2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுதிருந்து இது பற்றிய நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஷக்கர்பரா அல்லது சங்கர்பாலி என்று பெயர் கொண்ட இந்த இனிப்புவகை மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத்தில் மிகவும் பிரபலமான ஒன்று என்று விக்கிபீடியா சொல்கிறது! :) மக்கள் தீபாவளி சமயத்தில் ஷக்கர்பராவை வீடுகளில் செய்கிறார்கள், மற்ற நாட்களில் கடைகளில் வாங்கி ருசிக்கிறார்களாம். புத்தாண்டுக்கு நாமும் இதனை வீட்டில் செய்து ருசிக்கலாம்,வாங்க! :)
ரெசிப்பிக்கு போகுமுன்னர் சிறு முன்குறிப்பு..இங்கே வீட்டுப்பக்கத்தில் ஒரு நாக்பூர்-ஐச் சேர்ந்த நண்பி இருக்கிறார். அவரின் அம்மாவும் இப்பொழுது வந்திருப்பதால் சில வடஇந்திய சமையல் குறிப்புகள் அந்த ஆன்டி-யிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒருநாள் வாக் போய்விட்டு திரும்புகையில் அவங்க வீட்டுக்குப் போனோம், டீயுடன் இந்த ஷக்கர்பரா-வைத் தந்தாங்க. எனக்கோ ஒரே இன்பஅதிர்ச்சி!! ;)) எப்படி செய்யணும் என்று கேட்டுக்கொண்டு வந்தேன். சாம்பிள் கொண்டுபோய் ஆன்டிக்கும் கொடுக்க அவங்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி! முதல்நாள் மாலை ரெசிப்பி கேட்டுக்கொண்டு அடுத்தநாள் மதியம் ஷக்கர்பரா-வைக் கொடுத்தா...எப்படியிருக்கும்?! :))
தேவையான பொருட்கள்(எந்த கப் எடுத்தாலும் எல்லாப் பொருட்களையும் அதிலேயே அளக்கவும்.)
பால் -1கிண்ணம்
சர்க்கரை -1கிண்ணம்
நெய் -3/4கிண்ணம்
மைதா -தேவையான அளவு***
எண்ணெய்
செய்முறை
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பால்-சர்க்கரை-நெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கவும்.
இதனுடன் மைதாவை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.
பிசைந்தமாவை காற்றுப்புகாமல் அரைமணி நேரம் மூடிவைக்கவும்.
மிதமான சூட்டில் எண்ணெய் காயவைக்கவும். பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக்கி, தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும்.
கத்தி (அ) பிஸ்ஸா கட்டர் கொண்டு சிறு சதுரங்களாக நறுக்கவும்.
நறுக்கிய துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
கீழே படத்தில் இடதுபுறம் இருப்பது கொஞ்சம் மெல்லியதாக நறுக்கப்பட்ட சங்கர்பாலி, வலப்புறம் இருப்பது கொஞ்சம் தடிமனாக நறுக்கியது. இரண்டில் எது நன்றாக இருக்கும் என பார்க்கலாம்னு இப்படி டெஸ்ட் எல்லாம் செஞ்சேன்! ஆனா பாருங்க, ரெண்டுமே சூப்பராதான் இருந்துது! ஹிஹி! :))
என்னதான் சொல்லுங்க, கோயமுத்தூர்ல இருந்து வாங்கிவந்த அந்த "அது" மாதிரி இந்த "இது" வரலையோன்னு கொஞ்சம் மனக்குறையாத்தான் இருக்குது. அடுத்த முறை செய்கையில் இன்னும் இம்ப்ரூவ் ஆகிவிடும் என்ற நம்பிக்கையோடு ஷக்கர்பராவைச் சுத்திச் சுத்திப் படமெடுத்தாச்! ;)
என்ஜாய்!
ஸ்வீட் போஸ்ட் :)) நல்லா வந்திருக்கு மகி .
ReplyDeletehappy new year Mahi.. Romba nalla iruku, amma ithai 'kala kalanu ' soluvanga...
ReplyDeletenamma oora sometimes thaniya pagu kaichi kooda mix panuvanga. kandipa seithu parka poren.
மஹி, உங்க கல கலா, சும்மா கலக்கலா இருக்கு :)
ReplyDeleteஹே same pinch. எனக்கும் இங்க ஒரு நல்ல சௌராஷ்டிரா நண்பி இருக்காங்க. நானும் அந்த aunty-கிட்ட நிறைய ரெசிப்பி கேட்டு வச்சுருக்கேன்.
Your "aatukaal biscuit" looks lovely really. I have a big story behind this recipe. Hope you'll read the mokkai when I post it in my blog. May be by this year end :)
"என்னதான் சொல்லுங்க, கோயமுத்தூர்ல இருந்து வாங்கிவந்த அந்த "அது" மாதிரி இந்த "இது" வரலையோன்னு கொஞ்சம் மனக்குறையாத்தான் இருக்குது" ------------ அதுக்கு காரணம் என்ன தெரியுமா? நம்ம கடைகள்-ல டால்டா சேர்பாங்க. So next time when you try, use dalda instead of ghee. You'll sure get the same taste like our stores. I guarantee you. I'm not finding small vanaspati packs here :(
ReplyDeletePerfect shapeயில் செய்து இருக்கின்றிங்க...ரொம்ப சூப்பர்ப்...
ReplyDeleteall your posts are sweet :)
ReplyDeleteமகி,
ReplyDelete'ஷக்கர்பரா-சங்கர்பாலி'___ட்வின்ஸ் பேர் மாதிரி இருக்கு.எல்லாம் ஒரே ஷேப்ல குட்டிகுட்டியா அழகா வந்திருக்கு.
அதுதாங்க அந்த 'இது'வை கொஞ்சம் பெருசா செஞ்சி 'கலகலா'ன்னும், குட்டிகுட்டியா செஞ்சு மிக்ஸரிலும் கலந்துவிடுவோம்.ஆனால் பால் சேர்த்து செய்ததில்லை.
இனிமையான பகிர்வு ..
ReplyDeleteதேங்காய்ப்பாலிலும் செய்யலாம் ...
My mom use to make this often during my childhood...
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
பார்க்கும்போது உடன் செய்யவேண்டும் போல ஆவலைத்தூண்டுகிறது.
ReplyDeleteஎல்லா பிஸ்கட்டுகளும் அழக சிரிக்குது மகி... விரைவில் எங்க வீட்டிலும் சிரிக்கும் என்று நம்புகிறேன்.
ReplyDelete/சுத்திச் சுத்திப் படமெடுத்தாச்! ;)/அது சரி... ஊரைச் சுத்தி சுத்திப் பார்க்கிறவங்களுக்கு இதை சுத்துறது பெரிய மேட்டரா??:)
ஆகா..ரொம்ப நல்லா செஞ்சிருக்கீங்க..செய்து பார்த்திட வேண்டியதுதான்....
ReplyDeletesupera iruku... yes dalda will enhance the taste of it.. but its bad for health na...
ReplyDeleteCOCONUT CORIANDER CHUTNEY
VIRUNTHU UNNA VAANGA
அழகா ஒரே மாதிரி நல்லா செய்திருக்கீங்க ... நான் டால்டா சேர்த்து செய்வேன். அதுனால தான் விரிசல் விட்டு வெடிப்போட நான் பண்ற ஸ்வீட் இருக்குன்னு நினைக்கிறேன்.. நெய் விட்டு செய்றதால நீட்டா வந்திருக்கு. இந்த மாதிரி அடுத்து செய்து பார்க்கணும் மகி
ReplyDeleteவாவ். பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு. எனக்கு கூட இது ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல எங்க அப்பா வாங்கி வருவார்.
ReplyDeleteஅன்புடன்
ஜேமாமி
சுலபமான குறிப்பு சுவையாகவும் தெரிகிறதே :) படங்களும் சூப்பர்! இதே போலவே பால் சேர்க்காமல், அளவுகள் சற்று வித்தியாசமாக நாங்களும் செய்வோம். ஆனா நீங்க சொன்ன 3 பெயரும் இல்ல அதுக்கு ;)
ReplyDeleteஉங்க மெதடிலும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி மகி.
மகி,
ReplyDeleteபார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது.நெய் போடாமல் செய்லாமா? டாக்டர் அட்வைஸ் . அதனால் கேட்கிறேன்.
நல்ல பகிர்வு.
சூப்பர்.ஆனால் பாருங்க மகி,இந்த ஸ்நாக்ஸ் மட்டும் வெளியே வாங்கியே பழகிட்டேன் நான்.நீங்க செய்கிற விதம் விதமான ஸ்நாக்ஸ் பார்த்து ஜொல்லு விடுவதோடு சரி,செய்து பார்க்க வேண்டும்..!
ReplyDeletemy al tie fav, amma supera seivanga...pics paarkum pothe sapida thonuthu...parcel pls..
ReplyDeleteSema supera irukku..
ReplyDeleteMy mom used to make this..suoer a irukku
ReplyDeleteenga amma naaga sinna pasagalaga irukum pooluthu adikadi ithan thaan seithu tharuvaga. 15 varudagal munbu suvaithathu
ReplyDelete. ungalin recipe parthavudan amma gabaham vanthu vithathu.. romba nalla vantherukey..
நானு... கொசுவர்த்தி சுத்துறேன்ன்ன்ன் ;)
ReplyDeleteசும்மா மைதாவை பட்டர் போட்டு பிசைஞ்சு, உருட்டி, பொரிச்சு, சீனி / மி.பொடி + உப்பு தூவி... கலகலான்னு பேர் வைச்சிருந்தேன். அது... என் ஆரம்பகால டீனேஜ் சமையல் - 70 நடுப்பகுதியில் ;))
அந்த கலர் கோடு போட்ட டிஷ்!! பப்பீஸ் சாப்பிடுற பாத்திரம் போல இருக்கே!!! ;D
ReplyDeleteAmy favourite Mahi. Wish u a Happy New Year.
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ் என்னென்னமோ பெயரெல்லாம் சொலி எம்மைப் பயமுறுத்துறீங்க....மகி.
ReplyDeleteசூப்பரா இருக்கு.. செய்து வச்சால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்ம்.. உதுக்குப் பாலுக்குப் பதில் தண்ணி சேர்த்து... வாழைத்தண்டில் போட்டு சிப்பி, சோகி என வடிவமைச்சு செய்வதாக நினைவு ஊரில்.
ReplyDeleteஉங்கள் முறை நன்றாக இருக்கு, பிள்ளைகள் விரும்புவினம், செய்துபார்க்கிறேன்.
///இமா said...
ReplyDeleteஅந்த கலர் கோடு போட்ட டிஷ்!! பப்பீஸ் சாப்பிடுற பாத்திரம் போல இருக்கே!!! ;D/// ஆவ்வ்வ்வ் இமா விளக்கெண்ணெய் விட்டுப் பார்க்கிறா:)).. இல்ல இமா வடிவாப் பாருங்கோ.. ஒரு டிஸ்ஷைக் கவிட்டு, மற்றையதை அதில வச்சு ஸ்டைலா படமெடுத்துப் போட்டிருக்கிறா மகி... அஓடிவந்து ஓமோம் அப்பூடித்தான் அதிரா எனச் சொல்லி கலாக்காவைத்தாங்கோ எனக்கு:)) சே..சே.. கலகலாவைச் சொன்னேனாக்கும்:))
//ஒரு டிஸ்ஷைக் கவிட்டு, மற்றையதை அதில வச்சு ஸ்டைலா படமெடுத்துப் போட்டிருக்கிறா மகி...// நிசம்ம்ம்ம்ம்மா நீங்க என்ன சொல்லிருக்கீங்கனு எனக்குப் பிரியவே;) இல்ல அதிராவ்! ;))) இஸ் இட் "ஒரு டிஷ்ஷை கவிழ்த்துட்டு"?!
ReplyDelete//அஓடிவந்து ஓமோம் அப்பூடித்தான் அதிரா எனச் சொல்லி கலாக்காவைத்தாங்கோ எனக்கு:))// ஓமோம்,,ஓமோம்,,ஓமோம்! கலாக்காவை நல்லா சோடிச்சு;) டி.எச்.எல்.ல அனுப்பிவிட்டுருக்கேன் அதிரா, பார்த்து பத்திரமா ரிசீவ் பண்ணிகுங்கோ! ;) :))
//வாழைத்தண்டில் போட்டு சிப்பி, சோகி என வடிவமைச்சு செய்வதாக நினைவு ஊரில்.// நான் சிப்பி-சோகி செய்திருக்கேன், ஆனா அது வேற மெஷர்மென்ட் அதிரா. கலாக்கா;)வுக்கு நெய் நிறையப் போட்டுச் செய்யோணும்! :)
/செய்து வச்சால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்ம்.. / ஆமாம், யாரும் செய்து குடுத்தா நல்லா இருக்கும், நாமே செய்து சாப்பிட போரிங்-ஆ இருக்கு! பிரித்தானியா வரட்டே? ;))
/என்னென்னமோ பெயரெல்லாம் சொலி எம்மைப் பயமுறுத்துறீங்க.../ என்னது? அஞ்சாத சிங்கம் புஸூக்கு, ச்ச்சீ, பூஸுக்கு பயமா? ஹாஹாஹ்ஹா! ;)
தாமதமான வருகை(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)க்கும் கருத்துக்களுக்கும் நனறி அதிரா!
~~
/Vijiskitchencreations said.../ நன்றி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
~~
//கலர் கோடு போட்ட டிஷ்!! பப்பீஸ் சாப்பிடுற பாத்திரம் போல இருக்கே!!! ;D // இமா, கண்ணாடி மாத்த காலம் வந்தாச் உங்களுக்கு! ;)))) இது ஊரில் அக்கா எனக்காக வாங்கி வைச்சு, கோவையில் இருந்து பத்திரமாக் கொண்டுவந்த பாத்திரமாக்கும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
//என் ஆரம்பகால டீனேஜ் சமையல் - 70 நடுப்பகுதியில் ;)) // நாங்க கேட்டோமா? வருஷமெல்லாம் நாங்க கேட்டோமா? சொந்த செலவில சூனியம் வைச்சுக்கிறீங்களே இப்புடி? ஹோஹ்ஹோஹோ! :D
எங்க பெரிம்மாவும் நீங்க சொன்னமாதிரி கலகலா செஞ்சிருக்காங்க இமா! ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
;)))
ReplyDeleteமிக ரசனையாக கலகலா மாவை நறுவிசாக நறுக்கி செய்து இருக்கும் மகியின் விரல்களுக்கு ஒரு மோதிரம்..:)
ReplyDeleteஎங்களூர் பக்கம் இதனை கலகலா என்பார்கள்.பெயர் என்ன் இப்படி ஆச்சுன்னா...இந்த பட்சணத்தை இரு டப்பாவில் போட்டு குலுக்கினால் கலகல என்ரு சப்தம் வருமில்லை.அதுதான் கலகலா...எப்படி...?
milk kaichiyetha illa pacha milka pls sollunga
ReplyDelete@அனானி, காய்ச்சி ஆறிய பால் எடுத்துக்கோங்க. கருத்துக்கு நன்றி!
ReplyDeletehttp://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
ReplyDeleteவலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.