வானம் எனக்கொரு போதி மரம்.. - நாளும்
எனக்கது சேதி தரும்!
அதுக்காக நான் புத்தர் அளவுக்கு பெரிய ஆளெல்லாம் இல்லீங்க! :)))) சிலநாட்கள் முன்பு சென்று வந்த ஒரு பயணத்திலிருந்து ஒரு சில படங்களை இங்கே பகிர்கிறேன்.
பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!!
சூரியன் பஸிஃபிக் கடலில் அமிழும் நேரம், வானத்தில் மேகங்கள் நடத்திய ஊர்வலம் அற்புதமாய் இருந்தது!
எனக்கது சேதி தரும்!
அதுக்காக நான் புத்தர் அளவுக்கு பெரிய ஆளெல்லாம் இல்லீங்க! :)))) சிலநாட்கள் முன்பு சென்று வந்த ஒரு பயணத்திலிருந்து ஒரு சில படங்களை இங்கே பகிர்கிறேன்.
பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!!
தனிமை நாடி ஏகாந்தமாய் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் காதல் ஜோடி... [அவங்களையும் விடாம படம் எடுத்தியான்னு நீங்க பல்லக் கடிக்கிறது கேக்குது, ஆனா நான் வெகு தூரத்திலிருந்துதானுங்க எடுத்தேன், ப்ராமிஸ்! ;) ]
ட்ரை பாட் சகிதம் என்னவர் கேமராவுடன் பிஸியாய்...
கடந்து செல்வோரெல்லாரையும் பார்த்து குரைத்துத் தள்ளும் ஒரு அன்புத்தொல்லையோடு நான் அல்லாடிக்கொண்டு...
கையிலிருந்த ஐஃபோனில் எடுத்த படங்கள் இவை...இனிமேல் வருபவை என்னவர் கேமராவில் எடுத்தது.
இந்த இடம் ஏற்கனவே நீங்க பார்தத்துதான். சன்செட் க்ளிஃப்ஸ் நேஷனல் பார்க், சான்டியாகோ..முன்பு சென்றிருந்தபோது அலை ஓசையை வீடியோ எடுத்து வந்து பகிர்ந்திருந்தேன். இந்த முறை கேமரா என் வசம் இல்லாததாலும் கூடவே ஜீனோவை கட்டி மேய்க்கும் பொறுப்பும் சேர்ந்து கொண்டதாலும் கொஞ்சம் அடக்கி வாசிக்க :) வேண்டியதாகிப் போனது! :) :)
சில மைல் தூரத்திற்கு கடலோரம் எல்லாம் இப்படியான உயரமான பாறைகள் நிற்கின்றன. பாறையை ஒட்டி சாலை..சாலையின் மறுபுறம் வீடுகள். தினமும் அங்கே சூரியன் மறைவது ஒரு அழகான காட்சி.
நாங்கள் சென்றிருந்த அன்று சூரியனுக்கு நாணம் மிகுந்துவிட்டது! மேகங்களின் பின்னால் ஒளிந்தவாறே நைஸாக கடலுக்குள் இறங்கிவிட்டார்! :)
மேகத்திரை விலக்கி வெளியே வருவார் என காத்திருந்தோம்..காத்திருந்தோம்!!
திரை விலகாமலே மேகங்களுக்குள்ளே மூழ்கியவாறே மேற்கில் அஸ்தமித்த சூரியன்..கொஞ்சமாய் தலைநீட்டிய ஏமாற்றத்தை மறைத்தவாறே நாங்களும் கிளம்பினோம்.
புகைப்படங்களை ரசித்தமைக்கு நன்றி!
அழகான படங்கள்.அர்புதமான வர்ணனை.
ReplyDeleteWow lovely clicks as the words...very nice...
ReplyDeleteமேக ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சிகள்...
ReplyDeleteஅழகான படங்கள்... ரசனையான வர்ணனை...!
ReplyDeleteபடங்கள் ஒவ்வொன்றும் கொள்ளையழகு. ஒன்றுக்கொன்று (படங்கள் & வர்ணனை) போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ளன.இயற்கையின் அழகே தனிதான்.அடிக்கடி இந்தப் பக்கத்திற்கு வரவச்சிட்டீங்க.நன்றி மகி.
ReplyDeleteஅன்புத்தொல்லை ஒருவழியா பாதி முகத்தைக் காட்டிவிட்டார்.
இயற்கையின் வர்ண ஜாலங்கள் ஒவ்வொன்றும் ஒரு சேதியைத்தான் சொல்கின்றன..அருமை.
ReplyDeleteஅழகான இயற்கை காட்சிகள் மகி.இயற்கையை ரசித்துக்கொண்டே இருக்கலாம். பொன்மாலைப்பொழுதுகள் மிகமிக அழகு. அதற்கேற்றாப்போல உங்க வர்ணனை ஜூப்பரு.
ReplyDeleteஅன்புத்தொல்லை வளர்ந்திட்டார்.
படங்கள் அனைத்தும் சூப்பர். வர்ணனை அதை விட சூப்பர். லீஷ் அதிர்ற அளவு வால் ஆடி இருக்கு. ;))
ReplyDeleteமகி... அத்தனை படங்களும் அற்புதக் காட்சிகள்!
ReplyDeleteசொக்கவைக்கின்றதே...
கடைசியில் நீங்கள் சொல்லிய வசனம்...
//திரை விலகாமலே மேகங்களுக்குள்ளே மூழ்கியவாறே மேற்கில் அஸ்தமித்த சூரியன்..கொஞ்சமாய் தலைநீட்டிய ஏமாற்றத்தை மறைத்தவாறே நாங்களும்....//
நல்ல கவிநடை. அருமை. உங்களுக்கு கவிதையும் எழுதவரும் மகி. எழுதுங்கள். ரசித்தேன்.
இன்னும் ரசிப்பேன்...:).
பகிர்தலுக்கு மிக்க நன்றி!
ச்சே முடிவில சூரியனை மறைய விட்டிட்டிங்களே:).
ReplyDeleteஆனாலும் கணவருக்கு தெரியாமல் அவர் படமெடுப்பதில் பிஸியாக இருக்கும்போது பின்னாலே படமெடுத்து பப்பூளிக்கில் போட்டது ஈபி கா 240 ஆவது சட்டப்படி குற்றம் குற்றமே..:))
என்னாது உங்கட செல்லத்துக்கு பெயர் ஜீனோவா?.. றீச்சர் ஓடியாங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ:)))
ReplyDeleteஅழகிய அந்திநேரக் காட்சிகள்.
ReplyDeleteகடல் கவர்கிறது!
ReplyDeleteஉங்கள் போட்டோக்கள் அருமை என்றால் உங்கள் வர்ணனை அதை விட அருமை மகி
ReplyDeleteSuper photos.
ReplyDeleteவாவ்...போட்டோஸ் அனைத்துமே அருமை...அழகான மாலை நேரம்...
ReplyDeleteஅற்புதமான படப் பகிர்வு.மிக அருமை.
ReplyDeleteBeautiful clicks Mahi..
ReplyDeletevery nice pictures. I have the habit of chasing sunset wherever we go.it gives a lovely feeling. right ?
ReplyDeletenaan california pakkam vanthathae illa, but inga RI la kooda sea coast romba beautifula iruku.
enjoyed viewing each shot with your lovely narration, Mahi :-)
ReplyDeleteபடங்களெல்லாம் கொள்ளையழகு. எழுதியவிதம் அதைவிடஅழகு. அன்புடன்.
ReplyDeleteWOW! Your pictures are great, love the pictures along with you beautiful tamil comments, very talented couple. You should publish books. It's so sweet,next time when those birds fly over my head ( usually i'll see them when watering the plants) : Instead of wondering where they're heading to or will they really take turns leading the flock or if we go to beach (again!), instead of remembering the tsunami warning boards and looking over for higher ground to escape...., i'll try to merge beautiful nature with some sweet tamil poems or prose i can remember :)
ReplyDelete