Tuesday, June 5, 2012

விளம்பர இடைவேளை..

முக்கியமான நிகழ்ச்சிகளான மொக்கை பதிவு / சமையல் பதிவு / ட்ரிப்ஸ் பதிவுகளுக்கு இடையில் சும்மா பாத்து ரசிச்சு சிரிச்சுட்டு போக [அதுக்காக நீங்க கமென்ட்டைப் போட மறந்து கம்பி நீட்டிரக்கூடாது! ;) ] இந்தப் பதிவு. டிவி ப்ரோகிராம்களுக்கு இடையில் வரும் (என்) மனதைக் கவர்ந்த சில விளம்பரங்களின் தொகுப்பு. இதேபோல முன்பு வந்த இன்னொரு செட் விளம்பரங்கள் காண இங்கே க்ளிக்குங்க.
~~~
கேபிள் டிவி இணைப்புக்கு போட்டியாக இருக்கும் Direct TV நிறுவனத்தின் விளம்பரம் இது. "ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி..." என்று ஒரு பழமொழி சொல்வாங்களே, அது போல! தலை முடியை விற்காதீங்க, டைரக்ட் டிவிக்கு மாறுங்க-ன்னு முடிப்பாங்க! :))))



~~~
"அதிர்ஷடம் அடிக்கும்" என்று சொல்வோம் இல்லையா? இதை கலிஃபோர்னியா லாட்டரிகாரங்க ஒரு விளம்பரமாகவே எடுத்துட்டாங்க. முதல் முறை பார்த்து நான் கொஞ்சம் அசந்தே(!) போயிட்டேன்!



சிலநாட்களில் ஏதாவது சர்ச்சை வந்ததோ என்னவோ, இப்ப லேடி லக், அடிப்பதற்கு பதிலாக அழகா, உஃப்ப்ப்-னு ஊதி அதிர்ஷடத்தைக் குடுத்துட்டுப் போவது மாதிரி விளம்பரத்தை மாத்திட்டாங்க! :)
~~~
செல்லப் பிராணிகளுக்கு எடுக்கவேண்டிய இன்ஷ்யூரன்ஸ் பற்றிய விளம்பரம் அடுத்து வருவது. செல்லங்களும் நம் குடும்பத்தில் ஒரு அங்கம் என்று அழகாகக் காட்டுவார்கள்.



குறிப்பாக, அந்த தண்ணீர் குடிக்கும் நாயின் கண்களில் தெரியும் அன்பும், குட்டிப்பெண் புல் டாகுக்கு முத்தம் தரும் காட்சியும் ச்ச்ச்ச்சோ ச்வீஈஈட்! :)
~~~
எல்லா நாடுகளிலும் பூனைகள்(!) சிக்கினும் ஃபிஷ் ப்ரையும் தான் கேட்பார்கள் போலிருக்குது! மியாவ், மியாவ், மியாவ்-ஐ ஆண், பெண் குரல்களில் சொல்லி, பூனைகளின் விருப்பத்தை அழகாக் காட்டறாங்க! அவ்வ்வ்வ்....வ்வ்..



கடேசியா வந்து சாப்பிடும் பூஸ் ஒரே வாயிலே எவ்வ்வ்வ்வ்வ்வளவு உணவை கபக்குன்னு கவ்வுது :) என்று காணத் தவறாதீர்! ;)
~~~
இந்த டென்டாஸ்டிக்ஸ் விளம்பரம் முதல் முறை பார்த்தப்ப கொஞ்சம் ஒருமாதிரியா இருந்தது. டெக்னாலஜியை வைச்சு என்னவெல்லாம் பண்ணறாங்க!!



~~~
நாலுகால் ஆட்களின் விளம்பரம் நிறையப் பாத்தாச்சு! கடைசியாக மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே -வை டார்கெட் பண்ணி வந்திருக்கும் செல்ஃபோன் விளம்பரங்களோட முடிச்சுடறேன், டென்ஷன் ஆகாதீங்க! :)



வெளிநாடுகளில் குழந்தைகள் கல்லூரியில் சேரும் காலங்களிலேயே குடும்பத்தைப் பிரிந்து தனியே வசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படி தனிக்குடித்தனம் போகும் ஒரு மகளும் தாயும் இந்த விளம்பரத்தில் பிழியப் பிழிய அழுது, ஃபோன் வாங்குவாங்க! அதே ஃபோன், ஆனால் ஒரு அப்பாவும் மகனும் வாங்கும்போது, எப்படி வாங்கறாங்கன்னு பாருங்க..



அதாவது, பெண்களுக்கிடையில் உணர்ச்சிப் பிரவாகமெடுக்கும் அன்பு ஆண்களுக்கிடையில் அவ்வளவு வெளிப்படையாகத் தெரிவதில்லையாம். :) எப்படின்னாலும் அன்பு என்ற ஒன்று இருந்தாச் சரி..என்ன நாஞ் சொல்றது?! ;) ;)
~~~
விளம்பர இடைவேளை முடிந்து நிகழ்ச்சி தொடர்கிறது. சுவையான சமையல் குறிப்புகள் பகுதியில் அடுத்து வருவது பலாக்கொட்டை பிரட்டல்...க...றி.. $@#3...*&#!~...%^5+)....@@@@....######....._+_+#$%*******........

100 மெகா ஹர்ட்ஸ், 999.6 கிலோ ஹர்ட்ஸ் அலைவரிசையில் ஏதோ தடங்கல் ஏற்பட்டு விட்டது. ஒரு சில நாட்களில் சுவையான சமையல் குறிப்புடன் மகி'ஸ் ஸ்பேஸில் நிகழ்ச்சிகள், அது தொடர்ந்த கருத்துக்கள், அரட்டைகள் தொடரும். மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்!

16 comments:

  1. மகி இந்த ஊர் விளம்பரம் பாத்தாலே பத்திக்கிட்டு வரும்.ஆனா நீங்க நல்ல விளம்பரங்களா பிடிச்சு போட்டு இருக்கீங்க.ஆனாலும் அந்த தடங்கல் படமும்(DD)அதோட கீன் சத்தமும் இப்போ நினைச்சாலும் ஆத்திரத்த அடக்க முடியல :(

    அதோட யாரவது தலைவர்கள் இறந்தா ஒரு வயலின் சத்தம் வருமே!! அது அத விட!!

    ReplyDelete
  2. 100 மெகா ஹர்ட்ஸ், 999.6 கிலோ ஹர்ட்ஸ் அலைவரிசையில் ஏதோ தடங்கல் ஏற்பட்டு விட்டது...
    yes you are right
    here also same
    Request Website Error.///...

    ReplyDelete
  3. மகி, தெய்வமே! விளம்பரத்தை ரசிப்பீங்களா?? எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை இருந்ததில்லை. விளம்பரம் வந்தா வேறு சானல் அல்லது ஏதாவது வேலை இருந்தா படக்கென்று போய் முடிச்சுட்டு, நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் வந்திடுவேன்.

    ReplyDelete
  4. //மகி, தெய்வமே!// ஹக்! முடீ..யல ;))))

    ReplyDelete
  5. இப்போதைக்கு விளம்பரம் எல்லாம் பார்க்க இயலாது. எனவே.... தடங்கலுக்கு வருந்தி விடைபெறுகிறேன். ;(

    ReplyDelete
  6. தடங்கலுக்கு வருந்துகிறோம்.விரைவில் நிகழ்ச்சிகள் தொடரட்டும்.

    ReplyDelete
  7. [அதுக்காக நீங்க கமென்ட்டைப் போட மறந்து கம்பி நீட்டிரக்கூடாது! ;//நானு கம்பி நீட்டலே மகி

    ReplyDelete
  8. /மகி இந்த ஊர் விளம்பரம் பாத்தாலே பத்திக்கிட்டு வரும்.ஆனா நீங்க நல்ல விளம்பரங்களா பிடிச்சு போட்டு இருக்கீங்க./ :))) சௌம்யா, நிஜமாச் சொல்லுங்க, நான் போட்டிருக்க விளம்பரங்கள் நிஜமாவே நல்லா இருக்குதானே? ;)

    DD-நினைவுகள் மறக்க கூடியவையா? கீஈஈஈஈ...சத்தம் வந்தா ஆத்திரப்படாம டிவிய ஆஃப் பண்ணிருங்க, நோ டென்ஷன்! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~!~
    /yes you are right
    here also same
    Request Website Error.///... இதான் சேம் சைட் கோல் அடிக்கிறதா சிவா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    :)
    ~!~
    /மகி, தெய்வமே! / சொல்லுங்க பக்தையே! :))))
    /விளம்பரத்தை ரசிப்பீங்களா??/ ஆம், ரசிப்பதோடு இல்லாமல் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றுதான் இங்கும் போஸ்ட் செய்திருக்கிறோம்! :))))))))))

    /விளம்பரம் வந்தா வேறு சானல் அல்லது ஏதாவது வேலை இருந்தா படக்கென்று போய் முடிச்சுட்டு, நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் வந்திடுவேன்./பெரும்பாலான ஆட்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள். ஆனால் எல்லாரும் உங்களைப்போலவே இருந்தால் விளம்பரக்கம்பெனிகளின் பொழப்பு என்னாவது? அதனால் என்னைப் போலவும் ஒரு சிலராவது தேவை! என்ன நான் சொல்வது? ;))))))
    நன்றி!
    ~!~
    ///மகி, தெய்வமே!// ஹக்! முடீ..யல ;)))) / ஆஆஆஅ...முடியலையா? எமர்ஜென்ஸிக்கு கால் பண்ணட்டே இமா? 111-தானே?

    /தடங்கலுக்கு வருந்தி விடைபெறுகிறேன். ;( / தங்கள் வருத்தத்துக்கு(!) நன்றி, மீண்டும் வருக! ;)))))
    ~!~
    ஆசியாக்கா,/தடங்கலுக்கு வருந்துகிறோம்./ நீங்களுமா? ஹூம்..சரி, தங்கள் வருத்தத்துக்கும் நன்றி!:)
    ~!~
    /நானு கம்பி நீட்டலே மகி/ அதானே? நீங்க நல்லவர் ஸாதிகாக்கா! ;) அது சரி, ஒரு விளம்பரமாவது பாத்தீங்களா? ;)))))
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~!~

    ReplyDelete
  9. லேடி லக் // விளம்பரம் பார்த்ததும் முந்தி தூர்தர்ஷன்ல ரின் பவ்டர் விளம்பரம் வருமே அதில அவள பாருன்னு அப்படீன்னு சொல்வாங்க ஆரம்பத்தில் ,அப்ப்புறம் பெண்கள் அமைப்பு :))))))டெர்ரர் ஆனதாலோ என்னவோ அவங்களபாருன்னு அப்படீன்னு மாத்திட்டாங்க .அந்த நினைவு வந்தது ,
    மகி எனக்கு விளம்பரம் மட்டுமே பாக்க பிடிக்கும் , ஹா ஹா ஹா
    ஆனா தடங்கலுக்கு வருந்துகிறோம் .பிடிக்கவே பிடிக்காது .
    ஆமா பொதிகை சன் அமெரிக்கா பிராஞ்சில் வேலை கிடைச்சிருச்சா ????
    ஏன் கேட்டேன்னா போனா வாரம் முன்னோட்டம் இப்ப விளம்பர இடைவேளை .நாளை எதிரொலி இஸ் இட் ??:))))
    ஆனா லபக் லபக்னு சாவ்யடும் பூசார் ஜூப்பர் :))))))))

    ReplyDelete
  10. ஆனா லபக் லபக்னு சாவ்யடும் பூசார் ஜூப்பர் :))))))))//

    ஜ்பெல்லிங்:))))))) மிஸ்டேக் !!!!!!!
    அது சாப்பிடும் பூசார்.


    ஆமா ...பூசார் எங்கே இன்னமும் உண்ட மயக்கத்தில் இருக்காங்கள்;ஓ

    இன்னமும் இந்த பக்கமா வரல்லை ஐ ஐ ஐ ??????????

    ReplyDelete
  11. குறை நினைச்சிடக்கூடாது மகி.... வந்து எல்லாம் வறுத்த கச்சான் சாப்பிட்டுச் சாப்பிட்டுப்:)) பார்த்துப் பதில் போடுவேன்ன் அதுவரை நோ கர் பிளீஸ்ஸ்ஸ்:).

    ReplyDelete
  12. Mahi,
    Orunadai meduva kansas pooi vantha mathri irrukku.
    viji

    ReplyDelete
  13. //இந்தப் பதிவு. டிவி ப்ரோகிராம்களுக்கு இடையில் வரும் (என்) மனதைக் கவர்ந்த சில விளம்பரங்களின் தொகுப்பு.///

    ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஅ.. முடியேல்லை சாமீஈஈஈஈ:).

    ReplyDelete
  14. // "ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி..." //

    றீஈஈஈஈஈஈச்சர் ஓடிவாங்கோஓஓஓஒ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊஊஊ:)))

    ReplyDelete
  15. ஒவ்வொரு அட்டும் ஒவ்வொரு டேஸ்ட்டாக இருக்கு. நீங்க மியாவைத்தான் விடல்ல எனப் பார்த்தால் ஜீனோவையும் இழுத்து வந்து போட்டிருக்கிறீங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  16. /தூர்தர்ஷன்ல ரின் பவ்டர் விளம்பரம் வருமே/ ம்ம்..எனக்கும் நினைவிருக்கு! :) நம்மூர்ல வேற ப்ராடக்ட் பேர் சொல்லி கூட விளம்பரம் வரக்கூடாது, ஆனா இங்கே போட்டியா இருக்கும் பொருளோடு கம்பேர் செய்தே விளம்பரம் போடுவாங்க ஏஞ்சல் அக்கா!

    /பொதிகை சன் அமெரிக்கா பிராஞ்சில் வேலை கிடைச்சிருச்சா ??/ குடுத்தா வேணாம்னா சொல்லப்போறேன்? தூங்கிட்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிருக்கீங்க, சிங்கம் ஃப்ளாஷ்பேக் ஸ்டோரீஸ் சொல்லப்போகிறது. எதிரொலி விரைவில் வரும்! ஹாஹ்ஹா!

    /ஆனா லபக் லபக்னு/ ஆமாம், பூஸா கொக்கா? என்னம்மா சாப்பிடுது!?! :))
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~!~
    /குறை நினைச்சிடக்கூடாது மகி..../ இல்லை அதிரா, உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? நேரமில்லைன்னாலும் வந்து நேரமில்லைன்னு சொல்லிட்டுப் போகும் ஒரு சின்ஸீயர் சிகாமணியைப் பத்தி குறை நினைக்க முடியுமா, நீங்களே சொல்லுங்க?! :)

    /ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஅ.. முடியேல்லை சாமீஈஈஈஈ:)./ உங்களுக்குமா?? பிரித்தானியா எமர்ஜென்ஸிக்கு என்ன நம்பர்-க்கு போன் செய்யணும் எண்டு தெரிலையே அதிரா! ஆமாம், உங்களுக்கு veterinary எமர்ஜென்ஸிக்கு கால் செய்தாப் போதும்தானே? ;)))))

    /ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊஊஊ/ ஆ...அஸ்கு, புஸ்கு! ஸ்பெல்லிங் மிசுரேக்;) எல்லாம் இல்லை, அதே தான் பயமொயி! ;) ;)

    /ஒவ்வொரு அட்டும் ஒவ்வொரு டேஸ்ட்டாக இருக்கு./ ஆமாம் அதிரா, டிவியில் விளம்பரம் வருகையில், டக்குன்னு யு ட்யூப் போயி நோட் பண்ணி வைச்சுப்பேன், அப்பறம் ஒண்ணா இங்கே போட்டு உங்க எல்லாரையும் ஒரு வழி பண்ணுவேன், ஹிஹி!

    ///நீங்க மியாவைத்தான் விடல்ல எனப் பார்த்தால் ஜீனோவையும் இழுத்து வந்து போட்டிருக்கிறீங்க.../// என்னோட செல்லப் பிராணிகள் பற்றி உங்களுக்குத் தெரியாதா..பிறகு ஏன் இந்தக் கேள்வி?! அவ்வ்வ்வ்வ்!
    ~!~
    விஜிம்மா, அடுத்து எப்ப கான்ஸஸ் வரீங்க? சீக்கிரமா வாங்க, அப்படியே ஒரு எட்டு எங்கூருக்கும் வந்துட்டுப் போவீங்களாம்! ;) நன்றிம்மா!
    ~!~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails