இதுவரை பொங்கலை ப்ரெஷ்ஷர் குக்கரில்தான் செய்திருக்கிறேன். இந்த வருடம் குக்கரில் இல்லாமல் பாத்திரத்தில் செய்வோம் என முயற்சித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இனிப்பான பொங்கலுடன் எனக்குக் கிடைத்த இனிப்பான பரிசின் விவரங்கள் பொங்கலைத் தொடர்ந்து..
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 3/4கப்
பாசிப்பருப்பு -1/4கப்
வெல்லம் - 1 அல்லது 11/2 கப் (சுவைக்கேற்ப அனுசரித்து போட்டுக்கொள்ளவும்)
ஏலக்காய்-2
முந்திரி-திராட்சை -சிறிது
நெய்- 2 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப் [விரும்பினால் சேர்க்கலாம், அல்லது நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.]
தண்ணீர் - 3 கப்
செய்முறை
பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
அரிசியை இரண்டு மூன்று முறை களைந்து பருப்புடன் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். [புது அரிசி எனில் ஊறத்தேவையில்லை, என்னிடம் இருந்தது கொஞ்சம் பழைய சோனாமசூரி அரிசி! ;)]
மிதமான தீயில் அரிசி பருப்பு நன்கு வேகும்வரை சமைக்கவும்.
அவ்வப்போது கிளறிவிட்டு, வேகவைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றி பொங்கல் நன்றாக வெந்ததும், கரண்டியால் நன்றாக மசித்துவைக்கவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி-திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காயையும் பொடித்துச் சேர்க்கவும்.
சுவையான பொங்கல் தயார். பரிமாறும்போது மேலும் ஒரு ஸ்பூன் நெய்யை சூடான பொங்கல் மீது விட்டு பரிமாறவும்.
ஜலீலா அக்காவின் சமையல் அட்டகாசம் வலைப்பூவில் நடைபெற்ற பேச்சுலர் சமையல் போட்டியில் எனக்கும் ஒரு பரிசு கிடைத்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என் ஆங்கில வலைப்பூவில் இருந்து அனுப்பிய Scrambled Egg with Veggies-க்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.குறிப்பு இங்கே.
ஜலீலா அக்கா போட்டியை அழகாக நடத்தி, பங்கு பெற்ற குறிப்புகளை வகை பிரித்து, சுவைத்துப் பார்த்து பரிசுக்குரிய குறிப்புகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அழகான பரிசுகளை வழங்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பங்குபெற்ற அனைவருக்கும் அழகான சான்றிதழ்களையும் வழங்கியிருக்கிறார்.அன்றாட வேலைப்பளுவிற்கிடையில் இத்தனை வேலைகள் செய்யும் அவரது அயராத உழைப்பு பிரம்மிப்பூட்டுகிறது. மிக்க நன்றி ஜலீலா அக்கா!
எனக்குக் கிடைத்துள்ள கற்கள் பதித்த அழகான கைப்பையைப் பார்க்க விரும்புவோர் கையை இங்கே வையுங்கள்! :))))))).
ஜலீலா அக்காவின் சென்னை ப்ளாஸா கடையில் இருந்து பரிசு மற்றும் சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் கொரியர் மூலம் கோவையில் எங்க வீட்டுக்குச் சென்று சேர்ந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!
inipaana seithe.. sweet pongal romba nalla iruku.. ungal handbag neethe parthu vithen romba super.. valthukal mahi..
ReplyDeleteவாழ்த்துக்கள் மகி... உங்களோட சக்கரை பொங்கல் நல்லா இருக்கு... வெல்லம் கலர் கொடுக்கலையா ??? எங்க வீட்டுல இன்னும் பிரவுன் கலர்ல இருக்கும்...
ReplyDeleteSuper Super Magi.... Congo...
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
பரிசு பெற்றமைக்கு பாராட்டுக்கள் மகி..உங்களுக்கு பிடித்த மஞ்சள் கலர் சேர்த்திருந்தால் பொங்கல் இன்னும் நல்ல கலர்ல வந்திருக்கும் மகி..:)
ReplyDeleteமகி! சர்க்கரைப் பொங்கலோடு இனிப்பான செய்தியையும் சேர்த்து தந்துள்ளீர்கள்...:)
ReplyDeleteபோட்டியில் பரிசும் அவார்ட்டும் பெற்றமைக்கு என் மனமார்ந்த பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்!!!
மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!!!
பரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள் மகி ..இன்னும் நிறைய பரிசுகளை அள்ளி குவிக்க வாழ்த்துகிறேன்
ReplyDeletePongal super, congrats Mahi..
ReplyDeleteபோட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.போட்டி,பரிசு எனும்போது ஒரு மகிழ்ச்சி வரத்தான் செய்கிறது.அதை எங்களுடன் பகிர்ந்துகொண்டதில் சந்தோஷம்.
ReplyDeleteபடிப்படியான செய்முறை விளக்கப் படங்களுடன் சர்க்கரைப்பொங்கல் சூப்பர்.சாதாரண வெல்லம் கிடைக்காமல் அச்சு வெல்லம் வாங்கி செய்ததால், இந்த வருட எங்க வீட்டு சர்க்கரைப் பொங்கலும் நிறம்&வாசனை குறைந்துதான் வந்தது.
ஆவ்வ்வ்வ் சூப்பர் மகி... சக்கரை இனிக்கிற சக்கரை... நல்லாயிருக்கு சக்கரைப் பொங்கல்.. எனக்கு இனிப்புப் பிடிப்பதில்லை ஆனா பொங்கல் எல்லம் பிடிக்கும்.. அதுவும் சும்மா சாப்பிடப் பிடிக்காது நல்ல உறைப்புக் கறி அல்லது சட்னி அல்லது அவிச்ச மிளகாய்ப் பொரியலாவது தந்தால்தான் சாப்பிடுவேன்:)
ReplyDelete//ஜலீலா அக்காவின் சமையல் அட்டகாசம் வலைப்பூவில் நடைபெற்ற பேச்சுலர் சமையல் போட்டியில் எனக்கும் ஒரு பரிசு கிடைத்திருக்கிறது /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) என்ன ஒரு சோகமாச் சொல்றதுபோல இருக்கே.. கொஞ்சம் உஷாராச் சொன்னால் என்னவாம்ம்:))
ReplyDelete//எனக்குக் கிடைத்துள்ள கற்கள் பதித்த அழகான கைப்பையைப் பார்க்க விரும்புவோர் கையை இங்கே வையுங்கள்! :// ரொம்ப விபரமான ஆளா இருப்பா போல இருக்கே:) காண்ட் பாக்கைக் கண்ணில காட்டினால் ஆரும் சுட்டிட்டலும் என.. இப்பூடி ஒரு ஐடியாவாக்கும்:)..
ReplyDeleteம்ஹூம்ம்... அஞ்சு... இதையும் அடிக்கும் ஐடியா இருக்கோ?:) இதை எப்பூடியாம் சுடுவீங்க?:)...
வாழ்த்துக்கள் மகி.. இன்னும் இரையப் போட்டிகளில் பங்கெடுத்து நிறையப் பரிசுகள் பெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் மகி.தொடர்ந்து வெற்றி நடை போடுங்க..
ReplyDeleteவாழ்த்துகள் மகி..
ReplyDeleteஎனக்கு தான் அடுப்பில் குக்கர் இல்லாமல் செய்ய பயம்..நானும் அடுத்த முறை செய்து பார்க்க வேண்டும்.
sarkarai paal pongal looks delicious Mahi. So sweet things are following you with sweeet pongal. Wish you many more laurels.
ReplyDeleteMira’s Talent Gallery
சமையல் போட்டியில் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துகள், மகி!
ReplyDeleteபொங்கல் திருநாள் அன்று மட்டும் சர்க்கரைப் பொங்கலை முழுதும் பாலிலேயே வேகவைத்துவிடுவேன்.
உங்கள் பொங்கல் பார்க்க ரொம்பவும் tempting ஆக இருக்கிறது.
உங்கள் சமையல் திறன் இன்னும் இன்னும் ஓங்குக!
super....kalakkunga ammani. Adutha vaatti indha maadhiri potti vandhaa enakkum sollen. Kalanthukittu prize vaanga poradhilla'nu oorukke theriyum... summa thaan..:) Ellam sari... nee eppadi bachelor pottila kalandhukkalaam..:)
ReplyDelete;))) //nee eppadi bachelor pottila kalandhukkalaam..:)// நல்ல சத்தமாக் கேளுங்க தங்கமணி அக்கா. ;)
ReplyDeleteவாழ்த்துக்கள் மகி. கைப்பை கல் வைச்சு.. சூப்பர் கலர்.
பொங்கல்... எனக்கு ஒரு பார்சல்.
பொங்கல் நல்ல நிறமாக இருக்கு. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மகி. அழகான கைப்பை.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
படிக்கும் பொழுதே பசியெடுக்கும் வண்ணம்
வடிக்கும் வலையே! வணக்கம்! - துடிப்புடன்
தஞ்சம் அடைந்து சமைத்த உணவெண்ணி
நெஞ்சுள் சுரக்குதே நீா்
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
மஹி முன்னாடி பரிசு பெற்றதற்கு மிகவும் அளப்பறியா ஸந்தோஷம். சர்க்கரைப் பொங்கலுடன் தித்திப்பான ஸர்டிபிகேட்டும், அழகான ஹேண்ட் பேகும்,பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும், நழுவி
ReplyDeleteவாயில் விழுந்தாற்போல் எனக்கு ஒரு ஸந்தோஷம். பாராட்டுகள் மஹி. அம்மா என்று அழைக்கும் பெண்ணல்லவா? மகளின் மகிழ்ச்சியில் பங்கு பெரும் அன்புடன்
மஹி,
ReplyDeleteபொங்கல் நல்லா தித்திப்பா இருக்கு. பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் :). எனக்கு participation prize-தான் கிடச்சுசு :P
எங்க வீட்டுல பொங்கல்-ல லேசா இஞ்சி அல்லது காய்ந்த இஞ்சி-யும் (சுக்கு-னு நினைக்கிறன்) இடிச்சு போடுவோம். கோவில் பொங்கல் மாதிரி வாசனை குடுக்கும்.