Thursday, January 10, 2013

புதுசு கண்ணா, புதுசு! :)

பொறுமை...பொ...று...மை....ஐஐஐஐஐ! :)))
ஏற்கனவே பார்த்த புதினாதானே? இதிலென்ன புதுசு-ன்னு உங்க ஏழாம் அறிவு(!) :) யோசிக்கலாம்! வெயிட்டீஸ்... and scroll down patiently please! ;)))

வாடைக்  காற்றில் மற்ற எல்லாச் செடிகளும் வாடிக் கிடக்க, புதினா மட்டும் தளதளப்பாய் வளர்கிறது. அப்பப்ப தேவைப்பட்ட அளவு தண்டுகளைக் கிள்ளி உபயோகப் படுத்திகிட்டு வாரோம். :) 

இங்க நீங்க ஒரு பாயின்ட் நோட் பண்ணனும், பென்சில்-நோட் பேட் எல்லாம் எடுத்துக்குங்க. பென்சில்ல மூக்கு இல்லன்னா, கத்தி-கப்படா எல்லாம் யூஸ் பண்ணி நல்லா கூரா சீவிக்குங்க!
" இந்தப் பதிவில் அங்கங்க நான் பார்த்தவற்றை (மட்டுமே) பகிர்கிறேன், நானா எதையுமே சொல்லலே,சொல்லலே,சொல்லல்லே! ;)))))" 
...என்ன, எழுதிகிட்டீங்களா? சரி, மேல படிங்க! ;)

நீங்கள் கவனித்திருக்கக் கூடும், பல உணவகங்களில் குடிக்க தண்ணீர் தரும்போது சிறு துண்டு எலுமிச்சையை தண்ணீரில் சேர்த்து தருவார்கள். நீரில் புதினா, மற்றும் சில பழ வகைகள் சேர்த்து flavoured water ஆகவும் குடிக்கிறார்கள்.

கடந்த விடுமுறையில் ஒரு முறை நாள் முழுக்க புக் படிச்சுகிட்டு, ஓய்வெடுத்துகிட்டு,  பிஸ்ஸா ஆர்டர் பண்ணி சாப்பிட்டுகிட்டு பொழுது போக்கிய ஒரு நாளில்...நடந்த நிகழ்வு இது! என்னவருக்கு ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தண்ணீர் தேவைப்பட்டதால ஒரு டெமோ- கொடுத்தார். உங்க வீடுகளில் யாருக்கேனும் உதவுமே என்ற நல்லெண்ணத்தில் இங்கே பகிர்கிறேன்.

ஹலுமிச்ச புதினாத் தண்ணி (அல்லது) தேமிச்ச புதினாத் தண்ணி
[இந்த டைட்டிலை ஆராய்ச்சி பண்ணி யாரும் பி.ஹெச்.டி. வாங்கினீங்க, அட்லீஸ்ட் $100,000 ராயல்டி நேரா என் பேங்க் அக்கவுன்ட்டுக்கு வந்துடணும், இப்பவே சொல்லிட்டேன்! ஹாஹ்ஹாஹ் ஹா! :))) ]

தேவையான பொருட்கள்
எலுமிச்சம் பழம்/ லெமன் -1
தேன் / ஹனி - 1டீஸ்பூன்
புதினா இலைகள் -2
தண்ணீர் - 1 கப்
ஐஸ் க்யூப்ஸ்- 2

செய்முறை 

படத்தைப் பார்த்தே புரிஞ்சுகிட்டிருப்பீங்க! இருந்தாலும் என் வாயாற :) ஒரு முறை சொல்லிக்கிறேனே! :)))
  • ஓடிப்போய்(!) தொட்டியில இருக்க புதினாச் செடில இருந்து ரெண்டு ஆரோக்கியமான புதினா இலையப் பறிச்சுட்டு வந்து கழுவிவைங்க. 
  • ஒரு முழு எலுமிச்சம் பழத்தை ஒரு அழகான வட்டம் வரமாதிரி ஸ்லைஸ் பண்ணிக்குங்க. [மீதி பழம் முழுசா வேஸ்ட் ஆனாலும், டோன்ட் கேர்! ;) ]
  • புதினா இலைய உள்ளங்கைல வைச்சு, லேசா கசக்கி டம்ளரில் போடுங்க, அது மேல லெமன் ஸ்லைஸையும் போட்டுருங்க.
  • கப்-ல முக்கால் பாகம்  தண்ணீர் ஊத்துங்க. 
  • கொஞ்சம் (ஆர்கானிக்) ஹனிய தண்ணில ஊத்தி, கலக்கிருங்க.
  •  மேலாப்பல ரெண்டு ஐஸ் க்யூபையும் தூக்கி(!) போடுங்க!
அம்புட்டுதானுங்...ஹலுமிச்ச புதினா தண்ணி அல்லது தேமிச்ச புதினாத் தண்ணி ரெடி! சுடச்சுட பிஸ்ஸா சாப்பிடும்போது சைடுல கோக்-பெப்ஸி இதெல்லாம் குடிச்சு வயித்த கெடுத்துக்காம, இப்படி ஆரோக்கியமான பானத்தைப் பருகி, சந்தோஷமா இருங்க! ஓக்கே!?
"பி.கு. எனக்கு தண்ணின்னா, ஐஸ் க்யூப் கூட போடாம, ரொம்ப சில்லுன்னும் இல்லாம,   நார்மல் டெம்பரேச்சரை விட கொஞ்சம் சில்லுன்னு இருந்தாப் போதும்,  இப்படி ஒப்பனை வேலைகள், லெமன்-மின்ட் போன்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாம் பிடிக்காது, பிடிக்காது, பிடிக்காது!"
ஹலோ..படிச்சுகிட்டே போனீங்கன்னா எப்புடி? இந்த பாயின்ட்டையும் நோட் பண்ணிக்குங்க, அக்காங்! ;))

 ~~~~~
அடுத்ததா இன்னும் 2  விஷயங்கள்..புதுசு கண்ணா புதுசு.. 

டிசம்பரில் ஒரு சனிக்கிழமை.. ஷாப்பிங் போயிருந்தோம், அருகில் இருந்த பெட்கோ வாசலில் அடாப்ஷன் சென்டரில் இருந்து பல வடிவில், உருவில், வயதில் செல்லங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு காத்திருந்தனர். நான் ஒரு பக்கம் பார்த்துக்கொண்டிருக்க, என்னவரை  இந்தப் பெரியமனுஷன் மிகவும் கவர்ந்துவிட்டான். சட்டென்று ஒரு சின்ன வாக் கூட்டிப் போய்ப் பார்த்துவிட்டு, ஃபார்மாலிட்டீஸ் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். :)

அதே டிசம்பரில் இன்னுமொரு வெள்ளிக்கிழமை..கடைக்குப் போனோம். நான் மட்டும் கடைக்குள் போக, என்னவரும் இந்தப் பெரிய மனிதரும் காரிலேயே தங்கிட்டாங்க. சாமான் வாங்கிட்டு காருக்கு வந்தா உள்ளே இவர் மட்டும் இருக்கிறார். குளிரில் வெளியே நிற்க முடியாமல் மீண்டும் கடைக்குள்ளே போய்விட்டேன், அரை மணி கழித்து அவசர அவசரமாய் திரும்பிவந்தவரின் கையில் ஒரு சிவப்பு கலர் கிஃப்ட் பேக், நம்ம அதையெல்லாம் பார்க்கவே மாட்டமில்ல? கர்ர்ர்ர்-னு காருக்குள்ள வந்து உட்கார்ந்தா...உனக்காக சர்ப்ரைஸா வாங்கிவந்தேன்-னு எடுத்துக் கொடுத்தார் இந்த வெண்ணிற ஆடை நிர்மலா;)வை!! ஹவ் இஸ் இட்?! ;)
~~~~~
எங்க வீட்டுப் புது ஆளுக்குப் பெயர் சூட்டுவதற்காக ஒரு நாள் முழுக்க யோசிச்சோம், சில மணி நேர யோசனைகள், மோக்லி, ஜிண்டு, டிங்கு, பூச்சி, வேட்டை, மணி--இப்படி விபரீதமான பெயர்கள் எல்லாம் ஆலோசிக்கப் பட்டு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர், "ஜீனோ"! :)))

சுஜாதாவின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். விகடனில் "என் இனிய இயந்திரா" வந்த காலத்திலிருந்தே "ஜீனோ" மேல் ஒரு கண்ணு! மறந்து போயிருந்த ஜீனோவை நினைவூட்டும் விதத்தில் சிலகாலம் முன் வலைப்பூ உலகிலும் அறுசுவையிலும் ஜீனோ- என்ற பெயரில் ஒருவர் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார், thanks to him! 

ஜீனோவை இங்கே வரவைக்க வேண்டும் என்று ப்ரெஷ்ஷர் போட்டு, ட்ரிக்ஸி மூலம் தூது விட்ட இமாவின் உலகிற்கு மகியின் உலகில் இருந்து ஒரு சின்ன கொலாஜ் பரிசு!  :)))


நாங்க வாக் போயிட்டு வரோம், நன்றி, வணக்கம்!

23 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    இத்தால் சகல விசுவா... ம்ஹும்.. சகல வாசகப் பெருமக்களுக்கும் இமா அறியத்தருவது என்னவெனில்... ட்ரிக்ஸிக்கு முதலில் ஜீனோ என்றுதான் பெயர் சூட்டுவதாக இருந்தது. ஒரு உலகில் எத்தனை ஜீனோக்கள்தான் இருக்க முடியும்! (ஏற்கெனவே அருண்களால் சூழப்பட்டிருக்கிறது போதாதா!) அதனால் ட்ரிக்காக ட்ரிக்ஸி. ஆனாலும்... ட்ரிக்ஸி குணங்களெலாம் ஃபுல் சார்ஜ்ல இருக்கிற ஜீனோ போலவே இருக்கும். ;)

    ReplyDelete
  2. ட்ரிக்ஸிJanuary 10, 2013 at 1:27 PM

    ஹ்ம்! நான் கிஸ் கொடுத்தா கடிக்கறீங்க! டூ பாட் ஜீனோ! ;)

    ReplyDelete
  3. ட்ரிக்ஸிJanuary 10, 2013 at 1:29 PM

    சரீ... அடுத்து செல்லத்தை அறிமுகம் செய்யப் போகும் கெ.கி யார்! யார்!! யார்!!!!

    ReplyDelete
  4. //படத்தைப் பார்த்தே புரிஞ்சுகிட்டிருப்பீங்க! // ம்..ஹூம்! ;( அது என்னாது ஒரு டயர்ல இருந்து ஒயர் ஒயரா தொங்குது!!

    வெ.ஆ.நி சூப்..பர்.

    //ஜீனோ- என்ற பெயரில் ஒருவர் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்,// ம்... அவரை வர வைக்க நானும் படாத பாடு படுகிறேன். வரவே மாட்டாராம். ;( இந்த லிங்க் அனுப்பி இருக்கிறேன், பார்க்கலாம்.

    //சின்ன கொலாஜ் பரிசு!//க்கு அன்பு நன்றிகள். ;)

    ReplyDelete
  5. ஹைய்ய்ய்....ஃப்ரண்ட்.ஜீனோ....:)
    நான் மீரா...இளமதி அக்காவின் செல்லக்குட்டி...
    வாங்கோ வாங்கோ...நானும்ம் உம்ம்ம்மாஆஆஆ...ஏன் கர்ர்ர்ர்ங்கிறீங்க...

    நோ..நோநோ அப்பிடி கடிக்கவெல்லாம்பிடாது...நீங்க நல்ல பிள்ளைதானே...வாங்கோ நா, நீங்க, ட்ரிஸ்கி மூணுபேரும் ஒண்ணா சேர்ந்து விள்ளாடுவம்...:)))

    ReplyDelete
  6. மகி உங்க ஜீனோவை விட்டு கண் அங்கிட்டு இங்கிட்டு நகரமாட்டேங்குது...:) அப்புடீ வசீகரம் பண்ணுறார்...ஸோ க்யூட்...லவ்லி...:)

    அப்புறம் ஜீனோவோட சேர்த்துப் பார்க்கிறப்போ அந்த தேமிச்ச புதினாத் தண்ணி 2ம் இடம்தான்...ஆனாலும் ஓக்கே ஓக்கே...:)

    நான் ச்சும்மா...தேமிச்ச புதினாத் தண்ணி நல்லாத்தானே இருக்கு. நல்ல டிப்ஸ் எல்லாம் தந்திருக்கிறீங்க..:) செய்து பார்த்திடணும்..

    ஜீனோவுக்கு கண்ணுபடப்போகுது மகி...:)

    ReplyDelete
  7. ஜீனோ: மியாவ் மியாவ் மீரா! ;)
    ஐ யம் அ குட் பாய். எனக்கு கிஸ் பண்ணதெரியாது! ஆனா நான் பலமாக் கடிக்க மாட்டன், பயப்படாதீங்கோ தோழர்! ;)

    எல்லாரும் விள்ளாடுவோம்,எல்லாரும் விள்ளாடுவோம், வாங்கோ! :)))
    ~~
    நன்றி இளமதி! :)
    ~~
    ட்ரிக்ஸ், ட்ரிக் பண்ணி ஜீனோ இங்க கூட்டி வந்துட்டீங்க! கர்ர்ர்ர்ர்ர்! அப்ப கடியும் நீங்கதான் வாங்கிக்கணும்.

    இமா, நீங்களும் ஜீனோன்னே பேர் வைச்சிருக்கலாம், நியூஸிலன்ட் எங்க, கலிஃபோர்னியா எங்க? நான் இங்க ஜீனோ-வைக் கூப்ட்டா உங்கூருக்கு கண்டிப்பா கேக்காது, அதே போல நீங்க கூப்ட்டாலும்
    இங்க கேக்காது, எப்படி?! :)))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!
    ~~

    ReplyDelete
  8. ட்ரிக்ஸிJanuary 10, 2013 at 6:18 PM

    ம்... எனக்கு புதினா பிடிக்குமே! இங்க கிட்டத்தட்ட செடி மொட்டை. கொஞ்சம் பார்சல் ப்ளீஸ்.

    ReplyDelete
  9. உங்க வீட்டு புது வரவு சூப்பரா இருக்கு.இனி அடிக்கடி ப்ளாக்கை வலம்வருவார்.

    ReplyDelete
  10. கொத்தாய் புதினா பார்க்கவே அழகு மகி!

    ReplyDelete
  11. I love Mint.... Convey my wishes to ur new member :)
    http://recipe-excavator.blogpspot.com

    ReplyDelete
  12. இப்பதிவை எழுதிய விதம் மிக அருமையாக உள்ளது.

    ReplyDelete
  13. ஜீனோவோட சேர்த்துப் பார்க்கிறப்போ அந்த தேமிச்ச புதினாத் தண்ணி 2ம் இடம்தான்..

    புதீனா மணக்கிறது .

    ReplyDelete
  14. ஆ..ஆ.. மகி நீங்களுமா. எனக்கு பொர்றாஆஆமையா இருக்கு.இமா டாக்ஸி ச்சீ. ட்ரிக்ஸி,நீங்க ஜீனோ,யங்மூன் மீரா இனி அடுத்தது????‍.
    நீங்க இதை முதல போடாம,புதினா மே(வோ)ட்டரை ப(கு)டிக்க வைச்சு
    பின் இதை படிக்க வைச்சிகிருக்கிறீங்க.
    அழகாக இருக்கிறார். நல்ல பொழுதுபோக்காக இருக்கும் உங்களுக்கு.
    அவ்வப்போது இவரின் செல்லச்சேட்டைகளையும் போடுங்க மகி.

    ReplyDelete
  15. The minty water looks cool, and Jino looks superb..

    ReplyDelete
  16. புதினா இலை தொட்டியில் நிறைய வந்து இருக்கு !!! ஜீனோ அழகு... :) வலைஉலகத்துக்குள்ள வந்துட்டார்... இனிமே அவர் குறும்பு வர வேண்டியது தான்... நாங்க பார்க்க வேண்டியது தான்... என்ஜாய் பண்ண வேண்டியது தான்....

    ReplyDelete
  17. தேமிச்ச புதினாத்தண்ணி நல்ல விரிவான (?) ரெசிபி .(Don't mistake .just for fun)

    jeeno chooo chweet.

    raji

    ReplyDelete
  18. இந்த தண்ணீ நம்ம ஊரு சம்மர்-கு டக்கரா இருக்கும். ஹலோ ஜீனோ. இனி உன்ன நிறைய போஸ்ட்-ல பாக்கலாம்....

    ReplyDelete
  19. ஹாய் ஜீனோ நான் ஏஞ்சல் வீடு செல்லம் நிபி ,
    நான் ஒரு எலிஜபில் பாச்சுலர் :))அம்மா மாதிரியே பொண்ணு தேடறேன் கிடைக்கலை
    ஆனா அதிரா ஆண்டி வீடு பக்கம் போக கொஞ்சம் பயம் நீயும் வாயேன் என் கூட விளையாட
    கண்டிப்பா காது கடிக்க மாட்டேன் :)))

    ReplyDelete
  20. மகி மின்ட் ஹனி லைம் ஜூஸ் நல்லாருக்கே :))

    ReplyDelete
  21. மகி ஜீனோ ரொம்ப ஸ்வீட் .
    நான் ஜெர்மனில இருந்தப்ப பக்கத்துக்கு வீட்டில் பெனார் என்று ஒருவர் இவர் போலவே இருந்தார்

    ReplyDelete
  22. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. Hiiiiiiiiiiiiiiii
    Jeena...................
    Sujathavin Jeenava.........
    Ellai mahin Jeena.................
    I love you Jeena.
    viji

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails