Monday, June 17, 2013

பீர்க்கங்காய் பஜ்ஜி

வழக்கமாய் செய்யும் வாழைக்காய்-வெங்காயம்-கத்தரிக்காய் பஜ்ஜிகளில் இருந்து சற்றே வித்யாசமாய் செய்யலாமென்று பீர்க்கங்காயில் பஜ்ஜி செய்தேன். அருமையாக இருந்தது. 

தேவையான பொருட்கள் 
பீர்க்கங்காய் - சிறு துண்டு 
பஜ்ஜி மாவு -1/2 கப் [ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் இல்லை எனில் 1/2 கப் கடலை மாவில் 3 டேபிள்ஸ்பூன் எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசிமாவை சேர்க்கவும். அதனுடன் தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி, பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்.]
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு  

செய்முறை 
பீர்க்கங்காயைத் தோல் சீவி மெல்லிய வட்ட வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பஜ்ஜி மாவுடன் தேவையான தண்ணீர் விட்டு கெட்டியான இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
மிதமான சூட்டில் எண்ணெய் காயவைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், பீர்க்கங்காய் வில்லைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.
சூடான சுவையான மொறு மொறு பீர்க்கங்காய் பஜ்ஜி ருசிக்கத் தயார். 
டீ-யும் துணைக்கு சேர்ந்துகொண்டால் பஜ்ஜி காலியாகும் வேகமே தெரியாது. அதனால நிறைய்ய்ய்ய்ய பஜ்ஜி செய்து சாப்புடுங்க! ;) :) 
~~~
இந்தப் பதிவின் இலவச இணைப்பு
சிவப்புப் பூவின் பின்னால் முகத்தை மறைத்துக் கொண்டு மூக்கை மட்டும் நீட்டும் எங்க வீட்டுச் செல்லம்!
:)

21 comments:

 1. பீர்க்கங்காயில் பஜ்ஜி...! புதிய முறை... செய்து பார்ப்போம்... நன்றி...

  ReplyDelete
 2. இதுவரை கேள்விப்படல்லை மகி.இந்த பஜ்ஜி வித்தியாசமாக இருக்கு.பார்க்க ஆசையாக இருக்கு. ஆனா பீர்க்கங்காய் இல்லை. கிடைத்தால் கண்டிப்பா செய்கிறேன். பகிர்விற்கு நன்றி.
  செல்லம் மூக்கை நீட்டி பூவாசத்தினை முகர்கிறாரோ. இப்பூ என்னிடமும்உள்ளது.

  ReplyDelete
 3. வித்தியாசமான சுவையோட இருக்கும் போலே.. செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்.. பந்தை வச்சும் பூவை வச்சும் முகத்தை மறைத்தே போஸ் கொடுக்கிறாரே உங்க வீட்டு செல்லம்..பூ மாதிரி அழான முகம் கண்ணு பட்டுரும்னு சிம்பாலிக்கா சொல்றாரு போல..:))

  ReplyDelete
 4. :p yummy bajji..... increased my craving for an evening snack..

  :p Mahi plesae send me one plate.... it is raining now

  ReplyDelete
 5. ம்.. நல்லதொரு புதிய குறிப்பு. முதலில் பீர்க்கங்காய் வாங்கணும். செய்து பார்ப்போம்.

  அட வெட்கம் வந்திட்டோ செல்லத்திற்கு..
  பூவுக்குள் புகுந்து மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன...:)
  அழகு...

  அனைத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி மகி!...

  ReplyDelete
 6. romba vithiyasama iruku, hearing it for the first time..Good one.

  ReplyDelete
 7. இன்னைக்கே பண்ணியாச்சு சாப்டாச்சு.சொன்னது போலவே க்ரிஸ்பி.நன்றி.

  ReplyDelete
 8. நேத்து எங்க வீட்டிலும் பஜ்ஜிதான்.பீர்க்கை இருக்கு, முன்னமே தெரிஞ்சிருந்தா இதிலும் கொஞ்சம் செய்திருக்கலாம்.நாங்க பூண்டு,பெருஞ்சீரகம்லாம் கூட‌ சேர்ப்போம்.பஜ்ஜி எல்லாம் பளிச்பளிச் என ஈர்க்கிறது.

  உங்க வீட்டு செல்லத்திற்கு இன்னும் காமிரா கூச்சம் போகலையோ!நல்லா அழகா எடுத்திருக்கீங்க.

  ReplyDelete
 9. அச்சச்சோ நான் ஜீனோவுக்கு ஒரு கடிதம் எழுத இருக்கிறேன்ன் அதுக்குள் புது போஸ்ட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இருங்க ஈவினிங் வாறேன் படிக்க.

  ReplyDelete
 10. பீர்க்கங்காய்ப் பச்சி.. நாங்க பிசுக்கங்காய் என்றுதான் சொல்வோம்.. சூப்பரா இருக்கு. அதென்ன அந்த ரீ கப்பை மேசைக்கு மேல ஏறி நிண்டோ படமெடுத்தீங்க?:))..

  ஜீனோ முகத்தைக் காட்டுங்க:) நீங்க உப்பூடி வெட்கப்பட்டால் பிறகு ஆன்ரி எப்பூடி உங்களுக்கு ஊக்கேல வெள்ளைப்பொம்பிளை பார்க்க முடியும்?:)) அடுத்த முறை மம்மியிடம் சொல்லி சிரிச்சபடி படமெடுத்துப் போடுங்க:))

  ReplyDelete
 11. பஜ்ஜி மா எனவும் விற்குதோ? இப்பத்தான் கேள்விப்படுறேன் முருகா.. நான் கடலை மா அரிசி மா, ஆட்டா மா.... எல்லா மாவும் பாவிப்பேனாக்கும்:) எங்கிட்டயேவா:)

  ReplyDelete
 12. Have been planning to try this for a long time, bajji supera irukku..

  ReplyDelete
 13. தனபாலன், பதிவில் முதல் கமெண்ட் போடுவதில் உங்கள பீட் பண்ண ஒரு ஆள் பிறந்துதான் வரணும் போல! :) பஜ்ஜி செய்து தரச்சொல்லி ருசித்துப் பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
  ~~
  அம்முலு, அடுத்த முறை பீர்க்கை வாங்கையில் டிரை பண்ணிப் பாருங்க, பிறகு இது உங்க ஃபேவரிட் ஸ்னாக் ஆகிரும்! :)
  செல்லம் இருக்கும் படம் ஒரு ஃப்ரெண்ட் வீட்டில் எடுத்தது. இந்தப் பூவின் பளிச் வண்ணம் கண்ணைக் கவர நான் பூவை படமெடுக்க முயல, இவர் நைசா பூவுக்குக் கீழே வந்து நின்னார், டக்குன்னு க்ளிக்கிட்டேன்! :)
  கருத்துக்கு நன்றிங்க!
  ~~
  //பூ மாதிரி அழான முகம் கண்ணு பட்டுரும்னு சிம்பாலிக்கா சொல்றாரு போல..:))// வாவ்!! சூப்பர் விளக்கம்! தேங்க்ஸுங்க! :)))
  சீக்கிரமா பஜ்ஜி செய்து பார்த்துச் சொல்லுங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  மீரா, பஜ்ஜிய அனுப்பிட்டேன்..லுஃப்தான்ஸா-ல வந்து சேர்ந்திருக்கும்னு நினைக்கிறேன். பருவ மழைய என்ஜாய் பண்ணுங்க. :)
  நன்றி மீரா!!
  ~~
  //அட வெட்கம் வந்திட்டோ செல்லத்திற்கு..
  பூவுக்குள் புகுந்து மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன...:)
  அழகு...// :) கவிதாயினிக்கு கவிதை கொட்டுது! :) நன்றீங்க!
  பீர்க்கங்காய் பஜ்ஜி கட்டாயம் செய்து பாருங்க!
  ~~
  சுமி, இது எங்க வீட்டில செய்வோம்..டேஸ்ட் நல்லா இருக்கும். செய்து பாருங்க, நன்றி!
  ~~
  அனானி, சுடச்சுட செய்து ருசித்துப் பின்னூட்டமும் தந்ததற்கு மகிழ்ச்சி கலந்த நன்றி! அப்படியே உங்க பேரையும் சொல்லிருந்தீங்கன்னா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும். :)
  ~~
  //பூண்டு,பெருஞ்சீரகம்லாம் கூட‌ சேர்ப்போம்.// ஓ!! நான் சீரகப் பொடி மட்டும் சேர்த்து செய்திருக்கேன், உங்க செய்முறை புதுசா இருக்கே சித்ராக்கா! ஊரிலிருந்து கொண்டுவந்த ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் காலியாகிடுச்சு..அடுத்த முறை உங்க ப்ளாகை சர்ச் பண்ணி பஜ்ஜி போட்டுடறேன்! :)
  //உங்க வீட்டு செல்லத்திற்கு இன்னும் காமிரா கூச்சம் போகலையோ!// :) அதெல்லாம் இல்லை, அய.....கா போஸ் குடுப்பாரே! இது சும்மா டைமிங்-ல க்ளிக்கினேன். :) //நல்லா அழகா எடுத்திருக்கீங்க.// தேங்க்யூஊஊ!! :)
  ~~
  //அந்த ரீ கப்பை மேசைக்கு மேல ஏறி நிண்டோ படமெடுத்தீங்க?:))..// அதிராட மூளை எப்படில்லாம் திங்கு பண்ணுது!! அடேங்கப்பா!! :)))) அந்த ரகசியமெல்லாம் பப்ளிக்குல சொல்ல மாட்டன். காதைக் கழட்டி ரிடர்ன் போஸ்டேஜ் சார்ஜோட இங்க அனுப்புங்கோ, ரகசியத்த காதில போட்டு திருப்பி அனுப்புறேன்! ;)))))

  பிசுக்கங்காயா....எப்படியும் ஒரு பதிவுக்கு ஒரு புதுவார்த்தை சொல்லிடறீங்க பூஸ்! :))) செய்து பாருங்க, நல்லாருக்கும்.

  //பஜ்ஜி மா எனவும் விற்குதோ? இப்பத்தான் கேள்விப்படுறேன் முருகா..// பல காலமா தமிழ்நாட்டில பஜ்ஜி மிக்ஸ் விக்குது அதிராவ். சட்டென சுவையான பஜ்ஜிகள், போண்டாக்கள் செய்துடலாம். நான் கோவை போயிட்டு வரும்போது பஜ்ஜி மிக்ஸ் கண்டிப்பா வாங்கி வருவேன். இங்கிருக்கும் இண்டியன் ஸ்டோர்களிலெல்லாம் இது கிடைப்பதில்லை.

  //நான் கடலை மா அரிசி மா, ஆட்டா மா.... எல்லா மாவும் பாவிப்பேனாக்கும்:) எங்கிட்டயேவா:)// அவ்வ்வ்வ்வ்வ்! நீங்க எல்ல்ல்ல்ல்ல்ல்லா மாவும் பாவியுங்கோ, ஆனா அது பஜ்ஜி என மட்டும் சொல்லிராதேயுங்கோஓஓஓஓ!! ;)))))

  //நீங்க உப்பூடி வெட்கப்பட்டால் பிறகு ஆன்ரி எப்பூடி உங்களுக்கு ஊக்கேல வெள்ளைப்பொம்பிளை பார்க்க முடியும்?:)) // ஆஆஆஆஆஆ! அதிரா ஆன்ரி,(இது ஜீனோ இல்லை, மகியேதான் பேசுறேன்!;)) எங்கட ஜீனோப் பிள்ளைக்கு இன்னும் பால் மணம் கூட மாறேல்ல, இப்பவே பொம்பிளை, அதுவும் வெள்ளைப் பொம்பிளை பாக்கறீங்களோ? அபச்சாரம், அபச்சாரம்! அதுக்கெல்லாம் இன்னும் காலமிருக்கு. :)))))

  //அடுத்த முறை மம்மியிடம் சொல்லி சிரிச்சபடி படமெடுத்துப் போடுங்க:))// அது போட்டுருவேன், ஆனா குட்டிப் பையனுக்கு கண் திருஷ்டி பட்டுருமல்லோ...அதான் விஷயம்! ;))))

  நன்றி அதிராவ்!
  ~~
  கருத்துக்கு நன்றி ஹேமா..செய்து பார்த்து சொல்லுங்க!
  ~~

  ReplyDelete
 14. //மேசைக்கு மேல ஏறி நிண்டோ படமெடுத்தீங்க?:))..// அதானே!!!

  பஜ்ஜி மாவு ரெசிபியையே சுட்டுட்டேன். இனி பஜ்ஜி சுடுறதுதான் வேலை. ;) காய்தான் நஹி.

  //சிவப்புப் பூவின் பின்னால் முகத்தை மறைத்துக் கொண்டு மூக்கை மட்டும் நீட்டும் எங்க வீட்டுச் செல்லம்!// எங்க வீட்டுச் செல்லமோ... இதே சிவப்புப் பூவை பூ, மொட்டு, இலை, காம்பு, வேர் என்று மிச்சம் வைக்காம சாப்பிட்டுரும். வளர்க்கிறதுக்கு படாத பாடு படுகிறேன். ஜீனோவை ட்ரிக்ஸிக்கு பண்டமாற்று செய்யலாமா மஹி!!

  ReplyDelete
 15. //ஜீனோவை ட்ரிக்ஸிக்கு பண்டமாற்று செய்யலாமா மஹி!! ///

  நோஓஓஓஓஓ மகி ஒத்துக்கொள்ளாதீங்க:)).. இது என்னமோ செட்டப் போல இருக்கு:)).. சீதனம் இல்லாமல் மாப்பிள்ளை எடுக்கப் பார்க்கினம்:)).. ஹையோ நா ஒண்ணுமே சொல்லமாட்டன் சாமீஈஈஈஈஇ:))

  ReplyDelete
 16. பீர்க்கங்காயில் பஜ்ஜியா மிகவும் அருமை.

  ReplyDelete
 17. different bajji ...very nice...ungalin clicksai parhave tempting irukku...peerkaiyellam illai atleast potato bajjiyavadhu podanumnu mudiveduthullen...thanks mahi .

  ReplyDelete
 18. //பஜ்ஜி மாவு ரெசிபியையே சுட்டுட்டேன். இனி பஜ்ஜி சுடுறதுதான் வேலை. // நீங்க பெரிய ஆள் இமா! பீர்க்கங்கா இல்லனா சௌ-சௌ பஜ்ஜி பண்ணி சாப்பிட்டிருப்பீங்களே! :))

  //ஜீனோவை ட்ரிக்ஸிக்கு பண்டமாற்று செய்யலாமா மஹி!! // நோ வே! நீங்க வேணா இன்னொரு புது ஜீனோ வாங்கிக்குங்கோ என இந்த ஜீனோ சொல்லிட்டர்! ;) என்ஜாய் உங்க வீட்டு சிவப்புக் கண்ணி! :)

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
  ~~
  //Shama Nagarajan// வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
  ~~
  //நோஓஓஓஓஓ மகி ஒத்துக்கொள்ளாதீங்க:))..// டன், டீல் அதிராவ்வ்வ்வ்! நான் ஒத்துக்கவே மாட்டேன்! :)
  ~~
  ஆசியாக்கா, நன்றி!
  ~~
  கொயினி, பொட்டடோ பஜ்ஜியா??! செய்துட்டீங்களா? :) கருத்துக்கு நன்றிங்க! பீர்க்கங்காய் கிடைச்சா டிரை பண்ணீ பாருங்க.
  ~~

  ReplyDelete
 19. //சீதனம் இல்லாமல் மாப்பிள்ளை// ;))) அந்தக் காலத்திலேயே!! ;) நாங்கள் சீதனம் கொடுக்காமல் போன ஆட்கள் அதீஸ். ;))

  //சௌ-சௌ பஜ்ஜி பண்ணி சாப்பிட்டிருப்பீங்களே!// ;) நீங்களும் ஒரு காயை நட்டு வையுங்கோ மகி.

  சிவப்புக்கண்ணி எப்ப தப்பியோடுவாவோ தெரியேல்ல. இங்க வேலியெல்லாம் மோசமா அரிச்சுப் போட்டு இருக்கிறா.

  ReplyDelete
 20. /நீங்களும் ஒரு காயை நட்டு வையுங்கோ மகி./ முளைக்கட்டும் இமா, அப்பதானே நடலாம்? சும்மா காயை நட்டாலே முளைக்குமா? ஆமாம்னாச் சொல்லுங்க, நட்டுப் பார்க்கிறேன்.

  //சிவப்புக்கண்ணி எப்ப தப்பியோடுவாவோ தெரியேல்ல. // பத்திரம், பத்திரம்! வேலியேல்லாம் சரி பண்ணீ வைங்க.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails