Wednesday, January 16, 2013

வடா-பாவ்

 
வடா-பாவ் என்பது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மிகப் பிரபலமான உணவுவகை. மும்பையில் சாலையோரக் கடைகளில் கிடைக்கும் உணவுகளில் மிக முக்கிய உணவு இது. கடந்த கிறிஸ்துமஸ் அன்று எங்க வீட்டுப்பக்கம் இருக்கும் மராத்தி தோழி வீட்டில் வடா-பாவ் செய்து எல்லாருமாக ருசித்தோம். மாலை வாக் போய்விட்டு திரும்புகையில் சடாரென்று வடா-பாவ் ஐடியா உதயமானது. அப்பொழுதே இருட்டவும் ஆரம்பித்தாச்சு, அன்று கிறிஸ்துமஸ் என்பதால் எல்லாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சட்டென்று கடைக்குப் போய் பாவ் வாங்க முடியலை, முன்பே யோசிக்காததால் வீட்டிலேயே பாவ் செய்யவும் வாய்ப்பில்லை. அதனால் வீட்டில் இருந்த வீட் ப்ரெட்(ஹிஹி, wheat breadங்க ;))) உபயோகித்து வடா-பாவ் செய்தோம்.

இதிலே ஸ்வீட் சட்னி-க்ரீன் சட்னி எல்லாம் முன்பே செய்து வைத்துக் கொள்ளலாம். அவற்றின் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும். நாரியல் (= தேங்காய்) சட்னி எப்படி செய்வது என்பது மட்டும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.

தேவையான பொருட்கள் - நாரியல் சட்னி (தேங்காய் சட்னி) 
கொப்பரைத் தேங்காய்த் துருவல்(Dry coconut flakes) - 1 கப்
வரமிளகாய்- 5
பூண்டு - 4 பல்
உப்பு

செய்முறை 
எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீரில்லாம் அரைத்து எடுத்துவைக்கவும்.

தேவையான பொருட்கள் - வடா
உருளைக் கிழங்கு -5
இஞ்சி பூண்டு துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்- 2 
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
உப்பு

மேல்மாவுக்கு 
கடலை மாவு -1 கப்
ஓமம்- 1/2டீஸ்பூன்
கொத்துமல்லித் தூள் - 1/2டீஸ்பூன்
காய்ச்சிய எண்ணெய்- 1டேபிள்ஸ்பூன்
உப்பு
தண்ணீர்

வடாவைப் பொரிக்க எண்ணெய்

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.

கொஞ்சம் எண்ணெய் காயவைத்து, மஞ்சள்தூள்-மிளகாய்த்தூள்- இடித்த பச்சைமிளகாய் சேர்த்து பொரியவிடவும். அதனை மசித்த கிழங்குடன் சேர்க்கவும்.
துருவிய இஞ்சி-பூண்டு, தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சிறிய வடைகளாகத் தட்டி வைக்கவும்.

கடலைமாவை பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ஓமத்தை பொடித்துக்கொள்ளவும். ஓமப் பொடி, தனியாத்தூள், உப்பு இவற்றை கடலைமாவுடன் சேர்க்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயையும் சூடாக்கி மாவுடன் சேர்க்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கடலைமாவைக் கரைத்துக்கொள்ளவும். 
பொரிக்கத் தேவையான எண்ணெய் காயவைக்கவும். 
ஏற்கனவே செய்து வைத்த உருளைக் கிழங்கு வடைகளை மாவில் தோய்த்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

(பொதுவாக பாவ்(பன்) தான் உபயோகிப்பார்கள். இங்கே ப்ரெட் உபயோகித்திருக்கிறோம்.) ஸ்வீட் சட்னி-க்ரீன் சட்னி-நாரியல் சட்னி மூன்றும் தயாராக வைத்துக்கொள்ளவும். 
பாவ் பன்னின் ஒரு புறம் க்ரீன் சட்னி தடவவும். க்ரீன் சட்னி மீது கொஞ்சம் தேங்காய் சட்னியைப் பரப்பி, ஒரு வடா-வை வைக்கவும். இன்னொரு பாவ் பன்-னில் ஸ்வீட் சட்னியைத் தடவி வடா-வின் மீது வைத்து லேசாக அழுத்திவிடவும். 

இதற்கு பக்க உணவாக,(அதாங்க, சைட்டிஷ்!;)) சில பச்சைமிளகாய்களை லேசாகப் பிளந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிளகாய் சூடாக இருக்கும்போதே அதன் மீது உப்பு தூவிவிடவும். 

அவ்வளவுதாங்க, வடா பாவ் ரெடி! இதனுடன் தேவைப்பட்டால் ஸ்வீட்-க்ரீன்-நாரியல் சட்னிகளை பக்கத்தில் வைத்து தொட்டும் சாப்பிடலாம். 

ப்ரெட்-வடா-சட்னிகள் இவையெல்லாம் கலந்து ஒரு சூப்பர் சுவை, கூடவே துணைக்கு ரெடிமேட் கார்லிக் ப்ரெட், காரசாரமான  பச்சைமிளகாய ஒரு கடி...கண்ணில மூக்கில எல்லாம் தண்ணி வந்தாலும் சும்மா ஜூஊஊப்பர் சுவை! ;) :))))

பி.கு. படங்கள் என் கேமராவில் எடுக்கலை, அதனால் கொஞ்சம் சுமாராகத்தான் வந்திருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. "மீண்டும் நீ வீட்டில் செய்து படமெடுத்துக்கோ" என்று ஆன்டி சொன்னாங்க. ஆனா பாருங்க, இவ்ளோ வேலை எல்லாம் நான் நானா செய்வேனா என்று சந்தேகமா இருந்ததால், இருப்பதால் அதே படங்களை அப்லோட் செய்துவிட்டேன். ;))))

21 comments:

  1. ரொம்பவே வேலை வாங்கும் போலிருக்கே! பார்க்கும்போதே காரமா இருக்கு. சைட்டிஷ் பொரிச்ச பச்சைமிளகாய் வேறு.

    "மீண்டும் நீ வீட்டில் செய்து படமெடுத்துக்கோ"_ செய்யுற ஐடியா இருக்கா?

    ReplyDelete
  2. //"மீண்டும் நீ வீட்டில் செய்து படமெடுத்துக்கோ"_ செய்யுற ஐடியா இருக்கா? // எதாவது பார்ட்டி-கெட் டு கெதர் வந்தா செய்யலாம் என நினைச்சிருக்கேன் சித்ராக்கா! ;) :)

    ரொம்பவெல்லாம் காரமிருக்காது, அதுக்காகதான் கடிச்சுக்க பச்சமிளகாய்! தைரியமாச் சாப்பிடலாம்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  3. //வீட்டில் இருந்த வீட் ப்ரெட்// ம்.. புரிந்துகொண்டோம். ;)
    //நாரியல் சட்னி// looks like sambal with garlic. !! புளி சேர்க்கமாட்டாங்க!!!
    //காய்ச்சிய எண்ணெய்// ம்... இது புதுசு.
    //உருளைக் கிழங்கு வடைகளை மாவில் தோய்த்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.// Isn't this is called.. ஆலுவடா!
    //சில பச்சைமிளகாய்களை லேசாகப் பிளந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிளகாய் சூடாக இருக்கும்போதே அதன் மீது உப்பு தூவிவிடவும்.// ஆஹா! செபா ப.மிளகாயைக் கீறி உப்புநீரில் ஊறப் போட்டு பொரிப்பாங்க. அதுவும் ;) முட்டை பொரித்த எண்ணெயில் பொரித்தால் யமீ. நினைவுபடுத்துறீங்க. ஹ்ம்!
    //இவ்ளோ வேலை எல்லாம் நான் நானா செய்வேனா// அதானே! ;D

    ReplyDelete
  4. சட்னிகள் ரெடியாக வைத்திருந்தால் செய்யலாம் போல இருக்கு. காரசாரமா குளிருக்கு ஏற்ற உணவுதான் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  5. ம்..நல்ல குறிப்பு மகி. இங்கும் கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மெயினாக சேர்த்து காரமே இல்லாத ஃப்ரோஸன் வடைகள் கடையில் இருக்கு. அதை வாங்கி பொரித்தோ அல்லது பேக்ட் பண்ணீட்டோ இப்படி ப்ரெட்டில் கெட்சப்புடன் சேர்த்து வைத்து உண்பார்கள்.

    உங்க ரெஸிப்பி வித்தியாசமானதாக இருக்கிறது. செய்து பார்க்க ஆவலைத் தூண்டுகிறது...:)

    ReplyDelete
  6. My husband will die for this snack ever... :P
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  7. மகி...என் இனிய வாழ்த்துக்கள்!!!

    பேச்சுலர் சமையல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறீங்களாம்..

    வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  8. மகி... போட்டியில் வெற்றியீட்டியமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.
    (ப்ரைஸ்ல பாதி எனக்கு தருவீங்க இல்ல!)

    ReplyDelete
  9. சூப்பர்ர்ர்ர் வாடா பாவ்..வா வா ந்னு கூப்பிடுது!!

    ReplyDelete
  10. என் வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் மகி.போட்டியில் வெற்றியீட்டியமைக்கு

    ReplyDelete
  11. மஹி,

    உங்கள் வடாபாவ் ரெசிபி காரமாக இருக்கும் போல் தெரிகிறது. ஆனாலும் ட்ரை பண்ணிப் பார்த்திட வேண்டியது தான்.

    ராஜி

    ReplyDelete
  12. மஹி,
    கிழங்கு மசித்து வைத்திருக்கும் சட்டியும், வடா சுடுற சட்டியும் ரொம்ப பிடிச்சிருக்கு. படங்கள் நல்லா neat-a எடுத்து ப்ரெசென்ட் செஞ்சிருக்காங்களே-னு நினசுடே இருக்கும் போது..."படங்கள் என் கேமராவில் எடுக்கலை, அதனால் கொஞ்சம் சுமாராகத்தான் வந்திருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க." ------ இதை வாசிச்சேன் :)

    ReplyDelete
  13. வீட் ப்ரெட் பாவ் சூப்பர். ஈசியாக இருக்கு செய்முறை.

    ReplyDelete
  14. ரசிக்கவைக்கும் ருசியான பகிர்வு..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. வடா பாவ் சாப்பிட்டதில்லை.இனி செய்து பார்த்துவிடவேண்டும்.

    ReplyDelete
  16. வடாபாவ் வாசனை மூக்கைத்துளைக்குதேன்னு வந்தா இங்கே தயாராப் பரிமாறி வெச்சிருக்கீங்க. இது எங்கூரின் தேசிய உணவாக்கும் :-))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails