யானைக் குளியல்-வீடியோ
குளிச்சு முடிச்சு, ப்ரெஷ்ஷாகி, ஒரு கட்டு புல்லும் தானே எடுத்துட்டுப் போய் உறவினர் கூட்டத்துடன் சேர்ந்து சாப்பிட்டுட்டு..
பாகனுடன் வசூல் வேட்டை & போட்டோ ஷூட்டுக்கு ரெடி! :)
நான் சூப்பரா போஸ் குடுப்பேன்! நீங்க அழகா நின்னுக்கணும், அது உங்க பாடு, போட்டோ க்ராபர் பாடு! ;)))
இந்த மனுஷங்க தொந்தரவு ரெம்ப ஜாஸ்தியாப் போச்சு பா...யானைப்பசிக்கு சோளப்பொரி-னு சொல்லுவாகளே, அது இதுதான்பா! ;)))
இந்தப் படத்திலிருக்கும் ஆட்கள் யாரோ எவரோ தெரியாதுங்க..அந்தப் பாப்பா யானைக்கு பாப்கார்ன் கொடுக்கறதைப் பார்த்து டக்குன்னு க்ளிக் பண்ணினேன்! :)
~~~
அக்டோபரில் பெங்களூரு பன்னர்கட்டா மிருகக் காட்சி சாலைக்கு சென்றபோது பார்த்த யானைகள்..பெண்களும் குழந்தைகளும் ஒரு புறம் அணிவகுத்து நிற்கிறார்கள், தந்தத்துடன் கம்பீரமாக இருக்கும் ஆண்யானை தனியாக நின்று படங்களுக்கு போஸ் குடுக்கிறது. யானைக்குட்டிகள் ரொம்ப க்யூட்டாக இருந்தன. :)
இவ்வளவு பெரிய உருவம், மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்து பூனைக்குட்டிகள் போல சாதுவாக இருப்பது மனதின் மூலையில் கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்தாலும், நல்லவிதமாகப் பராமரிக்கப் படுகின்றன என்று மனதைத் தேற்றிக் கொள்ளவேண்டியிருக்கிறது.
Its Okay, Remove your thinking cap..Come on! யானையப் பார்க்க யாருக்குதான் பிடிக்காது? வருத்தங்களை மறந்துவிட்டு ஜாலியா யானை பாருங்க!!:))
~~~
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
Happy Republic Day! Enjoy the feast! :)
ஆவ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:)
ReplyDeleteஅதுக்காக ஆனை:) அழகாயிருந்தாலும் எனக்கு வாணாம்ம்:) நோ தாங்ஸ்ஸ்:)) அதை அஞ்சுவுக்கு கொடுங்கோ.. பின்னால வாறாபோல இருக்கு :)
ReplyDeleteஅந்தக் குட்டிப் பாப்பாவுக்கு ரொம்பத்தான் துணிவு அதிராவைப்போல:).. தூக்கி வச்சிருந்தால் நானும் பொரி கொடுப்பனாக்கும் ஆனைக்கு .. எங்கிட்டயேவா?:))
ReplyDelete//இவ்வளவு பெரிய உருவம், மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்து பூனைக்குட்டிகள் போல சாதுவாக இருப்பது மனதின் மூலையில் கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்தாலும்,/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் வன்மையான கண்டனங்கள்... :)
ReplyDeleteஆஆஆஆ பூனை எப்படி யானையை பார்க்க முதலில் வரலாம் கர்ர்ர்
ReplyDeleteநான் முதலில் டாப் ஸ்லிப்பில் எடுத்த படங்கள்னு நினைச்சேன் மகி .
நாங்களும் பார்த்தோம் யானைகுளியல் ..சூரியன் படம் சூட் செய்த இடத்தில :))
//ஆஆஆஆ பூனை எப்படி யானையை பார்க்க முதலில் வரலாம் கர்ர்ர்
ReplyDelete// :))))) super கேள்வி ஏஞ்சல் அக்கா! :)))))))
முதலில் யானையப் பார்க்கவந்த பூனையாருக்கு ஒரு குட்டி யானைக்குட்டிய கூரியர்ல அனுப்பிவிட்டாச்! ;))))
ReplyDelete//தூக்கி வச்சிருந்தால் நானும் பொரி கொடுப்பனாக்கும் ஆனைக்கு .. எங்கிட்டயேவா?:)) // ஹாஹாஹ! என்னால கற்பனை பண்ணி பார்க்க முடியேல்ல அதிரா! ;))))))))
எல்லா யானைகளுமே சாதுவா நட்பாகத்தான் நின்னுகிட்டு இருந்தன,பயப்படாம பக்கத்தில போய்ப் பார்க்கலாம். நாங்கள்லாம் பக்கத்தில நின்னு போட்டோ எடுத்துகிட்டோமே! :)
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் வன்மையான கண்டனங்கள்... :) // கண்டனத்தைத் தெரிவிச்சுபுட்டு சிரிக்கிறீங்கள்! அப்ப எது கணக்கில வரும்? கண்டனமா,சிரிப்பா? ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அதிரா!
~~
ஏஞ்சல் அக்கா, நான் டாப் ஸ்லிப் போனதே இல்ல,தெரியுமா? நீங்க போயிருக்கீங்களா? லக்கி யூ! ;)))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ!
எப்போது யானையைப் பார்த்தாலும் ஒரு பிரமிப்புதான்.கூட்டமாக இருந்தும் எவ்வளவு சாதுவாக இருக்கின்றன!வருத்தமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteஇவ்வளவையும் சமைத்துக்கொண்டு எங்கே, கெட்டுகெதருக்கா!உங்களுக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள்.
//இவ்வளவையும் சமைத்துக்கொண்டு எங்கே, கெட்டுகெதருக்கா!// இல்லீங்க..வீட்டுக்கு ஒரு நண்பர் குடும்பம் வந்தாங்க, அதுக்காக செய்தது! :)
ReplyDelete/எப்போது யானையைப் பார்த்தாலும் ஒரு பிரமிப்புதான்./ கரெக்ட்டாச் சொன்னீங்க! பிரமிப்புக் கலந்த சந்தோஷம் மனசுக்குள்ள வரும். ஏதேதோ மிருகங்கள் இருக்க, யானைகளின் பக்கம்தான் மனுஷங்க கூட்டம்! :)
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சித்ராக்கா!
Nice clicks
ReplyDeleteஇயற்கை சூழலின் அழகில் யானையின் குளியலும் நல்ல பகிர்வு..
ReplyDeleteமஹி,
ReplyDeleteயானை அழகோ அழகு.
யானையைப் பார்க்கப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன?
பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
நன்றி பகிர்விற்கு,
ராஜி.
super. My daughter enjoyed that video.
ReplyDeleteமிருகங்களில் யானை எனக்கு மிக மிக பிடிக்கும். அதை பார்த்துக் கொண்டேயிருக்கலாம். நீங்களும் அழகாக படம் எடுத்திருக்கிறீங்க.வீடியோ
ReplyDeleteவும் நன்றாக இருக்கு. சில இடங்களில் யானையில்சவாரி செய்ய விடுவார்கள்.ஆனா எனக்கு அதில் விருப்பமில்லை,ஏறினதுமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி மகி.
யானையார் அழகாத்தானிருக்கிறார். அருமையான படப் பகிர்வுகள் மகி.
ReplyDeleteஆனால் எனக்கு தூரத்தில் பார்க்க மட்டுமே விருப்பம். அருகில் பார்க்க அவ்வளவு பயம். அழகாக தும்பிக்கையை ஆட்டி காதுகளை வீசி அசைந்து நடப்பது பார்க்கப் பிடிக்கும். எல்லாம் தூரத்தில்...:)
Mahi,
ReplyDeleteயானையை விட last-a ஒரு படம் போட்டு இருக்கீங்கல... அது என்ன ரொம்ப கவர்ந்திடுச்சு :)
யானை-னாலே எனக்கு சந்தோஷம், பயம், மரியாதை இதெல்லாம் கலந்து வந்திடும்:)
யானை படங்கள் அருமை. யானை எவ்ளோ அழகா அடம்பிடிக்கமா குளிக்க போகுது பாருங்களேன்.... :)
Lovely post Mahi, beautiful clicks..
ReplyDeleteYaanai a parthukute irukalam..fascinating!yummy spread too
ReplyDeleteஆனை படங்கள் எல்லாம் சூப்பர்! குடியரசு தின விருந்து நன்றாக இருந்தது.
ReplyDeleteகண்ணுக்கும் விருந்து; வயிற்றுக்கும் விருந்து!
//
ReplyDeleteMahi said...
//ஆஆஆஆ பூனை எப்படி யானையை பார்க்க முதலில் வரலாம் கர்ர்ர்
// :))))) super கேள்வி ஏஞ்சல் அக்கா! :)))))))/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)
" யான ... சூப்பரா குளிக்குது மா " எங்க வீட்டு குட்டி பையனுக்கு வீடியோ காட்டினவுடனே அவன் சொன்னனது.
ReplyDeleteயானை குளியல் வெகு ஜோர் .மகி
யானைக்குட்டிகள் ரொம்ப க்யூட்டாக இருந்தன. :
ReplyDeleteபதிவு அருமையாக இருக்கிறது ..பாராட்டுக்கள்..