Tuesday, April 9, 2013

புளிப் பொங்கல்

தேவையான பொருட்கள் 
பச்சரிசி (சோனா மசூரி அரிசி) -1 கப்
புளி - பெரிய நெல்லிக்காயளவு
வெங்காயம்-1
பூண்டு - 3 பற்கள்
வரமிளகாய்-8 (காரத்துக்கேற்ப)
கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
வெந்தயம்- ஏழெட்டு 
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-கொஞ்சம் 
பெருங்காயம்-1/8டீஸ்பூன்
சர்க்கரை-1 டீஸ்பூன் (அ) சிறுதுண்டு வெல்லம்
உப்பு
நல்லெண்ணெய்-2டேபிள்ஸ்பூன் 

செய்முறை
அரிசியை அலசி, தண்ணீர் வடித்து அரைமணி நேரம் வைத்து, ஈரப்பதம் இருக்கையிலேயே மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 
புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். நான் உபயோகித்த அரிசிக்கு ஒரு கப் அரிசிக்கு 21/2 கப் தண்ணீர் தேவைப்படும். புளிக்கரைசலுடன் மீதிக்கு  தேவையான தண்ணீரையும் ஊற்றி தயாராக வைக்கவும். 
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும். வரமிளகாயை கிள்ளிவைக்கவும். குக்கரில் எண்ணெய் காயவைத்து, கடுகு-பெருங்காயம் தாளித்து, வெந்தயம்-க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு கறிவேப்பிலை-வரமிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயம்-பூண்டையும் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புளித்தண்ணீரை குக்கரில் ஊற்றி கொதிக்கவிடவும்.
புளித்தண்ணீர் கொதி வந்ததும், தேவையான உப்பு-சர்க்கரை (அல்லது வெல்லம்) சேர்த்து அரிசி உடைசலையும் சேர்க்கவும்.
நன்கு கலந்துவிட்டு, குக்கரை மூடி 3 விசில் சத்தம் வரும்வரை வேகவைக்கவும். ஆவி அடங்கியதும்  குக்கரைத் திறந்து பொங்கலை கிளறிவிட்டு சூடாகப்  பரிமாறவும்.
நல்லெண்ணெய்-பெருங்காயம்-வெந்தய வாசனையுடன் புளிப்பொங்கல் தயார்.  இதனுடன் சிப்ஸ்-வடாம் வகைகள், தயிர் போன்றவை பக்க உணவாக பரிமாற பொருத்தமாக இருக்கும். அல்லது, தேங்காய ஒடச்சு, சின்னத் துண்டுகளா தோண்டி எடுத்து கடிச்சுக்குங்க! :) [ஜோக் இல்ல, சீரியஸ்! சூப்பரா இருக்கும்.]

அவசரமாக செய்ததால் இந்தமுறை அரிசியை தண்ணீர் தெளித்து அரைமணி வைத்தெல்லாம் பொடிக்கவில்லை, அப்படியே மிக்ஸில போட்டு  பொடிச்சுட்டேன்! ;) நீங்க நிதானமாச் செய்து பார்த்து சொல்லுங்க, நன்றி!

அரிசி பொடிக்க டிப்ஸும், ரெசிப்பி உதவியும் : காமாட்சி அம்மாவின் "சொல்லுகிறேன்" வலைப்பூவில் இருந்து. 

24 comments:

  1. புளிப் பொங்கல் வித்தியசமா இருக்கே...:)
    நிச்சயம் நல்லா இருக்கும். சந்தேகமே இல்லை. உடனேயே செய்திடலாம்.
    பார்க்கும்போதே.... ஸ்..ஸ்..ஸ் வாயெல்லாம் ஊறுகிறது மகி. அந்த வரமிளகாயில்தான் எனக்கு அதிக நாட்டமாயிருக்கு. ச்சும்மா சுள்ளென்று இருக்கும்.

    சூப்பர் பதிவு. பகிர்வுக்கு நன்றி மகி!

    ReplyDelete
  2. Even I've blogged about it mahi,but my version does not have onion or garlic..pulipongal is our family fave..urs look yumm

    ReplyDelete
  3. etharku enna saidish suit aakum?

    ReplyDelete
  4. உங்க செய்முறைதான்,நீங்க சேர்த்துள்ள பொருள்களில் சிலவற்றைத் தவிர்த்து இரண்டு விதமாக,எங்க பக்கம் செய்வாங்க.எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

    இவங்க இரண்டு பேரும் லன்ச்சுக்கு வராத நாளா பார்த்துதான் செய்யணும்.

    ReplyDelete
  5. Wow very unique recipe Mahi,loved to taste it immediately...

    ReplyDelete
  6. இளமதி, கண்டிப்பா செய்து பாருங்க. செய்யவும் சுலபம், சுவையாகவும் இருக்கும். எனக்கும் இந்த குண்டு வரமிளகாய் மிகப் பிடிக்கும். நீள மிளகாய் காரமே இல்லாத மாதிரி இருக்கும் இங்கே. அதனால் எப்பவுமே இந்த வரமிளகாய்தான் நான் வாங்குவது. :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி!
    ~~
    ரம்யா, உங்க ரெசிப்பியும் பார்த்திருக்கேன், ஒரு முறை உங்க மெதடிலும் செய்து பார்த்துத்தாப் போச்சு! :) கருத்துக்கு நன்றிங்க!
    ~~
    அனானி, புளிப்பொங்கலுக்கு சிப்ஸ்-வடாம்-தயிர் இதெல்லாம் மேட்ச் ஆகும்னு தோணுதுங்க. ஆக்ச்சுவலி, எனக்கு சைட்-டிஷ் எதுவுமே தேவைப்படல, அப்படியே சாப்பிட்டுட்டேன். :)
    ~~
    சித்ராக்கா, உங்கூர் ரெசிப்பிகளையும் போடுங்க, முயற்சி பண்ணிருவோம். எப்ப செய்யறீங்கனு சொல்லுங்க, நான் ஒரு கட்டைவண்டியப் புடிச்சாவது :) வந்து சேந்துடறேன், உங்களுக்கு கம்பெனி குடுக்க! ஹஹ்ஹா! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ராக்கா!
    ~~
    ப்ரேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  7. A new dish to me, have to try this sometime..

    ReplyDelete
  8. Very very interesting recipe,new to me.

    ReplyDelete
  9. வீட்டில் இதுவரை செய்ததில்லை...

    செய்முறை குறிப்புக்கு நன்றி...

    ReplyDelete
  10. மஹி ரொம்பவே நன்றாக இருக்கு. நான் ரைஸ் குக்கர்லே செய்ததை ப்ரஷர் குக்கரில் நீ செய்துள்ளாய்.
    எனக்கு பார்க்க சாப்பிட்டமாதிரி ஸந்தோஷமாக இருந்தது.தலியா என்று சொல்லப்படும் கோதுமை ரவையிலும், வெகு நன்றாக வருகிறது. உனக்குச் செய்வது ப்ரமாதமில்லை. என்னையும் குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி. ஒரு லிங்க் இருந்தால் ஓடோடி வந்திடுவேன். மிகவும் நன்றியும், ஸந்தோஷமும். அன்புடன்

    ReplyDelete
  11. பார்க்க... நல்லாவே இருக்கும் என்று தெரியுது. ட்ரை பண்ணுறேன்.

    //வெந்தயம்- ஏழெட்டு // ;))) சின்னக் காலத்துக்குக் கூட்டிப் போறீங்கள். செபா 'ரெண்டு மூண்டு கருவேப்பிலை' என்றால் ஐந்து கொண்டு போவன். இது... 15 வெந்தயம்! ;))

    ReplyDelete
  12. கேள்விபட்டு இருக்கிறேன் செய்தது இல்லை இப்போ படத்துடன் குறிப்புடன் நல்ல இருக்கு. ஆமாம் தொட்டு கொள்ள குறிப்பு சொல்லவிலையே

    ReplyDelete
  13. Very easy and interesting one pot meal

    ReplyDelete
  14. ஆஆ ... சூப்பர் புளிப் பொங்கல் வித்தியசமா இருக்கு மகி....வாழ்த்துக்கள்....
    நாளை நான் செய்து பார்க்கிறேன் மகி.நன்றி....

    ReplyDelete
  15. நாவில் நீர் ஊறும் பதிவு.

    ReplyDelete
  16. சூப்பரா இருக்கு மகி,எனக்கு இப்பவே செய்து சாப்பிடனும்போல இருக்கு.

    ReplyDelete
  17. பார்க்கவே நல்லா இருக்கு மகி. வித்தியாசமாகவும் இருக்கு. முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  18. ஹேமா, தனபாலன், சிட்சாட்--வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    //தலியா என்று சொல்லப்படும் கோதுமை ரவையிலும், வெகு நன்றாக வருகிறது.// அப்படியாம்மா? போனவாரம்தான் என்னவர் 4பவுண்டு தலியா வாங்கிவந்திருக்கிறார். கட்டாயம் செய்து பார்க்கிறேன். கருத்துக்கு நன்றிம்மா!
    ~~
    //செபா 'ரெண்டு மூண்டு கருவேப்பிலை' என்றால் ஐந்து கொண்டு போவன்.// நல்லவேளை, ரெண்டையும் மூணையும் கூட்டினீங்க..பெருக்கியிருந்தா என்னாவது?! 7x8=56 வெந்தயமா என்று கேக்காம நின்னீங்களே, அதுவரை மெத்த மகிழ்ச்சி! ;)))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!
    ~~
    //டத்துடன் குறிப்புடன் நல்ல இருக்கு. ஆமாம் தொட்டு கொள்ள குறிப்பு சொல்லவிலையே// பூவிழி, குறிப்பில் சேர்த்துட்டேன், பாருங்க. சுட்டியமைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஜெயஶ்ரீ, விஜி, ராஜி மேடம், மேனகா, அம்முலு அனைவரின் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி. சுலபமான குறிப்பு, செய்துபார்த்து சொல்லுங்க. :)
    ~~

    ReplyDelete
  19. நல்லாயிருக்கு மகி.செய்து பார்க்கணும்..

    ReplyDelete
  20. வணக்கம் தோழி ! வலைச்சரத்தில் தங்களின் தளம் இன்று அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது வாழ்த்துக்கள் .நான் இன்று தான் தங்களின் தளத்திற்கு முதன் முறையாக வந்துள்ளேன் .மிகவும் சிறப்பான ஆக்கங்கள் இங்கும் இருப்பதைக் கண்டு
    இன்று முதல் நானும் உங்கள் தளத்தில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு இந்த லிங்கில் சென்று பாருங்கள் உங்கள் தளம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதை
    http://blogintamil.blogspot.ch/2013/04/2013.html

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  22. அருமையான சுவையான புளிப்பொங்கலுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  23. வலைச்சரத்தில் முதல் கிச்சன் கில்லாடியாக அறிமுகம் ஆகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்!
    நிஜமாகவே நீங்க கில்லாடிதான், மகி! சமையலில் மட்டுமல்ல மற்ற கைவினைப்பொருட்கள் செய்வதிலும் கூட!

    ReplyDelete

  24. புளிப்பொங்கல் நான் செய்தேன் நன்றாக இருந்தது மகி.
    தங்களின் குறிப்பிற்கு மறுநாளே செய்துவிட்டேன் அருமையாக இருந்தது மகி...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails