Wednesday, June 26, 2013

சில்லி பரோட்டா

சில்லி பரோட்டாவில் கலர் குடைமிளகாய், வெங்காயத்தாள், கொத்துமல்லித் தழை இவையும் சேர்ந்தால் இன்னும் அருமையாக இருக்கும். இந்தப் பொருட்கள் கைவசம் இல்லாததால் இந்த முறை 'சிம்பிள்' சில்லி பரோட்டாவாக செய்ய வேண்டியதாகி விட்டது. ஆனால் இதுவும் சுவை சூப்பர்தான்! :)  
தேவையான பொருட்கள்
ரெடிமேட் பரோட்டா-4
வெங்காயம் -பாதி
தக்காளி(சிறியதாக)-1
பச்சைமிளகாய்-1
இஞ்சி-பூண்டு விழுது - 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
மேகி ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ்-1டீஸ்பூன்
மிளகாய் தூள் -1/2டீஸ்பூன்
மல்லித்தூள்-1/2டீஸ்பூன்
கறிமசாலா தூள்-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
பரோட்டாவை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து நறுக்கிய பரொட்டா துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து வைக்கவும்.
தக்காளி - வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பரோட்டாவை வறுத்த கடாயில் இன்னுமொரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயம், பச்சைமிளகாய் துண்டுகள் சேர்த்து ஹை ஃப்ளேமில் ஓரிரு நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கி, ம.தூள்-மி.தூள்-மல்லித்தூள்-கறி மசாலாதூள்-உப்பு சேர்த்து பச்சை வாடை போக கிளறவும்.
வறுத்து வைத்த பரோட்டா துண்டுகளைப் போட்டு கலந்துவிடவும்.
தீயைக் குறைத்து வைக்கவும்.  2 நிமிடங்கள் பரோட்டா சூடானதும் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் மேகி ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ் ஊற்றி கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஆனியன் ரைத்தாவுடன் சூடாகச் சாப்பிட சூப்பராக இருக்கும்.
~~~
இன்றைய இலவச இணைப்பு : எக்லெஸ் மேங்கோ கேக் 
 வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். எதற்காக வாழ்த்து  என்றே தெரியாதவர்களை டீல்ல விட முடியுமா?;)
அதனால என் வலைப்பூவுக்கு வருகை தரும் எல்லாருக்குமாகச் சேர்த்து ஒரு பெரீய்ய எக்லெஸ் மேங்கோ கேக்! என்ஸாய்! :))) 
--------------
வெகுநாட்களாக இந்தப் பாட்டின் சிலவரிகள் மட்டும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன, வெற்றிகரமாக இன்று பாட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்! :) 

24 comments:

  1. நாளைக்கே செய்து விடுவோம்... நன்றி...

    மேங்கோ கேக் இலவசமாக தந்தமைக்கு நன்றி... ஹிஹி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சூப்பர்ர் சில்லி பரோட்டா...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகி,கேக் ரொம்ப நல்லாயிருக்கு..

    ReplyDelete
  3. simple yet super parotta.

    Bday wishes.The cake looks so divine.

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மகி..சில்லி பரோட்டா செய்து பார்கிறேன்..

    ReplyDelete
  5. எனக்கும் ஒரு கேக்தானா!! ;)
    //மேகி ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ்// நானு இமா ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ் தேடிட்டு இருக்கிறேன். கிடைச்சதும் சமைச்சுப் பார்க்கிறேன். ;)

    மக்களே... நம்பாதீங்க.
    ஜீனோவுக்கு 'இந்தா' என்று நீட்டின கேக அது. பாக்கிரவுண்ட்ல பாருங்க நாக்கை வேற நீட்டிட்டு இருக்கார். இதை படம் புடிச்சு எங்களுக்கு கொடுக்கிறாங்கோ! ;) ஹ்ம்! கேக் கூட மஞ்சளா??

    ReplyDelete
  6. ஹை! புதுசா பாட்டு எல்லாம் போட்டு இருக்கிறீங்க. நல்லா இருக்கு மகி. முன்னால பார்த்து இருக்கிறேன்... அந்த ஸ்டெத் சீன்.

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துகள் மகி. எனக்கு பரோட்டாவைவிட கலர்ஃபுல்லான அந்த கேக்தான் பிடிக்கிறது.பார்க்கவே சூப்பரா இருக்கு.ஜீனோ நிற்பதைப் பார்த்தாலே தெரியுது கேக்கோட‌ சுவை எப்படி இருக்கும்னு. பிறந்த நாளை நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க.

    ReplyDelete
  8. சில்லி பரோட்டா அருமை.. கேக்கோட மணமும் ருசியும் ஜீனோ ரெடியா இருக்கிறதிலேயே தெரியுது.

    ReplyDelete
  9. Happy Birthday Mahi
    chilli parota nalla irukku

    ReplyDelete
  10. Happpiiieeee Bday !!! BTW, super delicious simple chilly paratha...

    ReplyDelete
  11. சில்லிபரோட்டா சிம்பிள் பார்க்க நல்லா இருக்கு. செய்துபார்க்கிறேன் மகி. பொடிகறியும் உருளைக்கிழங்கில் செய்தேன்.மிகவும் நல்ல டேஸ்ட்.(கைவசம் வேறு கிழங்கு இல்லை.)
    மாங்கோ எக்லெஸ் கேக் சூப்பரா இருக்கு. //ஹ்ம்! கேக் கூட மஞ்சளா??//ரிப்பீட். ரெசிப்பி இருக்கா. இரு(தெரி)ந்தால் பகிரவும் மகி.
    பாட்டு கேட்டேன்.நல்லா இருக்கு மகி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. super one ..happy b'day mahi ungaluku 26th b'day illa

    ReplyDelete
  13. சில்லிபரோட்டா சூப்பரா இருக்கு மகி.

    மாங்கோ எக்லெஸ் கேக் ம்.ம் வாவ்.. கண்னைப்பறிக்குது...:) ரெசிப்பி தாங்கோ மகி.

    இந்தப்பாட்டு இப்போதான் கேட்கிறேன். அதுவும் நன்றாகவே இருக்கு மகி.

    அனைத்தும் சூப்பரோ சூப்பர்! பகிர்வுக்கு நன்றி.
    மீண்டும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது கனடாவில் வாங்கியதாகவும் சூப்பராக இருந்ததாகவும் போனகிழமை அம்மா சொன்னா. மீ செய்யோணும் இதை “இந்தாட்டிக்கா” போனதும்.. இப்போ படிச்சுப் பார்க்கவில்லை.. படிக்கிறேன்ன்..

    ReplyDelete
  15. //இமா said...
    ஹை! புதுசா பாட்டு எல்லாம் போட்டு இருக்கிறீங்க. நல்லா இருக்கு மகி. முன்னால பார்த்து இருக்கிறேன்... .//
    என்னாது றீச்சர் முன்னால பார்த்தாவாமோ?:) மகி அப்போ கொஞ்சம் சொல்லுங்க றீச்சருக்கு:) அதிராட புளொக்கில போய்.. அதிராவையும் கொஞ்சம் முன்னால பார்த்துச் சொல்லட்டாம் என:)) எங்கிட்டயேவா?:) பூஸோ கொக்கோ:))... அவ்வ்வ்வ்வ் ஆரோ கலைக்கினம்.. மகீஈஈஈஈஈஈஈஈ ஜீனோவை அவிட்டு விடுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ:)))

    ReplyDelete
  16. Super recipe. I will try this one as soon as i get parathas. I tried your plantin ( vazaikai) recipe the other day it was very tasty.
    Happy birthday. Love the cake color.

    ReplyDelete
  17. Happy Birthday Mahi...
    Chilli parotta super....

    ReplyDelete
  18. My favourite item Mahi. I luv it Chilli Barotta.

    ReplyDelete
  19. Happy b'day Mahi, chilli parotta superb..

    ReplyDelete
  20. Happy Birthday Mahi ....super chilli barotta simple aaga iruku.thankspa .

    ReplyDelete
  21. வாழ்த்திய அன்புள்ளங்கள் எல்லாருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்! :)
    ~~
    @இமா, //நானு இமா ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ் தேடிட்டு இருக்கிறேன். கிடைச்சதும் சமைச்சுப் பார்க்கிறேன். ;)//ஹ்ம்ம்...அது 2020-ல மார்க்கட்ல கிடைக்கப் போறதா கேள்வி, மறக்காம வாங்கிருங்க, சமைச்சுப் பார்த்துடுவோம்! ;)

    //மக்களே... நம்பாதீங்க.
    ஜீனோவுக்கு 'இந்தா' என்று நீட்டின கேக அது. பாக்கிரவுண்ட்ல பாருங்க நாக்கை வேற நீட்டிட்டு இருக்கார். இதை படம் புடிச்சு எங்களுக்கு கொடுக்கிறாங்கோ! ;)// இப்படியும் சனத்தைக் குழப்புவாங்களா?! அவ்வ்வ்வ்வ்வ்...
    அவருக்கு கேக் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிருச்சு, அதான் நாக்கை சுழட்டிட்டு நிக்கிறார்! அவருக்கு இவ்ளூண்டு ஸ்லைஸ் தான் குடுப்பேனா என்ன? முதல்லயே ஒரு ஸ்லைஸ் குடுத்தாச்! ;) அப்புறமும், நீங்க எல்லாரும் சாப்பிட்டது போக மீதி இருப்பதெல்லாம் அவருக்கே! ;) :)

    //ஹ்ம்! கேக் கூட மஞ்சளா??// ஆமாம், அது எனக்கே ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்தான்! :)

    பாடலையும் ரசித்து கருத்து தந்ததுக்கு நன்றிகள்!
    ~~
    //ரெசிப்பி இருக்கா. இரு(தெரி)ந்தால் பகிரவும் மகி. // அம்முலு, இப்பல்லாம் நான் கேக் செய்வதே இல்லைங்க! :) இது என்னவர் இங்கே இருக்கும் பேக்கரியில் வாங்கிவந்தது. லிட்டில் இண்டியா பகுதியில இருக்கும் அந்த பேக்கரியில் எக்லெஸ் கேக் சூப்பரா இருக்கு! ரெசிப்பி தெரியும் அளவுக்கு பேக்கிங் நாலெஜ் போதாது எனக்கு. ஆனா 3 லேயர் கேக், வித் ஃப்ராஸ்டிங், டாப் லேயர் மேங்கோ க்ளேஸ் யூஸ் பண்ணி இருக்காங்க, அதான் "பளப்பளப்பள"ந்னு கண்ணைப் பறிக்குது! :)

    பொடிக்கறி செய்து பார்த்து பின்னூட்டமும் தந்ததுக்கு மிக்க நன்றி! ஓடி ஓடி எல்லாப் பக்கமும் வாழ்த்தினீங்க, அதுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி அம்முலு! :)
    ~~
    @சாரு, //mahi ungaluku 26th b'day illa// இல்லை!! :) நீங்க ஒரு நாள் லேட்டு சாரு! :) தட்ஸ் ஓகே, வாழ்த்துக்கு மிக்க நன்றி!
    ~~
    @அதிராவ், //மீ செய்யோணும் இதை “இந்தாட்டிக்கா” போனதும்.. இப்போ படிச்சுப் பார்க்கவில்லை.. படிக்கிறேன்ன்..// இந்தாட்டிக்கா போனா கடைலயே வாங்கிச் சாப்புடலாமே, படிக்காட்டி என்ன?! ;)

    //மகி அப்போ கொஞ்சம் சொல்லுங்க றீச்சருக்கு:) அதிராட புளொக்கில போய்.. அதிராவையும் கொஞ்சம் முன்னால பார்த்துச் சொல்லட்டாம் என:)) எங்கிட்டயேவா?:) பூஸோ கொக்கோ:))... // ஹஹஹா!! :) றீச்சர், முன்னால போயிப் பாருங்கோவன்..மயக்கம் போட்டீங்கன்னா, ரெடியா கொதிநீர் வைச்சிருக்கேன், தெளிச்சி எழுப்பி யெல்ப் பண்ணறேன், சீக்கிரம் கிளம்புங்கோ! மியாவ் இந்தாட்டீக்கா போகும் முன் புடிச்சிருங்கோ!

    //அவ்வ்வ்வ்வ் ஆரோ கலைக்கினம்.. மகீஈஈஈஈஈஈஈஈ // அதிராஆஆஆஆஆ...அது வேறாருமில்ல, றீச்சர் வீட்டு சிவப்புக் கண்ணிதான்!! பல்லை ரம்பம் வச்சு ராவி கூராக்கி விட்டிருக்காங்க றீச்சர், எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!

    //ஜீனோவை அவிட்டு விடுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ:)))// ஜீனோ எப்பவுமே ஃப்ரீ பர்ட்தான்!! அவர் உங்களுக்கு முன்னால ரன் பண்ணிட்டிருக்கார், பார்க்கேல்லையா நீங்க? ஹஹஹ!:)))))

    அனைத்துக்கும் நன்றி அதிராவ்!
    ~~
    வானதி, பொடிக்கறீ செய்து பின்னூட்டமும் தந்ததுக்கு நன்றிங்க! கேக் பளிச்சுன்னு எல்லார் கண்ணையும் கருத்தையும் கவர்ந்துடுச்சு. எல்லாப் புகழும் என்னவருக்கே! :) ;) :)
    ~~
    வாழ்த்திய அன்புள்ளங்கள் எல்லாருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்! :)

    ReplyDelete
  22. அய்யய்யோ! ஆனந்தமே!நான் தான் கடைசி,கடைசி
    நூறு வருஷம் வாழ வாழ்த்துகிறேன்.(கும்கி பாட்டு ஸ்டைலில்)
    சில்லிபரோட்டாவும்,மேங்கோ கேக்கும் சூப்பர்.காம்பினேஷன் புதுசு.
    Happy Birthday!

    ReplyDelete
  23. ஆசியாக்கா, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் பாட்டோடு வாழ்த்தியிருக்கீங்க! ரொம்ப நன்றி!
    பை த வே, நான் இன்னும் அந்தப் பாட்டு கேட்டதே இல்லை! ;) ஹி..ஹி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails