Sunday, June 30, 2013

பகலில் பௌர்ணமி..

ஜூன் 21 முதல் வட அமெரிக்காவில் அஃபிஷியலாக கோடைக்காலம் துவங்கிவிட்டதால் பகல் நேரம் 14 மணி நேரங்களுக்குக் குறையாமல் இருக்கிறது. காலை 5 மணிக்கே விடியத்துவங்கி இரவு 8 மணிக்கு மேலேதான் சூரியனார் தன் வேலையை முடித்துக்கொண்டு பஸிஃபிக் கடலுக்குள் இறங்குகிறார். இந்த மாதத்தில் 23ஆம் தேதி சூப்பர் மூன் வேறு வந்ததால் இந்த முறை நிலாப்பெண்ணுக்கு ஒரே கொண்டாட்டம்! பகல் ஷிஃப்ட் காரர் வேலை முடித்துக்கொண்டு கிளம்புமுன் இரவு ஷிஃப்ட் ஆள் ஆஜர்!! :) அவர் மேற்கே இறங்க இறங்க, இந்த  அம்மணி கிழக்கே ஏறிக் கொண்டிருந்தார். 

ஜூன் 21ஆம் தேதி மாலை(!) ஏழரை மணிக்கு வழக்கம் போல ஜீனோவும் நானும் வாக் போக கிளம்பினோம். வெளியே வந்து வானத்தைப் பார்த்ததும் அப்படியே ஷாக் அடித்து நின்றுவிட்டேன். பின்னே?! அந்நேரத்துக்கே முழுவட்ட நிலா என்னைப் பார்த்து கண் சிமிட்டியது! உடனடியாக செல்ஃபோன் கேமராவில் சில பல க்ளிக்ஸ்...
இந்தக் கேமராவில் நிலவின் பிரம்மாண்டம் புலப்படவில்லை. நேரில் பார்த்தபோது அற்புதமாக இருந்தது. மேல்வானில் இன்னும் சூரியனின் தாக்கம் குறையாமல் மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருக்க, கிழக்கே நிலா..
இந்தச் சாலை எங்கள் வீட்டருகே முடிவடைந்துவிடும். அடுத்து இருப்பது சிறு மலைக்குன்றுகள் அடங்கிய அவகாடோ தோட்டம். சாலையின் முடிவருகே ஃப்ரெஷ்ஷாகப் பெயிண்ட் அடித்திருந்தார்கள், என்னவென்று பார்த்தால்...
முதலிலேயே இருந்த தகவல்தான், இப்போது மறுபடி புதிதாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் நான் இவ்வளவு தெளிவாகக் கவனித்தது இப்போதுதான். இங்கிருந்து பஸிஃபிக் கடல் சுமார் 20 மைல் தூரம்தான்!! அதுவரை செல்கிறதாம் இந்தக் கழிவு நீர்க் கால்வாய்!! அவ்வ்வ்....

சரி அதை விடுங்க, நம்ம பகலில் பௌர்ணமிக்கு வருவோம். சூப்பர் மூன் வரப்போகிறது என்று அதற்கு சிலநாட்கள் முன்பாகவே பல்வேறு தகவல்கள்..எப்படி போட்டோ எடுத்தால் நிலா அழகாய் வரும், கேமராவில் என்னென்ன செட்டிங்க்ஸ் வைக்க வேண்டும் என்று யாஹூ-வில் ஒரு ஆர்ட்டிகிள் வந்திருந்தது. என் கை சும்மா இருக்காமல் என்னவருக்கு அந்த லிங்க்-ஐ அனுப்பிவிட்டேன். இனி வரும் படங்கள் ஜூன் 22 இரவு 9 மணி சுமாருக்கு எடுத்தவை.




இந்தப் படத்தைப் பார்த்தால் ஏதோ திரைப்பட செட் போல தெரிந்தது எனக்கு!..உங்களுக்கு எப்படி இருக்கு?! :) 23ஆம் தேதி காலை 4 மணிக்கு நிலா முழுபிரம்மாண்டமாய் இருக்கும் என சொல்லியிருந்தாங்க, ஆனா மிட்நைட் நாலுமணிக்கு எந்திரிக்கறதெல்லாம் நடக்கிற காரியமாங்க?! ;) அதனால் இந்தப் படங்களுடன் நிலவின் தேடலை முடித்துக் கொண்டோம்! :)
~~~
இந்த வருஷக் கேலண்டரில் ஜூன் மாதத்தில் இருக்கும் இந்த கிருஷ்ணர் படம் என்னை மிகவும் கவர்ந்தது. இங்கே "இஸ்கான்" கோயிலில் தந்த மாத நாள்காட்டி இது! படத்திலிருக்கும் கோபாலனும், கோபாலன் மடியில் இருக்கும் கன்றுக்குட்டியும் என்ன ஒரு ஆனந்தமாய் இருக்காங்க! இந்தப் படத்தைத்தான் போன்ல வால்பேப்பரா வைச்சிருக்கேன்! ;)

அடுத்தபடியாக வாசகர்களுக்கொரு கேள்வி...நீலவண்ணக் கண்ணனின் நிறத்திலேயே இந்தப் படத்தில் இருக்கும் பூ என்ன பூ?!
ஒரு க்ளூ கொடுத்துடறேன், இந்தப் பூவில் இருந்து எந்தக் காயும்-கனியும் கிடைக்காது, அழகுக்கு வளர்க்கப் படும் பூவும் கிடையாது! கண்டுபுடிங்க பார்ப்போம்! :) 


சரியாகக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு..சுவையான நெய் மைசூர்பா!!

**************
Updated, July 2, 2013
மேலே படத்திலுள்ள வயலட் பூக்கள் பற்றித் தெரிந்த ஆட்கள் யாரும் இப்பதிவினைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன். //இந்தப் பூவில் இருந்து எந்தக் காயும்-கனியும் கிடைக்காது, அழகுக்கு வளர்க்கப் படும் பூவும் கிடையாது!// என்று சொல்லியிருந்தேன், ஆக மொத்தம் இது விவசாயப் பயிர்தான் என்று அதிலிருந்தே தெரிந்திருக்கும். இது ஒரு கிழங்குவகைங்க!....
....
கரெக்ட்!! உருளைக் கிழங்கேதான்! சரியாக் கண்டுபுடிச்சிட்டீங்க! :)))) 
**************
தோழி ஒருவரின் வீட்டில் முளை வந்த உருளைக் கிழங்குகளை சும்மா விளையாட்டாய் மண்ணில் புதைத்திருக்கிறாங்க, அப்படியே தழைந்துவிட்டது. இலைகள் பார்க்க தக்காளிச் செடியைப் போலிருக்கின்றன. செடியில் அழகான பூக்களும் வந்திருக்கின்றன. முன்னப் பின்ன உருளைக் கிழங்குச் செடிய பக்கத்தில (ஏன், தூரத்தில கூட.. ;)) பார்த்திராத எனக்கு இந்தப் பூக்கள் ஆச்சரியத்தைத் தந்தன. அதான் படமெடுத்துட்டு வந்து இங்கே பதிவும் போட்டேன். அவர்கள் இன்னும் கிழங்கைப் பறிக்கவில்லை, எப்பப் பறிப்பது என தெரியவும் இல்லை என சொன்னாங்க, அதனால் இணையத்தை துருவியதில் அகப்பட்ட இணைப்பு இது! உருளைக் கிழங்கு வளர்க்க ஆர்வமுள்ளோர் தவறாமப் போய்ப் பாருங்க. நன்றி!!

14 comments:

  1. அன்று சூப்பர் மூனை வீட்டிலிருந்து பார்த்து ரசித்ததுடன் சரி.நீங்கள் படமாக்கியிருப்பது அழகாக உள்ளது.

    என்ன பூ என எழுத நினைத்து,'க்ளூ'வைப் பார்த்து பின்வாங்கிட்டேன். மைசூர்பா யாருக்குக் கிடைக்குதுன்னு பார்ப்போம்.

    ReplyDelete
  2. திரைப்பட செட் போல இருந்தாலும் படங்கள் அருமை...

    அழகு நிலா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //என்ன பூ என எழுத நினைத்து,'க்ளூ'வைப் பார்த்து பின்வாங்கிட்டேன்.// ஹாஹா!! நீங்க சொன்னாத்தானே சரியா தவறா என தெரியும் சித்ராக்கா?! இப்படி எஸ்கேப் ஆனா எப்படி?! :)))

    சூப்பர் மூனைப் படமாக்கியது என் கணவர்..மொபைல்ல மினியேச்சர் க்ளிக் பண்ணியது நான்!:) வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி!
    ~~
    அழகு நிலாவேதான்! உள்ளம் கொள்ளை கொண்ட நிலா! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க தனபாலன் சார்!
    ~~

    ReplyDelete
  4. சூப்பர் மூன் ரசிக்கவைத்தது ..

    ReplyDelete
  5. நிலா கொள்ளை அழகு..அந்த பூ கண்டங்கத்திரிப்பூ ந்னு நினைக்கிறேன்!!

    ReplyDelete
  6. நிலாப்படங்கள் நல்லா வந்திருக்கு மஹி... /23ஆம் தேதி காலை 4 மணிக்கு நிலா முழுபிரம்மாண்டமாய் இருக்கும் என சொல்லியிருந்தாங்க,/ இதுவே ப்ரம்மாண்டமாதான் தெரியுது... இதைவிட பிரம்மாணடமா? :) /ஆனா மிட்நைட் நாலுமணிக்கு எந்திரிக்கறதெல்லாம் நடக்கிற காரியமாங்க?! ;)/ ஹா..ஹா... ஹா...

    ReplyDelete
  7. சூப்பர்ப் படங்கள் மகி.எவ்வளவு அழகா இருக்கிறா நிலா. இந்த மாதிரி இயற்கையை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அழகான கிருஷ்ணன். போட்டோ நல்லா இருக்கு. பதிலை நீங்களே சொல்லிடுங்கோ.
    நல்லதொரு பகிர்வு மகி.

    ReplyDelete
  8. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்! உருளைக்கிழங்கின் பூ தான் படத்திலுள்ளது. பதிவில் அப்டேட் செய்தாச்சு! :)

    மேனகா, கண்டங்கத்திரியில் காய் வருமே, ஆனா இதிலே கிழங்குதானே வரும்! ;)

    பானு, பல நாட்கள் கழிச்சு வந்து பல்லு சுளுக்க சிரிச்சிருக்கீங்க, டாங்க்ஸூ!! ;) :)

    அம்முலு, படங்களை ரசித்தமைக்கு நன்றி! நிலா இந்த முறை கொஞ்சம் ஓவர் அட்ராக்டிவ் ஆகவே இருந்தா! :)
    பதிலும் சொல்லிட்டேன்! நன்றிங்க கருத்துக்கு!

    ReplyDelete
  9. //என் கை சும்மா இருக்காமல் என்னவருக்கு அந்த லிங்க்-ஐ அனுப்பிவிட்டேன்.// என்ன பதில் வந்துது! சொல்லவேயில்ல!! ;)))

    நிலாப் பெண் அழகு. நானும் காமராவைத் தூக்கிக் கொண்டு வெளியே போனேன். மழை ;((

    என் போன் சுவரில் இருப்பவரும் ஒரு இடையர்தான். இங்கு வந்த முதல் வருடம் கிடைத்த காலண்டரில் இருந்த தோளில் செம்மறிக் கன்றுடன் இயேசு.

    ReplyDelete
  10. //என்ன பதில் வந்துது! சொல்லவேயில்ல!! ;)))// அதான் படமே காட்டிட்டனே இமா?! :)

    இங்கே மழை வருவது அதிசயம், அதனால்தான் நிலாவைப் பிடிக்க முடிந்தது.

    //என் போன் சுவரில் இருப்பவரும் ஒரு இடையர்தான்.// ஓ!! சூப்பர்! :)

    அது எதுக்கு அந்த லிங்க் தந்திருக்கீங்க? உருளைக் கிழங்கு வளர்ப்புக்கு கைடா? தேங்க்யூ!

    ReplyDelete
  11. //நீலவண்ணக் கண்ணனின் நிறத்திலேயே இந்தப் படத்தில் இருக்கும் பூ என்ன பூ?!// கத்தரிப்பூ கலர்ல இருந்தாலும் இலை சொல்லுது உருளைக்கிழங்கு என்று. கை சொல்லுது மகி வீட்டுப் பூ என்று. ஏன் மஞ்சள் கலர்ல பூக்காம விட்டுது!!

    //இந்தக் காயும்-கனியும் கிடைக்காது,// ம். ஆனால் சுண்டங்காய் போல காய்க்கும். சாப்பிடாதீங்க. உருளைக்கிழங்குத் தாவரத்தின் பச்சை நிறப் பகுதிகள் அனைத்தும் நச்சுத் தன்மை கொண்டவை. சொல்லிருங்க அவங்கள்ட்ட. வீட்ல குட்டீஸ் இருந்தால் பத்திரம்.

    //சரியாகக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு.. சுவையான நெய் மைசூர்பா!!// அவ்வ்! அது முன்னாலயே பார்த்தாச்சே. வேற கிஃப்ட் வேணும். நான் உங்க அப்டேட் பார்க்காம சொன்ன பதில் இது. ;)

    //பூக்கள் பற்றித் தெரிந்த ஆட்கள் யாரும் இப்பதிவினைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.// ம். வந்தால்தானே பார்க்க! ;)

    என் சாய்ஸ்... பூக்கள் மடிய ஆரம்பித்த பின்னால அப்பப்ப மண்ணைத் துளாவி தேவையான கிழங்கை எடுக்கிறது. தொடர்ந்து நிறைய கிடைக்கும். கடைசில மீதி எல்லாவற்றையும் ஒன்றாக அறுவடை செய்யலாம்.

    மேலதிக தகவல் ஒன்று - தக்காளிச் செடி இருந்தால் ஒட்டுவைக்கலாம். இரட்டைப் பயன் கிடைக்கும்.

    ReplyDelete
  12. விளக்கமான பதிலுக்கு நன்றிங்க கார்டனர் டீச்சர்! :)))) எங்க வீட்டில உருளை முளைவந்தால் நட்டுப் பார்க்கிறேன், தேங்க்யூ!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails