கறிப்பொடி- தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
தனியா/கொத்துமல்லி-1டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்- 8(காரத்துக்கேற்ப குறைத்துக்கொள்ளவும். :))
பெருங்காயத் தூள் -1/4டீஸ்பூன்
செய்முறை
எல்லாப் பொருட்களையும் மிதமான தீயில் கருகாமல் வறுத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பான பொடியாக அரைத்துக் கொள்ளவும். இந்த அளவிற்கு சுமார் 1/4கப் அளவிற்கு பொடி கிடைக்கும். மற்ற காய்கறிகளுக்கும் உபயோகிக்கலாம். உருளை- கத்தரி - சேப்பங்கிழங்கு, மற்றும் விரும்பின காய்களில் முயற்சித்துப் பார்க்கலாம் என நினைக்கிறேன். செய்து பார்த்தா நீங்களும் சொல்லுங்க.வாழைக்காய் பொடிக்கறி -தேவையான பொருட்கள்
வாழைக்காய்-11/2
புளித்தண்ணீர்- 1/4கப்பிற்கும் குறைவாக
கறிப்பொடி -1டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப கூட்டிக் குறைக்கலாம். :))
நல்லெண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
உப்பு
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
புளித்தண்ணீருடன் 13/4கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
வாழைக்காயைத் தோல் சீவி சிறுதுண்டுகளாக நறுக்கி, நீரில் அலசி கொதிநீரில் சேர்த்து வேகவிடவும்.
கறிப்பொடியை அரைத்து வைக்கவும்.
வாழைக்காய் (குழையாமல்) வெந்து வந்ததும் நீரை வடித்து வைக்கவும்.
நல்லெண்ணெயைக் காயவைத்து கடுகு-உளுந்து-கறிவேப்பிலை தாளித்து, வெந்த வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
காய் வதங்கும்போதே கரண்டியால் லேசாக மசித்து விடவும். பிறகு கறிப்பொடி, தேவையான உப்பையும் சேர்த்து கிளறவும்.
கரண்டியால் வாழைக்காய்த்துண்டுகளை லேசாக உடைத்து விட்டு, மிதமான சூட்டில் வதக்கவும்.
காரசாரமான வாழைக்காய் பொடிக்கறி தயார்.
இந்த ரெசிப்பி சொல்லுகிறேன் - காமாட்சி அம்மா அவர்களுடையது. பகிர்வுக்கு நன்றி அம்மா! :)
ஆவ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்ட்ட்ட்ட்.... நாங்க சேர்கஸ் பார்க்க போக வெளிக்கிடுறமாக்கும்... மொஸ்கோ சேர்கஸ்ஸ்ஸ்ஸ்.. பின்பு வாறேன்ன்ன்ன்.. பொடிமாஸ் சுவைக்க.
ReplyDeleteகாரசாரம் என்றால் உடனே செய்திட வேண்டும்... நன்றி...
ReplyDeleteவாழைக்காய் பொரியல் சூப்பரா இருக்கே.செய்முறை விளக்கமும் அருமையா இருக்கு.பகிர்வுக்கு நன்றி மகி.
ReplyDeleteSuper recipe. Poosar to circus...no comments.
ReplyDeleteஅழகான சமையல்...
ReplyDeleteஎன்ன, இப்போ தனியாள சமைக்கரதுதான் கஷ்ட்டம்...
சீக்கிரம் பொண்ணு பார்த்து நீங்க சொல்லிருக்கார எல்லா சமையலையும் பண்ணி சமச்சி பாரத்துடனும்... பார்க்கும் போதே, நாக்குல ஊருது... சாப்புட....
ம்.ம். நல்லா இருக்கு உங்க பொரியல்!!!
ReplyDeleteநான் செய்து பார்த்திட்டேன். காமாக்ஷி அம்மாகிட்ட பார்த்துட்டு...
சூப்ப்பரா வந்திச்சு. அந்தப்பொடி திரிச்சு வைச்சிருகிறேன். இன்னும் வேறு காய்களுக்கும் சேர்த்துக்கலாம்.
அசத்தலா இருக்கு உங்க படத்தில வாழைக்காய் பொரியல். வாழ்த்துக்கள் மகி!
was looking for something different to do with valakai,this sounds interesting.will try sometime
ReplyDeleteமஹி ரொம்பரொம்ப அழகா, சின்ன அளவில் பொடிசெய்யவும், கொடுத்து அடுக்கடுக்காய் செய்தும் காட்டி நந்றாகப் பதிவிட்டிருக்கிராய்.மிக்க ஸந்தோஷமாக இருந்தது. பழைய நாளில் இந்தக் கறிதான் மிகவும் பந்தியில் முதலிடமாம். வெட்கப்பட்டால் வாழைக்காய் கறி கிடைக்குமா?
ReplyDeleteஇது பழமொழி. கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டுமாம்
மஹி உன் ப்ளாக் மூலம்தான் ஆசியாஉமர் அவர்கள்
என்னைத் தெரிந்துகொண்டு, வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார்கள். அவர்களுக்கும், உனக்கும்
மிகவும் நன்றி. இரண்டுதரம் கூகல் அவுட்.
இதுவாவது போய்ச்சேர வேண்டுமே என்று நினைத்தேன்.
ReplyDeleteஉன்னுடைய பரிவிற்கும்,மதிப்பிற்கும் எனது அன்பு மொழிகள். அவ்வளவே.!
கத்தரிக்காய் ஸ்டஃப் செய்யும்போது இப்பொடியை கூட சேர்த்து செய்துபார்.ப்ளஸ் வெங்காயம்,பூண்டு.
அன்புடன்
அவசியம் இந்த பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.பகிர்வுக்கு நன்றி மகி.
ReplyDeleteI love this,i too make the same way...
ReplyDeleteசூப்பர் குறிப்பு. இதே குறிப்பூ ஆனா உருளைக்கிழங்கில் செய்திருக்கிறேன்ன் அதுவும் சூப்பர்.
ReplyDeletemm nalla podikkari podimas seythuparkka larvae varuiradhu...ippadi ungainly bloglalaam edhachum recipient podumpodhudhaan enakku intra vegetables seythuparkkaalaam naabagam varum.first vaalaikay vanganum.thanks mahi .
ReplyDeletenaan onnu type seythal en phone irukka typing setting adhuve edhachum select pannikuthu engaged point maathuradhunum therilappa en pain marrivitturaraan.sorry ennna ippadi puriyadhamari comment podaraanganu thittadheenga. (seythupaarkka aarvam varukiradhu.ippadi edhachum ungalin bloglala recipie parkumpothudhan)
Deleteவாழைக்காய் பொடிக்கறி பார்க்கவே நன்றாக இருக்கு.இன்றே பொடி செய்கிறேன் மகி.படங்கள் தெளிவாக அழகா இருக்கு.பதி(பகிர்)வுக்கு நன்றி
ReplyDeleteமகி.
சூப்பர் பொடிக்கறி. செய்து பார்க்க தூண்டுகிறது.
ReplyDeleteஆஹா.. மகி.. உங்களுக்கு பிறந்ததினமாமே.. அதிரா தன் பக்கத்தில பூஸோட மஞ்சள் றோசா பூ போட்டு வாழ்தியிருக்கிறாவே... இன்றோ அல்லது நேற்றோ..சரி, எப்பவெண்டாலும் இருக்கட்டும்.
ReplyDeleteபிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் மகி!!!
வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நோய் நொடி இன்றி நீடூழி வாழ வேண்டி மனம் நிறைய வாழ்த்துகிறேன்!!!
வாழ்க வளமுடன்!
curry supera irukku..
ReplyDeleteமகி உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மிக சந்தோஷமாக ,நோய்நொடியின்றி
ReplyDeleteஆரோக்கியமாக வாழவாழ்த்துகிறேன் மகி. இதை பிரசுரிக்கிறது உங்க விருப்பம். உங்ககிட்ட மெசேஜ் சேர்க்கனும் என்பதற்காக இதில் எழுதினேன் மகி.
// மொஸ்கோ சேர்கஸ்ஸ்ஸ்ஸ்.. பின்பு வாறேன்ன்ன்ன்.. பொடிமாஸ் சுவைக்க.// அதிரா, சேர்க்கஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பர் என கேள்விப்பட்டேன், சூப்பரு! அங்க கேட் எதுனா வந்து டிரிக்ஸ் பண்ணாங்களா?! ;) :)
ReplyDelete~~
தனபாலன் சார், கட்டாயம் உங்க வீட்டில பார்த்து செய்து தரச் சொல்லுங்க! நன்றி!
~~
சித்ராக்கா, செய்து பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
//Poosar to circus...no comments.// கிக் கிக் கீ!! சேம் பின்ச் வானதி! :)
கருத்துக்கு நன்றி!
~~
//சீக்கிரம் பொண்ணு பார்த்து நீங்க சொல்லிருக்கார எல்லா சமையலையும் பண்ணி சமச்சி பாரத்துடனும்...// :)))))) விரைவில் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!
"இரவின் புன்னகை" பெயர் அழகா இருக்குங்க! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
இளமதி, நீங்களும் செய்து ருசித்தாச்சா? :) நான் காலிஃப்ளவருக்கு பொடி சேர்த்துச் செய்தேன், என்னவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு, நீங்களும் டிரை பண்ணி பாருங்க.
வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றிங்க!
~~
மீனா, நானும் உங்கள மாதிரிதான்..வித்யாசமா எதாச்சும் கிடைக்குதான்னு தேடினேன், இந்த ரெசிப்பி கண்ணில பட்டதும் உடனே செய்து பார்த்தேன். :)
கருத்துக்கு நன்றிங்க!
~~