Monday, June 11, 2012

பூவே உன்னை நேசித்தேன்..

பூவே உன்னை நேசித்தேன்..
பூக்கள் கொண்டு பூசித்தேன்!..:))))))))



என்னதான் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் எனக்குள் ஒளிந்திருக்கும் பூப் பைத்தியம் அவ்வப்போது தளைகளை உடைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறது. புதுப் புதுப் பூக்களை படமெடுத்தபின்னரே ஓய்கிறது! :)))

திடீர்னு ஒரு செவ்வாய்க்கிழமை, நடுப்பகல் 12மணிக்கு வீட்டிலிருந்து கையில் கேமராவுடன் கிளம்பிய இளம்புயல், அப்பார்ட்மென்ட் வாசலில் அழகாக நட்டிருந்த பூக்களில் சென்று நின்றது. மேகத்தில் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடும் கதிரவனோடு பூக்களும் பளீர் வண்ணம் - திடீரென்று மங்கிய வண்ணம் என்று கண்ணாமூச்சி விளையாடின.

இந்தப் பூக்களை ஊரிலும் பார்த்திருக்கிறேன். பெயர் தெரியாமல் இருந்தது. அடுத்த நாள் பூக்களை எல்லாம் நட்பூக்களுடன் ;) பகிர்ந்தபொழுது, ஆல்பம் பார்த்த ஒரு நட்பூ :)
பூக்களின் பற்றிய லிங்க் தந்ததோடு, விதைகளை எடுத்து வந்து வீட்டில் வளர்க்கலாமே? என்று கேள்வியும் எழுப்பினார்.

உடனே புயல் மறுபடியும் படுவேகமா கிளம்புச்சு.. கேட் அருகே போனால்....ஆஆ!! என்ன ஒரு ஏமாற்றம்? பூக்களுடன் அழகழகாய் நின்ற cosmos செடிகள் எல்லாமும் பிடுங்கப்பட்டுவிட்டன. :-| :-| அவை இருந்த இடத்தில் குட்டிக் குட்டியாய் "zinnia"நாற்றுக்கள் நிற்கின்றன! நல்லவேளை கொஸ்மொஸ் மலர்களை படமாவது எடுத்துவந்தேன் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்,வேறுவழி?!
~~~
கடந்த சனிக்கிழமை மாலை எந்தவித முன்னேற்பாடும் இன்றி [கேமராவ எடுக்காம கிளம்பிட்டாகளாம், அதுக்குத்தான் இம்பூட்டு பில்டப்பூ! ;) ] கடற்கரைக்கு போனோம். காரை பார்க் செய்துவிட்டு விச்ராந்தியாக நடக்கையில், நடைபாதை கடலோரம் இருந்த ரெஸ்டாரன்ட் வழியாக நீண்டது.
இருபுறமும் பலவண்ணங்களில் அழகழகான மெகா சைஸ் ரோஜாக்கள் தலையாட்டி முகமன் கூறின. கூடவே திருமண சீஸன் வேறு! பல இடங்களில் இருந்த வியூ பாயின்ட்ஸ் எல்லாவற்றிலும் ஒரு கல்யாணக் கும்பல் படங்கள் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அடடா, கேமராவை எடுக்காமல் வந்துவிட்டோமே என்று அங்கலாய்ப்பாய் இருந்தது! ;)

மாலைக் கருக்கலில் கடலோரத்தில் பூக்கள் கவிதைகளாய் நின்றிருந்தன. சூரியன் இல்லாததால் மங்கலாக இருந்த வெளிச்சம்.. கேமரா இல்லாமல் ஐஃபோனில் எடுத்த படங்கள்! ரோஜாக்களின் வண்ணங்கள் சரியாகப் படங்களில் தெரியவில்லை.
மெதுவே நடந்து நடந்து பசிக்கவும் ஆரம்பித்தது. இணையத்தில் தேடி, அருகில் இருந்த ஒரு thai restaurant-ஐ சென்று சேர்ந்தோம்.

குட்டியூண்டு உணவகம், ஆனால் உணவு பிரமாதமாக இருக்கும் என்று ரிவியூ, Limousine காரில் வந்த வாடிக்கையாளர்கள் என்று கலகலப்பாய் இருந்தது. அரை மணி நேரம் வெய்ட்டிங் டைம்!! பெயரைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினோம். 20 நிமிடங்கள் சுற்றிவிட்டு வந்து பைனாப்பிள் ஃப்ரைட் ரைஸ், ஜிஞ்சர் டோஃபு கறி--வித்தவுட் டோஃபு(!), ஃப்ரைட் பனானா என்று சிம்பிளா டின்னரை முடிந்தது. ஜிஞ்சர் டோஃபு வித்தவுட் டோஃபு(!) சூஊஊப்ப்பர்! :P
சென்னையின் மெரீனா போல எங்களுக்கு இந்த பீச் ! :))) வாரம் முழுக்க, வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு சுணங்கும் மனதை ரீ-சார்ஜ் செய்வதில் இந்தக் கடற்கரையும் கடலோரக் கவிதைளும் பெரும்பங்கு வகிக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
படத்தில் பின்னணியில் தெரிகிறதே, அந்த மலையுச்சியில் இருந்துதான் சந்த்ரோதயம் படங்களை பார்த்தீங்க! :)

29 comments:

  1. மகி எனக்கும் மலர்கள் ரொம்ப ஆசை .சுத்திவளைச்சு எல்லா ஆங்கிளையும் படம் பிடிப்பேன் .இப்ப செல்கிறேன் ..எனக்கு hayfever itchy nose and eyes, sneezing , .....சரியானதும் வந்து படங்களை ரசிக்கிறேன்

    ReplyDelete
  2. விச்ராந்தியாக நடக்கையில், நடைபாதை கடலோரம் இருந்த ரெஸ்டாரன்ட் வழியாக நீண்டது.//

    விச்ராந்தியாக என்றால் என்ன மகிமா

    ReplyDelete
  3. /விச்ராந்தியாக என்றால் என்ன/ ஓய்வாக நடக்கையில் என்று அர்த்தம் சிவா! :) பொதுவா வாக் போகையில் வேகமாக நடப்போம், அப்படி இல்லாமல் நிதானமாக அங்கங்கே நின்று, பூக்களை ரசித்தபடி நடந்தோம் என்று சொல்ல வந்தேன். :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~
    ரம்யா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
    ~
    ஏஞ்சல் அக்கா, ஒண்ணும் அவசரமில்லை, உடம்பை கவனிச்சுக்கோங்க! பூக்கள் பத்திரமா இங்கயே இருக்கும்.:)
    டேக் கேர்!
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~

    ReplyDelete
  4. Nice post

    http://www.followfoodiee.com/

    ReplyDelete
  5. காஸ்மோஸ் பூக்கள் ஆரஞ்சு வர்ணத்தில்தான் இங்கே ரோடில் வளர்ந்திருக்க பார்த்திருக்கேன். வண்ண வண்ண பூக்களும் உண்டு அனா அழகான உங்கள் பூபோன்ற பதிவின் மூலமே அறிந்துகொண்டேன். வர்ண மாற்றத்தை அழகாக படம்பிடிசிருகீங்க மஹி.

    நீரலைகளின் பின்னணி கொண்ட ரோஜா படம் அஹா! அசத்தல் ஷாட்.

    கடல் காத்து வங்கி பீச்சு பக்கம் ஒக்காரறதே ஒரு தனி சொகம்தான். என்ன சுண்டல் மிஸ்ஸிங்! ஹ.ஹ.ஹா

    இப்டி வீட்டுல தெனமும் தட்டுல பரிமாரிதந்தா எவ்ளோ ருசிய சாபிடலாம்! கலர்புல்லா இருக்கு

    Mira’s Talent Gallery

    ReplyDelete
  6. மகி இந்த ட்ரிப்பும் சூப்பர்.நீங்க போகும் பொழுதெல்லாம் எங்களையும் அழைத்து சென்று ரசித்தவற்றை எங்களையும் ரசிக்க வைத்து மனதை குளிர வைப்பதோடல்லாமல் வயிற்றையும் நிரப்புவது எத்தனை இனிமையான தருணங்கள்.மலர்களே மலர்களே என்று பாட வைத்து விட்டது பதிவு.அப்படியே அந்த செர்விங் ப்லேட்ஸ் மீது எனக்கு அப்படி ஒரு கண்ணு...ஹி.ஹி...

    ReplyDelete
  7. அழகிய மலர்களின் அருமையான காட்சிகள். ;)

    ReplyDelete
  8. ;))

    da flowers beside da followers is da best.

    ReplyDelete
  9. good shots mahi...!!! nice post!!

    ReplyDelete
  10. எந்தவித முன்னேற்பாடும் இன்றி [கேமராவ எடுக்காம கிளம்பிட்டாகளாம், அதுக்குத்தான் இம்பூட்டு பில்டப்பூ! ;) ] //ha ha..btn nice post...

    ReplyDelete
  11. உங்க அவள் vikadan பதிவு படிச்சேன்...புக் லயும் படிச்சுருக்கேன்...நீங்க தான அது ...உலகம் ரெம்ப சிறுசோ...

    ReplyDelete
  12. /Follow foodie said... / வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~
    /Mira said.../ காஸ்மோஸ் பூக்கள் ஆரஞ்சு வர்ணத்தில்தான்--நானும் பார்த்திருக்கேன் மீரா! இங்கே இந்தப் பூக்கள் பலநிறங்களிலும் இருக்கு.

    /என்ன சுண்டல் மிஸ்ஸிங்! ஹ.ஹ.ஹா/ மொளகா பஜ்ஜிய விட்டுட்டீங்களே? ;)) பீச் போகைல எல்லாம் ஒரு முறையாவது இந்த நினைப்பு வராம இருக்காது! இங்கே ஐஸ்க்ரீம் கிடைக்கும்! :P

    /தெனமும் தட்டுல பரிமாரிதந்தா எவ்ளோ ருசிய சாபிடலாம்!/ அது கரெக்டுத்தாங்க! சமைச்சு முடிச்சதிலயே நான் டயர்டாகிருவேன், அப்புறம் எங்க இப்படி பரிமாற? ;)) வேற யாராவது பரிமாறி தந்தா ஜம்முன்னு உட்கார்ந்து சாப்பிடலாம்! ஹஹ்ஹாஹா! :))

    வருகைக்கும் ரசித்து கருத்து தந்தமைக்கும் மிக்க நன்றி மீரா!
    ~
    /அந்த செர்விங் ப்லேட்ஸ் மீது எனக்கு அப்படி ஒரு கண்ணு...ஹி.ஹி... / ஆஹா, ஆசியாக்கா அது எங்கூட்டு ப்ளேட்டா இருந்தாக் கூட அல்ஐய்னுக்கு அனுப்பிருவேன், ரெஸ்டாரன்ட் ப்ளேட் மேல கண்ணு வைக்கறீங்களே!?! ;)))

    இப்படி குட்டி குட்டி ட்ரிப்பின் நினைவுகளை இங்கே சேமித்து வைத்தால் படிக்கும் உங்களுக்கும் பயன்படலாம், சில நாட்கள் சென்று இந்த நினைவுகளை அசைபோட எனக்கும் உதவலாம்! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! :))))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!
    ~
    VGK சார், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~
    /da flowers beside da followers is da best. / அட, நியூ. ;) இங்கிலீஷ் நியூஊஊ:)வா இருக்கே இமா! :) நீங்களும் நீரலைகளின் பின்னணியில் இருக்கும் இரட்டை ரோஜாக்களைத்தான் சொல்றீங்களா? :))
    நன்றி இமா!
    ~
    பானு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
    ~
    வானதி, நன்றி வானதி!
    ~
    கோமதி,/நீங்க தான அது...உலகம் ரெம்ப சிறுசோ... / :)))) நானே தான் அது! இணையம் வந்து உலகை க்ளோபல் வில்லேஜ் ஆக்கிருச்சே!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி!
    ~

    ReplyDelete
  13. //பூவே உன்னை நேசித்தேன்..
    பூக்கள் கொண்டு பூசித்தேன்!..:))////

    என்னையா சொன்னீங்க?:))) தலைப்புப் பார்த்தேன் கால பதிக்க முடியேல்லை மகீஈஈஈ..

    சூப்பர் ரோஜா அக்காமார் எல்லோரும் கொள்ளை அழகூஊஊஊஉ:))

    ReplyDelete
  14. Aha aha.......
    Fentastic flowers.
    I enjoy the post well Mahi.
    viji

    ReplyDelete
  15. I just love flowers..roses are very beautiful..

    ReplyDelete
  16. //ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! :)))) // அதேதான் என் எண்ணமும்.

    ReplyDelete
  17. ஹா!!!!!! கிண்டல்!!! ம். நேரமில்லாது இருந்தப்ப கூட வந்து படிச்சு ஏதாச்சும் சொல்லிட்டுப் போயிருக்கேன்னு இல்லாம காலை வாரப்படாது. கர்ர்ர்ர்

    ReplyDelete
  18. தலைப்பூ உங்களுக்கு மட்டுமா?எங்களுக்க்கும்தான்.பூவை ரசிக்காதோர் யார்?அழகிய காட்சிகள் அழகிய படங்கள்..கூடவே சப்பாட்டு ஐட்டத்தையும் அவ்வபொழுது காட்டி பசியை கிளப்பி விடும் மகி வாள்க

    ReplyDelete
  19. /என்னையா சொன்னீங்க?:))) தலைப்புப் பார்த்தேன் கால பதிக்க முடியேல்லை மகீஈஈஈ..சூப்பர் ரோஜா அக்காமார் எல்லோரும் கொள்ளை அழகூஊஊஊஉ:)) / அதிரா, உங்கட கமென்ட் பாத்து பெயின்ட் ஆகி விழுந்தது...இன்னிக்குதான் முழிச்சிருக்கேன்! :))))))) ரோஜாவும் அக்காமார்தானா?! அவ்வ்வ்வ்...
    நன்றி அதிரா!
    ~~
    விஜிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா!
    ~~
    Lakshmi, thanks for dropping by and the comment! Am so glad to see you here! :)
    ~~
    /நேரமில்லாது இருந்தப்ப கூட வந்து படிச்சு ஏதாச்சும் சொல்லிட்டுப் போயிருக்கேன்னு/ நான் இல்லைன்னு சொல்லவே இல்லையேங்க இமா! ஆனா "da"வுக்கும் "the"வுக்கும் ஒரே ஒரு எழுத்துதானே வித்யாசம்..அதான் கொஞ்சம் கொழம்பிட்டேன். ஹிஹி..சரி, நீங்க நியூ இங்கிலீஷே பேஷு;)ங்க, நான் எதுவு.....மே சொல்லமாட்டேன்!
    டீக் ஹேனா?! ;))
    ~~
    ஸாதிகா அக்கா,//தலைப்பூ உங்களுக்கு மட்டுமா?எங்களுக்க்கும்தான்.// உங்க கமென்ட்டைப் பார்த்து பூஸ் இன்னும் உச்சி குளுந்து போயிருவாங்க! ;)

    சும்மா ட்ரிப் போயி சுத்திச் சுத்தி படங்காமிச்சு உஙக்ளை எல்லாம் டயர்டாக்கிடறேன், அதனால தெம்பாச் சாப்டுட்டுப் போங்க-ன்னுதான் சாப்பாட்டையும் போடறேன்! ;) ;)

    வாள்;)த்துக்கு மிக்க நன்ரி;) ஸாதிகாக்கா!
    ~~

    ReplyDelete
  20. //எனக்குள் ஒளிந்திருக்கும் பைத்தியம் அவ்வப்போது தளைகளை உடைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறது//

    ஹய் என்ன கொஞ்ச நாள் வராம இருந்தா மகி உங்கள பத்தி இவ்ளோ பெருமையா :)) சொல்லி கிட்டு இருக்கீங்க :))

    ReplyDelete
  21. /ஹய் என்ன கொஞ்ச நாள் வராம இருந்தா மகி உங்கள பத்தி இவ்ளோ பெருமையா :)) சொல்லி கிட்டு இருக்கீங்க :)) // அதானே மேட்டரு! நீங்க வந்தா, நீங்களே என்னோட அரும,பெரும எல்லாம் புட்டுப்புட்டு வைப்பீங்க, நீங்க வராததாலே நானே அதை செய்துக்கறேன் கிரிஜா! இது மாதிரி அசம்பாவிதங்கள்(!) நடக்காம இருக்கோணும்னா, ஒழுங்கா வாரம் ஒருமுறை எல்லா வலைப்பூவிலும் வலம் வந்துருங்க,சரியா?
    :))))

    ReplyDelete
  22. //டீக் ஹேனா?! ;))// m...hurry, hurry. ;))) (இது வே..ற பாஷை.) ;) தமிழில எழுதினன், யார்டயோ பேர் மாதிரி இருக்கவும் இப்பிடி. ;D

    ReplyDelete
  23. //Profile! :)// ஸ்...ஸப்பா..!!!! ;))

    ReplyDelete
  24. வலைச்சரம் மூலம் தான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.
    உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
    Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  25. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_27.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  26. திண்டுக்கல் தனபாலன் & அருள், வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்!

    //வலைச்சரம் மூலம் தான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.
    உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
    Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்.// நன்றீங்க தனபாலன்! ரொம்ப சந்தோஷம்! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails