இன்று காலை பத்தரை மணி சுமாருக்கு வாக் போகலாம் என்று கிளம்பினேன். ரொம்ப குளிரும் இல்லாமல் சுள்ளென்ற வெயிலும் இல்லாமல் குளுகுளு தென்றல் அவ்வப்போது முகத்தில் செல்லமாக மோத இதமாக இருந்த நடையை ரசித்தவண்ணம் போய்க்கொண்டே இருந்தேனா....
..................
...........
......
...திடீரென மேலே படத்திலுள்ளவர் சாலையோரமாக நின்றிருந்தார். அருகில் ஆட்கள் யாரையும் காணோம். அருகிலுள்ள வீடுகளைச் சேர்ந்தவரா, இல்லை வெறெங்காவதிருந்து இங்கே வந்தவரா எதுவும் தெரியவில்லை. "பக்கத்தில் வா!" என்று கூப்பிட்டதும், கொஞ்சம் பயப்பட்டாலும் சிறிது நேரங்கழித்து அருகில் வந்தார். கழுத்தில் ஒரு காலர் இருந்தது, எங்கிருந்தோ தொலைந்துதான் போயிருக்கிறார் என அவர் முகம் மற்றும் நடை-பாவனைகளில் இருந்து தெரிந்தது.
நானோ நடந்து போயிருக்கிறேன். இவரை என்ன செய்வது..காரில் போயிருந்தால் கூட அப்படியே அமுக்கி:) காரில் அடைத்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று பார்த்திருக்கலாம். அப்படியே அம்போவென விட்டுப் போக மனம் வரவில்லை..என்ன செய்வதென விளங்கவும் இல்லை. உடனே என்னவருக்கு ஒரு தொலைபேசினேன், அதிசயமாக அவரும் போனை எடுத்தார். என்ன செய்வதுன்னு மறுபடியும் குழம்பி..சரி அருகில் இருக்கும் அனிமல் ஷெல்டருக்குத் தகவல் கொடுப்போம் என முடிவானது.
அதற்குள்ளாக இவர்(ரிக்கி) எனக்கு முன்னால் கொஞ்சம் நடப்பதும், பின்னால் போய் மறுபடி என்னிடம் நடந்து வருவதுமாக இருந்தார். பின்னங்காலில் ஒன்று ஏதோ வலி இருக்கும் போலும், அவ்வப்போது 3 காலிலும் நடந்தார். இப்படியாக இருவரும் நடந்து நடந்து வால்மார்ட் அருகில் வந்துவிட்டோம். அதற்குள் அருகில் இருந்த அனிமல் ஷெல்டருக்கு போன் அடித்து பேசினால், லொகேஷன் கேட்டதும் அவர்கள் " நீங்க ஆரஞ்ச் கவுன்டி அனிமல் ஷெல்டருக்கு போன் பண்ணுங்க, இது எங்க ஏரியா இல்லை" என்று சொல்லி தொலைபேசி எண்ணை கொடுத்தார்கள்.இத்தனைக்கிடையிலும் எங்க நடை நிற்கவில்லை..சாலைகளைத் தாண்டுகையில் ரிக்கி அகஸ்மாத்தாக சிக்னல் எல்லாம் கண்டுக்காம அவர் இஷ்டத்துக்கு ஓடினார். நான் பக்-பக்னு துடிக்கும் இதயத்தை வாய்வழியே வெளியே கொண்டுவந்திரக்கூடாதேன்னு கஷ்டப்பட்டு சாலையைக் கடந்தேன். பிறகொருமுறை சமர்த்தாக என் பக்கத்தில் வந்து, சிக்னல் விழுந்ததும் பவ்யமாக என்னுடனே நடந்தார். அப்படியே வால்மார்ட் பார்க்கிங் லாட் பக்கம் வந்ததும், ஒரு காரில் இருந்த பெண்மணி அவசரமாக "இஸ் இட் யுவர் டாக்" என கேட்டவாறே ஓடிவந்தார். தான் சிலமைல்கள் தள்ளி குடியிருப்பதாகவும், அவர் வீட்டருகில் ஒரு நாய்க்குட்டி காணமல் போனதாகவும் சொன்னார். தொலைந்து போன ஆள்தான் இந்த ரிக்கி!
இருவருமாகச் சேர்ந்து ரிக்கியை கேட்ச் பண்ணி;) அந்தப் பெண்ணின் காரில் உட்காரவைத்தோம். அவன் கழுத்தில் இருந்த காலரை செக் செய்து அதிலிருந்த எண்ணுக்கு தொலை பேசினால் அது fax number! grrrrrrrr! பிறகு தானே கூட்டிச் சென்று ரிக்கியை வீட்டில் சேர்த்து விடுவதாக கூறி சென்றுவிட்டார். ரிக்கி வீட்டுக்குப் போயிட்டார். சுபம்! :)
~~
சரி, ரிக்கிதான் வீட்டுக்குப் போயிட்டானே, வாங்க நம்ம பக்கத்தில் இருக்கும் டாலர் ஷாப்-கு போவோம். :) வாக்கிங் வருகையில் இந்தக் கடைக்குள் நுழைஞ்சு கொஞ்சம் டைம் பாஸ் பண்ணிட்டுப் போறது வழக்கம். ஹிஹி!
வண்ண வண்ணமாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த பூஜாடிகள் கண்ணைக் கவர்ந்தன. க்ளிக்கிட்டேன். :)
அப்படியே அந்தப் பக்கம் வந்தா...என்னடா இது, வெள்ளை வெள்ளையா இருக்கேன்னு உத்துப் பாத்தேன். கரும்பு...ஆஹா! :)
என் கண்களையே நம்ப முடியாம கண்ணைக் கசக்கிப் பார்த்தேன்..ஆமாங்க, கரும்பேதான்! PEELED SUGAR CANE என்று எழுதி சிறு பாக்கட்களாக போட்டு வைச்சிருந்தாங்க. ஒருமுறை ஆசையா கரும்புன்னு வாங்கி, அது தோசியாப் போனதால் ரிஸ்க் எடுக்கலை நானு. போட்டோ மட்டும் எடுத்துகிட்டு நடையக் கட்டினேன். ;) :)
வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும்..முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்!! :)))
ஆனால் எங்க ஊரில்,
வரும் வழியில் இளவெயிலில் புதுமலர்கள் தினம் நனையும்..முகிலெடுத்து முகம் துடைத்து மாலை வரை நகை புரியும்!! :)))
வைரமுத்துவின் வைரவரிகளோடு, SPB-யின் இனிய குரல்..இதயம் வரை நனையும் பாடல்..பயணங்கள் முடிவதில்லை-படத்திலிருந்து! கீழே படத்தில் எங்க வீட்டுப் பால்கனியில் "விழாக் காணும் வானம்"! :)
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே..
விழாக் காணுமே வானமே!
வான வீதியில் மேக ஊர்வலம்..
காணும் போதிலே ஆறுதல் தரும்!
Meeeeee First:))
ReplyDeleteஏஞ்சல் அக்கா, நீங்க 1ஸ்ட், நான் 2ன்ட்! :))
ReplyDeleteமகி நீங்க நல்ல வேலை செய்தீங்க ..பாவம் ரிக்கி .....சில பப்பிஸ் இப்படிதான் நம் பின் தொடர்ந்து வரும் அது ஒண்ணுமில்லை அவற்றுக்கு தெரியும் நாம் நாலுகால் விரும்பிகள் என்பது .
ReplyDeleteஇளையநிலா பாட்டு கிடார் மியூசிக்கில் செம ஹிட் ..இன்னிக்கு அந்த பாடலை ஹம் செய்திட்டு இருந்தேன் ..உங்க ப்லாகில் இன்ப அதிர்ச்சி :))
ReplyDelete/அவற்றுக்கு தெரியும் நாம் நாலுகால் விரும்பிகள் என்பது./ கரெக்ட் ஏஞ்சல் அக்கா,தே நோஸ்!! இங்கே rescued பப்பீஸ்-க்கு எல்லாம் மைக்ரோசிப் ஒன்று ஊசி மூலம் உடம்பில் செலுத்தி இருப்பார்கள். யாராவது கண்டுபிடித்தால், அனிமல் ஷெல்டருக்கு கொண்டு சென்று, ஸ்கேன் செய்து அந்த pet- பற்றிய தகவல்கள் கண்டுபிடிப்பாங்க. சிறுகுட்டியில் இருந்து வீட்டிலேயே வளர்க்கப் படும் pets-க்கு இப்படி மைக்ரோசிப் நம் கைக்காசு செலவு பண்ணி போட்டு வைக்கணும். அப்படி இருந்தா பிரச்சனை இல்லை.
ReplyDeleteஎன்னதான் இருந்தாலும், தொலைந்து போன pets மனிதர்களிடம் கிடைத்தால் பரவாயில்லை..வழி மறந்து சோறு தண்ணி இல்லாமல் அலைந்தா அவை என்ன பாடுபடும்?! நினைக்கவே கொடுமையாய் இருக்கு..அவ்வ்வ்வ்வ்வ்வ்!
ரிக்கியைக் கண்டு வான்னு அழைத்தவுடன் வந்து விட்டதா? ஊரில் நம்ம ஏரியாவை நினைச்சு பார்த்தேன்,நம்மை துரத்தி எடுத்துவிடுமே!நல்ல பகிர்வு..உங்க கூடவே வந்த இருந்த உணர்வு..
ReplyDeleteRomba nalla post... Was shocked and wondered on luking at the peeled sugarcane pkts... Super...
ReplyDeletewow namma oorulayum karuba ipadi cut panni kudutha epadi irukum...
ReplyDeleteஆஹா..சுவாரஸ்யம் ததும்ப ததும்ப பகிர்ந்துள்ளீரக்ள்.
ReplyDeleteஆஹா..ஆஹா வோக்கிங் ஆரம்பிச்சுட்டீங்களா மகி? மீயும்தேன்.. இப்போ இங்கு பேய்க் குளிர்:) பட் பயங்கர வெயில்:).. சோ மீ வோக் போனேன்ன்ன்.. இன்று முடியல்ல ஒரே ஃபொக்.. பத்தடி தூரத்தில் போகும் காரே தெரியவில்லை என்றால் பாருங்களன்..
ReplyDeleteபறவாயில்லையே நல்ல பொது சேவை பார்த்திருக்கிறீங்க... ஆனா எனக்கு உப்படியான பொது விஷயங்கள் பயம்....
ReplyDeleteடொலர் ஷொப்... கண்ணுக்கு குளிர்ச்சி... அங்கு உணவுவகை, மருந்துவகை வாங்கக்கூடாது(என் கணவர் அனுமதிக்கவே மாட்டார்ர்)... பிளவர் வாஸ், அப்படியான பாவினைப் பொருட்கள் சூப்பர்..
இங்கயும் அஞ்சுதான் 1ஸ்ட்டூ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
ReplyDeleteஇளயநிலா சூப்பர்ர்.... அதிலுள்ள அத்தனை வரியும் கலக்கல்..
ReplyDeleteமுகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தவறியதோ?
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ....
என்னா ஒரு கற்பனை.. நான் அடிக்கடி வியக்கும் வரிகள் இவை...
Mahi, loved the way you ended the post..
ReplyDeleteரிக்கியின் நல்ல நேரம் நீங்க பார்த்திருக்கீங்க.பூக்கள் அழகோ அழகு. வித்தியாசமான சிவப்பு நிறத்தில் வானம் சூப்பரா இருக்கு.
ReplyDeleteரிக்கியும் அழகு, பூவும் அழகு.அதைப் பத்திரமாக
ReplyDeleteஉரியவரிடம் கொண்டு சேர்க்கவேண்டுமென்று நீங்கள் பட்ட பாடு தான் பேரழகு.
உங்களுக்கு "Hats Off"
ஆசியாக்கா, நம்மூர் நாய்கள் வளர்ப்பு முறை வேறு, இங்க குழந்தைகள் மாதிரி வளர்ப்பாங்க. அதனால அதுகளுக்கு தானா வெளியே போய் பொழச்சுக்கத் தெரியாது. ஆனா நம்மூர்ல தெருநாய்கள் ஒரு கும்பலாவே சுத்துமே.:)
ReplyDeleteஎந்த ஊரா இருந்தாலும் பிராணிகள்னா எனக்கு ஒரு ஸ்பெஷல் பாசம்தேன், ஹிஹி! :) கருத்துக்கு நன்றி அக்கா!
~~
சங்கீதா, இங்க பக்கத்தில மெக்ஸிகோ-ல இருந்து கரும்பு,வேர்க்கடலை, தேங்காய் எல்லாமே வரும். ஆனால் இப்படி pack பண்ணி பார்ப்பது இதுவே முதல்முறை! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
விஜி, நம்மூர்லயும் இப்படிவந்தா சூப்பராத்தான் இருக்கும். :)
வருகை-கருத்துக்கு நன்றிமா!
~~
ஸாதிகாக்கா, நன்றி!
~~
அதிராவ்..இங்கே ஸ்ப்ரிங் ஆரம்பிச்சாச் என முன்பே சொன்னேனல்லோ? :) அப்பப்ப வின்டர் ஸ்டார்ம் என குளிர் வருது, ஆனா இனி ஒரு வாரம் நல்ல வெயில்.
நானும் அனுபவித்திருக்கேன், வெயில் பளிச் என அடிச்சா குளிர் படுபயங்கரமா இருக்கும். :) fog வேறா? பாத்து பத்திரமா வாக் போங்க. ஆமாம், தெரியாமத்தான் கேக்கிறேன், இந்தக் குளிரில் எதுக்காக்கும் வாக் போகணும்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
/ஆனா எனக்கு உப்படியான பொது விஷயங்கள் பயம்.... / நேக்கும்:) ஆரம்பத்தில கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு, ஆனா பாருங்க, ஜீனோ வந்தப்புறம் இந்த ரிக்கி-யின் அருமை நல்லாவே தெரிஞ்சிருச்சு. அதனால்தான் தகிரியமா பின்னாலயே போய், என்னால் முடிஞ்ச உதவியைப் பண்ணினேன். :)
டாலர் ஷாப்பில் உணவு-மருந்து நானும் வாங்குவதில்லை. பூ ஜாடி, ப்ளாஸ்டிக் டப்பாக்கள், சிறு செடிகள் இப்படி வாங்குவேன் அதிராவ். எதுவுமே வாங்கலன்னாலும் உள்ள போயி ஒரு விண்டோ ஷாப்பிங் செய்வது எனக்கு மிக இஷ்டம்! :)
இளையநிலா- நீங்களும் விசிறியா? மீ டூ! :) அருமையான வரிகள்!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அதிரா! ஏஞ்சல் அக்காவைப் பார்த்து பல்லைக் கடிக்காதீங்க, பல்லெல்லாம் கொட்டிரப் போகுது! ஹிக் கிக் கிக் கீ! ;)
~~
ஹேமா, நன்றி! :) வானமும் கவிதையும் எப்பொழுதும் இனிமை!
~~
சித்ராக்கா, ரிக்கியின் நல்லநேரம்தான், நானும் பார்த்தேன், அந்தப் பெண்மணியும் வந்தார். :)
இங்கே வானம் எப்பவுமே மாலையில் இப்படி பலவண்ணங்களில் விழா கொண்டாடுமே! அந்தப் படம் புதுக் கேமரால எடுத்தது! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ராஜி மேடம், எங்க வீட்டில் ஜீனோ இருந்ததால் என்னால் ரிக்கி வீட்டு ஆட்களின் நிலைமையை ரிலேட் செய்து பார்க்க முடிந்தது. அதனால் என்னால் முடிந்ததைச் செய்தேன். அந்தப் பெண்மணி மட்டும் வராமல் இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என நினைச்சுப் பார்க்கவே முடியலை. ரிக்கியின் நல்ல நேரம்தான் அது! :)
உங்க கருத்தைப் படித்து மிக்க மகிழ்ச்சி, நன்றி!
~~
மகி... ரொம்ப நல்லாவே பொதுசேவை பண்ணியிருக்கீங்க... அதிலும் இந்த வாயில்லா ஜீவன்களுக்கு... வாசிச்சிட்டு இருக்கும்போதே ஐயோ என்ன ஆச்சோன்னு பகீர்ன்னு இருந்திச்சு. பாவம் அந்த ரிக்கி... அவங்க வீட்டுக்காரர் இப்படியா அக்கறை இல்லாம தெருவில போனதை பார்க்காம இருப்பாங்க...கர்ர்ர்.
ReplyDeleteநீங்க கண்டதால ரிக்கி தப்பிடிச்சு...:)
அருமை உங்கள் ஜீவகாருண்யம்.
ஹாஆ..என்ன இளையநிலான்னு என் வலைப்பூ பற்றி பேச்சு நடந்திருக்குன்னு பார்த்தா ஓ பாட்டா...:)
ReplyDeleteஇந்தப்பாட்டு வந்த காலத்தில என்ன சக்கைபோடு போட்டிச்சு... இப்பவும் தான். மறக்கமுடியுமா... அருமையான பாடல்.
உலாப் போகும் மேகமும் விழாக் காணும் வானமும் ரொம்ப அழகா இருக்குது.
அழகிய காட்சி.. அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கலாம். அருமையா இருக்கு.
உங்க அன்பும் ரசனையும் மிகச்சிறப்பு மகி!
அதிசயமாக அவரும் போனை எடுத்தார். .// same thing happens here toooooo...my hus never picks up the phone.
ReplyDeletevery nice ending for mr.rickey.
இளையநிலா, கருத்துக்களுக்கு நன்றிங்க!
ReplyDelete/பாவம் அந்த ரிக்கி... அவங்க வீட்டுக்காரர் இப்படியா அக்கறை இல்லாம தெருவில போனதை பார்க்காம இருப்பாங்க...கர்ர்ர்./ அவசரப்பட்டு கர்ச்சிக்கக் கூடாது! தெருவில போனதைப் பார்த்திருந்தா விட்டிருப்பாங்களா? இவர் எப்படியோ நழுவி இருக்கிறார். இவர்களுக்கு விளையாட்டுப் புத்தி அதிகம் இளமதி, விளையாட்டா ஓடிருவாங்க. [அனுபவம் பேசுது..அவ்வ்வ்! ] அப்புறம் பின்னால ஒரு ஓட்டப்பந்தயம் ஓடி அமுக்கிருவோம். ஆனா ரிக்கி தொலைஞ்சு கிடைச்சிருக்கான். :))
பாடல்-வானம்-ரசனை அனைத்துக்கும் நன்றி இளமதி!
~~
/my hus never picks up the phone./ விடுங்க வானதி! நம்ம எல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாத்தையும் மேனேஜ் பண்ணிருவோம் என்ற நம்பிக்கைதான் அவங்களுக்கு! எப்புடி என் பாஸிடிவ் அப்ரோச்! ஹஹஹா!
நன்றி வானதி!
~~