2011-ல் ஊருக்குச் சென்றிருந்த பொழுது உறவினர் வீட்டுத் திருமணம் (தஞ்சையில்) இருந்தது. எங்கள் பயணத்தேதி நெருங்கிவிட்டதால் திருமணத்திற்குச் செல்ல இயலாதென்று முதல்நாளே கோவையில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டிற்குப் போய் வாழ்த்திவிட்டு வந்தோம். கல்யாண வீட்டில் இருந்த கோலங்கள், காமெராவில் புகுந்து இங்கே பிரசன்னமாகின்றன. :)
மாப்பிள்ளையின் அம்மா அழகாகக் கோலங்கள் போடுவார். மகன் கல்யாணத்துக்கு கோலம் என்றால் சொல்லவும் வேண்டுமா? :)
மாக்கோலம், வெளியே வாசலில் போட்டிருக்கும் கோலம் எல்லாமே வெகு அழகாய் இருந்தன.
~~
இந்தக்கோலம் என் அக்கா போட்டது..7புள்ளி, இடைப்புள்ளி 4 வரை. ரொம்ப சிம்பிளான கோலம்தான் என்றாலும், சுற்றிலும் வரும் பூவின் இதழ்கள் சரியாக வரவில்லை என்றால் கோலத்தின் அழகே கெட்டுப் போய்விடும், வடிவமும் வராது. கோலம் போடப் பழகிய காலங்களில் இந்தக் கோலத்தைத் தப்பாகாமல், இதேபோல அழகாய்ப் போடுவதே எனக்கொரு சவாலாய் இருந்தது. அதனால்தானோ என்னமோ, இக்கோலத்தின் மீது எனக்கேற்பட்ட ஈர்ப்பு குறையவே இல்லை! :) இப்பொழுது நானும் சுமாராய்ப் போட்டுவிடுவேன் என்றாலும், அக்காவைப் போல பர்ஃபெக்ட்டாக வராது! ;)
~~
சித்திரம் பேசுதடி..- என்று தலைப்பு வைக்க முக்கிய காரணம் இந்த வண்ணக் கிளிதான். :) அம்மா வீட்டில் முக்கியமான போன் நம்பர்களை பெரிய எழுத்தில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருப்போம். அந்தக் காகிதம் பழசாகிப் போக, திடீரென்று ஒருநாள் புதிதாக ஒரு காகித்ததில் போன்நம்பருடன், பக்கத்தில் இந்த வண்ணக்கிளியும் உட்கார்ந்திருந்தது. :))
என் (அக்கா) பையனின் கைவண்ணம்! :))) எங்க இருந்து தம்பி இந்தக் கிளியப் புடிச்சே? - என்று கேட்டதற்கு, ஒரு பழைய நோட் அட்டையில் இருந்து பார்த்து வரைந்ததாக நோட்டை எடுத்துக் காட்டினார். அசலும், நகலும் எப்படியிருக்கு?! ;)
என் கை சும்மா இருக்குமா? துறுதுறு..ன்னுச்சா..நானும் பென்சில் பேப்பர் எடுத்து கிளிய அழகாக் கீறிட்டேன். :))) [கவனிக்க, ரப்பர் உபயோகமே படுத்தலையாக்கும்! :)]
கிளிக்கு உடல் கொஞ்சம் நீளமாப் போயிருச்சோ? ;) ஆனா அதைக் கூட யாரும் கவனிக்கலை, கிளி ஏன் இப்படி "சிரிச்சிட்டு" இருக்கு என்றுதான் கிண்டல் பண்ணினாங்க!! நீங்களே சொல்லுங்க, என் கிளி சிரிக்குதா..சிரிக்குதா...சிரிக்குதா??! அவ்வ்வ்வ்வ்......
அடுத்த சில நாட்களில் கிடைச்ச கலர் பென்ஸில்களை வைச்சு கிளிக்கு கொஞ்சம் வண்ணமும் தீற்றி வைச்சிட்டு வந்தேன், பையன் கிளியை மட்டும் அழகா நறுக்கி, போன் நம்பர் பக்கத்தில் ஒட்டிவைச்சிட்டார்! :)
இவ்ளோதாங்க இந்த சித்திரம் பேசியது! :) ஹ்ம்ம்ம்...கிளிப் பேச்சு கேட்க வா- அப்படின்னு தலைப்பு வைச்சிருக்கணுமோ? இருங்க, வரேன்...ஒரே நிமிஷம்! டைட்டிலை மாத்திட்டு வந்துடறேன்! ;)))
கோலங்கள் மிகவும் அருமை...
ReplyDeleteசிரிக்கும் கிளி - நல்லா இருக்குங்க...
Nice rangoli
ReplyDeleteஹையா! பிழை ;) பிடிச்... ;))))
ReplyDeleteசங்குக்கு நேரே 2 இதழ்தான் இருக்கு. இடது பக்கம்.. 4 இதழ், மீதி எல்லாம் ஒழுங்கா 3. ;D
கிளி சூப்பர் மகி. //உடல் கொஞ்சம் நீளமாப் போயிருச்சோ?// இல்லை, கிளி கழுத்தை தூக்கிப் பார்க்குது. அலகு எல்லாம் அமைக்காக வந்திருக்கு. பாராட்டுக்கள்.
/சங்குக்கு நேரே 2 இதழ்தான் இருக்கு. இடது பக்கம்.. 4 இதழ், மீதி எல்லாம் ஒழுங்கா 3. ;D/ கொஞ்ச நேரம் குழம்பி, அதுக்கப்பறம்தான் நீங்க என்ன சொல்றேள்னு புரிஞ்சது! ;))))
ReplyDeleteஆனா டக்குன்னு பார்க்க எதுவும் தெரியுதா? வடிவா இருக்கில்ல இமா?! :))
கிளி பற்றிய பாராட்டுக்கு நன்னி ஹை! ;)
~~
அனு, நன்றி!
~~
தனபாலன், ரசித்து கருத்துச் சொன்னதுக்கு மிக்க நன்றிங்க!
~~
அடடா..அழகிய அற்புதமான காட்சிகள் + உங்களுக்கே உரிய அபரிமிதமான எழுத்துப் படையல்...
ReplyDeleteமகி என்னும் சித்திரம் பேசுதடீ...:)
முதலில் கோலங்கள் கொள்ளை கொள்கின்றது என்னை. அச்சடித்து வரைந்தாற்போல் அத்தனை கோலங்களும் இருக்கிறது.அருமை.
உண்மையில் பார்க்கும் ஒவ்வொருதடவையும் எனக்கு என் ஊர் வாழ்க்கை ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.................
அக்கா பையனின் ஓவியம் அருமை. அப்படியே அச்சடித்துவிட்டிருக்கிறார்...:).. அழகாகவே இருக்குது மகி. அவருக்கு எத்தனை வயசெண்டு சொல்லவில்லையே...
ReplyDeleteஅட நம்ம மகின்னா குறைச்சலா என்ன..:).
உங்க சிரிக்கும் பச்சைக்கிளியும் அழகாய்த்தானே இருக்கிறது.
வர்ணம் தீட்டியது ஒருவகை அழகுன்னாலும் எனக்கு உங்களின் அந்த பென்சில் ஓவியம் ரொம்பவே பிடிச்சிருக்கு...:).. நன்றாகவே படம் வரைய வரும் உங்களுக்கு தொடருங்கள். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்!!!
பாராட்டுக்கள் மகி!
simply superb...
ReplyDeleteஅழகான கோலங்கள் மகி. சும்மாவே உங்க ஊரில் கோலங்கள் போட்டு
ReplyDeleteஅசத்துவார்கள். திருமணம் என்றால் கேட்கத்தேவையில்லை. அழகாக
இருக்கு.
உங்க அக்கா போட்ட கோலம் மிக அழகா இருக்கு மகி.
//ஆனா டக்குன்னு பார்க்க எதுவும் தெரியுதா// தெரியல.
உற்றுப்பார்த்தால்தான் தெரியுது.இமாவுக்கு கர்.கர்.கர்...
உங்ககிட்ட வேறு என்ன திறமை இருக்கு. பட்டியல்போடுங்க. மிக அழகாக
வரைந்திருக்கிறீங்க.எனக்கும் பென்சில் ஓவியம் நன்றாக பிடித்திருக்கு.
அக்கா பையனும் நன்றாக வரைந்திருக்கிறார்
ஆஹா.. அருமை சித்திரம் பேசுதடி.. என் கண்கள் மயங்குது.. அப்பூடியே கையும் களவெடுக்குது.. கோலத்தை:)
ReplyDeleteஅன்னக்கிளி சிரிக்கேல்லை.. அதிரா எங்கே எண்டுதான் கேட்குது:) வாயைப் பாருங்கோ “அ” எண்டுதான் சொல்லுது:).. சூப்பரா இருக்கு மகி நீங்க வரைந்த கிளி.
ReplyDeleteஎல்லா கோலமும் அழகு மகி..உங்க அக்கா போட்ட கோலம் ரொம்ப நல்லா இருக்கு..உங்க சித்திரமும் பேசுது மகி..உங்க வலைக்கு வர்றவங்களை ஹலோ சொல்ற மாதிரி இருக்கு..:)
ReplyDeleteI love to put kolams, hardly I do it nowadays..
ReplyDeleteபேசும்கிளி சிரிக்கும் கிளியாயிடுச்சா!கோலங்கள் எல்லாம் அழகோ அழகு.
ReplyDeleteகோலங்கள் எல்லாமே அழகு.நீங்கள் வரைந்திருக்கும் கொஞ்சும் கிளி அழகு.
ReplyDeleteஅதைப் பதிவு செய்திருப்பது அழகு.
நன்றி பகிர்விற்கு,
ராஜி
Ur nephew is really talented and of course u too:-)amam andha kili siricha madhiri thaan irukku cuz its friday!yay!
ReplyDeleteகோலங்கள் அற்புதம்! அனுபவம் வாய்ந்த கைகள் என்று தெரிகிறது.
ReplyDeleteகிளிப் பேச்சாக உங்கள் பதிவை படிச்சுட்டோம்!
What beautiful kolams, Mahi. I thought at first you who had made them! They're beautiful!
ReplyDeleteகோலங்கள்ளாம் எவ்வளவு கச்சிதமாக, ஒழுங்காக,அழகாக அமைந்திருக்கிரது.பார்க்க,பார்க்க பரவசம்தான். கிளியைக் கிள்ளி எடுத்துக் கொள்ளலாம் போல இருக்கு.
ReplyDelete"ரப்பர் உபயோகமே படுத்தலையாக்கும்!" ---- பேஷ் பேஷ். திறமைதான் உண்மையில்.
ReplyDeleteகோலங்கள் மிக மிக அருமை. உங்க அக்கா எங்க அம்மா மாதிரி அழகா கோலம் போடுறாங்க. நானும் கூட உங்கள மாதிரி [சுமாரா :D] கோலம் போடுவேன், சித்திரமும் வரைவேன் :)
அருமையான பகிர்வு.
ReplyDeletehttp://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.