கு நன்றி மகி.

    ReplyDelete
  18. சூப்பரா இருக்கு. இந்த முறை இந்தியன் கடையில் சோயா வாங்கிட வேண்டியது தான். கிரி வீடு போல என் வீட்டிலும் என் ஆ.காரர் மூஞ்சியை தூக்கி வைச்சிடுவார். இருந்தாலும் விடப்போவதில்லை.

    ReplyDelete
  19. Very yummy and nice protein rich side dish..

    ReplyDelete
  20. மிக அருமை மகி

    ReplyDelete
  21. /சோயா உருண்டையை உதிரி ஆக்காமல் இதுல உருளை கிழங்கு போட்டு செய்தால் வெஜ் மட்டன் குழம்புப் போலவே இருக்கும் :-)
    / அதுவும் செய்வேன்,ஆனா வெறுமனே சோயா உருண்டை மட்டும் சேர்த்து..உ.கிழங்குன்னா என்னவர் அதை மட்டும் ஒதுக்கி வைச்சுடுவார்! ;)

    /சப்பாத்திக்கு டேஸ்டியாக இருக்கும் :-)/ ஆமாங்க,சப்பாத்தியுடனும் சாப்பிட்டேன்,சூப்பரா இருந்தது! :P

    /விசில் குக்கர்தான் குடுக்கனுமா..??? டவுட்டு # 65890 / எங்கவீட்டில குக்கர்மட்டும்தான் விசில் குடுக்கும், ஆனா உங்க வீட்டில நீங்களே கூட விசில் குடுக்கலாம், எய்தர் கேஸ், சமைச்சது வெந்திருக்கணும்,அதான் மேட்டரு!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஸாதிகாக்கா, அறிமுகப்படுத்தியவர் நம்ம ஆசியாக்கா! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    மேனகா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    /மீல் மேக்கர் pieces ஆக ஒரு கடையில் பார்த்த ஞாபகம். அங்கேயும் அந்த மாதிரி இருக்கா ன்னு பாருங்க/ பார்த்தவரை என் கண்ணில் படலைங்க கிரிஜா! மறுபடியும் கஷ்டப்பட்டு தேடிப் பார்க்கிறேன்! ;)

    /இதே மசாலாவ bread உக்கு நடுவுல வெச்சு டோஸ்ட் பண்ணி சாப்புடலாம்./நல்ல ஐடியாதான்! நான் இப்பல்லாம் ப்ரெட்-ஐ ஃப்ரென்ச் டோஸ்ட் மட்டும்தான் செய்யறேன், ஒரொரு டைம்ல சாண்ட்விச்சா செய்தேன்! :)

    /சாரி கமெண்ட் ரெண்டு தடவ பப்ளிஷ் ஆயிடிச்சு/ டோன்ட் வொரி,என்னோட ப்ளாகில் தவறுதலா பதிவான ரிபீடட் கமென்ட்ஸ் எல்லாம் நானே டெலிட் பண்ணிடுவேன்.கம்ப்யூட்டர் டென்ஷன் ஆகிடுச்சேன்னு நீங்க டென்ஷன் ஆகாதீங்க..ப்ளே இட் கூல் கிரிஜா! ;)

    /நீங்க கூட விசில் குடுங்க மகி எல்லாம் வேண்டாமுன்னு சொல்ல மாட்டாங்க :))/ இது நல்லாருக்கே! எல்லாரும் அவங்கவங்க வீட்டில விசில் குடுத்துக்குங்கப்பா..எனக்கெல்லாம் தரவேணாம்! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா!
    ~~
    சித்ராக்கா,உங்க வீட்டில மீல்மேக்கர் யாருக்கும் பிடிக்காதா? ஆச்சரியமா இருக்கே! முழுசா போட்டாதான் சாப்பிடமாட்டாங்க, இப்படி உதிர்த்து போட்டு செய்துகுடுங்க, என்னன்னு தெரியாமல் சாப்பிட்டுருவாங்க! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    வானதி, //கிரி வீடு போல என் வீட்டிலும் என் ஆ.காரர் மூஞ்சியை தூக்கி வைச்சிடுவார். // ச்சே...உங்க வீடுகள்ல இருக்க நிலைமையைப் பார்க்கையில் நான் எவ்வளவு குடுத்துவைச்ச ஆளுன்னு புரியுது!
    இந்த வாரத்தில ஒரு நாள் சர்ப்ரைஸா என்னவருக்கு சிக்கன் சமைச்சு குடுக்கப் போறேன்! ;) :)
    செய்து பாருங்க, நிச்சயம் உங்களுக்குப் புடிக்கும்!
    நன்றி வானதி!
    ~~
    அகிலா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஹேமா, கரெக்ட்டுதாங்க,சத்தான சைட் டிஷ்தான்! நன்றி!
    ~~
    ஜலீலாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~

    ReplyDelete
  22. மகி சூப்பரா இருக்கு பார்க்கவே .எனக்கு வெறுமனே அப்படியே சாப்டிடுவேன் .இது கண்டிப்பா சப்பாத்தியுடன் பெர்ஃபெக்ட் சைட் டிஷ்

    எங்க வீட்லயும் மீல் மேக்கர் ஐக்கண்டா ,கணவரும் மகளும் நைசா வாக் போயிருவாங்க எல்லாம் ஃபிஷ் அன்ட் சிப்ஸ் கடைக்குத்தான் .
    நான் ஒருதரம் மட்டன் கிரேவின்னு சொல்லி ஏமாற்றியதால் வந்த வினை :))))))))))

    ReplyDelete
  23. /நான் ஒருதரம் மட்டன் கிரேவின்னு சொல்லி ஏமாற்றியதால் வந்த வினை :))// ஆஹா!! சரியான ஏமாத்துக்கார ஏஞ்சல் அக்காவா இருக்கீங்களே? :D

    எங்க வீட்டில இது ரொம்ப பிடித்த டிஷ்..சப்பாத்திக்கு அல்லது இட்லி/தோசை/சாதத்துக்கு சைட்டிஷ் என்று அடிக்கடி செய்வேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  24. அய்யோ! மகி இப்ப தான் உங்க பின்னூட்டம் பார்த்தேன்.இந்தப்பகிர்வை நான் மிகவும் ரசித்து தானே கருத்து தெரிவித்தேன்,வடிவேலு மாதிரி நானும் கதற என்ற வார்த்தையை உபயோகித்து பார்த்தேன் அவ்வளவே!என் சமையலை செய்து பகிர்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்த விஷயம் அல்லவா!

    ReplyDelete
  25. That's just fine Asiya Akka! :) Suddenly felt that story is not prompt in this post, so edited it. No worries! I will keep writing something or other in the blog. You guys cannot escape from me! ;)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails