மேற்குத் தொடர்ச்சி மலையின் சாரலில், கோவையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில். மலையும் மலை சார்ந்த இடத்தில், பச்சைப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு அருள்பாலிக்கிறார் இந்தக் கோயிலில் இருக்கும் முருகப் பெருமான். அனு- அழகிய, வாவி -நீரூற்று, பிரித்துப் பார்த்துப் பொருள்கொண்டால் இதுவே அனுவாவியின் அர்த்தம். :)
கோவை காந்திபுரத்தில் இருந்து 26A என்ற பேருந்தில் காலை எட்டரை மணிக்கு ஏறி உட்கார்ந்தால் ஒரு ஒண்ணரை மணி நேரத்தில் கோயில் சென்று சேர்ந்துவிடலாம். இது பேருந்தினை நம்புவோருக்கு! :) இருசக்கர - நான்கு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு ஆயிரம் வழிகள். தடாகம் ரோடு வழியாக வரலாம், அல்லது கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ், துடியலூர், வடமதுரை இப்படியான ஊர்களில் இருந்து மேற்காகச் செல்லும் குறுக்குச் சாலைகளில் நுழைந்து ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டே கோயில் போய்ச் சேர்ந்துவிடலாம். :))
எங்கள் வீடு கோயிலில் இருந்து அதிகபட்சம் 10 கிலோமீட்டர் தூரம்தான் இருக்கும். பள்ளிக் காலங்களில், சோறு கட்டிக்கொண்டு, அடித்துப் பிடித்துக் கிளம்பி 9மணிக்கு வரும் 26A பிடித்து கோயிலுக்குப் போவோம். அப்பொழுதெல்லாம் அடிவாரத்தில் இருக்கும் லலிதாம்பிகை அம்மன் கோயில் இருக்கவில்லை. மலையேறி, முருகரை தரிசித்துவிட்டு, புளிச்சோறு- கட்டுசாதங்களை ஒரு புடி புடிச்சுட்டு, குளுகுளுன்னு வீசும் காற்றில் இளைப்பாறிவிட்டு வீடு திரும்புவோம். இப்பொழுது காலங்கள் மாறிவிட, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பைக்கையோ காரையோ எடுத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் போய்விட முடிகிறது.
எங்கூரில் இருந்து (எந்த ஊருன்னு கேக்காதீங்க, ;), 2வது பாரால சொல்லியிருக்கும் ஊர்களில் ஒண்ணுதான், ஹிஹி!) மேக்கால போகும் ஒரு குறுக்குச் சாலையில் செல்கையில் சாலையோரம் வாழைத்தோப்பும், பச்சைக்குடை பிடிக்கும் மரங்களும்!
போகும் வழியெல்லாம் இருபுறமும் செங்கல் சூளைகள். குவித்து வைக்கப்பட்ட செம்மண்ணும், பச்சைக் கற்களும், சூளையில் வேகும் கற்களுமாய் நிறைந்திருக்கும்.
சிறிய குன்றின் மேல்தான் கோயில் இருக்கிறது. படிகளும் ரொம்பவும் செங்குத்தாக இல்லாமல்தான் இருக்கும். வழியில் ஆங்காங்கே விநாயகர்- இடும்பன் இப்படி சந்நிதிகளும், திண்ணைகளும், மரங்களையொட்டிய மேடைகளும் இருக்கின்றன. படியேறுவோமா? ரெடி, ஒன்...டூ..த்ரீ...ஸ்டார்ட்! :)
படியேறிகிட்டே, அப்படியே பின்னால் திரும்பிப் பார்த்தால்...மேற்குத்தொடர்ச்சி மலை எல்லை கட்ட, தென்னைமரங்களும் எட்டிப்பார்க்க ஒரு வியூ!
இன்னுங்கொஞ்சம் மேஏஏஏஏலே போயாச்சு..இப்ப அடிவாரத்தில் இருக்கும் வீடுகளும் தோட்டங்களும் சிறு சிறு புள்ளிகளாய்த் தெரிகின்றன.
ஆடிப்பாடி(?!!) :) 90% ஏறியதும் வரும் இடம்தான் மேலேயுள்ள படம். Elevated view-ல மந்தஹாசம் புரிந்தபடி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்..மேல ஏறி மயில் மேல உக்காந்துகிட்டு, "You did it"! என்கிறாரோ?! :) இங்கிருந்து ஒரு
பத்திருபது படிகள் நல்லாவே உசரமா இருக்கும். அதற்கு எச்சரிக்கை பண்ணத்தான் இம்புட்டு அழகாச் சிரிக்கிறாருன்னு நினைக்கிறேன். அவ்வ்வ்வ்! தம்கட்டி ஏறிடுவோமில்ல? ஏறிப்போனால் அங்கேயே அனுவாவியின் குளிர்ந்த நீரைப் பருகலாம்.படங்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அவை அடுத்த பதிவில்.
பி.கு. ஆசையாசையாகப் படமெடுத்து வந்து பிறகு ஆர்வம் குறைந்துபோய் ஹார்ட் ட்ரைவில் தூங்கிக் கொண்டிருந்த படங்களைத் தேடியெடுத்து இங்கே பகிரவைத்த இன்ஸ்பிரேஷன் பதிவு இங்கே. :)
வாவ் !!!!! படங்கள் இயற்க்கை எழில் கொஞ்சும் அழகு ...கண்ணுக்கு குளுமையா இருக்கு மகி .
ReplyDeleteஉங்கூர்ல செங்கல் சூளை மாதிரிதான் எங்க ஊரும் ..
நான் கோவையில் மருத மலை போயிருக்கேன் ..அனுவாவி போகல்லை ..இப்ப சென்று வந்தாச்சு உங்களோட :))
வாங்க ஏஞ்சல் அக்கா, இப்பதானே மேலே வந்திருக்கோம்! இன்னும் அங்கிருந்து கீழ பார்க்கலையே! மீதிப் படங்கள் அடுத்த பகிர்வில்.
ReplyDeleteமருதமலையைப் போல் இந்த இடம் பிரபலமாகவில்லை. கூட்டமில்லாமல், ஆரவாரங்கள் இல்லாமல் அமைதியான கோயில் இது. வாய்ப்புக் கிடைச்சால் போயிட்டு வாங்கோ! :)
'அனுவாவி'_பெயர் வித்தியாசமா இருக்கு.பச்சைப் பசேல் மரங்களும், மலைகளும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.எடுத்த எல்லாப் படங்களையும் ஒன்னு விடாமப் போடுங்க.கோவை எந்தப் பக்கம் என்றே தெரியாது.அதனால் இங்கேயே பார்த்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஉங்க ஊர் பேரை சீட்டு எழுதிப்போட்டு,குலுக்கி எடுத்துக் கண்டுபிடிச்சாச்சு. எங்க ஊர் பக்கமும் செங்கல் சூளைகள் உண்டு.அடுத்த பதிவுக்கு இப்போதே வெயிட்டிங்.
அடுத்த சுற்றுலா இங்கு தான்...
ReplyDeleteWow ! Super'ah iruku Mahi... Unga click adding more interest to visit that place... Keep posting such spots...
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
எனக்கு உங்க இடம் ரெம்ப பிடிக்கும் மகி.நான் கோவையைச்சொன்னேன்.சென்னையை விட கோவை ஹீட் குறைவு. நல்ல குளுர்மையான இடம்.மேற்கு மலைத்தொடர்ச்சிதான் காரணமோ. எங்கூர் மாதிரி இருந்தது. பச்சைப்பசேல் என்று பார்க்க நன்றாக இருக்கு மகி.
ReplyDeleteஇனிமேல் போனால் இந்த இடம் முதலிடம். பார்ப்பதற்கு.
மகி உங்களோட அனுவாவி பயண அனுபவம் அருமை.... தொடர்ச்சிக்கு காத்திருக்கிறோம்....
ReplyDeleteநான் கூட மருதமலை போய் இருக்கேன்... அடுத்த முறை கோவை வந்தால்! கண்டிப்பாக அனுவாவி போய் பார்க்கிறேன்....
படங்களும் உங்கள் வர்ணனைகளும் ரொம்ப நல்லாருக்கு மஹி... ஏன் (எல்லா?) கோயில்களுக்கு இத்த்த்த்தனை படிகள்? :)
ReplyDeleteகோவை பக்கம் அதிகம் போனதில்லை. ஒருமுறை போய் தூரத்தில் இருந்து மருதமலை பார்த்தோம்.
ReplyDeleteஉங்கள் புகைப்படங்களைப் பார்த்தால் ரொம்பவும் ரம்மியமான இடம் என்று தோன்றுகிறது.
படியேறிப் போவதை ரசித்துச் சொல்லியிருக்கிறீர்கள்!
அடுத்த பகுதிக்கு வெய்டிங்!
//ஏன் (எல்லா?) கோயில்களுக்கு இத்த்த்த்தனை படிகள்? :)// அதுவாங்க பானு? கஷ்டப்பட்டு, உடலை வருத்தி, படியேறிப் போய்த்தான் கடவுளைப் பார்க்கணும். அவ்வளவு எளிதாக, சீக்கிரம் பார்க்க முடியாது என்பதை உணர்த்துவதற்காக இருக்கலாம்.
ReplyDeleteஅப்புறம் மக்களுக்கு படிகள் ஏறி இறங்கி நல்ல உடற்பயிற்சி கிடைக்கட்டும் என்பதற்காகவும் இருக்கலாம்.
பொதுவாக முருகன் நிறைய கோயில்களில் மலை மேலதாங்க உட்கார்ந்திருப்பார். :)))))
கருத்துக்கு நன்றி பானு!
~~
கருத்துக்கள் தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்!
~~
மஹி,
ReplyDeleteஅருமையான ரம்யமான இடமாயிருக்கிறதே!
பார்க்க பார்க்க பரவசமாகிறது.
முருகன் என்று வேறு சொல்கிறிர்கள்.
சீக்கிரம் போய் வர வேண்டும்.
நன்றி பகிர்விற்கு,
ராஜி.
மலை எண்றாலே அழகுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் அற்புதமாம் முருகன் ஆலயம் அங்குகென்றால் சொல்லவே வேண்டாம்.
ReplyDeleteஅதிலும் நம்ம மகியின் கைவண்ணத்தில் படங்கள், அழகிய வர்ணனையுடனான பதிவு ...
அட அட..என்னை எங்கோ கொண்டுபோகிறதே...:)
அருமையாக இருக்கிறது மகி! மிகுந்த கலை நுணுக்கத்துடன் ஆழ்ந்தனுபவித்து படப்பதிவு, எழுத்துப்பதிவிடுகிறீர்கள். கலாரசிகை!!! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
ம்ஹும் சிலவற்றை இப்படி உங்கள் தயவில் பார்த்து ரசித்து அனுபவித்துவிடவேண்டியதுதான். இதையெல்லாம் நேரில் பார்ப்பதற்கு நாமும் புண்ணியஞ் செய்திருந்தால்தான்..
தொடருங்கள்... வருகிறேன் நானும்...!
Feel like visiting the temple, very nicely written post..
ReplyDeleteஇப்பதான் இந்த கோயிலைப்பற்றி கேள்விபடுகிறேன்,உங்களுடன் சேர்ந்து முருகன் கோவிலை பார்த்த மாதிரி இருக்கு..உங்க ஊரு கவுண்டம்பாளையம் கண்டுபிடிச்சாச்சு...
ReplyDelete@ Menaga, sorry, you are wrong! ;)
ReplyDeleteThanks very much for all your comments dear friends & readers!
நல்ல விளக்கமான பகிர்வு.படங்கள் அருமை.
ReplyDeleteமஹி,
ReplyDeleteUS-ல இருந்துட்டே கோயம்பத்தூர் போயி கோவில் மலை-ல ஏறுன மாதிரி இருக்கு உங்க விளக்கம். எங்க சித்தி கோவைலதான் இருக்காங்க ஆனா இந்த கோவில் பத்தி சொன்னதே இல்ல. நீங்க ரொம்ப லக்கி, கோவில் பக்கத்துலயே வீடு. நானும் போயிட்டு வந்து photos ஷேர் பண்றேன்.
எதையும் படிக்கல்ல மகி, வந்து படிக்கிறேன் மீண்டும்.
ReplyDeleteசாலையோரம் வாழைத்தோப்பும், பச்சைக்குடை பிடிக்கும் மரங்களும் சாமரம் வீசுவதுபோல் அருமையான பகிர்வுகள்.. அடிக்கடி சென்று வந்த இடம் ..அழகான படங்கள்...பாராட்டுக்கள்..
ReplyDeleteகருத்துக்கள் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDelete@மீனாக்ஷி, உங்க சித்தி கோயிலுக்கருகில் இல்லையோ என்னமோ! முன்பே சொன்னது போல இக்கோவில் மிகவும் பிரபலம் என்று சொல்ல முடியாதுங்க, அதனால் அவிங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். :)
கோவை போனால் கட்டாயம் போய்வாங்க. நன்றி மீனாஷி!
அன்பின் மகி - குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் - அனுவாவி - பதிவு அருமை - படங்களூம் விளக்கங்களூம் அருமை - தான் பார்த்ததை அனைவரும் பார்க்க வேண்டுமென்ற அவா பாராட்டுக்குரியது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete