ஆலூ-கேப்ஸிகம் மசாலா செய்முறையைப் பார்க்கும் முன், எங்க வீட்டு தக்காளியின் விளைச்சலை ஒரு பார்வை பார்த்துட்டு அப்புறம் சமைக்கப் போலாம்! :) ஒரு தக்காளிச் செடியை தொட்டியில் வளர்த்தாலும், அந்தச் செடி எண்ணி அஞ்சு காய் காய்ச்சாலும், நம்ம வீட்டுத் தக்காளி ஸ்பெஷல்தான், காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு! கரெக்ட்தானே? :))
இந்த உருளை-குடைமிளகாய் மசாலா யாஸ்மின் அவங்க குறிப்பில் பார்த்து செய்தேன். அவங்க போட்டிருந்த சில பொருட்கள் கைவசம் இல்லாததால் வழமை போல, நம்ம இஷ்டப்படி கொஞ்சம் அங்க இங்க மாத்தி செய்தது. கலர்ஃபுல் & டேஸ்ட்டியா இருந்தது.
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளை கிழங்கு -1
கலர் குடைமிளகாய்- 11/2
[மஞ்சள் கலர் பாதி, சிவப்பு பாதி, பச்சை பாதி..மொத்தம் 11/2 மிளகா, கணக்கு சரியாகிருச்சா? ;) ]
பச்சைமிளகாய்-1
[பச்சைக்கலர்ல இல்லையேன்னு படத்தில தேடக்கூடாது. பழமிளகாய் போட்டிருக்கேன், செக்கச்செவேர்னு வெங்காயத்துக் கூட மின்னும், பாருங்க! ;)]
தக்காளி (சிறியதாக) -1
[நான் மேலே படத்தில் இருக்கும் எல்லாத் தக்காளிகளையும் சேர்த்தேன்]
வெங்காயம் -1
கறிவேப்பிலை-கொத்தமல்லி தழை - கொஞ்சம்
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கறிமசாலா - 1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
அரைக்க
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்
வரமிளகாய் -3
சீரகம் -1டீஸ்பூன்
செய்முறை
தேங்காய் -வரமிளகாய்- பொட்டுக்கடலை -சீரகம் இவற்றை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும்.
வெந்த உருளை கிழங்கை தோல் உரித்துவிட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
குடைமிளகாய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
நறுக்கிய தக்காளியும் சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
தக்காளி குழைந்து மசிந்ததும் மஞ்சள்தூள் - மிளகாய்த் தூள் - கறிமசாலா -தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பொடிகளின் பச்சை வாசம் அடங்கியதும் நறுக்கிய காய்கறித் துண்டங்களை சேர்க்கவும்.
காய்கள் சேர்த்து கிளறிவிட்டு, ஓரிரு நிமிடங்களில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.
கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கொதிவந்ததும் கொத்துமல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சப்பாத்தியுடன் சாப்பிட மசாலா கெட்டியாக இருக்கட்டும் என்று கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு செய்திருக்கிறேன். உங்கள் விருப்பப்படி தண்ணீர் அளவினை கூட்டி க்ரேவியாக செய்துகொள்ளலாம்.
மறுபடியும் ஒருமுறை தக்காளிப் பழங்கள்... :))) பின்னே? லேபிள்ல தோட்டம்னு குறிப்பிட்டிருக்கேன், கொஞ்சமாவது அதுக்கு சம்பந்தம் இருக்கணுமில்ல? பேக்ரவுண்டில குட்டி தக்காளிப் பழங்கள் குடுத்த குட்டிச் செடியும் தெரியுது பாருங்க..
...என்னது செடி தெரியலையா? கஷ்டப்ப்ப்பட்டுப் எட்டிப் பாருங்களேன், கண்டிப்பா தெரியும்!
குட்டிச் செடி இரண்டாவது முறையும் 5 பழம் பழுத்துவிட்டது. ஹேண்ட் ஃபுல் ஆஃப் தக்காளிப் பழங்கள்...அதாங்க 10 பழங்கள் அறுவடை(!) செய்துட்டேன்னு பெருமையாச் சொல்லிக்கறேன். :))))
இந்த உருளை-குடைமிளகாய் மசாலா யாஸ்மின் அவங்க குறிப்பில் பார்த்து செய்தேன். அவங்க போட்டிருந்த சில பொருட்கள் கைவசம் இல்லாததால் வழமை போல, நம்ம இஷ்டப்படி கொஞ்சம் அங்க இங்க மாத்தி செய்தது. கலர்ஃபுல் & டேஸ்ட்டியா இருந்தது.
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளை கிழங்கு -1
கலர் குடைமிளகாய்- 11/2
[மஞ்சள் கலர் பாதி, சிவப்பு பாதி, பச்சை பாதி..மொத்தம் 11/2 மிளகா, கணக்கு சரியாகிருச்சா? ;) ]
பச்சைமிளகாய்-1
[பச்சைக்கலர்ல இல்லையேன்னு படத்தில தேடக்கூடாது. பழமிளகாய் போட்டிருக்கேன், செக்கச்செவேர்னு வெங்காயத்துக் கூட மின்னும், பாருங்க! ;)]
தக்காளி (சிறியதாக) -1
[நான் மேலே படத்தில் இருக்கும் எல்லாத் தக்காளிகளையும் சேர்த்தேன்]
வெங்காயம் -1
கறிவேப்பிலை-கொத்தமல்லி தழை - கொஞ்சம்
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கறிமசாலா - 1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
அரைக்க
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்
வரமிளகாய் -3
சீரகம் -1டீஸ்பூன்
செய்முறை
தேங்காய் -வரமிளகாய்- பொட்டுக்கடலை -சீரகம் இவற்றை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும்.
வெந்த உருளை கிழங்கை தோல் உரித்துவிட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
குடைமிளகாய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
நறுக்கிய தக்காளியும் சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
தக்காளி குழைந்து மசிந்ததும் மஞ்சள்தூள் - மிளகாய்த் தூள் - கறிமசாலா -தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பொடிகளின் பச்சை வாசம் அடங்கியதும் நறுக்கிய காய்கறித் துண்டங்களை சேர்க்கவும்.
காய்கள் சேர்த்து கிளறிவிட்டு, ஓரிரு நிமிடங்களில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.
கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கொதிவந்ததும் கொத்துமல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சப்பாத்தியுடன் சாப்பிட மசாலா கெட்டியாக இருக்கட்டும் என்று கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு செய்திருக்கிறேன். உங்கள் விருப்பப்படி தண்ணீர் அளவினை கூட்டி க்ரேவியாக செய்துகொள்ளலாம்.
மறுபடியும் ஒருமுறை தக்காளிப் பழங்கள்... :))) பின்னே? லேபிள்ல தோட்டம்னு குறிப்பிட்டிருக்கேன், கொஞ்சமாவது அதுக்கு சம்பந்தம் இருக்கணுமில்ல? பேக்ரவுண்டில குட்டி தக்காளிப் பழங்கள் குடுத்த குட்டிச் செடியும் தெரியுது பாருங்க..
...என்னது செடி தெரியலையா? கஷ்டப்ப்ப்பட்டுப் எட்டிப் பாருங்களேன், கண்டிப்பா தெரியும்!
குட்டிச் செடி இரண்டாவது முறையும் 5 பழம் பழுத்துவிட்டது. ஹேண்ட் ஃபுல் ஆஃப் தக்காளிப் பழங்கள்...அதாங்க 10 பழங்கள் அறுவடை(!) செய்துட்டேன்னு பெருமையாச் சொல்லிக்கறேன். :))))
very nice pictures and looks very yummy too...love ur space
ReplyDeleteமகி..உருளை குடை மிளகாய் மசாலா கலர்புல்லா நல்லா இருக்கு..உங்க வீட்டில காய்த்த தக்காளியும் குட்டிகுட்டியா அழகா இருக்கு.ஒரே அளவா அளவெடுத்த மாதிரி ஒன்னு போல காய்த்திருக்கு.:)
ReplyDeleteLove those tiny tomatoes.... Yummy side dish for rotis....
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
சுவையான ரெசிப்பிக்கு நன்றி செய்து பாத்துட வேண்டியதுதான்
ReplyDeleteWow! rombha azaghana thakkali:-) colorful dish..thanks for sharing Mahi.
ReplyDeletenice and delicious dish!! your tomatoes r very beautiful superb! just crave for me!!
ReplyDeleteif u have time plz visit my blog and be my friend
VIRUNTHU UNNA VAANGA
மகி உருளை குட மிளகாய் மசாலா சூப்பர். எங்க வீட்டில் இது ரெகுலர் சப்பாத்தி சைட் டிஷ். நான் நீங்க செஞ்ச முறையில் பட் மைனஸ் அரைக்க கொடுத்த பொருட்கள் பிளஸ் சிக்கன் ஓர் மட்டன் மசாலா கொஞ்சம் சேர்த்து பண்ணுவேன். (தெளிவா என்னைய மாதிரி யாரு சொல்ல முடியும்ம் :))
ReplyDeleteமேத்தி இலைகள் இருந்தா அதையும் கொஞ்சம் சேர்த்து செஞ்சு பாருங்க. வித்தியாசமா இருக்கும்
//எங்க வீட்டு தக்காளியின் விளைச்சலை //
ReplyDeleteநானும் தக்காளி மூட்டையை தான் தேடினேன் அப்புறம் கை நிறைய இருக்குறதுதான் விளைச்சல் ன்னு பிரிஞ்சுது :))
//காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு! கரெக்ட்தானே? :))//
வெரி வெரி கரீக்டு!! இந்த குட்டி தக்காளி சாலட் உக்கு நல்லா இருக்கும்
//கஷ்டப்ப்ப்பட்டுப் எட்டிப் பாருங்களேன், கண்டிப்பா தெரியும்!//
ReplyDeleteஅம்மாஆ ஆஆ......... எட்டி பார்த்து சேர் இல் இருந்து கீழே விழுந்திட்டேன். நல்ல அடி பட்டுடிச்சு. என் லாயர் லா பூசார் உங்கள காண்டாக்ட் பண்ணுவாங்க நஷ்ட ஈடு வாங்குறதுக்கு :))
ஆல் கெ . கிருமிஸ் வர்றதுக்கு முன்னே பத்தாவது கமெண்ட் போட்டிட்டு நான் அப்பீட் ஆகிடுறேன் :))
ReplyDeleteVery flavorful and yummy curry. Love the tomatoes
ReplyDeleteசூப்பரா இருக்கு தக்காளி, ரெசிப்பி. எங்க வீட்டிலும் முன்பு ஒரு முறை தக்காளி செடி வைத்தேன். சரியாக வரவில்லை. அதோடு மற்ற மரங்கள், செடிகளுக்கும் ஒரு வித பூச்சிகள் பரவி ஒரே தொந்தரவா போனதால் தக்காளி செடி வைத்து, பழங்கள் பறிக்கும் ஆசை போயே போச்சு.
ReplyDeleteகிரி, நானும் விழுந்து அடிபட்டுப் போனேன். பூஸார் சும்மா பூந்து விளையாடுவாங்க இல்லை. பூஸார் எங்கிருந்தாலும் ஃபைல்களை எடுத்துட்டு பாஞ்சு வரவும்.
ரெசிப்பி யூப்பரூஊஊஊஊஊஊஊ
ReplyDeleteகுட்டிச் செடி இரண்டாவது முறையும் 5 பழம் பழுத்துவிட்டது. ஹேண்ட் ஃபுல் ஆஃப் தக்காளிப் பழங்கள்.///
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குட்டியூண்டு 5 பழத்தை வச்சுக்கொண்டு புல் ஒஃப் அக்காளிப்பழமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. இதாவது பறவாயில்லை, நான் ஆசைக்கு நட்டேன்ன்ன்ன்ன் வளந்துது வளந்துது இம்முறை கடனெல்லாம் அடைக்கலாம்போல தக்காளிப்பழம் வித்தென மனக்கோட்டை கட்ட:)) பூப்பூவாப் பூத்துது:))) அத்தோடு சரி.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) காயும் இல்லைப் பயமும் இல்லை.
மகியின் அழகான கை விரல்கள் பார்த்தால் உயரமான ஆளாக இருப்பீங்கள் எனச் சாத்திரம் சொல்லுது, அந்த அக்காளிப்:) பழங்கள் இல்லாமல் காட்டியிருந்தால் இன்னும் சொல்லியிருப்பேன் யாத்திரம்:))
ReplyDelete//காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு! கரெக்ட்தானே? :))///
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்பவுமே ஆதிகாலத்தையே சொல்லிக்கொண்டு ஏதும் புதுப்பயமொயி கண்டு பிடிக்கலாமில்ல:))... பூஸுக்கும் தேம்ஸ் கரை சொர்க்க லோகம்தான் அப்பூடி ஏதும்:)))
இன்றைய பதிவு விரல்களுக்கா!தக்காளிப் பழங்களுக்கா!அல்லது குருமாவிற்கா! என ஒரே குழப்பம்.எல்லாமே அழகா இருக்கு.
ReplyDeleteThakkali cute a irukku..gud job mahi
ReplyDelete/iridiscent petals said... / முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete~~
ராதாராணி, தக்காளி எவ்ளோ செ.மீ.-ல காய்க்கணும்னு ஒரு சீக்ரட் மெஷர்மென்ட் குடுத்திருக்கேனுங்க செடிக்கு! அதான் எல்லா பழமும் ஒரே அளவில் இருக்கு! ;))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
சங்கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
லஷ்மிம்மா, செய்து பாருங்க. நல்லா இருக்கும்! நன்றிமா!
~~
நித்து, தக்காளி உங்களை இந்தப் பக்கம் இழுத்துட்டு வந்துருச்சு போல! ;) நன்றிங்க கருத்துக்கு!
~~
விஜி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
~~
/நீங்க செஞ்ச முறையில் பட் மைனஸ் அரைக்க கொடுத்த பொருட்கள் பிளஸ் சிக்கன் ஓர் மட்டன் மசாலா கொஞ்சம் சேர்த்து/ ஆவ்...எந்த முயற்சியுமில்லாம ரெசிப்பிய கடகடன்னு சொல்லிப்புட்டீங்க கிரிஜா! படிச்சதும் எனக்கும் தலை எந்தவித முயற்சியும் இல்லாம இடவலமா 5 முறை சுத்திருச்சு! ;))))))
/மேத்தி இலைகள் இருந்தா அதையும் கொஞ்சம் சேர்த்து செஞ்சு/ கசூரி மேத்தி இருக்குது..உங்க முறையிலும் செய்துபார்க்கிறேன்.
/எட்டி பார்த்து சேர் இல் இருந்து கீழே விழுந்திட்டேன். நல்ல அடி பட்டுடிச்சு./ :) :D வெற்றி, வெற்றி! நான் நினைச்சது நடந்துருச்சு. உங்கட லாயர் இப்ப க்ளையன்ட்ஸ கண்டுக்கறதே இல்லியாம்! வேற லாயர் பாருங்க. ;)
/நானும் தக்காளி மூட்டையை தான் தேடினேன்/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுக்காகவே நான் அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கி தோட்டம் போட்டு தக்காளி வளர்த்து மூட்டை மூட்டையா அறுவடை செய்யப்போறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்!
/இந்த குட்டி தக்காளி சாலட் உக்கு/ சரிதான், எனக்கு ஸாலட் சாப்புடும் நல்ல பழக்கம்லாம் கிடையாதுங்க. அதான் சமைச்சிட்டேன். ஹிஹி!
வருகைக்கும் சரமாரியான கருத்துக்களுக்கும் நன்றிங்க கிரிஜா!
~~
ஜெயஸ்ரீ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
/மற்ற மரங்கள், செடிகளுக்கும் ஒரு வித பூச்சிகள் பரவி ஒரே தொந்தரவா போனதால்/ ஆஆஹா! மரமெல்லாம் வளர்க்கறீங்களா வானதி?! சூப்பரு! தக்காளிக்கு ஏதாச்சும் பூச்சிமருந்து அடிச்சு காப்பாத்திருக்கலாமே? ;)
/பூஸார் எங்கிருந்தாலும் ஃபைல்களை எடுத்துட்டு பாஞ்சு வரவும்./ பூஸார் பாஞ்சுதான் வந்திருக்காக, ஆனா உங்களைத்தான் கவனிக்கலை! ஹிஹிஹி! நீங்களே களிம்பு எடுத்து தடவிக்குங்கோ வானதி, அப்படியே கிரிசாவுக்கும் கொஞ்சம் குடுத்துருங்கோ! ;)))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
~~
அதிரா, /ரெசிப்பி யூப்பரூஊஊஊஊஊஊஊ / ஓ...தேங்கியூஊஊஊஊஊ!!
ReplyDelete/வளந்துது இம்முறை கடனெல்லாம் அடைக்கலாம்போல தக்காளிப்பழம் வித்தென மனக்கோட்டை கட்ட:)) / ஹாஹ்ஹா...ஹா..ஹா! விழுந்து விழுந்து சிரிக்கலாம் போல் இருக்குது அதிரா! தக்காளி வளத்து கடன் அடைக்கற அளவுக்கு ரூஜ்-லிப்ஸ்ரிக்-பர்ஃப்யூம்- நெய்ல் பொலிஷ் வாங்கிப் போட்டா என்னா பண்றது? அளவாச் செலவழிங்க. ;) ;)
/மகியின் அழகான கை விரல்கள் பார்த்தால்//இன்றைய பதிவு விரல்களுக்கா!/ "Blush..Blush" B-) B-) ரொம்ப வெக்க வெக்கமா வருதுங்க...கன்னமெல்லாம் செவந்து போச்சு...நான் அப்ப்ப்புறமா வந்து மீதிப் பேருக்கு நன்றி சொல்லுறேன். :)
ஹேப்பி வீகென்ட் எவ்ரிபடி!
உணவை படத்தில் மட்டும் பார்த்து ரசித்துப போகிறேன்...
ReplyDeleteநன்றீங்க..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்
ஸொந்தமா பயிர் செய்த தக்காளி. ஆஹா என்ன ருசி. என்ன கலர்.
ReplyDeleteHi Mahi ,
ReplyDeleteWWWWOWWWW !!!
Purely in Tamil :))))
Very very Beautiful and
masala looks AAwesome Mahi!!!
Keep on Dear...
ஐ !! ஐ!!! ஐ லைக் தக்காளிஸ் :)))
ReplyDeleteநான் பொறந்த ஊரு தக்காளிக்கு பேமஸ் :)))
சின்ன வயசு நினைவு வருது ஊரில் தக்காளி தோட்டத்தில் அப்படியே பறிச்சு சாப்ப்டிருக்கேன் .
எனக்கு சமைக்க வேணாம் ,செடியிலிருந்து பறிச்சு அப்படியே சாப்பிடுவேன் :))
ரெசிப்பி அருமை .நான் இதுகூட கேரட்டும் சேர்ப்பேன் ஆனா தேங்கா
சேர்த்ததில்லை .இந்த முறையில் செய்கிறன் .
மகி உங்க விரல்களே சொல்லுது நீங்க கிராப்ட் விஷயங்கள் தையல் ஓவியம் இவற்றில் வல்லவர்னு .
தக்காளி கிலோ ஐந்து ரூபாய்க்கு கிடைத்தாலும் நம் வீட்டில் பயிரிட்டு க்இடைக்கும் தக்காளிக்கு சுவையும் அதிகம்,மவுசும் அதிகம்..உங்கள் வீட்டு தக்காளி சேர்த்து ஒரு டிஷ் செய்து காட்டி இருப்பது அருமை.
ReplyDelete//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குட்டியூண்டு 5 பழத்தை வச்சுக்கொண்டு புல் ஒஃப் அக்காளிப்பழமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//
ReplyDeleteஹா..ஹா. அதிஸ் அதை வச்சே ஒரு பதிவை போட்ட மஹியை பாராட்டுவோம் :-)
( லேட்) பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!! many more happy returns of day :-)
ReplyDeleteSuper Mahi! beautiful tomatoes.
ReplyDeleteசித்ராக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :)
ReplyDelete~~
ரம்யா,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
~~
/♔ம.தி.சுதா♔ said.../ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
~~
காமாட்சிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!
~~
/R.Punitha said... / வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! ஆமாம், இங்கே முடிந்த அளவு தமிழ்தான்! :)
~~
/நான் பொறந்த ஊரு தக்காளிக்கு பேமஸ் :)))/ ஆஹா! இப்புடியெல்லாம் சஸ்பென்ஸ் வைச்சா எப்புடி?! நான் பொதுஅறிவில கொஞ்சம் வீக்.,..எந்த ஊருன்னு நீங்களே சொல்லிருங்களேன்! ;)
/எனக்கு சமைக்க வேணாம் ,செடியிலிருந்து பறிச்சு அப்படியே சாப்பிடுவேன் :))/ நானும் ஊரில் சாப்பிட்டிருக்கேன் ஏஞ்சல் அக்கா! ஆனா இப்பதான் ரொம்ப கெட்டுப் போயிட்டேன்! ஸாலட் பக்கமே போவதில்லை! ;)
/.நான் இதுகூட கேரட்டும் சேர்ப்பேன் ஆனா தேங்கா
சேர்த்ததில்லை./ என்னவர் கேரட்டை பார்த்தா சரியா சாப்பிட மாட்டார்! பின்னே?? அதை தனியா பொறுக்கி எடுத்து வைக்கீறதிலயே டைம் போயிருமே! அவ்வ்வ்வ்... :)
/மகி உங்க விரல்களே சொல்லுது / நிஜம்மாவா?! ஏதோ கொஞ்சம் தைப்பேன், ஆனா க்ராஃப்ட் பக்கம் போனதே இல்லையே ஏஞ்சல் அக்கா..சீக்கிரம் முயற்சிக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றி! உங்க கமென்ட்டில் கடைசி வரியைப் பார்த்ததும் கொளுத்தற வெயில்ல ஒரு கூல் ஜூஸ் குடிச்சா எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஃபீலிங்! ரொம்ப நன்றி! :)
~~
/நம் வீட்டில் பயிரிட்டு க்இடைக்கும் தக்காளிக்கு சுவையும் அதிகம்,மவுசும் அதிகம்../ஸாதிகாக்கா, கரெக்ட்டோ கரெக்ட்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா!
~~
/அதை வச்சே ஒரு பதிவை போட்ட மஹியை பாராட்டுவோம் :-) / வாங்க,வாங்க! பாராட்டுக்கு மிக்க நன்றி! :-) கிரிஜா ப்ளாக் போய், அங்கருந்து ரீடைரக்ட் ஆகி வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க! ரொம்ப சந்தோஷம்! :)
~~
மஹேஸ் அக்கா, கிலோ கணக்கில் அறுவடை பண்ணும் நீங்க வந்து சூப்பர்-னு சொன்னது சூப்பர்! :) நானும் தக்காளித் தோட்டம் போட்டு மூட்டை மூட்டையா தக்காளி பறிப்பேன்னு கெட்ட கிருமீஸ் கிட்ட சொல்லியிருக்கேன், அப்ப உங்ககிட்டதான் அட்வைஸ் கேட்பேன்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~